சனி, 30 நவம்பர், 2019

கிளிகளின் விளையாட்டு

"ஜன்னல் வழியே" என்று முகநூலில் பதிவுகள் போடுவேன். வீட்டு பால்கனியிலிருந்து எடுக்கும் படங்களை.  இங்கு என் சேமிப்பாய்-
ஒரு நாள் காலை கிளிகளின் கீச் கீச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது . எப்போதும் கீச் சத்தம் கேட்கும். நான் எட்டிப் பார்க்கும்போது அது வெகு தூரம் பறந்து  போய்  இருக்கும். அன்று  புறா, காக்கா, மைனா எல்லாம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கம்பியில் இந்த கிளிகள் அமர்ந்து இருந்தது. இந்த கம்பி, பறவைகளுக்குப் பிடித்தமான இடம்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

குடியிருந்த கோவில்

எனது பெற்றோர்

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' 

என்றார் திருவள்ளுவர்.

போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர், துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள் என் தாய்.


எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும் துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும் இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன் படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.


இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை இறைவன
டி சேர்ந்தார்கள்.

வியாழன், 21 நவம்பர், 2019

அன்றும் இன்றும்


ஒரு காலத்திலே என்று சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவு போட்டு இருந்தார்கள் இன்று.

அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுக்களைப் பற்றியும், வீடு நிறைய குழந்தைகள் அண்ணன், அக்காள், தங்கைகள், தம்பிகள் என்று வீட்டில் அதிக குழந்தைகள் இருப்பார்கள்; அவர்கள் விளையாடியும், அவர்களுக்குள் சண்டையிட்டும் , பின் சமாதானம் ஆகியும் களிப்பார்கள்.
தாத்தாவோடு விளையாடுவது எல்லாம் வரும் அந்த காணொளியில்.நாங்களும் அப்படித்தான் நிறைய உடன்பிறப்புகளுடன் விளையாடி மகிழ்ந்தோம்.

சனி, 2 நவம்பர், 2019

கலியுக வரதன்


இன்று காலை  2.11. 2019   சூரசம்மாரம் இல்லையா ! அதனால் பழமுதிர்சோலை போனோம். அங்கு நடைபெற்ற யாகசாலை பூஜை, அபிஷேக , அலங்கார பூஜைகள் இந்தப் பகிர்வில்.
மாலை நடைபெறும் சம்ஹாரம். தாராசுரன்   முதலில் வதம் செய்யப்படுவார், அடுத்து சிங்கமுகன், அடுத்து சூரசம்மாரம். சூரன் தலை சிவப்புக் கலராக அவன் கோபத்தை காட்டுது. சிங்கமுகம் பச்சைக் கலராக இருக்கிறது.