செவ்வாய், 13 நவம்பர், 2018

கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 6 வது நாள் .

முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு.

காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை அழியும் என்பது நீதி.  அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம் புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட சேவலையும், செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட ஞானியாக மாற்றினார் முருகன்.

பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.


வெற்றி வேல் வீரவேல் 

தாரகாசுரன்  (மாயை)

சிங்கமுகாசுரன்  (கன்மம்)
சூரபத்மன் (ஆணவம்)

சுற்றி நிற்காதே பகையே துள்ளி வந்த வேல்  சூரபதுமனை வீழ்த்திய காட்சிசூரபதுமனின் உடல் சேவலும், மயிலுமாக ஆனது 
ஞானமே வடிவானது சேவல்., மயில்

கடல் அலை போல் பக்தர்கள்  தலைகள்.

சிறிய காணொளிதான்- ஆணவம், கன்மம், மாயை என்ற அசுரர்களை அழித்த வெற்றி வடிவேலனைப் பார்க்கலாம்.


//மறுபடியும் மறுபடியும் கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் பகிர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் அம்மா...//
என்று திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்ன பாடல் என்று நான் போட்ட பாடல் அது இல்லை 

//அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின் உன்னத குரலில்.//  என்று சொல்லி இருந்தார்.


தனபாலன் சொன்ன பாடல் இதுதான் என்று நினைக்கிறேன் காலத்தை வென்ற பாடல்.  'கொஞ்சும் சலங்கை' படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்காகப் பாடிய இனிமையான பாடல். திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னதுபோல்  எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தான்.

 நாதஸ்வர இசைச் சக்கரவர்த்தி, காருகுறிச்சி அருணாசலம் அவர்களுடன் ஜானகி அவர்களின் குரல் இழைந்து இணைந்து பாடுவது அற்புதம்.

                                                
என் தாய்மாமா அவர்கள் எழுதிய இந்த முருகன்  திருத்தல வரலாற்றில் நான் எழுதிய கதிர்காமம் பதிவும் இடம் பெற்று இருக்கிறது.  மாமா அவர்கள்  என்பதிவையும்  சேர்த்துக் கொண்டது அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. இதுவும் முருகனின் அருள்தான்.
                                                
   
  அவர்கள் கையெழுத்துப் போட்டு அந்தப் புத்தகத்தைத் தந்தார்கள். அவர்கள் கையெழுத்து  அழகாய் இருக்கும். அவர்கள் கம்யூட்டர் கற்றுக் கொள்ள வில்லை கதை, கட்டுரைகளை  அவர்கள் இறக்கும் வரை (84) அவர்களே எழுதித்தான்  அச்சேற்றக் கொடுப்பார்கள்.  முருகன் அவர்களின் இஷ்ட தெய்வம். இன்று அவர்களையும்  நினைத்து வணங்கிக் கொள்கிறேன்.

இந்த ஆறு நாட்களும் முருகன் அருளால் முருகனைச் சிந்தித்து இருந்தோம். இதில் என்னுடன் தினம் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க சேவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

அருள் வடிவான  வள்ளி தேவசேனாபதியை  வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
                                                             திண்டுக்கல் தனபாலன் அவர்கள்  விரும்பி கேட்ட பாடல்.
என்றும் புதியது  . 
வேலும் மயிலும் புதியது. சேர்ந்தவர்களுக்கு கந்தன் கருணை புதியது.

 வாழ்க வளமுடன்.

33 கருத்துகள்:

 1. ஓம் முருகா..... ஆறுபடை வீடுகொண்ட ஐயா... எங்களை ஆதரிக்கவேண்டும் முருகய்யா.... தரிசித்துக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   ஆறுபடை வீடுகொண்ட முருகன் மக்களின் கோடி வீட்டில் இருப்பதாய் டி.எம். எஸ் பாடிக் கொண்டு இருக்கிறார்.
   முருகன் ஆதரிப்பார்.

   நீக்கு
 2. "வெள்ளைத் தாள்களில் விளக்கேற்றி வைப்பவர்கள்"

  மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம், வெள்ளைத்தாள்களில் விளக்கேற்றி வைப்பவர்களை நானும் ரசித்தேன்.
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. முருகனுக்கு அரோகரா. அதோ வராண்டி .முருகன் ஆறுமுகந்தாண்டி.
  திருச்செந்தூர் சூரபத்ம சம்ஹாரத்தை
  அங்கிருந்தால் நேரே பார்க்கும் சந்தோஷம் கிடைத்திருக்கும். அதற்காகவே தங்கச்சி கோமதி அழகுக் காட்சிகளை அனுப்பியாச்சு.

