அருள்மிகு ஸ்ரீ பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் கோவிலில்
நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகிறது. மதுரையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் இந்த கோவிலுக்கு மட்டுமே என்னால் போய் வர முடிகிறது.
கொலு வைத்து ஸ்ரீ பேச்சியம்மனுக்கு தினம் வித விதமாக அலங்காரம் செய்வது அருமையாக இருக்கிறது.
முதல் நாள் ராஜ ராஜேஸ்வரி. அலங்காரமும் அன்று நடந்த சொற்பொழிவு "நலம் தரும் சக்தி" பற்றி இதற்கு முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.
இந்த படம் எங்கள் வீட்டு கொலு பொம்மையில் உள்ள மூன்று தேவியரும்.
நேற்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் கோவிலுக்கு போய் இருந்தேன். நவராத்திரி விழாவிற்கு கொலு வைத்து இருக்கிறார்கள்.
தங்கை மகள் வளைகாப்பு இந்த மாதம் 5 ம் தேதி அருப்புக்கோட்டையில் நடந்தது. வளைகாப்பு நடந்த மண்டபத்திற்கு அருகில் இந்த சொக்கநாதர் கோவில் இருந்தது. உறவினர்களுடன் போய் தரிசனம் செய்தேன்.
இந்த சொக்கநாதர் கோயில் முதலாம் சடையவர்மன் குலசேகரபண்டியன் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரின் சகோதரர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டில் இருக்கிறதாம்.
குழந்தைகள் செய்த பிள்ளையார்கள், மற்றும் கோவிலில் செய்த பிள்ளையாரை கரைக்கும் நாளில் மகா கணபதி ஆலயத்தில் தன்னார்வ தொண்டு செய்தவர்களுக்கு பொன்னாடையும் பரிசு பொருளும் கொடுத்து பாராட்டுக்கள் வழங்கி உள்ளார்கள்.
மகனுக்கும் பொன்னாடை, கணபதி படம், பசுவும் கன்றும் உள்ள சிலை எல்லாம் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். (10. 9. 2022 ல் நடந்தது.)
வெகு சிறப்பாக 10 நாட்கள் நடந்த விழாவில் நடனம், பாட்டுக் கச்சேரி எல்லாம் நடந்து இருக்கிறது.
மகா கணபதிக்கு பிரசாதங்கள் தயார் ஆகிறது
பருப்பு வடை
மகன் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
மருமகள் செய்த இனிப்பு சீடை, முள்ளு தேன்குழல், உப்புச்சீடை மற்றும் வெண்ணை, அவல் வெல்லம்
பேரன் கண்ணன் வேடத்தில் புல்லாங்குழலில் கீதம் இசைக்கிறான்
மகன் சிறு வயதில் வரைந்த கண்ணன் ஓவியம்
எங்கள் வீட்டு பிள்ளையார் புது களிமண் பிள்ளையார் வாங்கவில்லை.
மகன் சிறு வயதில் வைத்து விளையாடிய பிள்ளையாரை வைத்து பூஜை செய்து விட்டேன். கார பிடிகொழுக்கட்டையும், மோதகமும் செய்தேன். சுண்டல் மறுநாள் செய்தேன்.
பொரி உருண்டை, எள்ளு உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, கடலை உருண்டை, அவல், அரிசி பொரி என்று கடையில் வாங்கி வைத்து வணங்கி விட்டேன்.
அண்ணன் வீட்டிலிருந்து அப்பம், மோதகம், இனிப்பு பிடி கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை வந்து விட்டது.
தங்கை வீட்டு பிள்ளையார் கொலு பார்க்க போனபோது மோதகத்திற்கு வைக்கும் பூரணம் கொடுத்தாள் கொஞ்சம் அதை வைத்து 9 மோதகம் செய்து வழி பட்டேன்.
எனக்கும், வீட்டு வேலைகளில் உதவி செய்பவருக்கும் மட்டும் தான். அக்கம் பக்கம் யாரும் கொடுப்பது வாங்குவது இல்லை. தீபாவளிக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.
கிருஷ்ண ஜெயந்திக்கு காலை இனிப்பு அவல் செய்து வழி பட்டேன், மாலையில் பால் பாயாசம்
ஜோதி தொலைகாட்சியில் கோவை இஷ்கான் கோவில் நெரடி ஒலிபரப்பில் அபிஷேகம், அர்சச்சனையை பார்த்தேன்.
கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடல் சில வரி காணொளி
கிருஷ்ணை வேகமாக வர சொல்லும் பாடலுடன் மலர் அபிஷேகம் இருக்கிறது சிறிது நேர காணொளிதான் பாருங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை பல் மருத்துவரை பார்க்க போனேன். அப்போது மருத்துவமனைக்கு அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தேன். மாலை நேரம் நிறைய கூட்டம் வருமாம். நான் போன நேரம் மாலை 5 அதனால் கூட்டம் குறைவு. பெற்றோர்கள் குழந்தைகளை ராதையாக , கிருஷ்ணராக அலங்காரம் செய்து தூக்கி கொண்டும், நடத்தியும் அழைத்து வந்து கொண்டு இருந்தார்கள்.
மூலவர் கிருஷ்ணர் இடுப்பு அரைச்சலங்கையுடன் சந்தன காப்பில் சிறு குழந்தையாக நின்று கொண்டு இருந்தார், ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்த அலங்காரம் என்று பூக்கார அம்மா சொன்னார்கள். உற்சவர் வெளியே ஊர்வலமாக போய் இருந்தார். அவர் பின்னால் மக்கள் கூட்டம் போய் விட்டதால் கோவிலில் கூட்டம் இல்லை, நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.
பதிவர் கீதா சாம்பசிவம் அடிக்கடி சொல்லும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணர் கோவில். இதை அவர் படிக்கும் போது கிருஷ்ணஜெயந்தி விழா நிகழவுகள், மற்றும் கச்சேரிகள் கேட்டது மனதில் வரும்.
பதிவுகள் போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டதே என்று இந்த பதிவு.