தீபாவளி நினைவுகள் - அத்தை மாமா அவர்களின் நினைவுகள் தீபாவளி நாளான இன்று மனதை நிறைத்து இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு ஊருக்குப்போய் அத்தை மாமாவுடன் கொண்டாடுவது இதுவரை வழக்கம். இப்போது அவர்கள் இல்லாததால் ஊருக்குப் போகாமல் இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கும் விஷயம். இம்முறை நான்கு தினங்கள் விடுமுறை .எல்லோரும் உறவுகளுடன் பன்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்து இருப்பீர்கள். நானும் கொஞ்சம் என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
காலை இந்த பஜ்ஜி, வடை, சுசியம், இட்லி இவைகளை அவர்கள் கையால் செய்தால் தான் ஆனந்தம். மதியம் நாங்கள் சமைப்போம் , அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்வார்கள் மகன்களுடன் உரையாடி.
இந்த நினைவுகளை தொகுப்பாய் மகன் எங்கள் குடும்ப வாட்சப் குழுவில் அனுப்பி மகிழ்ந்தான். நான் இதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.
பேரன் பேத்திகளுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லுதல்.
பூஜை சமயம் வெடி வைக்க பேரன் ரெடியா? என்று கேள்வி
இரவு குழந்தைகளின் ஆசைக்கு ஒரு மத்தப்பு
முதலில் மாமாவிடம் புதுத் துணியை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் அதன் பின் இருவரும் சேர்ந்து எங்களுக்குத் தருவார்கள்.
பூஜை அறைக்கு எடுத்துப் போக அணிவகுத்து இருக்கும் பலகாரங்கள்.
வீட்டில் பூஜை ஆனதும் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் தரிசனம். அதன் பின் தான் சாப்பாடு, அக்கம் பக்கம் பலகாரப் பரிமாறல்
போன வருட தீபாவளி இட்லி செய்கிறார்கள் பேத்தி நான் செய்கிறேன் என்றாலும் அவர்கள்தான் இட்லித் தட்டில் ஊற்றித் தருவேன் என்று சொல்லி ஊற்றுகிறார்கள். (வயது 95)
தீபாவளிக்கு அத்தனை பலகாரம் இருந்தாலும் எல்லோரும் சுடச்சுட இட்லியும் சட்னியும் தான் பிடிக்கும். அதுவும் அத்தையின் கையால் செய்த பஞ்சு போனற இட்லி.
அது ருசியாக இருக்கக் காரணம் அன்பால் செய்த இட்லி. அவர்களின் இட்லிக்கு மகன்கள், மருமகள்கள், பேத்திகள், பேரன்கள், கொள்ளுப் பேரன் பேத்திகளும் பிரியர்கள்.
மாமா தீபாவளிக்கு வந்து சேருங்கள் என்று கடிதம் எழுதுவார்கள். 90 வயது வரை கடிதம் எழுதினார்கள் . அப்புறம் போன் தான். இறைவனிடம் போகும் போது 105.
போன வருடம் நாங்கள் மகன் ஊரில் தீபாவளியைக் கொண்டாடினோம். மகிழ்ச்சியான தருணங்கள். மருமகள் அனுப்பி வைத்தாள் இந்த படத்தை இன்று.
"நல்ல தீர்ப்பு" என்ற நாடகத்தில் கிருஷ்ணதேவராயர் வரவைச் சொல்லும் காவலாளி, மன்னரின் வீர தீரப் பராக்கிரமங்களைச் சொல்லி பராக் பராக் சொன்னான்.
தமிழ்ச் சங்கத்தில் தீபாவளித் திருவிழாக் கொண்டாட்டம் "சரவெடி" என்று பெயர் வைத்து தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் கொண்டாடும் வழக்கம். எல்லா மொழி பேசுபவர்களும் தமிழ்ச் சங்கத்தில் உண்டு. அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் தமிழ் கற்கிறார்கள். அரிசோனா தமிழ்ச் சங்கம் பற்றி
போன முறை அந்த விழாவை பகிர்ந்து இருந்தேன்.
"நல்ல தீர்ப்பு" நாடக ஆசிரியர்களும் மாணவர்களும்.
தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி மகிழ்ந்து இருப்பீர்கள்.உங்கள் எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
இங்கு எங்களுக்கு இந்த ஆண்டு பண்டிகை இல்லாத காரணத்தால் நேற்று தங்கைகள், அண்ணி எல்லோரும் பலகாரம் கொண்டு வந்து கொடுத்து அவர்கள் வீடுகளுக்குப் பண்டிகைக்கு அழைத்து சென்றார்கள். ஒரே நாளில் அத்தனை வீட்டுக்கும் போக முடியாது என்பதால் எல்லோர் நலனுக்காக திருவேடகம் கோவிலுக்குச் சென்று அனைவரும் நலமாக மன மகிழ்ச்சியோடு என்றும் இருக்க வேண்டி வந்தோம்.
வாழ்கவளமுடன்.
அன்பு நிறை கோமதி, முன்னோர்களை ,மாமியார்,மாமனாருடன் இருப்பது எத்தனை பெரிய பாக்கியம். எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் இருவரும்.
பதிலளிநீக்குமுறைப்படி எல்லாம் செய்த உங்கள் மாமியரைப் பார்க்க மதிப்பு மேலும் கூடுகிறது. நீங்கள் இருவரும் அவருக்கு மரியாதை செய்து வாழ்ந்ததே கூட்டுக் குடும்பத்தின் பெருமை.
இருவரின் ஆசிகளும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் நிறைய
ஆசிகளை வழங்குவார்கள்.
பேரன் வெகு அருமை. தமிழ்ப் பரம்பரையை வளர்க்கும் உங்களுக்கும் சாருக்கும் என் ஆசிகளும் வாழ்த்துகளும். உங்கள் சகோதரர்களின் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குஅவர்கள் உடல் நல்ல நிலையில் இருக்கும் போது டின் டின்னாக தட்டைமுறுக்கு, கை முறுக்கு எல்லாம் செய்வார்கள். பாதம்கேக், மைசூர்பாக், நெய் உருண்டை கண்டிப்பாய் உண்டு.தீபாவளி லேகியமும் கண்டிப்பாய் உண்டு.
நீங்கள் சொல்வது போல் அவர்கள் எல்லோருக்கும் ஆசிகளை எப்போதும் வழங்கி கொண்டு இருக்க வேண்டும்.
உங்கள் ஆசிகளுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி அக்கா.
கண்டிப்பாய் உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் எங்கள் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் அக்கா.
நான் காலையில் இருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்..
பதிலளிநீக்குதங்களது பதிஉ ஒன்றையும் காணோமே... - என்று...
இந்த வருடம் தங்களது மனம் ஒரு நிலையில் இருக்காது எனத் தெரியும்...
இருந்தாலும் -
குடும்பத்தின் பெரியோர்கள் தங்களனைவரையும் சூழ்ந்திருந்து
நலம் நிறைக - என்று ஆசீர்வதித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்...
அவர்களது திறம் கூறி பதிவு செய்த படங்கள் மனதில் நிறைகின்றன...
பெரியோர்களின் நல்லாசிகள் அனைவரையும் ஆட்கொள்வதாக...
திருச்சிற்றம்பலம்!..
வணக்கம் சகோ துரைசெல்வாரஜூ , வாழ்க வளமுடன்.
நீக்குஆமாம், மனம் முழுவதும் நினைவுகள்தான்.
மாமா, அத்தை நினைவுகள் எங்களைச்சுற்றியும், அவர்களின் ஆசியில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களுக்கும் ஊரின் நினைவு தான் இருந்து இருக்கும் இன்று முழுவதும் இல்லையா?
உங்களுக்கு விடுமுறை உண்டா?
என்ன செய்தீர்கள் தீபாவளிக்கு?
// அது ருசியாக இருக்கக் காரணம் அன்பால் செய்த இட்லி//
பதிலளிநீக்குபடிக்கும்போது அவ்ளோ ஸந்தோஷம் ...என்னவொரு தேஜஸ்! பாட்டியும் தாத்தாவும் அழகா தெய்வீக களைஉடன் இருக்காங்க எல்லா படத்திலும் ..
அருமையான நிகழ்வுகளை பொக்கிஷமாக அழகாய் சேமித்து வைத்ததற்க்கும் சரியான தருணத்தில் நினைவுகூர பகிர்ந்ததற்கும் மகனுக்கு பாராட்டுக்கள் ..
