திங்கள், 24 மே, 2021

அமைதிப் பூங்கா





அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.

சிவப்பு பாறை தேசிய பூங்கா (Red Rock State Park)



சிவப்பு பாறை தேசிய பூங்காவிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும்  புத்தஸ்தூபி அமைந்து இருக்கும் இடம் போனோம். அந்த இடத்தின் பேர் அமிதாபா ஸ்தூபா அமைதிப் பூங்கா   (Amitabha Stupa and Peace Park)

 2004 ம் வருடம் முதல் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும்  செடோனாவில் அமைந்து இருக்கும்  இந்த அமிதாபா ஸ்தூபத்திற்கு வருகிறார்களாம். உலகெங்கிலும்  இருந்து மக்கள் இந்த அமைதியான இடத்திற்கு நாள்தோறும்  வந்து செல்கிறார்களாம். அதிகாலை முதல் மாலை வரை  திறந்து இருக்குமாம். இங்கு அனுமதி இலவசம். நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும். என்று போட்டு இருக்கிறது.

வியாழன், 20 மே, 2021

இயற்கையின் அதிசயங்கள்




நீரோடையும் மான்களும் முந்தின பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.


நீரோடையும் மான்களும் பதிவின் கடைசியில் அங்கு உள்ள மரங்களின் அழகும், எறும்புக் கூடும் மற்றும் எறும்புதின்னும் பூச்சிப்பற்றி பார்க்கலாம் என்றேன்.  அவைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரோடையில் இறங்க அனுமதி இல்லை. விலங்குகளுக்கு, பறவைகளுக்கும் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் நீரோடை.

ஞாயிறு, 16 மே, 2021

நீரோடையும் மான்களும்


மரக்கூடார நிழலில் மரப்பாலம்


  இந்த  நீரோடையில் நீர் அருந்த வந்த விலங்கு என்ன என்று யோசித்து வைத்து இருங்கள் என்றேன் போன பதிவில். 
     
சிவப்பு பாறை தேசீய பூங்கா முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
 நல்ல காற்றை சுவாசிக்க இயற்கையை ரசிக்க ஏற்ற இடம் இந்த தேசிய பூங்கா. மகள்  ஊரிலிருந்து என்னைப்பார்க்க வந்து இருப்பதால் அவளையும் தன் ஊரில் சிறந்த இடத்திற்கு அழைத்து செல்ல எண்ணம் கொண்ட மகன், மருமகள் ஏற்பாடு செய்த பூங்கா அருமையாக இருந்தது. 

கூட்டம் இல்லாத இடம். அமைதி தவழும் இடம். பறவைகளின்  சத்தம் மட்டுமே கேட்கும் இடம். நாம் பேசுவதே மிக சத்தமாக கேட்கும்  அப்படி ஒரு அமைதியான இடம்.

செடோனாவில் இந்த மாதிரி இடங்கள் 100 இருக்கிறதாம்.இந்த மலைகளில் மக்கள் மலையேற்ற பயிற்சிசெய்கிறார்கள்  மலையேற்றத்தால் கிடைக்கும் நன்மைகளுக்காக  இந்த மாதிரி இடங்களுக்கு போக விரும்புகிறார்கள். , நல்ல காற்றை சுவாசிக்கவும் உடல் பலம் பெறவும் இந்த மாதிரி இடங்களுக்கு போக விரும்புகிறார்கள். 

நம் நாட்டில் மலைமேல் உள்ள கோவில்களுக்கு  படிகளில் ஏறியும், படி இல்லாமல் மலைபாதையில்  நடந்து சென்றும்  தரிசனம் செய்து வருவார்கள். மலைகளில் வளரும் மூலிகை தாவரங்களின் வாசமும், அங்கு கிடைக்கும் சுத்தமான காற்றும்   நமக்கு மனபலம், உடல்பலம் தரும் என்ற நம்பிக்கை உண்டு நம் மக்களுக்கு. மலைபகுதியில் உள்ளமக்கள் நிறைய தூரம் மலைபாதையில்  ஏறி, இறங்கி, நடந்தே பல இடங்களுக்கு போவதால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

வியாழன், 13 மே, 2021

சிவப்பு பாறை தேசிய பூங்கா (Red Rock State Park)


அன்னையர் தினத்திற்கு  மகன் ரெட் ராக் ஸ்டேட் பார்க்கிற்கு அழைத்து சென்றான்.  அம்மாவுக்கு இயற்கையை ரசிக்க பிடிக்கும் என்று.

