பத்துமலை முருகன் கோவில் தொடர் பதிவில் இன்று ஸ்ரீ வேலயுதர்சுவாமி மூலவர் இடம் பெறுகிறார்.
திங்கள், 28 ஆகஸ்ட், 2023
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்( மலேசியா) பகுதி - 3
பேரன் கவின் எடுத்த முருகன் படம் இந்த பகுதியில் பேரன் எடுத்த படங்கள் இடம்பெறுகிறது.
மலேசியாவில் புகழ் பெற்ற குகை கோவிலுக்கு ஜூன் 7 ம் தேதி குடும்பத்துடன் போய் தரிசனம் செய்து வந்தோம். அங்கு எடுத்த படங்கள் தொடர் பதிவாக இடம்பெறுகிறது.
பேரன் கவின் "நீங்கள் காமிராவை கையில் வைத்து கொண்டு படியேறுவது சிரமம் , நான் எடுத்து தருகிறேன் ஆச்சி படங்கள்" என்றான். படங்கள் காணொளி எல்லாம் கவின் எடுத்தவை இந்த பதிவில் இடம்பெறுகிறது.
புதன், 9 ஆகஸ்ட், 2023
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 2
வள்ளி, தெய்வானையுடன் முருகன்
மலேசியாவில் புகழ் பெற்ற குகை கோவிலுக்கு ஜூன் 7 ம் தேதி குடும்பத்துடன் போய் தரிசனம் செய்து வந்தோம்.
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் முதல் பகுதி படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
முருகனை ஆடி கிருத்திகை அன்று பார்ப்போம். என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். முருகனின் அருளால் இந்த பதிவில் முருகனின் படங்கள் இடம்பெறுகிறது.
----------------------------------------------------------------------------------------------
ஸ்ரீசுப்பிரமணியர் இருக்கும் சன்னதி இங்கு திரை போட்டு இருப்பாதால் மேலே 40 படிகள் ஏறி அங்கு வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை வணங்கி வர சென்றோம்.
நானும் பேரன் கவினும் ஏற போவதை மகன் மேல் படியிலிருந்து எடுத்த படம்
மிகவும் சின்ன படிகள் படிகளின் ஓரம் கொஞ்சம் உடைந்து உடைந்து இருந்தது. கவனமாக ஏற வேண்டும்.
சேவல்கள் நிறைய இருக்கிறது. எங்களுக்கு முன் அது படி ஏறி சென்றது. மலை முழுவதும் கொக்கரக்கோ என்ற ஒலி கேட்டு கொண்டே இருந்தது. நான் காணொளி எடுக்கும் போது சத்தம் இல்லை. சிறிய காணொளிதான் பாருங்கள்.
பேரன் நீண்ட காணொளி எடுத்து இருக்கிறான் அதன் கொக்கரக்கோ ஒலியை கேட்க, அது சத்தம் கொடுக்காமல் ஓடி கொண்டே இருந்தது.
முருகன் சன்னதி
முருகன் சன்னதிக்கு நாங்கள் போன போது மாலை மணி 4.30 திரை போட்டு இருந்தது, சற்று நேரத்தில் திறந்து விடுவோம் என்றார்கள். 5 நிமிடத்தில் திரை விலகியது, அற்புத காட்சி கொடுத்தார் முருகன் வள்ளி தெய்வானையோடு புன்முறுவல் சிந்த விபூதி அலங்கார்த்தில் நின்றார்.
அங்கு இருந்த குருக்கள் பூஜை செய்து பிரசாதம் கொடுத்தார். மகனுக்கு திருமணநாள் என்று சொன்னதும் ஆசீர்வாதம் செய்து நாளை காலை பால் அபிஷேகத்திற்கு 50 வெள்ளி பணம் கொடுக்க சொன்னார் கொடுத்தோம். இன்னொருவர் தேவாரம் பாடினார் அவருக்கும் மகன் பணம் கொடுத்தான்.
பூர்வீகம் தஞ்சை என்றாலும் அவர்கள் தாத்தா , பாட்டி காலத்திலே இருந்தே மலேசியாவில் வசிப்பாதாக சொன்னார்கள்.
மேலே இருந்து வெளிச்சம் கொஞ்சம் வருகிறது
முருகனின் விமானம் குகைகுள் நடுவில் இருப்பதை பார்க்க அழகு. 1991 ம் ஆண்டு இந்த முருகன் சன்னதி கட்டப்பட்டதாம்.
முருகன் பிரகாரத்தை சுற்றி வரும் இடத்தில் ஆசனம் நல்லோர் உபயம்
நாரதர் , தந்தைக்கு உபதேசம் செய்யும் குருநாதர் , , பிரணவத்திற்கு பொருள் சொல்ல முடியாத பிரம்மா , மற்றும் இடும்பன் சிலை .
குகைக்குள் பார்க்க அழகான முருகன் விமானம்
குகையின் அழகிய தோற்றங்கள்
மழை காலத்தில் மழையும், வெயில் காலத்தில் வெயிலும் இந்த திறந்தவெளியிலிருந்து வருவது பார்க்க அருமையாக இருக்குமாம், எவ்வளவு வெயில் அடித்தாலும் குகையின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்குமாம். 4.30க்கு அங்கு இருந்தோம் வெயில் தெரியவில்லை, மெல்லிய மழைச்சாரல் இருந்தது. மழை பன்னீர் தூவலாக இருந்தது நன்றாக இருந்தது.
சுண்ணம்பு குன்றும், இயற்கையாக அமைந்த குகையும் பார்க்க பார்க்க அழகு
அந்த குன்றில் நமக்கு நிறைய வடிவங்கள் கண்களுக்கு தெரிகிறது!
மரம் செடி, கொடிகளின் மரகத பச்சை வண்ணம் அழகு
பெற்றோர்களுடன் முருகனை தரிசனம் செய்து விட்டு இறங்கும் குழந்தை
மேல் படியிலிருந்து மகன் எடுத்த படங்கள்
மலைக்கு நடுவில் கோபுரம் பளிச் என்று தெரிய போக்கஸ் லைட் போட்டு பார்க்க அழகு.
கீழே குகை அடிவாரத்தில் இருக்கும் மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியர் , முன்னால் வேலும் உற்சவ முருகரும் இருக்கிறார்கள். தை பூசத்திற்கு வரும் பால்குடங்கள் இந்த வேலுக்கு தான் ஆகுமாம். பால் காவடி எடுத்து வருவது இங்கு உள்ள மக்கள் போல் யாராலும் செய்ய முடியாதாம், ஆழமான பக்தி கொண்டவர்களாம், இங்கு வாழ் மக்கள்.
முன்பு தொலைகாட்சியில் பார்த்து இருக்கிறேன் குகை நன்றாக தெரியும் இப்போது தங்கநிறத்தில் கலர் அடித்து உள்ளார்கள். கிரானைட் போட்டு இருக்கிறார்கள் .
//80 களில் வெளிவந்த வருவான் வடிவேலன் எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பத்துமலை, சிங்கப்பூர் தைப்பூச விழாவைக் காண மாட்டோமா என்ற ஆவல் வந்தது..
முருகன் அருளால் அது நிறைவேறியது.. சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள்.. தைப்பூச விழாவில் கலந்து கொண்டு படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றேன்..//
முருகன் அருளால் அது நிறைவேறியது.. சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள்.. தைப்பூச விழாவில் கலந்து கொண்டு படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றேன்..//
இப்படி சகோ துரை செல்வராஜூ அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். நானும் பார்த்து இருக்கிறேன் அந்த படம் என்றேன். அதில் கண்ணதாசன் எழுதிய பாடல்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் முன்னனி பாடகர்கள் அனைவரும் பாடியது. பாடிய பாடல் மிகவும் அருமையாக இருக்கும். கேட்டு பாருங்கள். அது பெரிய பாடல் அவ்வளவும் இந்த காணொளியில் இடம் பெறவில்லை.
பத்துமலைத் திரு முத்துக்குமரனை என்ற பதிவில் பாடல் வரிகளையும் இந்த பாடலையும் கேட்கலாம். பத்துமலை முருகனையும் தரிசிக்கலாம்.
முருகனருள் வலைத்தளம்.
பத்துமலைத்திரு முத்துக்குமரனைப் பார்த்து களித்திருப்போம்.
மூலவர் படங்கள் மேலும் வரும.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
திங்கள், 7 ஆகஸ்ட், 2023
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்( மலேசியா)
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்
சிங்கப்பூர் சுற்றுலா பதிவு பின்னால் வரும்.
ஆடி கிருத்திகை 9 ஆம் தேதி என்பதால் பத்துமலை கோவில் தொடர் பதிவு செய்யலாம் என்று நினைத்து இருக்கிறேன், முருகன் அருள வேண்டும்.
மலேசியாவில் புகழ் பெற்ற குகை கோவில்.
இந்த குக்கைக் கோயில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகுள் அமைந்து இருக்கிறது.
மலேசியாத் தலை நகர் கோலாம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே , கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது.
பத்துமலை பெயர் காரணம் ;- இந்த குகை கொயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. இந்த சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் உள்ள பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை என்ற பெயர் உருவாகி உள்ளது.
கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய திரு. கே தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த மலைக்கோவில். அப்போது ஒற்றையடிப் பாதைபோல் இருக்குமாம், அந்த பாதையில் சென்றுதான் முருகபெருமானை வணங்கி வந்து இருக்கிறார்கள்.இப்போது 272 படிகள் உள்ளது.
இந்த கோவில் போனது முருகன் அருள்தான். மகன் அவனின் திருமணநாளுக்கு (ஜூன் 7 ம் தேதி) பத்துமலை முருகன் கோவில் போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான். எனக்கு தெரியாது, எனக்கு "இனிய அதிர்ச்சி" (சர்ஃப்ரைஸ்) கொடுத்தான்.
சனி, 5 ஆகஸ்ட், 2023
சிங்கப்பூர் சுற்றுலா -2
காய்ந்த மரத்தில் செய்த மான்கள்
கார்டன்ஸ் பை தி பே என்பது சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் இருக்கும் பூங்கா. 250 ஏக்கரில் அமைந்து இருக்கும் ஒரு இயற்கை பூங்கா.
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தின் அருகில் இருக்கும் தாவரயியல் பூங்கா. இயற்கை பூங்கா.
மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் சிங்கப்பூர் , மலேஷியா போய் வந்தேன். சிங்கப்பூரில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தோம். மற்றும் சில இடங்களை அவர்களுடன் சுற்றிப்பார்த்தோம். சிங்கப்பூரில் சென்று வந்த கோயில்கள் பற்றி மூன்று பகுதிகள் பதிவு செய்தேன். இந்த பதிவில் இயற்கைப் பூங்கா பற்றிய பதிவு -2
சிங்கப்பூர் சுற்றுலா -1 இந்த பதிவு பார்க்கவில்லையென்றால் பார்க்கலாம்.
வியாழன், 3 ஆகஸ்ட், 2023
ஆற்றுக்கு போலாம் வாங்க!
முதலில் நிற்பது எங்கள் கார்
கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா
முன்பு எழுதிய பதிவு இனிய நினைவுகளை திரும்பி பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை
உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி
வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய
நீர்நிலைகளையும் வணங்கினர். இப்போது நீர்வளங்களைத்
தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.
அதனால் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில்
பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா
ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு
விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப்
பார்த்து வந்து எழுதிய பதிவு இது.
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
சிங்கப்பூர் சுற்றுலா -1
கார்டன்ஸ் பை தி பே என்பது சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் இருக்கும் பூங்கா. 250 ஏக்கரில் அமைந்து இருக்கும் ஒரு இயற்கை பூங்கா.
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தின் அருகில் இருக்கும் தாவரயியல் பூங்கா. இயற்கை பூங்கா.
மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் சிங்கப்பூர் , மலேஷியா போய் வந்தேன். சிங்கப்பூரில் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து மகிழ்ந்தோம். உறவுகளுடன் சில இடங்களை சுற்றிப்பார்த்தோம். சிங்கப்பூரில் சென்று வந்த கோயில்கள் பற்றி மூன்று பகுதிகள் பதிவு செய்தேன். இந்த பதிவில் இயற்கைப் பூங்கா பற்றிய பதிவு.