தமிழ்சங்கம் நாடகத்தில் இந்த உடை அலங்காரம்லாம் எங்கிருந்துக்கா வாங்குவாங்க ! இங்கே பார்த்ததில்லை தமிழ் சங்கம்லாம் .. எங்க ஏரியா வட இந்தியர் மற்றும் கேரளத்தினர் சமீபத்தில் நிறைய .
பராக் பாராக் என வருகையை அறிவிக்கும் காவலாளி அழகாய் இருக்கிறார் .
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குபாட்டியும் , தாத்தாவும் எல்லோரையும் கவர்ந்து விடுவார்கள். உங்களையும் கவர்ந்து விட்டார்கள்.
ஆமாம், மகன் தகுந்த நேரத்தில் படங்களை அனுப்பி எல்லோரையும் மகிழ வைப்பான்.
பாராட்டுகளை அவனிடம் தெரிவிக்கிறேன்.
தமிழ் சங்கத்திற்கு உடைகள் அவர்களே வடிவமைத்து கொள்வார்கள். குழந்தைகளின் பெற்றோர்களின் உழைப்பும், ஆர்வமும் தான் விழாவை சிறப்பாக செய்யமுடிகிறது.
மகன் ஊரிலும், கேரள, தெலுங்கர் சங்கங்கள் உண்டு.
வட இந்தியர் தனியாக வைத்து இருக்கிறார்கள். இருந்தாலும் தமிழ் சங்கத்தில் எல்லா மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
பேரனை ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குஇனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதிக்கா இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇட்லி //ருசியாக இருக்கக் காரணம் அன்பால் செய்த இட்லி//
ஆஹா!! அதேதான் அக்கா. நாம் அன்பால் எது செய்தாலும் அது நன்றாகவே வரும்....பாட்டி செமையா இருக்காங்க. 95 வயதிலும் முகத்தில் என்ன ஒரு களை! பல விஷயங்களைச் சொல்லுது அந்த முகம். அன்பான, நல்ல மனது என்பதால் ஒரு அம்சமான தெய்வீகம் என்பது தெரிகிறது. சார் அவர் அம்மா சாயல் என்று நன்றாகவே தெரிகிறது. தாத்தா 105 வரை இருந்து இறைவனடி சேர்ந்தார் என்பது மிகுந்த ஆச்சரியம் அந்த வயதிலும் ஓரளவு தெம்பாகவே இருந்திருக்கிறார் என்றும் தெரிகிறது. பாட்டி 95 வயதிலும் கிச்சனில் என்பதும் ஆச்சரியமே! தெய்வத்திடம் இருக்கும் இருவருக்கும் நமஸ்காரங்கள்! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது இருவர் முகத்திலும்!
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி.
ஆமாம் கீதா, அன்புதான் அவர்களை இத்தனை வயதிலும் உழைக்க வைத்தது. இந்த குழந்தைக்கு இது பிடிக்கும், இவனுக்கு இது பிடிக்கும் என்பதுதான் அவர்கள் சிந்தனைதான் தெம்பாக இருக்க வைத்தது..
சார் அம்மா சாயல்தான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இனிய தீபாவளி வாழ்த்துகள். இனிய நினைவுகள். வீட்டில் பெரியவர்கள் இருந்து அவர்கள் கையால் புத்தாடை, பட்சணங்கள், ஆசி பெற்றுக்கொள்வது சிறப்பு, கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். அவர்கள் கையால் புத்தாடை, பட்சணங்கள் பெற்றுக் கொள்ள கொடுத்துதான் வைத்திருந்தோம் என்றே நினைக்கிறேன் . கூடவே இருந்த பேரனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் இப்போது கிடைத்து இருக்கிறது. அவர்கள் கூடவே இருந்து அவர்களை பார்த்து கொள்ளும் புண்ணியம் அந்த பேரனுக்கு கிடைத்து இருந்தது.
மீண்டும் வந்து இந்தப் பதிவினைப் படித்தபோது டிட்டோவாக இதே கருத்து மறுபடியும் மனதில் தோன்றியது.
நீக்குமீண்டும் பழைய பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி, நன்றி.
நீக்குநேற்று மகன் தலைதீபாவளியை ஆச்சி, தாத்தாவோடு கொண்டாடிய படங்களை அனுப்பி மகிழ்ந்தான். 14ம் தேதியில் மாமியாரின் பிறந்தநாள் அதற்கு கேக் வெட்டி கொண்டாடிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டான்.
நீக்குபடங்கள் அருமை. அந்த வயதிலும் அவர்கள் கையால் இட்லி ஊற்றித் தருவது நெகிழ்ச்சி.
பதிலளிநீக்கு//அது ருசியாக இருக்கக் காரணம் அன்பால் செய்த இட்லி.//
உண்மை.
ஆமாம் ஸ்ரீராம், அவர்கள் கையால் நிறைய செய்ய அந்த வயதிலும் ஆசை பட்டார்கள்.
நீக்குஅதுதான் எங்களுக்கு எல்லாம் மனபலத்தை கொடுத்தது.
இப்போது மனசோர்வு வந்து இருக்கிறது வயதான நினைப்பும் வந்து விட்டது. அவர்கள் இருக்கும் போது நாங்கள் குழந்தைகள் இந்த வயதிலேயே என்ன இப்படி சாப்பிடுகிறீர்கள் என்று உபசரிப்பார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆமாம் அக்கா தமிழ்ச்சங்கம் பற்றி நீங்க எழுதிய பதிவு நினைவில் இருக்கு. பேரன் செம க்யூட்டாக இருக்கிறார். பராக் பராக் சொல்லும் காவல் வீரராய்!!!
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு பாராட்டுகள்! தாத்தா பாட்டி நினைவுகள் அது பொக்கிஷத்தை பொக்கிஷப்பெட்டியிலிருந்து எடுத்துத் தொகுத்துப் பகிர்ந்தது மிக மிக சந்தோஷமான விஷயம். மகனுக்கு எங்கள் பாராட்டுகளைச் சொல்லிடுங்கள். நல்லதொரு குடும்பம். கொள்ளுப் பேரன் பேத்திகள் வரை பாட்டியின் இட்லியைச் சுவைத்திருக்கிறார்களே! வாவ்!
இப்படிப் பெரியவர்கள் அன்புடன் இருந்து எல்லோரும் அன்புடன் இருந்துவிட்டால் குடும்பம் நிச்சயமாக ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...
பதிவை ரொம்பவே ரசித்து வாசித்தேன் கோமதிக்கா
கீதா
கண்டிப்பாய் உங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சொல்லி விடுகிறேன் கீதா.
நீக்குஅத்தைக்கு பின் எல்லோரும் இப்படி இருக்க முடியுமா அவர்களை போல் என்று நினைக்க தோன்றுகிறது.
அத்தனைபேரையும் கண்ணுக்கு தெரியாத கயிறால் (அன்பு கயிறு) கட்டி இருந்தார்கள்
இனியும் அப்படியே இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.
பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அத்தனைபேரையும் கண்ணுக்கு தெரியாத கயிறால் (அன்பு கயிறு) கட்டி இருந்தார்கள்//
நீக்குஆஹா அழகான வரி கோமதிக்கா! ரசித்தேன்...
கண்டிப்பாக இறைவன் அருள் புரிவார்!
கீதா
இந்த வருடம் தங்களுக்குத் பண்டிகைகள் இல்லை என்பது தெரியும் கோமதிக்கா...இருந்தாலும் பெரியவர்களின் ஆசிகள் உங்கள் எல்லோருக்கும் கிடைத்திடும்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கும் அக்கா...
கீதா
கீதா, புது ஊரில் பண்டிகை சிறப்பாக நடந்து இருக்கும் . உங்களுக்கும் ஊரின் நினைப்பாய் இருக்கும் இல்லையா?
நீக்குஎல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.
படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன...கோயில் கோபுரம் ரொம்பவே அழகாக இருக்கின்றது..
பதிலளிநீக்குகீதா
மாமா தீபாவளிக்கு வந்து சேருங்கள் என்று கடிதம் எழுதுவார்கள். 90 வயது வரை கடிதம் எழுதினார்கள் . //
பதிலளிநீக்குஎன்ன ஒரு அன்பு தாத்தாவிற்கு...இல்லையா!! இப்படி எல்லாம் இருப்பது எத்தனை நல்ல விஷயம்...ரொம்பவே ரசித்தேன் அக்கா
கீதா
ஆமாம், மாமாவும், சின்னமாமனாரும் ஒரு கார்டில் அவ்வளவு விஷ்யங்கள் எழுதி விடுவார்கள், நம் நலம், அவர்கள், நலம், ஊர் விஷயம், மற்ற சகோதர்களின் நலன்கள் என்று அவ்வளவும் இருக்கும்.