  வேலும் மயிலும் என்றும் நம்மைக் காக்கும்.

  புத்தகத்தில் உங்கள் பகுதியும் பிரசுரமாக்கி இருப்பது
  மிகுந்த மகிழ்ச்சி.

  நீங்கள் சொல்லி இருப்பது போல அழகான கையெழுத்து.
  என்றும் நலமுடன் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   நீங்கள் பகிர்ந்த பாடலும் அருமை.
   வேலும் மயிலும் எப்போதும் துணையாக இருக்கும் அக்கா நீங்கள் சொல்வது போல
   மாமாவின் புத்தகத்தில் என் பகுதியும் இடம்பெற்றது மகிழ்ச்சி அதனால் தான் பகிர்ந்து கொண்டேன். கையெழுத்து மிக அழகாய் இருக்கும் எப்போதும் திருத்தமாய் தான் எழுதுவார்கள். ரப் காப்பி என்றாலும் அதுவும் திருத்தமாய் தான் இருக்கும், கிறுக்கல், அடித்தல் என்று இருக்காது.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 4. தொடர்ந்து வாசிக்கிறேன். மும்மலங்களில் ஒன்றான கன்மம், கண்மம் என்றுள்ளதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   தொடர்ந்து வாசித்து வருவது மகிழ்ச்சி.
   கன்மம் திருத்தி விட்டேன், நன்றி.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. மிக்க மிக்க நன்றி அம்மா...

  தங்களின் பதிவு இடம் பெற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
   ஜானகி அவர்களின் பாடல் நீங்கள் குறிப்பிட்ட பாடல் தானே?
   உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
  2. ஆமாம் அம்மா... முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டு இருந்தேன்... கொஞ்சும் சலங்கை நம் மனதையும் கொஞ்சும் அம்மா...

   நீக்கு
 6. நல்லதொரு காலைப் பொழுதில்
  ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத வடிவேல் குமரனின் புகழ்பாடுகின்ற பதிவு..

  அறுமுகச் செவ்வேள் அனைவரையும் காத்தருள்வானாக!.

  வெற்றி வேல்.. வீர வேல்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வனக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

   ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத வடிவேல் குமரனின் புகழ்பாடுகின்ற பதிவு..

   அறுமுகச் செவ்வேள் அனைவரையும் காத்தருள்வானாக!.//
   என்றும் அவர் புகழ்பாடி மகிழ்வோம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   வெற்றி வேல், வீர வேல்.

   நீக்கு
 7. இரண்டு காணொளியும் கண்டேன்,
  கொஞ்சும் சலங்கை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  அருமையாக பதிவை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி. அனைவருக்கும் பிடித்த பாடலை பகிர நினைவூட்டியதற்கு.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 8. மிக மகிழ்ச்சி மா...முருகன் தரிசனத்தில்

  உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
  நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை..

  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
  அரோகரா...

  தினம் தினம் இங்கு தரிசனம் கண்டு மனம் மகிழ்கிறது மா..


  உங்கள் பதிவுகளே என்னை எழுத தூண்டும் காரணிகள் ..வழிகாட்டியாகவும் , ஊக்கம் தருபவைகளாகவும் உள்ளன..

  மிக மிக நன்றி மா...

  முருகா சரணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
   உருகி சொல்வோம் முருகனின் பேரை
   நெருங்கி சொல்லுங்கள் குமரனின் ஊரை
   இந்த பாடல் பிடித்த பாடல் அனு.

   //உங்கள் பதிவுகளே என்னை எழுத தூண்டும் காரணிகள் ..வழிகாட்டியாகவும் , ஊக்கம் தருபவைகளாகவும் உள்ளன..//
   நமக்கு வழி காட்டி இறைவன் நம்மை அவன் வழி நடத்தி செல்கிறான்.

   நீங்களே அழகாய் பதிவு செய்வீர்கள்.
   ஆறு நாளும் தொடர்ந்து வந்து கருத்து சொல்லி உற்சாகப் படுத்தியமைக்கு நன்றி அனு.


   நீக்கு
  2. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   பதிவு, காணொளி பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
   ஆமாம், நாளைக்குப் பாரணை .
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. கோமதிக்கா பாடல்கள் அருமை சிறப்பும்.

  சிங்கார வேலனை பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!!..

  உங்கள் தாய்மாமா ஆஹா என்ன அருமையான பணி. அதிலும் உங்கள் பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி அக்கா. நல்ல விஷயம்.

  கேபிஎஸ் குரல் கணீர் மறக்க முடியாத இயலாத குரல்!!!

  ஔவை என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார்.

  தரிசனம் கண்டோம் கோமதிக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   சிங்கார வேலனை பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!!..

   ஆமாம் கீதா.

   //உங்கள் தாய்மாமா ஆஹா என்ன அருமையான பணி. அதிலும் உங்கள் பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி அக்கா. நல்ல விஷயம். //

   மாமாவின் புத்தகத்தில் என் சிறு பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி.

   கேபிஎஸ் குரல் கணீர் மறக்க முடியாத இயலாத குரல்!!!

   ஔவை என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார்.//

   ஆமாம் . அவர்கள் காலத்தை வென்றவர்கள். மறக்கமுடியாதவர்.

   நீக்கு
  2. கோமதி அக்காவுக்கு எப்பவும் அதிரா நினைப்புத்தான்:)..

   சூரன்போர் பார்க்கிறீங்களோ கோமதி அக்கா?

   நீக்கு
  3. அதிரா, சூரன் போர் பார்த்து விட்டு அப்படியே கோவில் போய் வந்தோம்.
   அதிரா நினைப்புதான்.
   கீதாவிற்கு பதில் அதிராவை அழைத்து இருக்கிறேன்.

   நீக்கு
 10. செங்கைப்பதிப்பகம் - //வெள்ளைத் தாளில் விளக்கேற்றி வைப்பவர்கள்//

  என்ன அருமையான வரி இல்லையா அக்கா?!! எவ்வளவு அழகா சொல்லிருக்காங்க இப்படி திருத்தலங்கள் பற்றி வெளியிடுவதற்கு....மிகவும் ரசித்தேன் அக்கா...அந்த வரியை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செங்கைப்பதிப்பகம் /வெள்ளைத் தாளில் விளக்கேற்றி வைப்பவர்கள்// வாசகம் எனக்கும் மிகவும் பிடித்தது.
   தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம். என்ற வாசகம் வந்தது. வெள்ளைத்தாளில் எதை வேண்டும் என்றாலும் ஏற்றலாம். ஆனால் நல்லதை ஏற்றி வைப்பதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 11. பகிர்ந்த இனிய பாடல்களுக்கும் படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி. முருகனருள் அனைவருக்கும் கிட்டட்டும். திருத்தல வரலாற்றில் உங்கள் பதிவும் இடம் பெற்றது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 12. இரண்டு பாடலுமே பிடித்த பாடல்கள். பகிர்வுக்கு நன்றி. சூரனை முருகன் வதம் செய்யப் போகும் காட்சிக்குக் காத்திருந்த வண்ணம் இதைப் படித்தேன். உங்கள் பதிவும் உங்கள் மாமாவின் புத்தகத்தில் இடம் பெற்றதுக்கு வாழ்த்துகள். அருமையாக ஆறு நாட்களுக்கும் பதிவுகள் போட்டு அசத்திவிட்டீர்கள். திருச்செந்தூர்க் கூட்டத்தைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது. இத்தனை பேருக்கு உணவு, உடை, இருப்பிடம், கழிப்பிடம்னு எப்படி ஏற்பாடு செய்திருப்பாங்கனு நினைச்சு நினைச்சு ஆச்சரியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   ஆறாவது நாள் அனைவரும் விரதம் இருப்பதால் ஓட்டல் இருக்காது என்று சொன்னார்கள். அத்தை, மாமா சாரின் சகோதர்ரகள் சென்று இருந்த போது ஓட்டல் இல்லை என்றார்கள்.
   இப்போது வர வர கூட்டம் அதிகம் அத்தனைக்கும் வசதி செய்து இருப்பார்கள்.
   இறைவன் அருளால் ஆறு நாட்களும் பதிவு போட முடிந்தது. தினம் பதிவும், பதில்களுக்கு பின்னூட்டமும் எப்படி கொடுக்கிறார்கள் எங்கள் ப்ளாக்கில் என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஆறு நாளில்.

   நீக்கு
 13. அனைவரும் படிப்பதற்கான சத்விஷயங்களை மட்டுமே வெளியிடுவதால் வெள்ளைத் தாளில் விளக்கேற்றுவதைச் சொல்கின்றனர் என நினைக்கிறேன். சுருக்கமான விளக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான் கீதா.
   நல்ல விளக்கம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 14. கந்தசஷ்டி சிறப்பு பகிர்வு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
   நலமா மாதேவி?
   உங்ககள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு