அருள்மிகு காலபைரவ வடுகநாதர்
கோவை போய்விட்டு வரும்போது( 30.12.18 ) குண்டடம் என்ற ஊரில் உள்ள வடுகநாதசுவாமி கோவில் போனோம்.
இந்த ஊர்,பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் இருக்கிறது. மகாபாரத காலத்திலேயே குண்டடம் ஊர் சிறப்பு பெற்றது என்கிறார்கள். தாராபுரத்திற்கு முன்பு உள்ள பேர் விராடபுரம்.
இந்தக் கோவிலில் உள்ள ஸ்ரீகாலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று காலபைரவசுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் இருக்கும் இறைவனின் பெயர் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் இங்கு தவம் இருந்த காரணத்தால் இங்குள்ள ஈசனுக்கு விடங்கீஸ்வரர் என்று பெயர்.அம்பாள் விசாலாட்சி. தலவிருட்சம் இலந்தைமரம்.