ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

பனிச்சிற்பங்கள்




பனி மழை  பொழிகிறது  பதிவில்  அடுத்த நாள் பனியில் சிற்பங்கள் செய்து மகிழ்ந்தோம் வேறு ஒரு இடத்தில். அது இன்னொரு பதிவில், என்று சொல்லி இருந்தேன். இந்த பதிவில் பனிச்சிற்பங்கள் செய்த காட்சிகள்.

வியாழன், 23 பிப்ரவரி, 2023

பனி மழை பொழிகிறது



பனி மூடிய சிகரம்


மூன்று நாள் விடுமுறை  சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை.   பிப்ரவரி மூன்றாவது திங்கட்கிழமை "ஜனாதிபதி தினம்".
முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்கடனை கெளரவிக்கும்  விடுமுறை தினமாக  அமெரிக்காவில் உள்ளது.

 வடக்கு அரிசோனாவில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஃபிளாக்ஸ்டாப்,( Flagstaff )   என்ற ஊருக்கு அழைத்து போனான் மகன் . 

பேரன் சனிக்கிழமை  பெரிய நூலகத்தில்  தன்னார்வலராக பணி செய்ய  போய் விட்டான். அதனால் ஞாயிறும், திங்களும் பயணத்திட்டம் வகுத்து அழைத்து சென்றான்.

சனி, 18 பிப்ரவரி, 2023

மயிலாடுதுறை துலா கட்டம்

முழுக்குத்துறை போகும் வழி. 

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும்  சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பல ஊர்களிலிருந்தும் மக்கள் துலா ஸ்தானம் செய்ய வருவார்கள். 

ஐப்பசி மாதம் சூரியன் துலா ராசியில் பிரவேசம் செய்கிறார் அதனால் "துலாமாதம் " என்று ஐப்பசி மாதத்தை சொல்வார்கள். அந்த மாதம் முழுவதும் மயிலாடுதுறை ஜே! ஜே! என்று இருக்கும். வீடுகள் தோறும் உறவினர்கள் இருப்பார்கள். எங்கள் வீட்டுக்கும் அந்த சமயம் உறவுகள், நட்புகள் வருவது உண்டு துலாஸ்தானம் செய்ய. "கடை முழுக்கு" வர முடியவில்லை என்றால் கார்த்திகை ஒன்றில் நடக்கும் "முடவன் முழுக்கில் "கலந்து கொள்வார்கள்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

மயிலாடுதுறை துலா கட்ட காசி விஸ்வநாதர் கோவில்

மயிலாடுதுறை துலாகட்டம் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில். இதற்கு முந்திய பதிவு  தெப்பக்குள  காசி விஸ்வநாதர்  கோவில்.  இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும்      காசி விஸ்வநாதர் கோவிலுக்கு  அடுத்து நாங்கள் சென்றோம். அந்த கோவில் படங்கள் இந்த பதிவில். (2022ல்) டிசம்பர் 12ம் தேதி போய் வந்த கோவில்களை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன். 

புதன், 15 பிப்ரவரி, 2023

மயிலாடுதுறை தெப்பக்குள விஸ்வநாதர் கோவில்



மயிலாடுதுறை   தெப்பக்குள  விஸ்வநாதர் கோவில்

மயிலாடுதுறையில் ஏழு விஸ்வநாதர் கோவில்கள் இருக்கிறது, அதில் ஒன்று இந்த தெப்பக்குள விஸ்வநாதர் கோவில்.

துலாகட்ட விஸ்வநாதர்,  திருவழுந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர் , படித்துறை  விஸ்வநாதர், பெரிய கோவில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர். தெப்பக்குள விஸ்வநாதர்.

இந்த கோவில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட கோவில்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்.


வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

மும்மூர்த்திகள் ஆராதனை தினம்

 

பேரன்  கவின்

மும்மூர்த்திகள் பல கீர்த்தனைகள் இசையமைத்து இருக்கிறார்கள்

இசையமைப்பாளர்கள் தினம் என்று வைத்து இருக்கிறார்கள்.


செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

தைப்பூச விழா

தைப்பூச  சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை

வெண்ணை அலங்காரத்தில் பிள்ளையார்

ஞாயிற்றுக்கிழமை  அரிசோனாவில் இருக்கும்  "ஸ்ரீ மகா கணபதி' ஆலயத்தில் நடந்த தைப்பூசவிழாவில் கலந்து கொண்டோம். உற்சவ முருகனுக்கு திருவாச்சி செய்யும் பாக்கியம்  முருகன் அருளால்  மகன் , மருமகளுக்கு  கிடைத்தது. ஆலயகுருக்களும், மகனின் நண்பர் சீனிவாச குப்தா அவர்கள்  கேட்டு கொண்டதால் மகன் மகிழ்ச்சியாக செய்து கொடுத்தான். 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

தோட்டத்திற்கு வந்த பறவை


இன்று மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவை
Americn Robin


அமெரிக்க பாடும் பறவை. பாடவில்லை மரக்கிளையில் அமர்ந்து இருந்தது போய் விட்டது. இந்த பறவை குளிர் காலத்தில் வரும் பறவையாம். பாலைவன கள்ளி செடிகளில் உள்ள பழங்கள், பாலைவன தாவரங்கள், ஹேக்பெர்ரிகள், பாலைவன புல்லுருவி, மற்றும்  புழு, பூச்சிகள் இதன் உணவு. கோடை காலத்தில் இது வேறு இடத்திற்கு சென்று விடுமாம்.

வியாழன், 2 பிப்ரவரி, 2023

தஞ்சை பெரிய கோவில் பகுதி - 2




தஞ்சை பெரிய கோவிலுக்கு  2022  டிசம்பர் மாதம் 11 ம் தேதி போய் இருந்தோம். அப்போது நான் எடுத்த படங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.


தஞ்சை பெரிய கோவில்  முந்திய பதிவு