  இந்த அன்னையர் தினம்  மகிழ்ச்சியும் , வருத்தமும் ஒரு சேர கொடுத்த தினமாக அமைந்து விட்டது.  மகளும், மகனும் உடன் இருந்தனர்    அது மகிழ்ச்சி.  அவர்கள் அப்பாவும் இருந்து இருந்தால் இன்னும்  மகிழ்ச்சியாக இருந்து இருக்கும் என்ற நினைப்பு தந்த வருத்தம் ஒரு பக்கம். அவர்களுக்கு வருத்தம் வரக்கூடாது என்று மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் ரசித்து வலம் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை சென்று வந்த இடத்தின் பதிவு இங்கு இந்த பதிவில் இடம்பெறுகிறது.

இந்த ரெட் ராக ஸ்டேட் பார்க் அரிசோனாவில் இருக்கும் ஒரு மாநில பூங்கா. செடோனா என்ற நகருக்கு வெளியே  சிவப்பு மணற்கல் பள்ளத்தாக்கு . மகன் வீட்டிலிருந்து 1 மணி 30 நிமிட நேரம் ஆகிறது போய் சேர்வதற்கு.

ஞாயிறு, 9 மே, 2021

அம்மாவின் பொக்கிஷங்கள்







 

திங்கள், 8 பிப்ரவரி, 2010

அம்மாவின் பொக்கிஷங்கள் முன்பு எழுதிய பதிவு மீள்பதிவாக  இன்று இடம் பெறுகிறது.


என் அம்மா பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து இருந்த நிறைய பாடல்கள்,கடவுள் பாடல்,தேசபக்தி பாடல்கள் எல்லாம் அவர்கள் கைப்பட எழுதிய நோட்டு மூலம் கிடைத்தது.
கிழிந்து போய் இருக்கிறது. தீபா கோவிந்த் ஒரு முறை என்னிடம் //அம்மா நீங்கள் ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுப் புத்தகத்திலே கிறுக்கினதை,இனிமேல் வலைப் பதிவுகள் மூலமாக பதியுங்கள் இது கிழியாது,செதிலரிக்காது எப்பவுமே பர்மனெணட்//
என்றார்கள். நான் என் அம்மா எழுதி வைத்து இருந்ததை பதிவு செய்கிறேன். யார் எழுதிய பாடல்கள் என்று தெரியவில்லை நன்றாக இருந்தது,அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வியாழன், 6 மே, 2021

தோட்டத்திற்கு வந்த அணில் பிள்ளைகள்


மகன் வீட்டுத் தோட்டத்தில் குடியிருக்கும் அணில் பிள்ளைகளின் படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

ஞாயிறு, 2 மே, 2021

உழைப்பாளர் தினம்



மதுரையில் அம்மாவீட்டுப் பக்கம் இந்த புட்டுக் கடை இருக்கும் தினம் மாலையில்.

 கணவனும், மனைவியும்  வித விதமான புட்டு மற்றும் இடியாப்பங்களை சுறு சுறுப்பாக செய்வார்கள். மாலை   6 மணிக்கு ஆரம்பித்தால்  9 மணி வரை கடை   நடக்கும் . மிகவும் சுவையாக இருக்கும்.


சாமானியரின்  குரல் 2019 ல் போட்ட பதிவு.  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

இன்று மே1 உலக தொழிலாளர் தினம் .உலக தொழிலாளர்கள்  அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

இந்த கொரோனா காலத்தில் இப்படி பட்ட சாமானியர்கள் படும் துன்பங்கள் அதிகம்.  மாதம் வருமானம் வருபவர்களை விட அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர் வாழ்க்கைதான் மிகவும் கஷ்டம்.

விரைவில்  அனைவரும்  நலமாக வாழ, இயல்பு வாழ்க்கை திரும்ப வர வேண்டும். எல்லோரும்  நலமாக வளமாக வாழ இறைவன் அருள வேண்டும்.