ஞாயிறு, 14 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாருங்கள் - 3

கொலுவை பார்த்து கொண்டு இருக்கிறோம் நேற்று அய்யனார் கோவில்
 இன்று தங்கை வீட்டு கொலு


பள்ளி கொண்ட பெருமாளும் பின்புறம் தசாவதாரமும்

ஒரு அறை முழுவதும் கொலுதான். தங்கை வீட்டில்  அம்மாவின் கொலு பொம்மைகள், அவள் மாமியாரின் கொலு பொம்மைகள், சொந்தங்கள் கொடுத்த பொம்மைகள் என்று அவளிடம் நிறைய இருக்கிறது.
அவள் உறவினர் ஒருவர் செய்து கொடுத்த இறைவனின்செந்தாமரைப் பாதங்கள்
கண்ணன் கோபியர்களுடன்
தண்ணீர்க் குழாயில் தண்ணீர் எடுத்துச் செல்லும்  பழைய காலப் பொம்மை
குடுகுடுப்பைக்காரர், 
பாம்புபிடாரர்  மகுடி வாசிக்கிறார்

சிவன் பார்வதி
மேல்தட்டில்  நவதானியங்கள்  பழங்களுடன். கடைசியில் இருப்பது தேங்காய்- கல்யாணத்தன்று நலுங்கில் உருட்டி விளையாட தாய் வீட்டில் கொடுப்பது. தேங்காய்க்குள் சலங்கை இருக்கும், உருட்டும் போது சத்தம் கேட்கும். என் அம்மாவிற்கு தாத்தா வெள்ளியில் கொடுத்தார்கள். அம்மா எல்லோருக்கும் பித்தளையில் கொடுத்தார்கள். ஒவ்வொரு தட்டிலும் அம்மாவின் கைவேலை இருக்கிறது.
அப்பாவின் பெயர் போட்ட சங்கு , அப்பாவின் வேலையைக் குறித்து உள்ளது

தம்பியின் பெயர் போட்டது, ஆனால் அவன் இன்ஷியலை தப்பாய்ப் போட்டு விட்டார்கள்.
வெண்கல நாற்காலி. முன்பு அழகான செலுலாயிட் பொம்மைப் பெண்  அதில் இருப்பாள். இப்போது உடைந்து விட்டது. பெட்டியிலே இருந்து களிம்பு ஏறிவிட்டது, தேய்த்து வைக்க வேண்டும்.
அம்மாவும், அக்காவும் சேர்ந்து செய்த பர்ஸ்  இது.  புடவை வரும் பாலீதின் பைகளை வைத்து இது  போல் சின்னது முதல் பெரிதுவரை  செய்து இருந்தார்கள். 
அம்மாவின் பின்னலால் உருவானவை 
அக்காவின் கை வண்ணத்தில் உருவான அலங்கார மேஜை, கேஸ்ஸ்டவ் , நாய், குதிரை. நிறைய குதிரைகள் பூட்டிய தேர் எல்லாம் அக்கா செய்தார்கள். அக்காவீட்டில் இருக்கிறது தேர். தங்கை வீட்டில் நாய் குதிரை, கேஸ் ஸ்டவ் எல்லாம் இருக்கிறது. 
முன்பு வீட்டில் மை தயாரிப்பார்கள்  இதில் மையை எடுத்து வைத்துக் கொள்வார்கள் இதன் பேர் மைக்கூடு.  இப்போது வாங்கிக் கொள்கிறோம்.

தங்கை வீட்டுக்கு அருகில் இருக்கும் செந்தில் ஆண்டவர் அனுமன் கோவிலை பலவருடங்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தது,  தங்கை வீட்டு கொலு பார்க்க போன போது  கைகூடியது. தங்கை பெண் அழைத்து சென்றாள்.  இந்த கோவில் மதுரை சேதுபதி  பள்ளி பேருந்து  நிறுத்தம் பக்கம். (வடக்கு வெளிவீதி)
பஞ்சமுக அனுமன் உற்சவர் மட்டும் தான் பஞ்சமுகம், மூலவர் ஒரு முகம் தான். சஞ்சிவி மலையை கையில் ஏந்திய அனுமன் , பெருமாள், சிவன் தட்சிணாமூர்த்தி , துர்கை,  சரஸ்வதி, செந்தில்முருகன் தன் துணைவியர்களுடன் இருக்கிறார்.  அஷ்டலட்சுமிகள்  இருக்கிறார்கள். 

தங்கை வீட்டுக்கு அருகில் உள்ள அனுமன், செந்திலாண்டவர் கோவில் கொலு படம் கீழே

துர்க்கையும், சரஸ்வதியும். அஷ்டலட்சுமிகளும் நடுவில் மஹாலட்சுமியும் பெரிதாக அமைத்து இருந்தார்கள், அங்கு ஹோமம் நடந்து கொண்டு இருந்தது .படம் எடுக்க முடியவில்லை.
அனுமன் கோவில் கொலு

மேல்படியில் புரட்டாசிச் சிறப்பாய் அடியார்களுக்கு தன் மனைவியுடன் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பெருமாள். கருடன் முகத்தை மறைக்குது சின்னக் கோவில்.

 கீழ்ப் படியில் ராமன் பட்டாபி ராமனாகக் காட்சி அளிக்கிறார். அகத்தியர் தசாவதாரம், காமாட்சி ,தவழும் கண்ணன், விவேகானந்தர், நாடி தாங்கிய இரண்டு பொம்மைகள், அழகான வீடுகள்  கலசம், தேங்காய்ப் பழத்தட்டு  எல்லாம் அழகாய் இருக்கிறது. 
                   
கொலுவைச் சுற்றி நவதானியங்களைப்  போட்டு இருக்கிறார்கள். நான் முதல் நாள் போனேன் இப்போது நவதானியங்கள் அழகாய் வளர்ந்து இருக்கும்.

கொலுவைப் பார்த்தீர்களா? மீண்டும் வருவேன் கொலு படங்களுடன்.

                                                           வாழ்க வளமுடன்.

19 கருத்துகள்:

  1. தங்கை வீட்டுக் கொலு நேர்த்தியாக உள்ளது. தண்ணீர்க் குழாய் காட்சிகள் அந்நாளில் நாம் தினம் கண்டவை. இக்காலத்துக் குழந்தைகளுக்கு இது போன்ற காட்சிகளைக் காட்டி விளக்கம் கூறலாம்.

    வழிவழியாக வந்த பொம்மைகளை வைத்து வழிபடுவது சிறப்பு. கோவில் கொலு அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    தண்ணீர் குழாய் காட்சிகள் அன்றும் இன்றும் மாறி உள்ளது.
    மதுரை பக்கத்தில் அடிகுழாய் அடித்து எடுத்து வர வேண்டும். பித்தளைக்குடம் கனம்,அதனால் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் எடுத்து வருகிறாரகள்.

    வழி வழியாக வந்த பொம்மைகளை வைத்து வழிபடும் பாக்கியம் தங்கைக்கு கிடைத்து இருக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. மிகப் பெரிய பொக்கிஷங்கள்...
    சங்குகள், சோழிகள் - கைவினைப் பொருட்கள்...
    பழைய காலத்தை நினைவுகூரும் கலை வண்ணங்கள்...

    தங்களது அருமைத் தாய்தந்தையர் சகோதரங்கள் என,
    எல்லாரையும் புரிந்து கொள்ளமுடிகின்றது..

    இப்படியான தலைமுறையினரால் தான்
    அடுத்த கட்டத்துக்கு பாரம்பர்யம் இனிதே பயணிக்கின்றது...

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ துரைசெல்வாரஜூ , வாழ்க வளமுடன்.
    அம்மா பல ஊர் கடற்கரை மண் வைத்து இருந்தார்கள் ஒவ்வொரு கடல் மண்ணும் வேவ்வேறு நிறத்தில் இருக்கும்.
    சின்ன சின்ன கண்ணாடி பாட்டிலில் போட்டு எந்த ஊர் என்று பெயர் வைத்து இருப்பார்.
    அந்த ஊர் சங்கு, சோழி, சிப்பிகள் என்று சேகரித்து வைத்து இருப்பார்.
    தங்கை பல காலமாய் பொம்மைகளை பாதுகாத்து வைத்து இருப்பதை பாராட்டவேண்டும்.
    அவள் பேரன் கொலுவில் உள்ள சாமி பொம்மைகளைப் பார்த்து கதை சொன்னான். அந்த காணொளி ஏறமாட்டேன் என்கிறது . தொலைக்காட்சியில் வரும் சாமி கதைகள் பார்ப்பான்.
    எங்கள் அம்மா வீட்டுக் கொலு, மாமியார் வீட்டுக் கொலு எல்லாம் நவராத்திரி சமயம் மலரும் நினைவுகளாய் மனதில் மலரும்.
    உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும் ஸூப்பர் மை டப்பி முன்பு எங்களது வீட்டில் மயில் வடிவில் இருந்தது.

    சங்கு 1989-ல் வாங்கியது போலயே...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    மை டப்பி இல்லாத வீடே இருக்காது. வேவ்வேறு பறவைகள் வடிவில் இருக்கும்தான்.
    அப்பாவோடது பழையது. அப்பா பெயர் போட்ட சங்கில் பேர் போடவில்லை. தன்ஷ்கோடியில் வேலைப்பார்த்த போது வாங்கியது என்பார்கள்.
    தம்பி பெயர் போட்டது 1989ல் அண்ணன் ராமேஸ்வரத்தில் இருந்த போது தம்பி தன் பேர் போட்டு வாங்கியது. வேறு நிறைய வித விதமாய் உள்ள சங்குகள் அம்மாவோடது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் வீட்டில் கொலு வைப்ப்து நின்றவுடன் இருந்த பொம்மைகளை கொலு வைக்கு நண்பிகளுக்கு கொடுத்து விட்டாள் என்மனைவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நண்பர்கள் வீட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம்.
      முன்பு கோவிலில் கொண்டு வைப்பார்கள் இப்போது பழைய பொம்மை வேண்டாம் புது பொம்மை தாருங்கள் என்று கோவில்களில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. படங்கள் அழகு. அந்த மைக்குப்பி எனக்கு சில நாட்கள் முன்பு நினைவுக்கு வந்தது. படமாய்ப் பார்த்ததில் மகிழ்ச்சி. பிருஷ்ட போட சங்குகள், கைவண்ணத்தில் உருவான கைப்பை, பர்ஸ்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உங்கள் வீட்டிலும் மைக்கூடு இருந்து இருக்கும் கல்யாணத்திற்கு சீர் கொடுக்கும் போது அம்மாவீட்டில் கொடுப்பார்கள். என் மைக்கூடு காணமல் போய் விட்டது.
      படங்களையும், அம்மாவின் கைவண்ணத்தையும் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. அத்தனை கொலுக்களும் அழகு. தங்கை வீட்டிலும் நிறையக் கலெக்ஸன்ஸ் வச்சிருக்கினம் போல... கோமதி அக்கா, நவராத்திரி முடிஞ்சதும் இந்தக் கொலுக்களை எடுத்து கட்டி ஸ்டோர் ரூமில் போட்டு விடுவார்களோ? அந்த கடவுள் சிலைகள் சிவலிங்கம் இப்படி அனைத்தையும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      தங்கை வீட்டில் நிறையக் கலெக்ஸன்ஸ் எப்படி வந்தது என்று எழுதி இருக்கிறேன்.
      கொலு முடிஞ்சதும் அனைத்து பொம்மைகளையும் பெட்டிகளில் துணி சுத்தி வைத்து ஸ்டோர் ரூமில் வைத்துவிடுவோம். அடுத்த முறை நல்லபடியாக கொலுவைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு.

      நீக்கு
  10. கோமதி அக்கா, நேர அவசரத்தில் அனைத்து புளொக்கையும் திறந்து வச்சிட்டு படபடவெனக் கொமெண்ட் போடும்போது இங்கு போடுவதை கீசாக்காவுக்கு அனுப்பிட்டேன் ஹா ஹா ஹா.. கொப்பி பண்ணவில்லை அதனால இப்போ திரும்ப ரைப் அடிக்கோணும் கர்ர்ர்ர்ர்ர் 4 மீ:).

    தேங்காயை செம்பில் செய்து கொடுத்தவிதம் அழகு.. அப்போ நீங்க எதில் செய்து உங்கள் மகளுக்கு குடுத்தீங்க?.

    சங்கில் பெயர் போட்டிருப்பது அழகு. உங்கள் அம்மாவின் கை வண்ணம் எல்லாமே அழகு, அந்தக் கை வண்ணம் கோமதி அக்காவுக்கு வரவில்லைப்போலும்... கமெராமானாக:) எல்லோ கோமதி அக்கா வந்திருக்கிறா... ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, எனக்கு போட வேண்டியது கீதா அவர்கள் வலைத்தளம் சென்று விட்டதா?
      திரும்ப டைப் செய்ததில் எதுவும் விடுபட்டுவிடவில்லைதானே?
      நானும் அம்மா போல்தான் பித்தளைதான் . என் அம்மாவுக்கு தான் வெள்ளி தேங்காய் எங்கள் கல்யாணத்திற்கு அம்மாவோடதை வைத்து விளையாடினோம்.

      நானும் நிறைய அம்மவிடம் கற்றுக் கொண்டு பின்னினேன். அம்முவும் கேட்டு இருக்கிறார்கள். கொலு பெட்டியை இறக்கும் போது சிலது என்னிடம் இருப்பதை காட்டுகிறேன். கூடைகள் , பூஜை கூடை, கண்மேட்டியில் பிள்ளையார், வாசலுக்கு வெல்கம் என்றும் இரண்டு பக்கமும் பூகொத்துக்கள் பின்னி இருக்கிறேன்.
      என்னிடம் நிறைய அம்மாவோடது இருக்கிறது. என் ஒவ்வொரு கொலுவிற்கும் ஏதாவது பின்னி கொடுத்து விடுவார்கள். அம்மாவை போல் ஒரு தங்கை கைவேலைகள் செய்து கொண்டு இருப்பாள்.என் அப்பா காமிராவும் கையுமாக இருப்பார்கள் அது எனக்கு வந்து இருக்கிறது. ஏதோ எடுக்கிறேன். திறமையானவள் இல்லை.

      நீக்கு
  11. இதில் இருக்கும் ஒரு கவலை என்னவெனில், இப்போ நீங்கள் இவை அனைத்தையும் பத்திரமாக சேர்த்து வச்சிருக்கிறீங்க, இனி உங்களுக்குப் பின் இவற்றைப் பாதுகாப்பது யார்?..

    இப்படித்தான் நானும் நினைச்சு சேகரிப்பதை குறைத்துக் கொண்டேன், முடிஞ்சவரை அனைத்தையும் வீசிவிடுவேன் இப்போ. அல்பம்கூட, பிள்ளைகளுக்கு அதில் ஆர்வமில்லை... நமக்குத்தான் அடிக்கடி எடுத்துப் பார்க்கப் பிடிக்குது.. அப்போ நமக்குப் பின், அதை அவர்கள் பாதுகாப்பினமோ எனும் எண்ணம்தான் கவலை தருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் அந்த கவலை உண்டு. அம்மாவுக்கு பின் கொலு வைக்க தம்பிகள் மனைவிகள் அண்ணியிடம் கேட்ட போது அவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. அதனால் அம்மா தங்கையிடம் கொடுத்தார்கள். மருமகள் கொலு வைக்கிறாள் நமக்கு பின் அவள் பாதுகாப்பாள் என்ற எண்ணம் இருக்கிறது.
      அது எல்லாம் கடவுள் விருப்பம்.
      இருக்கும் வரை நாம் வைத்து மகிழ்வோம். நானும் இப்போது புதிதாக வாங்குவது இல்லை. அழகான கலைப்பொருட்களை கண்டால் வாங்க் ஆசை ப்ட்டாலும் வாங்குவது இல்லை. அப்படி வாங்கினால் பரிசு பொருளாய் வாங்கி கொடுத்து விடுகிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
    2. அன்பு கோமதி. இது கொலுவாகத் தெரியவில்லை. பாரம்பர்யப் பொக்கிஷம்.
      தங்கள் தங்கைக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
      ஒவ்வொன்றாய்ப் பார்த்து அதிசயிக்கிறேன்.
      பாம்பாட்டியும், தண்ணீர்ப் பம்ப்பும் ,சிப்பிகளும், சோழிகளும் எங்கள் வீட்டை நினைவு
      படுத்தின.

      அம்மாவின், அக்காவின் கைவண்ணத்தில் பைகள் பளிச்சிடுகின்றன.
      இன்னும் நான்கு நாட்கள் இங்கே விருந்தாளிகள் மயம் தான்.
      பரபரப்பாக இயங்க வேண்டும். அன்பு வாழ்த்துகள் கோமதி மா.
      மங்களம் பொங்கட்டும்.

      நீக்கு
    3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      விடுமுறை நாளில் தானே எல்லோரும் வருவார்கள் உங்கள் வீட்டு கொலுவைப் பார்க்க.
      பாட்டு எல்லாம் பாடுகிறீர்களா? நல்ல பொழுதாய் போகும் கொலுவைத்தால்.
      குழந்தைகள் வரவு குதுகலம்.

      தங்கை வீட்டுக் கொலுவை ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி அக்கா.
      உங்கள் வீட்டுக் கொலு மனதில் மலர்ந்து விட்டதா? மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும் அன்பு வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு