. வீடு மாற்றம் ஏற்பட்டதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வீடு சில வசதிகள் , இந்த வீட்டில் சில வசதிகள் இரண்டையும் ஒப்புமை படுத்திக் கொண்டு குழம்பிக் கொண்டு இருந்த மனதைத் தெளிவு படுத்த மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லிக் கொண்டேன் .
அதைப் பற்றி சில கட்டுரைகளைப் படிக்கும் போது, மனநல மருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள் தினமலரில் கொடுத்த கட்டுரை கீழே :-
//இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது.
ஆனால், அனுபவத்தில் என்ன காண்கிறோம்? அன்பு வெறுப்பாகிறது; வெறுப்பு பாசமாகிறது; கோபம், சாந்தமாகிறது; சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. அதாவது மனிதனின் குணம் மாறி கொண்டே இருக்கிறது.
ஏன்? தேவை, வசதி, வாய்ப்பு, சூழ்நிலைக்கு ஏற்ப, ஆபத்தை தவிர்த்து, நன்மை கருதி, குணம் மாறுபடுகிறது; மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றம் மட்டும்தான் நிலைத்திருக்கும் என்கிறோம்.
மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது. //
- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளீனிக், சென்னை.

வீடு மாற்றி ஒரு மாதம் ஆகப்போகிறது. முதல் கவலை பறவைகளுக்கு உணவு வைக்க சரியான இடம்,
உணவு வைக்க வைத்து இருக்கும் மண் பாத்திரம், தண்னீர் வைக்கும் மண் பாத்திரம் வைக்க சரியான இடம் இல்லை. பால்கனியில் வைத்த போது.அதற்கு வசதியாக இல்லை போலும் உணவு தண்ணீர் எடுக்க வரவே இல்லை . கீழே இறங்கி உணவு எடுக்கப் பயப்படுகிறது.
பறவைகளின் வரவுக்குக் காத்து இருந்த உணவு , தண்ணீர்
எதிர் வீட்டு ஜன்னலில் வைக்கும் பிஸ்கட்டைச் சாப்பிடும் அணில்
அதைப் பார்த்து நானும் வைத்தேன். அணில் , சிட்டுக்குருவி வந்து இறை எடுத்தன ஆனால் நாம் நடமாடும் சின்ன அசைவைப் பார்த்தாலும் பயந்து ஓடி விடுகிறது.
மற்றும் ஒரு வீட்டில் அலுமினிய டிரே வைத்து இருக்கிறார்கள். (மைசூர் பாகு விள்ளல் தட்டு) அது போல் என்னிடமும் இருக்கிறது அதை மாட்டிப் பார்க்க வேண்டும்.
அது போல் வாங்கும் வரை வீட்டில் இருந்த இடியாப்பத் தட்டை எடுத்து கம்பியில் மாட்டிக் கொடுத்தார்கள் அதுவும் பறவைகளுக்கு திருப்தி தரவில்லை.
தண்ணீருக்கு ஏதாவது செய் தாகம் தாகம் என்கிறது.
இந்த ஜன்னல் வசதியாக இருக்கிறது இந்த இரண்டு பாத்திரங்களையும் வைத்து இருக்கிறேன் பார்ப்போம்
இந்த பக்கம் நிழலுக்கு வந்து அமரும் பறவைகள் அப்போது பார்த்தால் சாப்பிடும் என்ற நம்பிக்கை. நம்பிக்கை ஒன்று தானே வாழ்க்கை.
எத்தனையோ கவலைகள் இருக்க இவர்களுக்கு இந்த கவலை என்று நினைக்காதீர்கள். எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியை உற்சாகத்தை தருவது பறவைகள் இவைகள் நன்றாக இருத்தால் இயற்கை நன்றாக இருக்கும் இயற்கை நன்றாக இருந்தால் நமக்கு நல்லது தானே?
வாழ்க வளமுடன்!
==========================