சிறுவர்களின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!
கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடி
மகிழ இந்த ஐயனார் குதிரைகளும் காத்து இருக்கிறதோ!
மகிழ இந்த ஐயனார் குதிரைகளும் காத்து இருக்கிறதோ!
குழந்தைகளே மகிழ்ந்திருங்கள்! வாழ்க வளமுடன்.
சின்னஞ் சிறு வயதில் விளையாட்டில் மட்டுமே கவனம் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் காலை முதல் இரவு வரை விளையாட்டுதான்.
புதுப் புது விளையாட்டுக்கள் , அலுக்காத விளையாட்டுக்கள்.
சின்னஞ் சிறு வயதில் விளையாட்டில் மட்டுமே கவனம் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் காலை முதல் இரவு வரை விளையாட்டுதான்.
புதுப் புது விளையாட்டுக்கள் , அலுக்காத விளையாட்டுக்கள்.
எளிமையான விளையாட்டுப் பொருட்களில் எத்தனை வகையான உணவுகள் சமைத்து மகிழும் குழந்தைகள்.
விளையாடிக் களைத்து திண்ணையில் ஓய்வு, வெளி ஆட்கள் பேசும்போது வெட்கம்.
அண்ணன் முதுகில் யானை விளையாட்டு
அடுத்து அண்ணன் மற்றும் தோழியுடன் அடுப்பு கூட்டி என்று விளையாட்டாம்.
அடுப்பு கூட்டி அடுப்பு கூட்டி தோசைக் கல்லைப் போட்டு தோசை ஊற்றி வெந்து விட்டதா? வேகலையா -விளையாட்டு.
அந்த வார்த்தையை எப்படியாவது கேட்டு விடலாம் என்று பக்கத்தில் போனால் பயங்கர வெட்கம் . அமைதியாகி விடுகிறார்கள். கோவிலில் அபிஷேகம் ஆகி இறைவனுக்கு அலங்காரம் ஆகும் வரை அவர்களின் விளையாட்டில் லயித்து இருந்தேன்.
தொட்டிலில் படுத்துக் கொண்டு அம்மாவுடன் மழலை மொழி பேசும் மழலை.
//தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடு//
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடு//
இனி
மாயவரத்தில் இருக்கும் போது பேரன் விளையாடிய விளையாட்டுப் படங்கள்.
குட்டிக் கண்ணனுக்கு அலுக்காத விளையாட்டு - சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யச் சொல்லும் விளையாட்டு, ஒரு விளையாட்டு முடிந்தால் அடுத்த விளையாட்டு , அடுத்த விளையாட்டு என்று அலுக்காத விளையாட்டு, அதில் தான் எத்தனை கற்பனைகள், எத்தனை பாத்திரப் படைப்புகள், கற்பனைக் கதாபாத்திரங்கள், தன் விளையாட்டில் ஆச்சி, தாத்தாவையும் இணைத்துக் கொண்டு விளையாடுவான்..
கொஞ்ச நேரம் நம் அம்மாவாய் மாறி உணவு சமைத்துத் தருவான், அடுத்த நிமிடம் நம் தங்கை, தம்பியாய் வருவான், (ஆச்சி உன் பிரதர், உன் சிஸ்டர் வந்து இருக்கிறேன் உன்னைப் பார்க்க என்பான்,) அடுத்த நிமிடம் அவனுக்கு பிடித்த டைனோசராக மாறிப் பயமுறுத்துவான். அடுத்து படங்கள் வரைவான், கலர் செய்வான், பாடுவான், ஆடுவான்
கோயில் கட்டுவான், மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வான், நமக்கு பிரசாதங்கள், தீர்த்தம், சடாரி எல்லாம் தருவான்.
தன் ஐபேடில் தாத்தாவுடன் செஸ் விளையாட்டு, ஐஸ்கிரீம் செய்யும் விளையாட்டு, அவன் விளையாடும் விளையாட்டு -எல்லாம் விளையாடச் செய்து மகிழ்வான்.
நாமும் அவனுடன் குழந்தையாக மாறி விடுவோம், அப்படியே
கோயில் கட்டுவான், மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வான், நமக்கு பிரசாதங்கள், தீர்த்தம், சடாரி எல்லாம் தருவான்.
தன் ஐபேடில் தாத்தாவுடன் செஸ் விளையாட்டு, ஐஸ்கிரீம் செய்யும் விளையாட்டு, அவன் விளையாடும் விளையாட்டு -எல்லாம் விளையாட செய்து மகிழ்வான்.
நாமும் அவனுடன் குழந்தையாக மாறி விடுவோம், அப்படியே அந்த கணங்கள் இருந்து விடக் கூடாதா? குழந்தையாகவே இருந்து விட்டால் எவ்வள்வு மகிழ்ச்சி , ஆனந்தம் என்ற நினைப்பு வரும்.
அவன் வைத்து இருக்கும் பண்ணையில் உள்ள ஆடு, மாடு, குதிரைகளுக்கு உணவு கொடுக்கிறான்.
பள்ளியில் விழுந்து விழுந்து பாடம் படிக்குது
இரவு தூக்கம்
காலத்துக்கு ஏற்ற மாதிரி மரச்செப்பும் மாறியது -கேஸ் அடுப்பு, கிரைண்டர்
பழைய செப்புச் சாமான் விளையாட்டு
சின்னக் காடு- விளையாட்டு
கடல் உயிரினங்களைச் சமைக்கும் விளையாட்டு. நாம் சாப்பிட மாட்டோம் இவற்றை என்றால் ஆச்சி இது கடல் உணவு சமைக்கும் ஓட்டல் விளையாட்டு என்பான் சிரித்துக் கொண்டு.
தாத்தாவுடன் ஐபேடில் விளையாட்டு
கோவில் கும்பாபிஷேக விளையாட்டு கலசத்திற்கு பூஜை நடக்குது.
காய் கடை வைத்து இருக்கிறான். ஒரு கிலோ காய் வாங்கினால் ஒரு பொம்மை இலவசமாம்.
மாம்பழம் வாங்கினேன், அவனிடம் . அதற்கு ஒரு கிரைண்டர் பொம்மை கொடுத்தான்.
அவன் ஊருக்கு நாங்கள் போய் இருந்த போது விளையாட்டு:-
அவன் ஊருக்கு நாங்கள் போய் இருந்த போது விளையாட்டு:-
டிரக் வரும் பாதையை மறிக்கும் டைனோசர் கூட்டம். அதற்கு சத்தங்கள் கொடுப்பான், ஒவ்வொடு டைனோசரும் ஒவ்வொரு விதமாய் சத்தம் கொடுக்கும்.
டைனோசர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு- காட்டிலிருந்து வெளியே வரும் போது
தங்கும் இடம்.
லெகோ பஸ் விளையாட்டு
லெகோவில் அரண்மணை விளையாட்டு
பள்ளிக்கூட விளையாட்டு
ரிமோட்டில் ஓடும் வண்டிகள் செய்தான்
வெளிபக்கம் வீட்டின் அமைப்பு
வீட்டின் உட்புறமாம்
தாத்தாவும் பேரனும் சேர்ந்து கட்டியாச்சு.
ரயில் பாதை, கார் செல்லும் பாதை இதை அழகாய் இணைத்து நம்மை விளையாட அழைப்பான்.
விளையாடி களைத்து தாத்தா மேல் படுத்து ஓய்வு
அதையே மீண்டும் மாற்றி அமைத்து விளையாட்டு
தாத்தாவும் பேரனும் ஒளிந்து விளையாட்டு
சாப்பிடும் ஓட்டல்களுக்குப் போனலும் குழந்தைகளுக்கு விளையாட அட்டை கொடுக்கிறார்கள்.
சரியான இடத்தில் ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்கும் விளையாட்டு
தீராத விளையாட்டுப் பிள்ளையின் பிறந்த தினம் அன்று மகன் அனுப்பிய படம்.
படம் மருமகளின் பாட்டி (அம்மாவின் அம்மா) பூஜித்த படம்.
பேத்திக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவள் அழகான பிரேம் போட்டு கிருஷ்ணஜெயந்திக்கு வழிபட்டாள்.
பலகாரங்கள் மருமகளின் கை வண்ணம்.
வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுழந்தைகள் உலகம் தனி உலகம் அதில் கிடைக்கும் ஆனந்ததிற்கு அளவே இல்லை எனலாம்
வணக்கம் kuthoosi வாழ்க வளமுடன்.
நீக்குசரியாக சொன்னீர்கள். குழந்தைகள் விளையாடும் அழகை கண்டாலே போதும் ஆனந்தம் ஆனந்தம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோலத்தின் மேல் மழலை மலர்கள் அழகு .
பதிலளிநீக்குபேரன் மாடுகளுக்கு நீர் உணவளித்து அழகாய் உறங்க வைத்த படம் முன்பு முகப்புத்தகத்தில் பார்த்த நினைவு .
படங்களை பார்க்கும்போது மீண்டும் குழந்தை பருவத்துக்கு போக ஆசையா இருக்கு .
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்கு//பேரன் மாடுகளுக்கு நீர் உணவளித்து அழகாய் உறங்க வைத்த படம் முன்பு முகப்புத்தகத்தில் பார்த்த நினைவு .//
ஆமாம், இந்த படத்தை இங்கு போடும் போது உங்கள் நினைப்புதான் வந்தது.
வந்து விட்டீர்கள். அதில் அருமையாக பேரனை புகழ்ந்து இருந்தீர்கள்.
//குழந்தை பருவத்துக்கு போக ஆசையா இருக்கு .//
அவர்கள் விளையாடுவதை பார்த்தால் அப்படித்தான் ஆசை அவரும்
குழந்தையாகவே இருக்க ஏங்குது மனது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஏஞ்சல்.
பரவசம்...
பதிலளிநீக்குபரவசம் மிகவாகுதே!...
ஆனந்தப் பூங்காற்று போல அழகிய படங்களுடன் பதிவு...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குகண்ணன் பாட்டு. பிடித்த பாட்டு.
ஆனந்தப்பூங்காற்றுதானே மழலை செல்வங்கள் விளையாடுவதை கண்டால்.
பதிவில் -
பதிலளிநீக்குபாலகிருஷ்ணனின் சித்திரம் திரு.கொண்டைய ராஜூ அவர்களின் கைவண்ணம்...
அப்படியே தவழ்ந்து வந்து மடியில் அமர்ந்து கொள்ள மாட்டானா என்றிருக்கின்றது...
படம் மருமகளின் பாட்டி (அம்மாவின் அம்மா) பூஜித்த படம்.
நீக்குபேத்திக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவள் அழகான பிரேம் போட்டு கிருஷ்ணஜெயந்திக்கு வழிபட்டாள்.
பலகாரங்கள் அவள் கை வண்ணம்.
திரு.கொண்டைய ராஜூ கோவில்பட்டியில் என் சின்னமாமனார் வீட்டுக்கு அருகில் இருந்தார்கள். கோவில்பட்டி செண்பகம்மன் படம் வரைந்து கொடுத்து இருக்கிறார்கள்.
பலகாரங்களை அவள் கைவண்ணம் என்றேன்.
தவழும் கண்ணன் கண்ணடி ஓவியம் வரைந்து தந்து இருக்கிறாள் மருமகள் அது போனா வருடம் போட்ட பதிவில் போட்டு இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஒவ்வொரு விளையாட்டும் அருமை...
பதிலளிநீக்குமனம் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, அதே சமயம் சிறுவயது நினைவுகள் வந்து ஏக்கமும் வந்தது...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன்.
நீக்குகுழந்தைகள் விளையாடுவதை பார்த்தால் எல்லோருக்கும் அவர்கள் சிறு வயது நினைவுகள் வருவது தவிர்க்க முடியாத உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் ஒவ்வொன்றையும் பெயரனோடு ரசித்து எடுத்து இருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஅவனுடன் இருக்கும் நாட்களை ரசித்து தான் விளையாடினேன்.
