ஞாயிறு, 11 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம்- 4



கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று நான்காவது நாள்  முருகனுக்கு உகந்த காவடிச் சிந்து பாடல்களைக் கேட்கலாம்  இந்த பதிவில்.

அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூடப் பாடிச் சாதனை புரிந்தவர்.
அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச் சிந்து, வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.
- விக்கிப்பீடியா
                                      
                                              பாடியவர் சுதா ரகுநாதன்



சென்னி குளநகர் வாசன் - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன், அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.




                                     'அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா'
இந்தப் பாடலில் அத்தனை படைவீடும் இருக்கிறது. எளிமையான பாடல் வரிகள். 'சூரனுக்கும் வாழ்வு தந்த வேலைய்யா'
இந்தப் பாடலில் கரகாட்டம், ஒயிலாட்டம்  பொய்க்கால் குதிரை ஆட்டம் எல்லாம் வருகிறது.
பாடல் வரிகளைத் தேடி எடுத்துப் போட்டு இருக்கிறேன் காப்பி , பேஸ்ட் செய்ய முடியவில்லை. எழுதி எடுத்துப் போட்டு இருக்கிறேன். கீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் பதிவிட்டு இருந்தார். அவருக்கு நன்றி.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா- உந்தன்
அருள்வடிவைக் காண்பதுதான் எப்பையா
சூரனுக்கு வாழ்வு தந்த வேலைய்யா- உந்தன்
ஜோதி முகம் காண்பதெந்த நாளைய்யா
சுப்பையா எப்பய்யா வேலைய்யா(அப்பனுக்கு)

குன்றத்திலே குடியிருக்கும் கந்தைய்யா -எங்கள் 
குடும்பத்தில் நீ பிறக்க வேணும் பிள்ளைய்யா
தெய்வானை மணமுடித்த குமரய்யா- அந்தத்
தேவரிலும் உன்னை வென்றோர் எவரய்யா (குன்றத்திலே)

பாலிருக்கும் பழனியிலே பழமிருக்கும் சோலையில்
நீதிமன்றம் வைத்தவனே நீயிரிக்கும் வரையிலே
வேலிருக்க வினையில்லை மயிலிருக்க பயமில்லை
வேலவனே நீயிருக்க ஏழைகட்குத் துயரில்லை
சுப்பையா எப்பைய்யா வேலையய்யா (அப்பனுக்கு)

திருத்தணிகை மழைத் திருநீறினை
நெற்றியில் தாங்கி வந்தோம் வேலா -அந்த
தகப்பன்சுவாமி மலையில் சந்தனம்
வாங்கி வந்தோம் வேலா
செந்தூர் குங்குமம் அள்ளியெடுத்து
சேர்த்து வந்தோம் வேலா

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் 
குளித்து வந்தோம் வேலா
வள்ளிமலை நாதா கருவண்டு விழிக் குமாரா
மழலை மொழிக் கந்தா எங்கள் மருதமலை முருகா
                                             -  கவிஞர் கண்ணதாசன்.
இசை-  பி.எஸ். திவாகர்
பாடியவர்- டி.எம்.எஸ் அவர்கள்.
காவடிப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
முருகனுக்கு உகந்த விழாக்களில் காவடிகள் இல்லாமல் இருக்காது. இந்தக் காணொளியில்  காவடிகளும் அபிஷேகம், அலங்காரம், பூஜை எல்லாம் இருக்கிறது. 

காணொளிகளை யூடியூபில் வலை ஏற்றிய அன்பர்களுக்கும் நன்றி.

‘காவடிகள் உன்னைத் தேடி ஆடி வரும்!
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்!
சேவடியே சரணம் என வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருள்வான் கந்தவேலன்!’

                                                             வாழ்க வளமுடன்

19 கருத்துகள்:

  1. உற்சாக நடையில் காவடிச்சிந்து பாடல்கள் ரசிக்க வைக்கும்.

    முருகன் நம்மையெல்லாம் காக்கட்டும்.

    ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உற்சாகம் நடையில் இருப்பதால் காவடி சிந்து ரசிக்க வைக்கும் தான்.
      போன பதிவுக்கு கருத்து சொல்லவில்லையே ஸ்ரீராம்.
      ஓம் முருகா.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு. காவடிச்சிந்து பாடவும் கேட்கவும் பிடிக்காதவங்க யார்! அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா ரொம்பப் பிடிச்ச பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்.
      அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. முதலில் படித்து விட்டேன் கருத்துரை இடவில்லையோ...

    சுதா ரகுநாதன், பாடல் அருமை

    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா பாடலுக்கு இசையமைத்தவர் பி.எஸ்.திவாகர் என்பதை அறிந்து கொண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்களுக்கும் பெயர் குழப்பமா? தலைப்பு ஒரே மாதிரி இருப்பதால் நேற்று போட்ட கருத்தை இன்று போட்டு இருப்பதாய் நினைத்து இருப்பீர்கள்.
      நாளை தலைப்பு மாற்றுகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் காவடிச்சிந்து மெட்டில் அமைந்தவை....

    மூன்று பாடல்களையும் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றுதான் இந்த பாடல்களை பகிர்ந்தேன் வெங்கட்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அற்புத பாடல்களுடன் முருகன் தரிசனம்...

    முருகா சரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      முருகா சரணம்

      நீக்கு
  6. கந்தன் அனைவரையும் காக்கட்டும்.. நீங்கள் விரதமோ கோமதி அக்கா? நான் ஒரு நேர உணவாக இருக்கிறேன்ன்.. சோறு இல்லை, புட்டு அல்லது இடியப்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      கந்தன் அனைவரையும் காக்க வேண்டும் காப்பார்.
      இந்த வருடம் இருக்கவில்லை.
      நீங்கள் இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. காவடிச் சிந்து பாடல்களைப் பற்றி அறிந்திருந்தும்
    தங்கள் பதிவில் கண்டு மகிழ்ச்சி...

    முருகன் திருவருள் முன்னின்று காக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      காவடிச் சிந்து பாடல் எல்லோரும் அறிந்து இருப்பார்கள் என்று தெரியும்.
      முருகனிச் சிந்தனைகளில் இதும் ஒன்றாக பதிவு.

      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. முருகனைப் பற்றி அறிந்த கதைகளையே பாட்டின் கருப் பொருளாக்கி சிலபதிவுகள்
    எழுதி இருக்கிறேன் அவற்றில் ஒன்று http://gmbat1649.blogspot.com/2011/03/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் கொடுத்த சுட்டி பார்க்கிறேன்.

      நீக்கு
  9. மிகவும் அருமையான பாடல்...

    மறுபடியும் மறுபடியும் கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் பகிர்வீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

      நீங்கள் சொன்ன பாடல் புரிந்து விட்டது நான் போட்டபின் அதுதானா என்று சொல்லுங்கள் தனபாலன்.
      உங்கள் கருத்துக்கும் எதிர்ப்பார்ப்புக்கும் நன்றி.

      நீக்கு
  10. அருமையான பாடல்கள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு