ஞாயிறு, 31 மார்ச், 2019

இரயில் பயணம்

ரயில் பயணத்தில் கண்ட காட்சிகளை இங்கு பதிவாக. என் சேமிப்பிலிருந்து. போகிற போக்கில் எடுத்தாலும் கிடைத்த காட்சி பிடித்து இருக்கிறது எனக்கு, உங்களுக்கும் பிடிக்கும்.

ரயிலில் எனக்கு  ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு  கடந்து போகும் காட்சிகளை காண்பது மிகவும் பிடித்தமானது, தூரத்தில் தெரியும் கோபுரம், மலைகள், ஏரிகள், வயல்கள், மாடுகள், ஆடுகள், பறவைகள், காலைச் சூரியன், மாலைச் சூரியன் கூடு செல்லும் பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் என்று இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய பிடிக்கும். முன்பு கண்களுக்குள் சிறை பிடித்தேன் 
 இப்போது அலை பேசி, காமிரா என்று  சிறைபிடித்து பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன்.

வியாழன், 28 மார்ச், 2019

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

எங்கள் குலதெய்வம்

களக்கோடி சாஸ்தா- மனைவிகள் பூர்ணகலா, புஷ்கலாவுடன் இருக்கிறார். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள 'மடவார் விளாகம்' என்ற ஊரில் இருக்கும்  களக்கோடி சாஸ்தா   எங்கள் குலதெய்வம். நிறைய பேருக்கு இந்தக் கோவில் குலதெய்வமாக இருக்கும்.

எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள்.  பங்குனி உத்திரத்தன்று போனால் நிறைய கூட்டம் வரும்.
நாங்கள் பங்குனி உத்திரம் அன்று போக முடியவில்லை .

குலதெய்வ வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை, திங்கள் கிழமை என்று என் மாமியார் சொல்வார்கள். அதன்படி சனிக்கிழமை சென்று வந்தோம்.

ஏரிக்கரையோரம் இந்தக் கோவிலின் அருகில் உள்ள ஏரியின் அழகைப்பற்றியும் அங்கு பார்த்த  பறவைகள், கறவைகள், பூக்கள் படங்கள் கொண்ட பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

செவ்வாய், 26 மார்ச், 2019

குன்றத்துக் குமரன்

திருப்பரங்குன்றம் 
12/3/2019, செவ்வாய்க்கிழமை, கார்த்திகை, சஷ்டி ஆகியவை சேர்ந்து வந்த விஷேசமான  நாள் என்று திருப்பரங்குன்றம் போய் இருந்தோம்.

அங்கு போனால் பங்குனித் திருவிழா கொடியேற்றம் அன்று காலைதான் நடந்து இருந்தது.

தற்செய்லாக  முதல் நாள் விழா சமயம் உற்சவர்  எழுந்தருளல்  கண்டு மகிழும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

 அங்கு எடுத்த படங்கள், காணொளி  இவை இந்தப் பதிவில்.

அன்று பதிவு செய்ய முடியவில்லை. இன்று சஷ்டி, செவ்வாய்க்கிழமை  இன்றும் விருந்தினர் வருகை அவர்கள் வந்து போன பின்   முருகன் அருளால் பதிவு செய்து விட்டேன்.

ஞாயிறு, 24 மார்ச், 2019

ஏரிக்கரையோரம்

சனிக்கிழமை எங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய் இருந்தோம் . என் கணவரின் தம்பி குடும்பத்தினர் வந்து இருந்தார்கள்.  அவர்களுடன் மடவார் விளாகம் என்ற ஊரில் இருக்கும் எங்கள் களக்கோடி சாஸ்தா கோவில் போய் இருந்தோம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது இந்த ஊர்.

எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள். 
நாங்கள் பங்குனி உத்திரம் அன்று போக முடியவில்லை.  

இந்தப் பதிவில் எங்கள் கோவில் பக்கத்தில் உள்ள பெரிய ஏரியைப் பார்த்த காட்சிகள் பற்றிய பகிர்வு.

வெள்ளி, 22 மார்ச், 2019

உலக தண்ணீர் தினம்இன்று உலக தண்ணீர் தினம்!

மனிதர்களுக்கும் தண்ணீரின் தேவை அதிகமாகி இருக்கிறது. இருப்பு குறைவு.

வெயில் காலத்தில் தாகம்  தீர்க்க பதனி, குளிர் பானங்களை தேடுகிறார்கள்.