நீக்குஅப்புறம் போன் பேசும் போது காது கேடக்வில்லை என்று அத்தையே பேசுவார்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்வார்கள்.
ஆஹா அக்கா என் தாய்மாமாவும் அப்படியே!
நீக்குகீதா
ஓ ! அந்தக் கால பெரியவர்கள் கடிதங்களில் அவ்வளவு விஷயங்கள் இருக்கும், மழைபெய்வது, நாட்டு நடப்பு, ஊர், உலக விவரங்கள், உற்றம், சுற்றம் நலங்கள் எல்லாம்.
நீக்குமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
பலகாரங்கள் எல்லாம் ஃபோட்டோவுக்கு அழகாகப் போஸ் கொடுக்குதே!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
பலகாரங்கள் அழகாய் போஸ் கொடுக்குதா?
நீக்குஈளையில் வைத்து எத்தனை பலகாரம் எங்கிருந்து வந்தது யார் செய்தது என்று சொல்லி சாப்பிடும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.
நாங்களும் ஊரில் இருந்தவரை பலகாரங்கள் எல்லாம் வீடுகளுக்கு பகிர்ந்து கொடுப்போம். நான் திருவனந்தபுரத்தில் இருந்தவரை....
பதிலளிநீக்குசென்னையில் கூட முதலில் எல்லாம் மாமியாரின் தங்கைகள் வீடு அருகிலேயே என்பதால் பலகாரங்கள் பகிர்ந்து கொடுப்பது வழக்கம். சமீப வருடங்களில் எல்லாம் மாறிவிட்டது...
கீதா
கால மாற்றங்களில் சில விஷ்யங்கள் மாறிதான் விட்டது.
நீக்குகொண்டு போய் கொடுக்க குழந்தைகள் இல்லாமல் யாராவது கொண்டு வந்து கொடுக்கும் பலகார தட்டில் நான் போடுக் கொடுத்து விடுவேன்.
இன்று பக்கத்து வீட்டினர் வெறும் சிரிப்பு மட்டுமே செய்தவர்கள் இன்று நிறைய பலகாரத்தோடு வந்து விட்டார்கள் வீட்டுக்கு திடீர் என்று என்ன செய்வது என்று தெரியவில்லை. தங்கைகள் கொடுத்த இனிப்புகளை கொடுத்தேன் .
கீதா , உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
நீக்குவாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
தங்களுக்கு இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை இல்லை என்பதை அறிந்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சொல்வதில் தவறில்லையே. இனிய தீபாவளி வாழ்த்துகள்!
பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருக்கும் போல் தெரிகிறது. பேரன் மிக ஸ்மார்ட்டாக இருக்கிறார். வேஷம் நன்றாகவே இருக்கிறது. அவரைப் பார்க்கும் போது நான் ட்ராமா போட்டது குறும்படம் எடுத்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது.
தங்கள் அத்தையும் மாமாவும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாய்த் தெரிகின்றார்கள். அந்தத் தெய்வீகம் தான் அவர்களை இத்தனை ஆண்டு காலம் நல்ல மனதுடன் ஆரோக்கியத்துடன் வைத்திருந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இறைவனடியில் இருந்து உங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்கள்.
உங்கள் மகன் அனைத்தும் நினைவில் வைத்துக் கொண்டு தொகுத்து அளித்தமை பாராட்டிற்குரியது. வாழ்த்துகள்!
துளசிதரன்.
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீக்குஉடல்நலமாய் இருக்கிரீற்களா?
வேலை பளு அதிகமோ?
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, மகிழ்ச்சி.
அத்தை செய்த பலகாரங்கள் மட்டும் அல்ல சமையலும் ருசியாக செய்வார்கள்.
இரண்டு பேரும் இறைவன்பால் நம்பிக்கையும், பக்தியும் உடையவர்கள். பூஜைகள், வழிபாடுகளை தவறாது செய்பவர்கள்.பிறர் வாழ்க்கைக்கு எப்போதும் பிராத்திப்பவர்கள்.
//பேரன் மிக ஸ்மார்ட்டாக இருக்கிறார். வேஷம் நன்றாகவே இருக்கிறது. அவரைப் பார்க்கும் போது நான் ட்ராமா போட்டது குறும்படம் எடுத்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது.//
இப்போது குறுபடம் எடுக்க நேரம் இல்லையா?
உங்கள் குறும்படங்களை பார்த்து இருக்கிறேன்.
மகனை பாராட்டியதற்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கு நன்றி.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
சிறப்பான நினைவுகள்.....
பதிலளிநீக்குஇந்த முறை எங்களுக்கும் பண்டிகை இல்லைம்மா...
அந்தக் கால மனிதர்களின் பாசமும் நேசமும் இப்போது குறைந்து விட்டதோ என அவ்வப்போது எனக்குத் தோன்றும்.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களுக்கும் இல்லை என்பதை பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
தீபாவளி வரை இருக்காமல் ஊர் திரும்பி விட்டீர்களே என்று நினைத்தேன்.
அந்தக் கால மனிதர்கள், ஒன்று விட்ட இரண்டு விட்ட சொந்தங்களையும் அரவணைத்து வாழ்ந்தார்கள். இப்போது அந்த அளவு இல்லையென்றாலும் உடன்பிறப்புகளுடன் சண்டை சச்சரவு இன்றி வாழ்வதே பெரிய விஷயமாய் இருக்கிறது.
பாசம், நேசம் இருந்தாலும் சூழ்நிலை காரணமாய் உறவுகள் முறிவு ஏற்படுகிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குபதிவுக்கு பிறகு வருவேன்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்கவளமுடன்.
நீக்குவாங்க வாங்க மெதுவாய் வீட்டில் ம்கள், மாப்பிள்ளை இருக்கும் போது அவர்களிடம் உரையாடி மகிழ்ந்து இருங்கள்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
//அது ருசியாக இருக்கக் காரணம் அன்பால் செய்த இட்லி//
பதிலளிநீக்குஇதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு
தங்களது மகிழ்வான தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ...
இவைகள் உங்களது சந்ததிகளுக்கும் தொடர.... இறையருள் கிட்டட்டும்.
தேவகோட்டை ஜி மீண்டும் வந்து கருத்து சொல்லி வாழ்த்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா. இனிமையான,மனதைவிட்டகலாத நினைவுகள். நானும் இங்கு இப்படியான பசுமையான நினைவுகளை மீட்டியே(மனம் சோர்வாக இருந்தால்) எனர்ஜியை ஏற்படுத்துவேன். சில நேரம் மனம் கவலையாக இருக்கும் அவர்கள் எம்முடந் இல்லையே என. ஆனாலும் அவர்களின் ஆசிகள் எமக்கு எப்போதும் இருக்கும் என எண்ணி ஆறுதலடைவேன்.
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகான நினைவு பொக்கிஷங்கள். இருவரும் நிறைவான வாழ்வினை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இந்த வயதிலும் சுறுசுறுப்பா இருக்காங்க உங்க அத்தை. இருவரும் அழகா இருக்காங்க.
வாவ்....கவின்குட்டி குட்டி மீசையோடு எவ்வளவு அழகா இருக்கார். சூப்பரா இருக்கு ட்ரெஸ்.வாழ்த்துக்கள் குட்டி.
இங்கு சாதாரணமான நாளாக கடந்து போயிற்று. அதுதான் வழமை. இங்கு க்றிஸ்மஸ் கொண்டாட்டம் களை கட்டிவிட்டது.
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல் மனம் சோர்வாக இருக்கும் போது பசுமையான நினைவுகளை நினைத்து கொண்டு மனதை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
நானும் அப்படித்தான் செய்கிறேன்.
வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு விடுமுறை கிடையாது அதனால் மாலை நண்பர்களை வீட்டுக்கு அழைத்து தீபாவளி விழாவை கொணாடி மகிழ்கிறார்கள்.
இங்கு குடுமத்துடன் கொண்டாடிய உணர்வு கிடைக்கிறது.
இன்று மகன் வீட்டு நண்பர் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
வெள்ளிக் கிழமை இன்னொரு நண்பர் வீட்டில் எல்லா நண்பர்களும் கூடி தீபாவளி கொண்டாட போகிறார்கள். இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை உருவாக்கி கொள்ள வேண்டியதுதான்.
கவின் குட்டி உடையை ரசித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல் கிறித்துமஸ் கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது , அடுத்து அவர்களும் கிறித்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்வார்கள்.
அம்மு உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் இட்லியும் மிருதுவாகத்தானே இருக்கும் சுவைத்திருக்கிறேனே நேற்று சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டி மன்றத் தீர்ப்பில் அன்றைய தீபாவளிகளே மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது என்று கூறினார்கள்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரம்ணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் என்னை பாராட்டியதற்கு நன்றி.
பழைய தீபாவளி மனமகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி சார்.
தெய்வத் தம்பதிகள். மனதையும் கண்ணையும் நிறைத்து விட்டார்கள். பலகாரங்கள் பார்க்கவும் அழகோடு இல்லாமல் சாப்பிடவும் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. உங்கள் நினைவுகள் அத்தனையும் பொக்கிஷங்கள்! அதோடு உங்கள் மகன், மருமகள், பேரன் எனச் சங்கிலியாய்த் தொடரும் உறவுகள், நினைவுகள், பண்டிகைக்கால மகிழ்ச்சிகள். பேரனின் உடை அருமையாக இருக்கிறது. எல்லாவற்றிலும் பங்கு கொண்டு தன் திறமையை வெளிப்படுத்துகிறான். அதற்கும் வாழ்த்துகள் . குழந்தைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் உங்கள் மகன், மருமகள் ஆகியோருக்கும் வாழ்த்துகள், ஆசிகள். போன வருஷம் எங்க வீட்டில் தீபாவளி இல்லை! ஆனால் ஒரே ஒருத்தரைத் தவிர்த்து யாரும் எதுவும் கொடுக்கவில்லை. இதுவே அம்பத்தூராக இருந்தால் என நினைத்துக் கொண்டேன். இந்த வருஷம் தீபாவளி கொண்டாடியாச்சு. பக்ஷணங்களும் செய்தேன். வழக்கம் போல் விநியோகமும் செய்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்.
நீக்குஅத்தை செய்த பலகாரங்கள் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
அவர்கள் எப்போதும் முதல் முதலில் செய்வது போல் கவனமாய் பொருட்கள் கெட்டு போக கூடாது என்று சமைப்பார்கள் அதனால் அது எப்போதும் சுவைதான்.
சாரின் தம்பி தினம் ஒரு படம் பொருத்தமாய் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் பொக்கிஷபகிர்வாய்.
எல்லாவற்றிலும் பங்கு கொள்ளவும் அவன் திறமையை அதிகபடுத்துவதில் மருமகளின் பங்கு இருக்கிறது. அவனுக்கு சொல்லி கொடுப்பது, அதற்கேற்ற உடைகளை தயார் செய்வது என்று அவள் பங்கு அதிகம். மகன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் நாடக ரிகஷல் நடக்கும் போது அழைத்து போய் வருவது என்று குடும்பத்தின் கூட்டு முயற்சி.
மகன், மருமகள், பேரனுக்கு வாழ்த்தும், ஆசியும் வழங்க்கியது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் ஆசிகள் அவர்களுக்கு மிகவும் அவசியம்.மேலும் உற்சாகமாய் பங்குபெற உற்சாகம் தரும்.
எனக்கும் அப்படித்தான் மாயவரமாக இருந்தால் நிறைய வீடுகளிலிருந்து பலகாரங்கள் வந்து விடும்.
இங்கு இன்னும் பழகவில்லை.
நீங்கள் உடம்பு சரியில்லாத சமயத்திலும் எல்லாம் செய்து விநியோகம் செய்து இருப்பது உங்கள் மனபலத்தையும், அன்பையும் காட்டுகிறது.
உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பொதுவாக இப்போதெல்லாம் நாம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள யோசிக்கின்றனர். திருப்பிக் கொடுக்கணும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் யாரிடமிருந்தும் எதிர்பார்ப்பதில்லை. நாங்க கொடுக்கிறதைக் கொடுத்துடுவோம். அம்பத்தூரில் அன்றாட சமையல் கூடப் பகிர்ந்துப்போம். பக்கத்து வீட்டில் பாகற்காய் பிட்லை எனில் அவங்க செய்துட்டுத் தரும் வரை காத்திருந்து சாப்பிடுவோம். :))) அது ஒரு காலம்!
பதிலளிநீக்குஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். மாயவரத்தில் ஊருக்கு போய் விட்டு திரும்பி இருந்தால், தண்ணீர், உடனே சாப்பிட, பால், மாவு எல்லாம் ஒருத்தருக்கு கொடுத்து உதவிக் கொள்வோம். யாரும் விருந்தினர் வந்தால் உடனே அவர்கள் வீட்டு குழம்பு காய் கொடுத்து உதவுவார்கள், நம்மிடமும் உரிமையாக கேட்டு வாங்கி செல்வார்கள்.
நீக்குஇன்ப, துன்பத்தில் கலந்து கொள்வார்கள். யார் வீட்டு கதவும் அடைத்தே இருக்காது.
இப்போது காலம் மாறுகிறது நம்மை போல் உள்ளவர்கள் புலம்பிவிட்டு நம்வேலையை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
மகன் ஊரில் இப்போது நம் பழைய காலம் போல் இருக்கிறது ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக் கொள்கிறார்கள். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யமாய் இருக்கிறது. உறவை பிரிந்து இருந்தாலும் அங்கு உறவுகள் ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அருமையான பதிவு கோமதி அக்கா, மனதை அப்படியே டச் பண்ணி விட்டது. உண்மைதானே, எந்த ஒரு நல்ல நிகழ்வின்போதும், நம்மால் பழசை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.. என்ன பண்ணுவது சில விசயங்கள் தவிர்க்க முடியாதவைதானே.. கடந்துதானே ஆக வேண்டும்.
பதிலளிநீக்குஇப்போ ஊரில் இருந்த காலம், சின்ன வயது நினைவுகளை நினைகையில் மனதுக்கு மிக வேதனையாக இருக்கும், ஆனா நான் முடிந்தவரை பழசை நினைக்க என் மனதுக்கு இடம் கொடுப்பதில்லை, கொடுத்தேனோ பின்பு அதிலிருந்து மீள நாளாகும்.
அமெரிக்க தீபாவளியும் பூறிஸ் உம் அழகு.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான் . தீபாவளி என்றால் சில நினைவுகளை மறக்க முடிவது இல்லை. தீபாவளியுடன் நிறைய விஷயங்கள் பின்னி பிணைந்து இருக்கிறது.
அவற்றை நினைத்தால் மீண்டும் மீள நாள் ஆகும் தான்.
தீபாவளி கொண்டாட்டம் முடிந்து விட்டதா? உங்கள் வீட்டில்?
ஏன்ன ஸ்வீட், காரம் செய்தீர்கள் அதிரா?
அதைபற்றிய பதிவு வருதா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
இளமைக்காலத்தில் எங்கள் தாத்தா, ஆத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதும், புத்தாடைகளை வாங்கிக்கொண்டதும், அன்பளிப்பாக அவர்கள் நாலணா கொடுத்ததும் நினைவிற்கு வந்தன. இறையருளால் மகிழ்ச்சி என்றும் நிலைக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பேரனுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய நினைவுகள்.
பலகார வரிசைகளையும், உங்க்ள் மாமா, மாமியாரின் 2006 புகைப்படங்கள் நெகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅவர்களின் ஆசிகள் என்றும் உங்கள் அனைவருக்கும் இருக்கும்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஇன்று மகன் தாத்தாவின் பிறந்த நாளுக்கும், நேற்று ஆச்சியின் பிறந்த நாளுக்கும் அவர்கள் படங்களை எங்கள் குடும்ப குழுவில் பகிர்ந்து மகிழ்ந்தான்.
//அவர்களின் ஆசிகள் என்றும் உங்கள் அனைவருக்கும் இருக்கும்.//
அவர்கள் ஆசிகள்தான் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது நெல்லை.
மனக்கவலை வரும் போதெல்லாம் அவர்களை வேண்டிக் கொள்வேன் மனத்தைரியம் தரச்சொல்லி.
உங்கள் கருத்துக்கு நன்றி.