திங்கள், 31 ஜனவரி, 2022

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி


திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். 
இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை 
சேர்ந்த்து.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,
(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக
 கொண்டது. தேவர்களும் அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது
 வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர்
 இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். 
அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் 
இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.

வியாழன், 13 ஜனவரி, 2022

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

 


பேரனின் லெகோ பொங்கல்.

//லெகோ விளையாட்டுப் பொருளில் செய்த பெரிய பொங்கல் பானை பொங்குகிறது. முன்னால் அலங்கார மின் விளக்குகள் போட்டு இருக்கிறான் , வாசலில் வரவேற்கக் காத்து இருக்கிறான். பானை அருகில் கரும்பு நிற்க வைத்து இருக்கிறான். 

தாத்தா, ஆச்சி,  அப்பா, அம்மா மற்றும் உறவுகள், மற்றும் ஆடு மாடு  பூனை நாய் குதிரைகளுடன் பொங்கல் கொண்டாடுகிறான். அழைத்து இருக்கிறான் எங்களை. உங்கள் ஊரில் கேஸ் அடுப்பில் பொங்கல் .இங்கு பாரம்பரிய பொங்கல் வைக்கிறோம் வாருங்கள் என்கிறான் மகன்.//

பொங்கல் வருது ! பொங்கல் வருது ! கொண்டாடலாம் வாங்க  2020 ல் போட்ட பதிவு படித்து பாருங்கள் பேரனின் பொங்கல் பாடல், மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளின் பகிர்வு.2015 ம் ஆண்டு மகன், மருமகள், மகள் பேரனுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த முறை மகன் குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர்களுடன் பொங்கல் பண்டிகை.அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

--------------------------------------------------------------------------------------------------