தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம்


தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.

இந்த பதிவில் தங்க புத்தர் இடம் பெறுகிறார்.

செவ்வாய், 31 மார்ச், 2026

யோகம் செய்யும் சிலைகள்


புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1



புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2



தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.

 புத்த மடாலயத்தில் பிரகாரத்தில் தோட்டம் இருந்தது,  மரங்களுக்கும் செடிகளுக்கும்  இடையில் அமர்ந்து யோகா செய்யும் சிலைகள் இருந்தது. அந்த சிலைகள் படம்  இந்த பதிவில் .

வெள்ளி, 7 ஜூன், 2024

கப்பல் பயணம் (CARNIVAL RADIANCE CRUISE ) பகுதி -1




மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன்.  

"சேத்னா காயத்ரி உணர்வு மையம்" முந்திய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்

மே 30 தேதி வியாழன்  மதியம் இரண்டு மணிக்கு மேல்  அரிசோனாவிலிருந்து கிளம்பி ஆறுமணி நேரம் பயணம் செய்து   லாஸ் ஏஞ்சல்ஸ் அடைந்தோம்,   அங்கு ஓட்டலில் தங்கி விட்டோம் இரவு .  மே 31 ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் தான் எங்கள் பயணம் தொடங்கும்,  

இந்த கப்பலில் தான் பயணம் செய்தோம். இந்த கப்பலின் பெயர்  CARNIAL RADIANCE  மே மாதம் 31 ம் தேதி வெள்ளிக்கிழமை  மதியம் இரண்டு மணிக்கு வந்தோம். 3 மணிக்கு எல்லா பரிசோதனைகள்  முடிந்து உள்ளே போக அனுமதி சீட்டு பெற்று கப்பலில் ஏறினோம்.    

வெள்ளி, சனி, ஞாயிறு  மூன்று இரவுகள் கப்பலில் இருந்தோம்.திங்கள் காலை உணவுக்கு பின் கப்பலை விட்டு இறங்கினோம்.

எங்களுக்கு பின்னால் தெரிவது வேறு ஒரு கப்பல்

திங்கள், 29 ஜனவரி, 2024

ஆலப்புழை படகு வீடு பயணம் - பகுதி 2

ஆலப்புழா படகு வீட்டில் மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் பயணம் செய்த போது பார்த்த கோவில்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.


ஆலப்புழா படகு வீடு பயணம்  பதிவில்   பார்த்த கோவில்கள் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன், நினைவு இருக்கும். 
முதலில் பார்த்த ஸ்ரீ நாராயணகுரு தேவா கோவில் அப்புறம் கிருஷ்ணர் கோவிலும் போகும் வழியில் பார்த்த அழகிய காட்சிகளும்  இடம்பெறுகிறது.

ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்


ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்


சிங்கப்பூர் போய் இருந்த போது தரிசனம் செய்த  கோவில்களை பகிர்ந்து வருகிறேன். போன பதிவில் வீரமாகாளியம்மன் கோவில்.
 இந்த பதிவில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் இடம்பெறுகிறது

வியாழன், 5 மே, 2022

திருக்கருகாவூர்

திருக்கருகாவூர் கோயில்

இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசம் அருகே 6 கிலோ மீட்டர் தொலைவிலும்,  தஞ்சாவூர் நாகபட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு  வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. காவிரி எனும் வெட்டாற்றின் கரையில் அமைந்து இருக்கும் அழகிய ஊர்.

குழந்தை பேறு அளித்து கருவை காத்து அருளும் அன்னை இருக்கும் கோயில் திருக்கருகாவூர். தேவாரதலங்களில் ஒன்று.
திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் இருவரும் பாடிய தேவார பாடல்பெற்ற தலம். பல சிறப்புகளை பெற்ற கோயில்.

                      முல்லைவனேசுவரர்,கரும்பனையாளம்மை

இதற்கு முந்திய திட்டை கோயில் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 21.4. 2022, 22.4 . 2022  இரு நாட்களும்  சென்று தரிசனம் செய்து வந்த  கோயில்கள் தொடர் பதிவு.

புதன், 27 அக்டோபர், 2021

இலையுதிர் கால விழா -1


விழாவிற்கு வரும் மக்களை உற்சாகப்படுத்த இசை விருந்து.


சுவற்றில் மிக அழகாய் இந்த ஊரின் பேரை வரைந்து இருக்கிறார்கள். இலையுதிர் காலவிழாவை வரவேற்று மக்களின்   மகிழ்ச்சியை சொல்கிறது ஓவியம்.

புதன், 13 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2




  இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

சைவ, வைணவக்  கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம் என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். போன பதிவில் வைணவ கதைகள் கோபுரங்களில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த பதிவில் சைவகதைகள் உள்ள கோபுரக்காட்சிகள்.

 இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். கீழே வருவது அய்யனார் கோவில் பிரகாரத்தில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள கதை சொல்லும் சிற்பங்கள் , கோபுரம் தாங்கும் பொம்மைகள் காலத்தைச் சொல்கிறது.  கேரளத்தினர், வட மாநிலத்தவர், நாடோடிகள் (குறவர்கள்)  ஆகியோர் கோபுரத்தில் இருக்கிறார்கள்.

ஆலமர் கடவுள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் - கேரள ஆண், பெண்

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கூடல் அழகர் தரிசனம்

அஷ்டாங்க விமானம்

மங்களா சாஸனம் :-
திருமங்கை யாழ்வார்
திருமழிசையாழ்வார்

//கோழியும் கூடலும்கோயில்கொண்டகோவலரேஒப்பர், குன்றமன்ன
பாழியந்தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம்  எண்ணில் மாகடல் போன்றுளர்,கையில்வெய்ய
ஆழியொன்றேந்தி ஓர் சங்குபற்றி அச்சோ ஒரு வரழகியவா!//
--திருமங்கையாழ்வார்.

அழைப்பான் திருவேங்கடத்தானைக்காண
இழைப்பான் திருக்கூடல்கூட- மழைப்பே
ரகுவிமணி வரன்றிவந்திழிய யானை
வெருவியரவொடுங்கும்வெற்பு.
-- திருமழிசையாழ்வார்.


திங்கள், 10 ஜூலை, 2017

திடியன் மலை

திடியன் மலை
திடியன் மலை மதுரையிலிருந்து  தேனீ பாதையில் 31 கி,மீ தொலைவில் உள்ளது.

                  
                
                           விழாவிற்கு சமைத்துக் கொண்டு இருப்பவர்கள் 

போன ஞாயிறு (02/07/2017) திடியன்  என்ற ஊருக்குப் போனோம்.
 (காலை 6 மணிக்கு கிளம்பினோம்).  அங்குள்ள  ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தியைப்பற்றி இணையத்தில் படித்து அவரைப் பார்க்கப் போனோம். தட்சிணாமூர்த்தி 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து இருப்பார், மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் என்று படித்தோம். நாங்கள் போன போது கோவில் நடை திறக்கவில்லை. பக்கத்தில்  இருந்த சமுதாயக்கூடத்தில்  ஏதோ விழாவிற்குச்  சமைத்துக் கொண்டு இருந்தவர்கள் குருக்கள் 7மணிக்கு வந்து விடுவார், 10 மணி வரை இருப்பார், அதற்குள் மேலே போய் வந்து விடுங்கள் என்றார், மேலே உள்ள மலைக் கோவிலைக் குறிப்பிடுகிறார் போக முடியுமா? என்ற கேள்வியை அங்கிருந்த பெரியவரிடம் கேட்டோம்.  அவர் போகலாம், படிகள் இருக்கு , பிடித்துக் கொண்டு ஏறக் கம்பி இருக்கு போய் வாங்க பயமில்லை மேலே போலீஸ் இருக்கிறார் என்றார்.

பெரியவர் சொன்னால் பெருமாள் சொன்னது போல என்பார்கள். மேலேயும் பெருமாள் தான் இருக்கிறார், போய் வந்து விடுவோம் என்று கிளம்பினோம். அன்று நவமி வேறு . மலையின் பேரும் ராமர் மலை என்கிறார்கள். ராமருக்கு நவமி விஷேசம் இல்லையா?
அவர் அழைக்கிறார் போய் வருவோம் என்று  கிளம்பினோம்.

 அவன் இன்றி அணுவும் அசையாது, எல்லாம் அவன் விருப்பம்,  நடப்பது எல்லாம் நாராயணன் செயல் என்பதை உணர்ந்த கணம். கைலாசநாதரைப் பார்க்க வந்தோம், அவர் முதலில் பெருமாளைப் பார்த்து வா என்கிறார்.

"மலைகள் என்னை அழைக்கின்றன நான் போயே ஆக வேண்டும்"    ஜான்முய்ர் சொன்னது போல் நான் மலைக்கோவில் போக வேண்டும் என்று நினைக்கவில்லை   ஆனால் மலையில்  உள்ள மலையப்பர்   அழைத்து விட்டாரே ! 

//மலைகளின் அழைப்பு
"மலைகள் என்னை அழைக்கின்றன. நான் போயே ஆக வேண்டும்." என்பது ஜான் முய்ரின் மிக பிரபலமான வாசகம். மலையேற்ற ரசிகர்களின் காயத்ரி மந்திரமாக விட்டவை இவ்வரிகள்.
மலைகள் தன் உச்சிகளிலும் மடியிலும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. மலைகள் மேல் கொள்ளப்படுவது பெருங்காதல். தீராக் காதல். குறிஞ்சி நிலமே எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கியது. சங்க காலம் தொட்டு, மலைகள் படைப்பூக்கத்தை விருத்தி செய்யும் ஒரு லாகிரியாக இருப்பது.
நமது பண்பாட்டில் மலைகளுக்கு பெரிய ஆன்மிக முகம் உண்டு. இமயத்தில் சிவன், மலையாஜல புத்ரி பர்வதராஜகுமாரியான பார்வதி, ஏழுமலைவாசி பெருமாள், குன்று தோறாடும் குமரன், உச்சிப் பிள்ளையார், சபரிமலை ஐயப்பன் என்று இறையில்லங்களாய் மலைகளே இருக்கின்றன.
மலையேற்றம் நம்மை உடைக்கின்றது. இயற்கையின் முன்னர் நாம் எத்தனை சிறியவர்கள் என்று உணர்த்துகிறது. மலையுச்சியைத் தொட்டு, சாதித்து விட்டதாய் நாம் நிமிரும் போது, தோள் மேல் பிள்ளையை ஏற்றி மகிழும் தகப்பனைப் போல் இறுமார்ந்து நிற்கிறது.//

மோகன்ஜி அவர்கள் முகநூலில் அவர் போன ஆஸ்திரியப் பயணக் கட்டுரையில் மலைகளின் அழைப்பை குறிப்பிட்டு இருந்தார். 
பதிவுக்கு பொருத்தமாய் உள்ளதால்  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்..

மலைக்கு  சீக்கீரம் போய் திரும்ப வேண்டும் என்று கிளம்பிய வேகம் சுற்றுப்புறம் கவனத்தில் இல்லை, மலை மேலேயே கவனம்  முழுவதும்.  கைலாசநாதரைத்  தாண்டி வந்தால் வல்லப கணபதி, அதற்கு அடுத்து  தாமரை குளம் - காய்ந்து கிடக்கிறது, வேண்டுதலுக்குக் கலர் மீன்களை இந்த தாமரைக் குளத்தில் விடலாம், நேர்த்திகடனாய் என்று  அறிவிப்புப் பலகை இருக்கிறது அதை வந்து  போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்று அதை எல்லாம் நின்று கவனிக்காமல்  எங்கள்  பயணம் தொடர்கிறது.

இந்த  அலங்கார தோரண வாயிலைக் கடந்து போனால் ஆலமரத்தடியில் விநாயகர்  இருக்கிறார். அவரையும் கடந்து போகிறோம்.

அடுத்து, பிள்ளையார் ,மூஞ்சூரு,  கல் விளக்குத் தூண் இருக்கிறது அவரையும் ஒரு நிமிடம் நின்று கும்பிடவில்லை  மலைப் பாதை கண்ணில் தெரிகிறதா? என்று மட்டும் கவனம்

. மலையடிவாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  பெருமாள் இருக்கிறார்

மடப்பள்ளி
கோவிலுக்கு போகப் படிகள்
கோவில் உள் வாசல்
மூலஸ்தானம்

குழலூதும் கண்ணன் இரு பக்கமும் நாகர்கள்.

விஷ்ணு அமர்ந்த நிலையில்,ராமானுஜர், நம்மாழ்வார் என்று நினைக்கிறேன். சொல்ல பட்டர் இல்லை.கதவு திறந்து இருந்தது. எல்லா தெய்வ விக்கிரங்களுக்கும் தைலக்காப்பு செய்து இருந்தார், தண்ணீர் எடுக்கச் சென்று இருந்தார் போலும்.
கருடாழ்வார்

 மலையில் உள்ள பெருமாளைத் தரிசனம் செய்து வந்தபின் தான் பார்த்தோம். இவர்களை, விநாயகரை பார்க்காமல் மேலே போய் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நீங்கள் மலைக் கோவில் போகும் முன் விநாயகரை வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி பின் மேலே போய் வாருங்கள் அதற்குதான் முதலில் அவர்கள் படத்தையும், செய்தியையும் பகிர்ந்து இருக்கிறேன்.

                        
பெருமாளே !  என்று  வணங்கி மலை மேல் சிமெண்ட்டால் கட்டப்பட்டு இருந்த படிகளில்  ஏற ஆரம்பித்தோம். படி நன்றாக இருக்கிறது இல்ல என்று பேசிக் கொண்டே .
  
ஒரு பையன் மலையேறும் பயிற்சியில் இருப்பவர் போலும் கீழ்ப் படியில் அலைபேசியை வைத்து விட்டுப் படிகளில் ஓடி ஏறிக்  கொண்டும்  இறங்கிக் கொண்டும் இருந்தார் 

ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம்  சரியா?
அடுத்த பதிவில்.

என் கணவர் வரைந்த அனிமேஷன்  கார்ட்டூன் படம்.



வாழ்க வளமுடன்.

வியாழன், 24 மார்ச், 2016

ஸ்ரீ மல்லிகார்ஜுனர் திருக்கோவில் ஸ்ரீசைலம் பகுதி--- 2

ஸ்ரீசைலத்தில் மூலவரைத்  தொட்டு வணங்க வில்லையே என்ற குறை மறுநாள் நீங்கியது.
அது எப்படி என்பதைப்பற்றியும், கோவிலின் சிறப்பு, நந்தியின் சிறப்பு பற்றியும்  நாளை தொடரும். ( அதுதான் முடியவில்லை ) என்று சொல்லி இருந்தேன் அல்லவா? போன பதிவில்
காலை  நந்தியால் கிளம்ப டாக்ஸி பிடித்தோம்,  மல்லிகார்ஜுனர்சதன் சத்திரத்திற்கு பக்கம் இருந்த ஒரு கடையில்  டாக்ஸி ஏற்பாடு செய்து தந்தார்கள்.
அதற்குள் எனக்கு மறுபடியும் மல்லிகார்ஜுனரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது   சரி போய் வரலாம் என்று கிளம்பினோம், அங்கு டிக்கட் கொடுக்கும் இடத்தில் யாருமே இல்லை  கூட்டமும் இல்லை அதனால் டிக்கட் எடுக்காமல்  போனோம், அங்கே போனால் இன்ப அதிர்ச்சி.
 நேரே கருவறைக்குள் போங்கள் போங்கள் என்று விரட்டினார்கள் எங்களுக்கு முன் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அதனால் போகும் போதே பார்த்துக் கொண்டு போனோம் கவசம் எதுவும் சாற்றாமல் சிவன் அழகாய் தெரிந்தார். நம்மை அபிஷேகம் செய்ய வைத்து  தலையை சிவன் மேல் வைத்து வணங்கி எழ சொன்னார்கள்.  என் கணவர்  நம் தலையை வைத்து  வணங்க தயங்கிய போது குருக்களே என் கணவரின் தலையை  கீழே அமுக்கி வணங்க வைத்தார்.  இறைவனை கண்களில் நீர் ததும்ப வருடி , வணங்கி மகிழ்ந்தோம்.
காலையில் பணம் இருப்பவர், இல்லாதவர் என்று பேதம் இல்லாமல் அனைவரும் இறைவனைக் கட்டித் தழுவி வணங்க வைத்ததைப் பாராட்டத்தான் வேண்டும். 
கருவறைக்கு போகும் வழியில்  சுவரின்  இருபக்கமும் அடியார்களின் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பட்டு இருந்தது.தெலுங்கில் இருந்ததால் ஒன்றும் புரியவில்லை.  ஒரு பெண் கண்களில் கண்ணீருடன் இறைவனை வணங்கும் காட்சி , சிவன் அடியார்கள் வணங்கிய காட்சி எல்லாம் இருந்தது.
வெளியில் வந்தால் விபூதி கவர் , அல்லது விபூதி கட்டி சின்னது முதல் பெரிய பெரிய லிங்கம் அளவு இருந்தது.  பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.
விபூதி கட்டி விற்கும் பக்கத்தில்  சதுரமாய்  கல் இருந்தது. அதில் கட்டங்கள் இருந்தது அதில் எல்லோரும் காசை நிற்க வைத்தார்கள் நிற்க வைக்க மிகவும் பிரயத்தனப் பட்டுக் கொண்டு இருந்தார்கள். நானும் வைத்து பார்த்தேன். நாம் இங்கு நகர்ந்தவுடன் காசை எடுத்து உண்டியலில் போட்டு விட்டார் விபூதி விற்பவர். காரணம் தெரியவில்லை.
பாலில் பழம் சீனி போட்ட பிரசாதம் கொடுக்கிறார்கள்  சில சன்னதிகளில். ஸ்ரீராமரும், பாண்டவர்களும், சத்ரபதி சிவாஜியும் வணங்கியதாக  சொல்கிறார்கள்.

12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று ஸ்ரீசைலம், சகதி பீடத்தில் ஒன்று அம்மன் பிரமராம்பாள் கோவில். 
மல்லிகாபுரி இளவரசி, மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா(மருதமரம்) மலர்களால் வணங்கியாதல் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்பட்டாராம்.  ஸ்ரீசைலத்தை வணங்கியவர்களுக்கு மறுபிறவி இல்லையாம். (மிகவும் நல்லதுதான் ) 
மருதமரத்தைத்  தலவிருட்சமாகக் கொண்டு மூன்று தலங்கள் உள்ளன.
வடதிசையில் உள்ளது-மல்லிகார்ஜுனம்=ஸ்ரீசைலம்
மத்தியில் உள்ளது-மத்தியார்ஜுனம்=திருவிடைமருதூர்(மகாலிங்கேஸ்வரர்)
தெற்கில் உள்ளது-புடார்ஜுனம்=திருப்புடைமருதூர்,    நாறும்பூநாதர் 
                                                  திருக்கோயில்,நெல்லை                                                                                  மாவட்டம்,முக்கூடல் அருகில்

கோவில் வாசல் பக்கம் நாகலிங்க மரம் இருக்கிறது,  அதை அம்மன் சினிமாவில் வரும் அம்மன் போல்  மஞ்சளால் அழகு படுத்தி இருக்கிறார்கள்.
          கோவில் தெப்பக்குளம் சீர் செய்து கொண்டு இருக்கிறார்கள் 
அம்மன் மரத்திற்கும் குளத்திற்கும் நடுவில் ஒரு கோவில் இருக்கிறது அங்கு வீரபத்திரர் கோவில் உள்ளது. ( கோவில் மதிலில் எழுதி இருக்கும் வாசகம் பாருங்கள்) இது மட்டும் தான் ஆங்கிலத்தில் நல்லவேளை தெலுங்கு தெரியாத   வெளியூர் பயணிகளுக்கு வசதியாக  இருக்கிறது. 
  
 கோவிலுக்கு வெளியே இருபுறமும் சிவலிங்கங்கள்.  முன் புறம் நந்தி. எல்லா சிவலிங்கங்களுக்கும் தேங்காய் உடைத்து வைத்து இருக்கிறார்கள்.  தொன்னையில் பிரசாதம் வைத்து இருந்தார்கள். 

பிறகு கோவில் தரிசனம் முடித்து வந்தபின் சத்திரம் பக்கத்திலேயே உணவை முடித்து விட்டு டாக்ஸி டிரைவரிடம் ஸ்ரீ சைலத்தில் பார்க்க வேண்டிய கோவில் எல்லாம் கூட்டிப் போங்கள் என்றோம். முதலில் சாட்சி கணபதி கோயிலுக்குக்கூட்டிப் போனார்.

ஸ்ரீசைலம் போகும் முன் இந்த கணபதியை வணங்கி விட்டுத் தான் போவார்களாம் ஆனால் நாங்கள் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனரை வணங்கி விட்டு இறங்கும் போது தான் வணங்கினோம் தெரியாமல் செய்த தப்பை மன்னித்து விடுவார் விநாயகர் !

கடையில் விபூதி கட்டிகள், குங்குமம்
ஷேர் ஆட்டோக்கள் ஊர் முழுவதும் 
காலை நீட்டிக்கொண்டு சுகமான பயணம்

ஊர் முழுவதும்  இந்த அம்மா கையில் உள்ளது போல் பிளாஸ்க், கூடையில் மிகவும் சின்ன கப்பில் டீ, அல்லது காப்பி வைத்துக் கொண்டு விற்கிறார்கள் ஒரு வாய் காப்பி தான் இருக்கும் 10 ரூபாய்

ஆந்திரா மிளகாய்  சிவப்பாய் காயப்போட்டு இருப்பதே ஒரு அழகு.


பாதாள கங்கை செல்லும் வழி
சாட்சி கணபதிக்கு பின் பாதாள  கங்கை  கூட்டி போனார்  ஆனால்  வெகு தூரம் போகும் படியும், குரங்குகள் படுத்தின பாடும் அங்கு போகும் ஆசை இல்லாமல் செய்து விட்டது. கீழே போய் பார்த்தாலும் த்ண்ணீர் இல்லை என்றார்கள் அதனால் போகவில்லை.


அடுத்து சிகரம் என்ற இடத்திற்கு கூட்டிப் போனார். நல்ல உயரமான  இடம் அங்கு இருந்து பார்த்தால் ஊரின் அழகு தெரிகிறது. அங்கு போக படிகளும் இருக்கிற்து , வாகனங்களும் போகிறது. கார் மேலே போகவும்  டிக்கட் உண்டு. அங்கு இருக்கும் கோவிலுக்குள் கீழே சிவலிங்கமும், கொஞ்சம் படிகள் ஏறி ப்போனால் கைலாயம் மலை போல்  மலை முழுவதும் சிவலிங்கள் போல் அமைத்து இருந்தார்கள்.

                             
குரங்குகள் நம் கையில் இருக்கும்  கைப் பைகளை பிடுங்க வருகிறது குரங்களை அங்கு உள்ள பாதுகாவலர் கவண்கல் வீசி விரட்டி நம்மை மேலே போக வைக்கிறார்.

                 

அதற்கு மேல் கொஞ்சம் படிகள் ஏறி போனால்  ஒரு கல்லின் மேல் நாகம் சுற்றியது போல் இருந்தது.  அந்த வட்டகல்லின் மேல் நந்தி இருந்தது நந்திக்கும் அந்த வட்டகல்லுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. அதில் எள்ளும் அரிசியும் போடுகிறார்கள், (சிறு கவரில் இரண்டு ரூபாய்க்கு  விற்கிறார்கள்)   பின் நந்தியின் இரண்டு கொம்புகளைப் பிடித்துக் கொண்டு கொம்புகளுக்கு இடையில் தூரத்தில் தெரியும் ஸ்ரீசைலத்தை வணங்குகிறார்கள்.

நந்தி தவம் இருந்து  நீண்ட ஆயுளைப் பெற்று சிவனுக்கு வாகனமானது இங்குதான்.  நந்தி தவம் இருந்த இடம் நன்தியால். நந்தி கோவில்கள் ஒன்பது இருக்கிறதாம்.. நாங்கள் ஒரு ஐந்து பார்த்தோம்.

மகாநந்தி எனும் இடத்தில் உள்ள நந்தி பார்க்கில் மகா நந்தியை தரிசனம் செய்தோம். நாம் போட்டோ எடுக்க கூடாது. அவர்கள் ஆள் வைத்து இருக்கிரார்கள். அவர்கள் எடுத்து தருவார்கள் . நாங்கள் உள்ளே போய் பார்த்தோம் போட்டோ எடுக்க வில்லை.  வெளியே போய்  அலைபேசியில் எடுத்தபடம்.


                               பக்கத்து கடை வாசலில் இருந்து எடுத்த படம்.

பிறகு நவபிரம்மா கோவில் பார்த்தோம்.  தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளது, அழகிய  கலை வேலைப்பாடு நிறைந்த  கோவில், அது  அடுத்த பதிவில்.

                                                          வாழ்க  வளமுடன்.








































































































































வியாழன், 29 அக்டோபர், 2009

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு

ஆதவன் தீபாவளிப் பற்றி தொடர் பதிவு எழுத இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்தார்.
தீபாவளி முடிந்து 10 நாட்கள் ஆனாலும் அழைப்பை மறுக்க முடிய வில்லை.

1.உங்களைப் பற்றிய சிறு குறிப்பு?

அன்பான குடும்பத்தின் தலைவி.

2.தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

என் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து
விட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை
மாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்
நினைவும் மறக்க முடியாது.

3.2009 தீபாவ்ளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

தீபாவளிக்கு கோவையில்.

4.தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளிபற்றி ஒரு சில வரிகள்?

என் கணவருடன் பிறந்தவர்கள் நாலு பேர் என் கணவரையும் சேர்த்து 5 பேர்.
எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.

5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்கள்?

எங்கள் ஊரில் தான் வாங்கினேன், இந்த முறை என் மகளும் வாங்கி வந்தாள்.

6.உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

அதிரசம் மட்டும் செய்தேன்,பாதுஷா,ஓட்டுப் பக்கோடா சமையல்காரர் செய்து
கொடுத்தார்.

7.உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்
(உ.ம்)மின்னஞ்சல், தொலைபேசி,வாழ்த்துஅட்டை)

தொலைபேசி,மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.

8.தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

தீபாவளி அன்று காலை புத்தாடைகளை மாமனார் கொடுக்க அதை பெற்று அணிந்து
வீட்டில் பூஜை முடித்து,பின், வயதில் மூத்த பெரியவர்களிடம் வரிசைப் படி
வணங்கி பின் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு
வந்து, வடை பஜ்ஜி, அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பலகாரங்கள்
இட்லி சட்னி என்று எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு உண்டு உரையாடுவோம். இலையில்
எத்தனை அயிட்டங்கள் என்று எண்ணி உண்போம்.எல்லாம் கொஞ்சம் தான் வைக்க வேண்டும்
ருசிபார்க்கத் தான். பிறகு உறவினர்கள், மாமனார் மாமியாரிடம் ஆசி வாங்க வருவார்கள்.
மதியம் உணவு சமைத்தல்,பிறகு மாலை எல்லோரும் குடும்பத்துடன் அன்னபூரணி
கோவிலில் லட்டு தேர் பார்ப்போம்.சிருங்கேரி சாரதா கோவில் எல்லாம்
போய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தொலைந்து போக. பண்டிகை சமயத்தில் தான் எல்லோரும் சேர்வதால்
பேச நிறைய விஷயங்கள் இருக்கும்.

9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில்,
அதைப் பற்றி ஒரு சிலவரிகள்?தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின்
பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள்,அல்லது வலைத்தளம்?

நல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.

10.நீங்கள் அழைக்க விருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

அடுத்த வருடம் தான் கூப்பிட வேண்டும்.