சோர்வு அடையும் சமயம் மீண்டும் அதைப் பார்த்து உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள படங்கள் உதவுகிறது.
அடிக்கடி காணொளி மூலம் பேசுகிறோம். அதிலும் விளையாடுகிறான்.தொடு உணர்ச்சி மட்டும் இருந்து விட்டால் மனம் நிறைவு அடைந்து விடும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அந்த நாட்கள் வராதா என ஏங்க வைக்கும் குழந்தை உலகம்!
பதிலளிநீக்குவணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
நீக்குஅந்த நாட்கள் வராதா என ஏங்க வைக்கும் குழந்தை உலகம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஆசிரியர் தினத்தன்று நல்ல பதிவு. குழந்தைகளின் படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. நாமும் அந்த குழந்தைகளாக மாற மாட்டோமா என மனம் ஏங்குகிறது. அந்த பருவம் கவலைகளற்றது. இனிமையானது. ஏனெனில் நாம் குழந்தைகளாக இருந்த போது, விளையாடியதை சிலவற்றைத் தவிர்த்து, பெருபான்மையானவற்றை மறந்து அதையெல்லாம் அதன் பின் வந்த பொறுப்புகளிலும்,கடமைகளிலும் தொலைத்து விட்டோமோ என்ற எண்ணத்தினால் மீண்டும் குழந்தைப் பருவத்தை மனம் விரும்புகிறது வேறு ஒன்றுமில்லை.
தங்கள் பேரனின் விளையாட்டுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. அழகாக பொம்மைகளை அவர் விருப்பத்தில் வடிவமைத்து நிறைவாக அவர் விளையாடுவது கண்டு மகிழ்ந்தேன். அவர் தாத்தாவும் அவருக்கு இணையாக ஈடு கொடுத்து மகிழ்வித்து மகிழ்வடைகிறார் .
தங்கள் மருமகளின் கண்ணன் பிறப்பு விழா கொண்டாட்டம் மிக அழகாக இருக்கின்றது.
அவர்களுக்கும் தங்கள் பேரனுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
நான் கொஞ்ச வேலைகளினால் இன்று வலை உலா வருவதற்கு தாமதமாகி விட்டது. அதனால்தான் தாமதமாக படித்து கருத்திடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்கு//பெருபான்மையானவற்றை மறந்து அதையெல்லாம் அதன் பின் வந்த பொறுப்புகளிலும்,கடமைகளிலும் தொலைத்து விட்டோமோ என்ற எண்ணத்தினால் மீண்டும் குழந்தைப் பருவத்தை மனம் விரும்புகிறது வேறு ஒன்றுமில்லை. //
நீங்கள் சொல்வது சரியே!
எனக்கு எப்போதும் குழந்தைகள் என்னைச்சுற்றி இருக்கும், அக்கம் பக்கத்து குழந்தைகள் என் வீட்டில் தான் விளையாடும். அவர்களுடன் நான் குதுகலமாய் விளையாடுவேன். குழந்தைகளின் அம்மாக்களுடன் பேசுவதைவிட குழந்தைகளுடன் இருப்பதுதான் பிடிக்கும். மகன், மகள் நண்பர்கள் எனக்கும் நண்பர்கள்.
அவர்களுடன், கேரம்போர்ட், சீட்டு, தாயம், பிசினஸ் எல்லாம் விளையாடுவேன்.
பேரனுக்கு நண்பர்கள் குழந்தைகள் வரும் போதுதான் சேர்ந்து விளையாட முடியும் மற்ற நேரங்க்களில் விளையாட்டு சாமாங்களை வைத்து அவனே விளையாடுவான். அம்மா, அப்பாவை அழைத்துக் கொள்வான். நண்பர்கள் எல்லாம் வார இறுதி நாட்களில் ஒவ்வொரு வீட்டில் கூடுவார்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள்.
பேரன்விளையாட்டு, மருமகள் விழா கொண்டாட்டம் எல்லாம் ரசித்து படித்து அழகான கருத்து சொன்னா உங்களுக்கு நன்றி.
எப்போது வேண்டும் என்றாலும் வந்து கருத்து சொல்லுங்கள்.
கடமை முதலில் அப்புறம் தானே வலைஉலகம்.
"வெந்துடுச்சா... வேகலை..." வார்ததைகளைக் கேட்க அருகில் சென்றீர்களா? எனக்கும் கேட்க ஆசை...! குழந்தைகள் உலகம் தனி உலகம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குவெந்துடுசா வேகலையா ? அடுத்து வரும் வரிகளை கேட்க போனால் குழந்தைகள் அமைதி ஆகி விட்டார்கள். வேறு குழந்தைகளிடம் கேட்க வேண்டும்.
உங்கள் பேரன் விளையாட்டுகள் எல்லாம் ரசித்தேன்.எத்தனை வகையான விளையாட்டுகள்... தாத்தாவும் நல்லாவே ஈடு கொடுக்கிறார்...
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், அவன் விளையாடிக் கொண்டே இருப்பான் .
நீக்குதாத்தாவை விடமாட்டான் இழுத்து வைத்து விளையாடுவான்.
என் பெரியவன் கூட இந்த 'கடை விற்பனை விளையாட்டு' சிறுவயதில் விளையாடுவான். என் மாமனார் இறந்த சமயம். அவர் இறுதிப்பயணத்துக்கு நாங்கள் மதுரை வந்தபோது அங்கு இருந்த செருப்புகளை சேர்த்து வைத்துக்கொண்டு மூணு பத்து, நாலு பத்து ரூபாய்... என்று விற்பனை விளையாட்டு நடத்தியதை மறக்க முடியாது.
பதிலளிநீக்குகுழந்தைகள் விளையாட்டு துன்பமான வேளையிலும் மனதை திசை திருப்பும் என்று தெரிகிறது இல்லையா?
நீக்குஅவர்கள் உலகத்தில் கவலை, துனபம் இதற்கெல்லாம் இடம் இல்லை அவர்கள் உலகம் தனி உலகம் தான்.
ஒன்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குமுன்காலத்தில் நாங்கள் எல்லாம் நிறைய நண்பர்களுடன் தெருவில் விளையாடி மகிழ்ந்தோம். உடல்நலத்துக்கும் நல்லது. மனதுக்கும் உற்சாகம் தருவது. இப்போதைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் அந்த வாய்ப்பு கம்மி.
//முன்காலத்தில் நாங்கள் எல்லாம் நிறைய நண்பர்களுடன் தெருவில் விளையாடி மகிழ்ந்தோம். உடல்நலத்துக்கும் நல்லது. மனதுக்கும் உற்சாகம் தருவது. இப்போதைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் அந்த வாய்ப்பு கம்மி.//
நீக்குஉண்மைதான். இப்போது உள்ள பெற்றோர்களும் குழந்தைகளை கண்பார்வையில் விளையாடுவதை விரும்புகிறார்கள். இப்போது உள்ள காலத்தில் அப்படி இருப்பதுதான் நல்லது என்பது போல் இருக்கிறது.
எங்கள் குடியிருப்பு குழந்தைகள் வெள்ளி மாலை , சனிக்கிழமை , ஞாயிறு எல்லாம் காலை முதல் மாலை வரை விளையாடுகிறார்கள். அதைபார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அய்யனார் கோவில் பக்கம் இருக்கும் எளிமையான குழந்தைகளுக்கு விளையாட்டு சுதந்திரம் இருக்கிறது. ஆலமரத்து கிளையில் தொங்கி ஊஞ்சல் விளையாடுவது, டயர்வண்டி உருட்டி விளையாடுவது, கல்லா, மண்ணா என்று சிறு வயதில் விளையாடி களித்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தங்களின் பெயரனின் விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குதாத்தாவும் பெயரனும் விளையாடி மகிழ்வது மனதிற்கு மகிழ்வினை அளிக்கிறது
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமகிழவைத்த தருணங்கள்.குழந்தையின் விளையாட்டுகள் மகிழ்வைதருபவை .
உங்கள் கருத்துக்கு நன்றி.
அலுக்காமல் சலிக்காமல் விதம் விதமாக விளையாடும் உங்கள் பேரனை பாராட்டுவதா? அதை படடமெடுத்து போட்ட உங்களை பாராட்டுவதா? சூப்பர்!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
நீக்குதினம் தினம் விளையாடும் விளையாட்டுக்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக விளையாட்டு. அப்போதுதானே அலுப்பு ஏற்படாது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
குழந்தைகள் உலகே தனி! ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு முறையில் விளையாடுவார்கள். தோசை வெந்திருக்கோ, வெந்திருக்கு விளையாட்டை என் மகன், மகளுடன் விளையாடி இருக்கேன். பேத்திகளோடு விளையாடக் கொடுத்து வைக்கலை! :) என்றாலும் குட்டிக் குஞ்சுலுவுக்கு ஸ்கைபில் விளையாட்டுக் காட்டுவேன். சில சமயம் அது சிரித்துக் கொண்டே மாட்டேன் எனத் தலையை ஆட்டும்! :) பேரன், பேத்திகளோடு விளையாடுவது சொர்க்கம் தான்!
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள்.
//தோசை வெந்திருக்கோ, வெந்திருக்கு விளையாட்டை என் மகன், மகளுடன் விளையாடி இருக்கேன்.//
அந்த குழந்தைகள் என்ன சொல்லி விளையாடுகிறார்கள் என்று பக்கத்தில் போய் கேட்க போனால் அவர்கள் பேச்சை நிறுத்தி விட்டார்கள். பேரனும் ஸ்கைபில் விளையாடுகிறான். பேரன் பேத்திகளுடன் விளையாட கொடுத்து வைத்த நேரங்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். இங்கு குடியிருப்பு குழந்தைகள் பெரியவர்களுடன் பேசவே மறுக்கிறார்கள். இரண்டு மூன்று குழந்தைகள் சிரிப்புடன் நகர்ந்து விடுகிறார்கள்.
மாயவரத்தில் எங்கள் வீட்டில் குழந்தைகள் பட்டாளம் என்னைச் சுற்றி இருக்கும் என்னுடன் விளையாட.
உங்கள் பேரன் அப்படியே உங்களைப் போலவே இருக்கான். விளையாட்டுக்களும் அருமை, ரயில் தண்டவாளம் இணைத்திருப்பதும் விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் விளையாட்டும் மிகவும் மனதைக் கவர்ந்தது. பிறந்த நாள் ஆசிகள், வாழ்த்துகள் உங்கள் பேரனுக்கு. உங்கள் மருமகளின் கைவண்ணமும் அசத்துகிறது.
பதிலளிநீக்குஎன்னைப்போல் இருப்பதாய் நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். அவனுக்கு பிறந்தநாள் முடிந்து விட்டது. உங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.
நீக்குமருமகள் கைவண்ணத்தையும் பாராட்டியதற்கு நன்றி.
பேரனின் விளையாட்டை ரசித்தமைக்கு நன்றி.
அருமையான குழந்தைகள் படம், உங்கள் பேரன் வெகு சுவாரஸ்யம். வித விதமாக விளையாடுகிறார். நல்ல கற்பனைத்திறன். அவருக்கு இணையாக அவர் தாத்தாவும்!! அருமை சகோதரி! விதவிதமான பொம்மைகள்! அவர்கள் உலகம் தனி உலகம் தான். படங்களும் அழகாக இருக்கின்றன. ரசித்தோம்
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் நலமா?
கற்பனை திறன் நிறைய இருக்கிறது பேரனுக்கு, தாத்தாவின் நேரத்திற்கு ஏற்ற மாதிரி தன் விளையாட்டை மாற்றி அமைத்துக் கொள்வான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹை கோமதிக்கா ஹையோ சூப்பரோ ஜூப்பர்!!!!! அதான் குழந்தைகள் உலகமே அழகான உலகம் என்றால் உங்கள் பேரனார் செம....நல்ல தாத்தா பாட்டி என்பேன் உங்கள் இருவரையும். அதனால்தான் பேரனார் உங்களோடு தன் நண்பர்களைப் போல விளையாடுகிறான். இப்படித்தான் தாத்தா பாட்டி இருக்க வேண்டும் என்று நான் நினைப்பவள். நானும் என் தாத்தா பாட்டியுடன் (அப்பா வழி) மிக மிக எஞ்சாய் செய்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபேரனார் தாத்தாவின் மீது படுத்திருப்பதும், நல்ல எண்ணங்கள் அவர் மனதில் வளர்வதும், தாத்தா ஒளிந்து விளையாடுவதும் அதை நீங்கள் படம் பிடிப்பதும் என்று பொக்கிஷமான தருணங்கள். பேரனார் இதை எல்லாம் பின்னாளில் நினைவுபடுத்திப் பார்ப்பார் உங்களுக்கும் தான்.
அபாரமான கற்பனை உங்கள் பேரனுக்கு...நானும் குழந்தைகள் விளையாடும் போது அவர்கள் என்ன சொல்லி விளையாடுகிறார்கள் என்று கேட்க நினைப்பதுண்டு...
என் மகன் நினைவும் நிறைய வந்தது. உங்கள் பேரன் விளையாட்டுகளைப் பார்த்த போது....மிக மிக் மிக மிக மிக மிக ரசித்தேன் தாத்தா பாட்டியையும் பேரனையும். கடவுள் பேரனுக்கு மகிழ்ச்சியை எப்போதும் தர பிரார்த்தனைகள். அருமையான தாத்தா பாட்டி தங்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள்!!! நல்ல உதாரணங்கள்!!! நம் கீதாக்காவும், வல்லிமாவும் நினைவுக்கு வந்தார்கள். நல்ல பாட்டிகள் இருவருமே!!
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் நலமா கீதா?
நீங்கள் சொல்வது போல் எப்போதும் விளையாடிக் கொண்டு இருக்க மகிழ்ச்சிதான். ஆனால் நமக்கு அந்த பொக்கிஷமான தருணங்கள் குறைவுதான் . கிடைக்கும் போது அனுபவித்துக் கொள்கிறோம். அப்புறம் மீண்டும் அவர்கள் வரும் வரை அசைபோடுதல் உண்டு நினைவுகளை.
மகள் குழந்தைகளீடம் இப்படித்தான் கதை சொல்வது, விளையாடுவது என்று இருப்பேன் இப்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.
இவன் சின்னவனாக இருப்பாதால் விளையாடுகிறான், இவனும் வளர்ந்து விட்டால் படிப்பது நிறைய வந்து விட்டால் விளையாட்டு குறைந்து விடும்.
உங்களுக்கு மகன் நினைப்பு வந்து விட்டதா?
பேசினீர்களா? நலம்தானே?
உங்கள் பிரார்த்தனைகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா, உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
கீதா, வல்லி அக்கா எல்லாம் பேரன், பேத்திகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்பவர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி
அக்காலத்தைய விளையாட்டுகள் தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. நினைவுகளையும் மலரச் செய்தது. பேரனின் விளையாட்டு நேரப் படங்கள் அருமை. அழகான கிருஷ்ணர் படம்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅக்கால விளையாட்டை அந்த குழந்தைகள் விளையாடியதுதான் எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி ஏற்பட்டு பக்கத்தில் போனேன்.
குழந்தைகளின் பெற்றோர் பக்கத்தில் இல்லை இருந்தால் அவர்களிடம் கேட்டு இருப்பேன். எல்லோருக்கும் நம் பிள்ளைபருவ விளையாட்டுக்கள் நினைவுக்கு வந்து இருக்கிறது மகிழ்ச்சி.
பேரன்விளையாட்டு, கிருஷ்ணர் படம் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.