திங்கள், 8 அக்டோபர், 2018

ஜன்னல் வழியே!

கீழே என்ன செய்கிறாய்? மேலே வா 
இங்கும் உணவு இருக்கு மேலே வா

வந்து விட்டேன்  என்ன சாப்பாடு
தக்காளித் தோலில் ஒட்டி இருக்கும் பருக்கை  பெரிய விருந்து

தக்காளிச் சோறு நல்லாத்தான் இருக்கு இல்லே!
எதிர்வீட்டு எலுமிச்சைச் சாதத்தை ஒரு பருக்கைவிடாமல் சாப்பிடும் வெள்ளைப்புறா
வெள்ளச்சி எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டாளே!


அன்னலட்சுமி ! தட்டில் சாப்பாடு தீர்ந்து போச்சு.  கொஞ்சம் போட மாட்டாயா ?என்று ஒரு குயில் கதவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது  இன்னொன்று வருவார்கள் பறக்காதே! என்று வேடிக்கை பார்க்குது

தினம் என்ன போட்டோ? எனக்கு ஆயுள் குறைந்து விடும்



No automatic alt text available.

இரண்டு நாளாகத் தொடர் மழை முடிந்து மீண்டும் வானம் வெளிச்சம் காட்டியது.அப்போது எங்கள்வீட்டில் கூடு அமைக்க முயற்சி செய்யும் குருவிகள் பால்கனி கம்பியில் அமர்ந்து வேடிக்கை பார்க்குது. குருவிகள் வீட்டில் கூடு அமைத்து விட்டதா என்பதை இன்னொரு பதிவில்.


பயம் கலந்த பார்வையுடன் ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தது

இன்னொரு புறாவும்  கம்பீரமாய் வந்து உட்கார்ந்தவுடன் மேலும் பயந்து உடலைச் சுருக்கிக் கொண்டது.


ஏகாந்தமும் நல்லாதான் இருக்கு!


மாலை நேரம் ஜன்னலுக்கு வெளியே மைனாக்களின் குரல்களில் பதட்டம், கோபம் எல்லாம் தெரிந்தது சத்தம் அதிகமாய் கொடுத்து கத்தி சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. (நான்கு மைனாக்கள்.)
பிடரிமயிர் சிலிர்க்க கோபாவேசத்தில் சண்டையிட்டான் என்று படித்து இருக்கிறோம் அதை இவைகளிடம் பார்த்தேன்.
Image may contain: bird
பெரிய கம்பி குழாயிலிருந்து கோபத்தில் சிறிய கம்பியில் கால் வைத்து இருக்கு
Image may contain: bird


நீயா? நானா?

அன்பு உரையாடல்  
நான் வாரேன்
என்ன யோசனையோ!

யோசனையில் இருந்ததில்  சாப்பாட்டு நினைவு மறந்து போச்சு!  தட்டில் சாப்பாடு இல்லையே!

மழைக்கு ஜன்னலில் ஒதுங்கி இருக்கும் புறா

பறவைகள்  எல்லாம் எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு படத்திற்கும் நீங்களும் ஏதாவது சொல்லலாம்.
வாழ்க வளமுடன்.

48 கருத்துகள்:

  1. போட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் மனிதர்கள் பேசிக்கொண்டதை கேட்டுக்கொண்டதோ.... ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      ஆமாம் ஆமாம், மனிதர்கள் பேசிக் கொண்டதை கேட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. காணொளி இயங்குதே! உங்களுக்கு நெட் ஸ்பீடு இல்லை போலும்.
      அப்புறம் பாருங்கள்.

      நீக்கு
    2. இந்த கோமதி அம்மா,படமா எடுத்துத் தள்ளுகிறார்களே. பெண் புறா.
      நாம் அதைப் பார்க்க முடியாதே. தம்பதியா இருக்கிற படத்தை நமக்குக் காட்டினால் என்னவாம்....இது ஆண் புறா.

      மைனாக்கள் சண்டை போட்டா ஹ்ம்ம் பார்க்க வந்துடறீங்களா.
      உங்க சண்டையெல்லாம் எங்களுக்கும் வேடிக்கைதான்.
      ஆனால் படம் பிடிக்கத்தான் நேரம் இல்லை.

      காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றதடி இது பெண்குயில்.
      அதான் வீட்டிலியே சமைக்கச் சொன்னேன் கேக்கிறியா நீ....இது ஆண் குயில்.

      மூன்று புறாக்களுக்கு நடுவில் சுருக்கி உட்கார்ந்திருக்கும் புறா.
      இதுவும் நல்லதுக்குத்தான். இரண்டு பக்கக் குளிரும் இவங்க பெரிய உடம்பால் மறைக்கப் படுது.

      உண்மையில் அன்பு கோமதிமா ரொம்ப ரொம்ப இனிமையான படங்கள். வர்ணிக்க வார்த்தையே இல்லை.

      நீக்கு
    3. புறாக் காணொளி மிக இனிமை. கடையேழு வள்ளல்களாக இருந்தால்
      போர்வை கிடைத்திருக்கும்.

      நீக்கு
    4. வணக்கம் வல்லி அக்கா, வாழக வளமுடன்.

      நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    5. புறாக் காணொளி பார்த்தீர்களா? மகிழ்ச்சி.

      கடையேழு வள்ளல்களாக இருந்தால் போர்வை கிடைத்திருக்கும் என்பது உண்மை
      நன்றி அக்கா கருத்துக்களுக்கு.

      நீக்கு
  3. பறவைகளின் வாழ்க்கையும் மனிதர்களைப்போல்தான் போலிருக்கிறது.

    அதுவும் சிலு சிலுவென மழை, தூரல் போடும்போது பறவைகளைப் பார்ப்பதே அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      பறவைகள் வாழ்க்கையும் மனிதர்கள் போல்தான்.

      மழை தூறல் போடும் போது பறவைகளைப் பார்ப்பது அழகுதான். நனைந்து விட்டால் தன் உடம்பை சிலிர்த்து மழை நீரை வெளியேற்றும் அது அழகு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. உங்களுக்கென்று பறவைகள் போஸ் கொடுக்கின்றனவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      அவைகளுக்கு தெரிந்தால் ஓடிவிடும். அவைகளுக்கு தெரியாமல் எடுப்பது தானே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அழகான பறவைகள், அழகான தொகுப்பு. பொருத்தமான விளக்கங்கள். அதிலும் அந்தச் செம்போத்தின் தங்கை(?) ரொம்ப அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      வித்தியாசமான குருவியை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் செம்போந்து போல்தான் இருக்கும். உடலில் புள்ளிகள் உண்டு இதற்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இங்கே இரவு 9.30 (இ.நே.12.00)
    பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      பேருந்தில் வேலைக்கு போகும் போதும் படங்களை பார்த்த்து மகிழ்ச்சி.

      நீக்கு
  8. ஆஆ கோமதி அக்கா என்ன இது ஸ்கூல் புரஜக்ட் மாதிரி ஜன்னல் புரொஜக்ட் செய்திருக்கிறீங்க... சூப்பர், இவர்களை ரசிப்பதும் ஒரு கலைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      ஜன்னல் படங்களை ரசிப்ப்தும் ஒரு கலைதான், தங்கை அதிராவிற்கும் அந்த கலை இருக்கிறது மகிழ்ச்சி.

      நீக்கு
  9. எல்லோரும் ஜோடி ஜோடியாகவே விசிட் பண்ணுகிறார்கள் போலும்... மைனாக்கள் அழகு.
    பறவைகளின் பாசையை எமக்கு புரியும் தமிழில் மொழி பெயர்த்த கோமதி அக்காவுக்கு ஒர் நீல வைர மோதிரம் பரிசளிக்கிறேன்ன்ன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, ஜோடி ஜோடி யாக விசிட் தருவார்கள், சண்டை, சச்சரவும் இருக்கும், கூடலும், கொஞ்சலும் இருக்கும். மைனாக்கள் வரவு மிக அதிகமாய் இருக்கிறது இப்போது. எப்போதும் கூச்சல், சண்டைதான் அதுகளுக்குள்.
      புறா அமைதியாக இருக்கும்.
      நீல வைர மோதிரம் பரிசுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
      தங்கையின் அன்புக்கு எல்லை ஏது?

      நீக்கு
  10. ///பெரிய கம்பி குழாயிலிருந்து கோபத்தில் சிறிய கம்பியில் கால் வைத்து இருக்கு///
    ஹா ஹா ஹா அந்தக் குட்டி உருவத்துக்கே அப்பூடிக் கோபம் வந்தால்:)... நமக்கு. பெரிய க்கோபம் வருவதில் தப்பில்லையோ?:) விரலுக்கேத்த வீக்கம் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கீதாமதிவாணன் ஓண்ட வந்த பிடாரிகள் என்று பறவைகளைப் பற்றி பதிவு எழுதினார்கள். மைனாக்களைப் ப்ற்றி எழுதியாதை படித்தால் எவ்வளவு மோசமான குண்ம் படைத்த பறவை என்று தெரியும்.
      குயில் மரத்தில் பாடினால் இது காட்டு கத்தலாக எதிர் பாட்டு பாடும்.
      குருவி கூடுகளுக்கும் உள்ளே போகும் அந்த பறவைகள் மைனா வந்தால் கீச் கீச் என்று கத்தும்.

      இறைவன் விரலுக்கேத்த வீக்கம் தான் கொடுத்து இருக்கிறார்.

      நீக்கு
  11. காகப் பிள்ளைக்கு மட்டும் ஜோடி கிடைக்கேல்லையே:(... தனியா இருந்து யோசிக்கிறார்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, காக்கை பதிவு தனியாக போடுகிறேன் ஜன்னல் பதிவில்.
      ஜோடியாக, குஞ்சுகளுடன். எடுத்த படம் இருக்கிறது. வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் பற்வைகளின் சத்தத்தை கேட்டுக் கொண்டு இருப்பேன்.
      பக்கத்தில் கேட்கும் போது போய் விடுவேன் படம் எடுக்க.

      நீக்கு
  12. ///நான் வாரேன்////
    கரெக்ட்டா வலது காலை எடுத்து வைக்குதே:) வாஸ்து படிச்சிருக்குமோ?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      'நான் வாரேன்' என்பது இந்த இடத்தில் அந்த இடத்தைவிட்டு போவது?
      வலது காலை ரசித்து வாஸ்தை கொண்டு வந்த அதிராவிற்கு .

      முதலில் அன்பாக உரையாடிய பறவைகளுக்கு பழங்கதை பேசி சண்டை வந்த மாதிரியும், உங்களுடன் பேசிக் கொண்டு இருந்தால் ஏதாவது பேசி வம்பு வந்து விடுகிறது நான் வாரேன் என்று அந்த இடத்தைவிட்டு நகருவது போல் என் கற்பனை.
      அடுத்த படத்தில் இரண்டும் தள்ளி தள்ளி இருக்கிறது என்ன யோசனையோ ! என்று எழுதி இருந்தேன் அது இடம்பெறவில்லை. மீண்டும் யோசனையிலிருந்து விடுபட்டு சாப்பாடு சாப்பிட போனால் அதற்கு சாப்பாடு இல்லை என்று முடித்து இருந்தேன்.
      அனைத்தையும் ரசித்து அழகான கருத்துக்கள் சொன்ன அதிராவுக்கு நன்றி.

      நீக்கு
  13. காலை வணக்கம் அக்கா. படங்கள் அழகு. புறா, குயில், மைனா என்று பறவை இனமே உங்கள் வீட்டில் தஞ்சம் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      பறவைகள் எல்லாம் எங்கள் குடியிருப்பில் தஞ்சம்.
      எல்லோரும் பறவைகளுக்கு உணவு அளிக்கிறார்கள்.

      நீக்கு
  14. படங்களுக்கான வரிகளையும் ரசித்தேன். குறிப்பாக ஆயுள் குறையும் வரிகள்! பிடரிமயிர் சிலிர்க்க சண்டையிடுவது அழகு! அதை புகைப்படம் எடுத்த உங்களுக்குத் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், புறாவை படம் எடுக்கும் போது முகத்தை திருப்பிக் கொண்டது. சில பறவை நம்மை பார்த்து கொண்டு இருக்கும் ஜூம் செய்து எடுக்கும் போது நம்மை ஏமாற்றி பறந்து போய்விடும்.
      மைனாக்கள் சண்டை எதிர் பால்கனி என்பதால் வீட்டுக்குள் இருந்து காமிரவை ஜூம் செய்து எடுத்தேன்.
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.


      நீக்கு
  15. காணொளி முகநூலிலும் கண்டேன்! இங்கும் ரசித்தேன்.

    வாடி நிற்கும் மக்களுக்காகப் பொழியும் மழையே.. கூடு போகமுடியவில்லை. ஓடு இங்கிருந்து.. நான் கூடு அடைந்ததும் திரும்பவும் பொழி...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், முகநூலிலும் அருமையான கருத்து சொன்னீர்கள்.

      //மழை நின்னா கூட்டுக்குப் போயிடலாம்...//
      புறா நினைத்துக் கொண்டு இருப்பதை.
      இங்கு சொன்ன கவிதையும் அருமை.
      நேற்று இரவு பயங்கர மழை!
      இந்த பறவைகள், மற்றும் ஜீவராசிகள் எவ்வளவு கஷ்டபட்டதோ தெரியவில்லை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. நாமும் உடன் பேசுவதுபோலிருந்தது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. பதிவிலுள்ள அனைத்துப் படங்களும் அருமை...

    நேற்று இரவு (வேலைக்குச் சென்றபோது) பதிவைக் கண்டேன்..
    அப்போது என்னுள் இப்படியாகத் தோன்றியது..

    இந்தப் பறவைகளின் எண்ண ஓட்டம்
    இப்படியும் இருக்கக் கூடும் அல்லவா!...


    கதிர் விரித்து களம் நிறைக்க
    கழனிகளில் காற்றாடிக் கிடந்தோம்..

    காடழித்து மேடழித்து
    கூடழித்த கொடுமையினால்
    சிறுவயிறு நிரம்பாமல்
    சிறுமையுற்று அழிந்தோம்!...

    தானியங்கள் காணாமல்
    தவித்தலைந்து நொந்தோம்..
    தயவு கொண்ட நல்லோர் தம்
    வாசல் தேடி வந்தோம்!..

    இல்லார்க்கும் எளியார்க்கும்
    துணையென்று தூயோர்கள் உண்டு...
    அவர்களோடு வாழுகின்றோம்
    அவரளித்த அமுதினைத்தான் உண்டு!..

    அமுது அள்ளி ஆங்கு வைத்த
    அருளரசி வாழ்க...
    அவர் காட்டும் அன்பினிலே
    அனைத்துயிரும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான். அருமையான கவிதையை எழுதி விட்டீர்கள்.
    உடனே கவிதை எழுதும் உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன்.
    வரகவி என்று சொல்வார்கள். நிறைய எழுதுங்கள் கவிதைக்கு ஒரு நாள் உங்கள் வலைத்தளத்தில் நாள் ஒதுக்கி கொள்ளுங்கள். கதை, ஆன்மீகம், கவிதை என்று பன்முகத் திறமை இருக்கிறது உங்களிடம். கடவுள் கொடுத்த வரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்காத போதும் அழகான கவிதையால் கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  19. பறவைகளின் எண்ண ஓட்டம் அருமை.
    அவைகள் உணவுக்கு அலைய வேண்டிய நிலைதான் இருக்கிறது.
    முண்டாசு கவிஞ்ர் போல் தனக்கு இல்லாமல் அத்தனை அரிசியை குருவிக்கு கொடுத்தார்.
    அது போல வடித்த உணவு முழுவதும் கொடுத்தாலும் போதாது. அவ்வளவு பற்வை இருக்கிறது இங்கு. காலை முதல் மாலை இருள்கவியும் வரை உணவு எடுக்குது பறவைகள்.
    நம்மால் முடிந்ததை செய்து மகிழ்கிறோம்.
    எங்களுக்கும் அவைகள் மகிழ்ச்சியை தருகிறது.

    பதிலளிநீக்கு
  20. அடா அடா அடா! சிட்டுக்குருவிகள், மைனாக்கள், முனியாக்கள், மைனாக்கள், குயில்கள், புறாக்கள்... ஜோடியாக.. தனியாக.. எத்தனை எத்தனை வகைப் பறவைகள் உங்கள் ஜன்னலுக்கு வெளியே..! ஒவ்வொரு படத்தையும் கூடவே வாசகங்களையும் ரசித்தேன். காணொளி அருமை. அந்த வெண்புறா மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      முனியாக்கள் எங்கள் வீட்டில் கூடு கட்டி இருக்கிறது. தினம் பசுந்தளைகளை கொண்டு வந்து வைக்கிறது.
      எல்லா படங்களையும் ரசித்தமைக்கு நன்றி. காணொளி பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      முனியா மறந்து விட்டது. முன்பு நாம் இருவரும் முனியாகுருவிபற்றி பேசினோம். நீங்கள் தினமலர் பட்டத்தில் அந்த முனியாகுருவிப் பற்றி கட்டுரை எழுதி இருந்தீர்கள்.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  21. ஆகா...! குருவிகளை பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டது அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்..
      நம் குடியிருப்பில் இருக்கிறது சிட்டுக்குருவிகள் .
      குஞ்சு பொரிக்கமட்டும் இங்கு வரும். அப்புறம் கொஞ்ச நாள் இருக்காது அப்புறம் மறுபடியும் வரும். அதன் கூடு என் எதிர்வீட்டு சுவற்றில் இருக்கிறது.
      முனியா குருவிகள் எங்கள் வீட்டில் கூடு கட்டி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. பல கதைகள் பேசும் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு