சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை வீரர்கள் முன்பு பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் வீரன் அழகுமுத்துகோன் அவர்களும் ஒருவர் என்பதைத் திருநெல்வேலிக்குப் போகும் பாதையில் இருக்கும் அவர்களது நினைவு மண்டபத்தில் உள்ள வரலாற்றைப் படித்து தெரிந்து கொண்டோம்.
,கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ . தொலைவில் காட்டாங்குளம் கிராமம் உள்ளது.
அழகான தோரணவாயில்
போகும் பாதையில் வெகு தூரத்திற்கு ஆள் அரவம் இல்லை. இரண்டு பக்கமும் தரிசு நிலங்கள்
வீரன் அழகு முத்துகோன் நினைவு இல்ல வாயில்
நினைவு கல்வெட்டு
ஓவியம்
இளைய சமுதாயத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டிய வீரர்களது வாழ்க்கை வரலாறு.
வீரன் அழகு முத்துக்கோன் வீர வரலாறு
வீரத்தோற்ற சிலை
நினைவு இடத்திற்கு போன வருடம் ஜூன் மாதம் சென்று வந்தோம் நினைவு இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் , சென்ற வருடம் முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.
”இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகு முத்து கோன் என்ற தலைப்பில் முனைவர் கே. கருணாகரப்பாண்டியன் வரலாற்று ஆய்வாளர் அவர்கள் எழுதி இருந்த கட்டுரை நேற்றைய தினமலரில் வந்துள்ளது..
இவரது கட்டுரையைப் படித்தவுடன் நேற்றே பதிவிட வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய் விட்டது.
நேற்று அவரது பிறந்த நாளில் பதிவிட முடியவில்லை. நெட் வேலை செய்யவில்லை. விட்டு விட்டு வந்தது ஓர், இரு படம் ஏற்றினேன் அப்புறம் நெட் முழுமையாக நின்று விட்டது. நேற்று இடம்பெறத் திருவுள்ளம் இல்லை என்று விட்டுவிட்டேன்.
என் கணவர் மொபைல் பார்ட்னர் முன்பு வைத்து இருந்தார்கள் அதில் கொஞ்சம் நெட் இருக்கும் போட்டுப் பார் என்றார்கள் இன்று . பின் அதன் மூலம் பதிவு ஏற்றி விட்டேன் வெற்றிகரமாய்.
வீரன் அழகு முத்துகோன் அவர்களுக்கு மனதார வீரவணக்கம் செய்யலாம் .
வருகைப் பதிவேட்டில் என் கணவர் கையெழுத்திட்டார்கள்
வாழ்க வளமுடன்
----------------------