பறவைகள் தண்ணீர் தேடிக் குடிக்க வருகிறது.
 கால்நடைகளும் தண்ணீர் தேடி ஏரிகளுக்கு வருகிறது.குரங்கார் தண்ணீர் தேடிவந்து தண்ணீர் குடிக்கும் காட்சி

புதன், 20 மார்ச், 2019

சின்னஞ் சிறு குருவி


இன்று  உலக சிட்டுக்குருவிகள் தினம். நான் எடுத்த குருவிகள் படங்கள் இந்த பதிவில்.ஹொரநாடு தங்க அன்னபூரணி கோவிலில் அடைக்கல சிட்டுக்குருவி.


இயற்கை அங்கு மிக அழகாய் இருக்கிறது. 
அங்கு கண்ட வாசகம் மிக அருமையாக இருந்தது.
"இயற்கையை விரும்பு இயற்கை என்றென்றும் உன்னை விரும்பும்”

சனி, 16 மார்ச், 2019

பேச்சிப்பள்ளமும், தீர்த்தங்கரர்களும்


அமணமலை, அமிர்தபராக்கிரமநல்லூர், திருவுருவகம், குயில்குடி எனப் பல பெயர்களில்  இந்த  மலையும் ஊரும் அழைக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலை புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்குப் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில்  சமணமலை அமைந்துள்ளது. சமணமலையின் கிழக்கு த்திசையில் கீழக்குயில்குடி என்னும் அழகிய சிற்றூர் உள்ளது.

மதுரை பெரியார்  பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு 21 சி வழித்தட எண்ணில்  பேருந்து வருகிறது.

புதன், 13 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2
  இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

சைவ, வைணவக்  கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம் என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். போன பதிவில் வைணவ கதைகள் கோபுரங்களில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த பதிவில் சைவகதைகள் உள்ள கோபுரக்காட்சிகள்.

 இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். கீழே வருவது அய்யனார் கோவில் பிரகாரத்தில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள கதை சொல்லும் சிற்பங்கள் , கோபுரம் தாங்கும் பொம்மைகள் காலத்தைச் சொல்கிறது.  கேரளத்தினர், வட மாநிலத்தவர், நாடோடிகள் (குறவர்கள்)  ஆகியோர் கோபுரத்தில் இருக்கிறார்கள்.

ஆலமர் கடவுள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் - கேரள ஆண், பெண்

ஞாயிறு, 10 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்

புத்தகவெளியீடு   இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

அடுத்த பதிவில்  இந்த சமணர் மலை என்று அழைக்கப்படும்  கீழ்க் குயில்குடியில்  உள்ள அய்யனார் கோவில் . என்று சொல்லி இருந்தேன்.

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்- கோவில் பின்புறம் சமணர் மலை, முன்புறம் தாமரைத் தடாகம்

வெள்ளி, 8 மார்ச், 2019

புத்தக வெளியீடு


கீழக்குயில்குடியில் "செட்டிப்புடவு" என்னூம் குகை வாசலில் ஆரம்பமானது 100வது  பசுமைநடை விழா. முதலில் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரை  ஆற்றினார்கள். அப்புறம் தொல்லியல்  பேராசிரியர் சொ. சாந்தலிங்கம் உரையாற்றினார்.   அவர் சொன்ன செய்திகள் அடுத்த பதிவில். என்று குறிப்பிட்டு இருந்தேன், அவைகளைத் தொடர்ந்து பார்க்கலாம் இந்த பதிவில்.

முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 9 ஆண்டு பசுமை நடைக்கு. 100 வது வகுப்பறை இது.  100 நடைகளின் தொடர்ச்சி பெருமிதம், இளைஞர்கள் குழுவின் சாதனை  என்றார்.

                                                    பேசுவது முத்துக்கிருஷ்ணன்
திரு. சொ. சாந்தலிங்கம் தொல்லியல் அறிஞர்

திங்கள், 4 மார்ச், 2019

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!


மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
அவன் அருளால் அவன் 
தாள் வணங்குவோம்.


சிவன் ராத்திரிக்கு நாம் சிவனின்  பெருமைகளை அவரின் கருணையை ப்பேசி நினைத்து வணங்கி மகிழ்வோம். இன்று என்ன செய்யலாம் என்று  யோசித்த போது கிடைத்த படங்கள் (அவன் அருளால் கிடைத்தது.) 

அதில் திருக்கச்சூர்   கோவிலுக்குப் பல வருடங்களுக்கு முன்  போனபோது எடுத்த சில படங்கள் கிடைத்தன. அந்த கோவில் மஹா சிவராத்திரி பதிவுக்கு ஏற்ற கதை கொண்ட தலவரலாறு அமைந்த கோவில். இந்தப் பதிவில் இடம்பெறுகிறது.

மற்றும் அலைபேசியில்  நான் எடுத்து சேமித்த படங்கள்  வாட்ஸ் அப்பில் வந்த படங்கள் கலந்த கலவையான பதிவு.