செவ்வாய், 31 ஜனவரி, 2023
தஞ்சை பெரிய கோவில்
டிசம்பர் மாதம் 11ம் தேதி தஞ்சை போய் இருந்தோம். அப்போது எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. மாயவரம் போகும் போது அப்படியே மதியம் 3.30க்கு தஞ்சை கோவிலுக்கு சென்றோம்.
புதன், 25 ஜனவரி, 2023
தமிழ் திறன் போட்டி
அரிசோனாவில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் இருக்கிறது.சாண்டலர் பள்ளியில் தமிழ் திறன் போட்டி- பேச்சுப்போட்டி சனி , ஞாயிறு இரண்டு தினங்களில் நடந்தது.
அங்கு படிக்கும் மழலையிலிருந்து பெரிய குழந்தைகள் வரை அனைவரும் தமிழ் திறன் போட்டியில் பங்கு பெற்றார்கள். ஒவ்வொரு வகுப்பிற்கும் நேரம் கொடுக்கப்பட்டு நடத்தினார்கள், அதற்கு பீனிக்ஸ் தமிழ்பள்ளியிலிருந்து ஆசிரியர்களை மற்றும் தமிழ்ச்சங்க நிருவாக குழு இயக்குனர்களை தீர்ப்பு சொல்லும் நடுவர்களாக அழைத்து இருந்தார்கள்.
ஞாயிறு மதியம் நடந்த அமர்வுக்கு என் மகனையும் திருமதி. பார்கவி அவர்களையும் அழைத்து இருந்தார்கள். இருவரும் தமிழ்சங்க நிர்வாக குழு இயக்குனர்கள்.
மகன் என்னையும் அழைத்து போனான். மாலை பொழுதை இனிதாக்கினார்கள் குழந்தைகள். அவர்கள் பேசியதை கேட்க செவிக்கு இன்பமாக இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள், யாரைப் பற்றி பேசினார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சனி, 21 ஜனவரி, 2023
சிறுவீட்டுப்பொங்கல்!
அரிசோனாவில் மகன் வீட்டில் பொங்கல்
போன வருடம் மதுரையில் எங்கள் வீட்டில் மகன் குடும்பத்துடன் கொண்டாடினோம். இந்த முறை மகன் வீட்டில் நானும், மருமகளின் அம்மாவும் கலந்து கொண்டோம். தை பொங்கல் இறைவன் அருளால் சிறப்பாக நடந்தது. பேரனின் சிறு வீட்டுப் பொங்கலும் சிறப்பாக நடந்தது. அந்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
செவ்வாய், 17 ஜனவரி, 2023
பள்ளியில் பொங்கல் விழா
நம் நாட்டிலும் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல்விழா சிறப்பாக நடந்து இருக்கிறது. செய்திகளில் பார்த்தேன்.
தமிழ் படிக்கும் மழலைகள்
மகனும் பேரனும்
ஜல்லிக்கட்டு காளையுடன்
ஆசிரியர்களும் மாணவிகளும் கும்மி பாட்டு பாடி கும்மி அடித்தார்கள்
மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாடினர்
தமிழ் படிக்கும் குழந்தைகள், பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகிறோம், என்பதை சொன்னார்கள். விழா சிறப்பாக நடந்தது. அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கினார்கள்.
திருமங்கலத்திலிருந்து வந்து இருந்த கத்தோலிக்க திருச்சபை தந்தை ஜான் கென்னடி அவர்கள்.
அவர் அருட்பணி பணியாற்ற ஆரம்பித்து 25 வருடம் ஆகி விட்டதாம். அதற்கு அவர் தம்பி கத்தோலிக்க திருச்சசபையில் விழா நடத்தினார். நாங்கள் எல்லாம் கலந்து கொண்டோம்.
அவர் தம்பி அருள் அவர்கள் தமிழ் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அருட் தந்தையை பொங்கல் விழாவிற்கு அழைத்து வந்தார். அவரும் மகிழ்வாக கலந்து கொண்டார்.
நிறைய பேர் காளையுடன் நின்று படம் எடுத்துக் கொண்டார்கள். மகனின் நண்பரின் மகன் தமிழ்பள்ளியில் படிக்கும் மழலை ஜல்லிகட்டு காளை கழுத்து மணியை பிடித்து கொண்டு வீரமாய் நிற்கிறான்.
"காளையை அடக்கிட்டோமில்ல" என்று சொல்கிறார். அவர்கள் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில். குட்டி பையன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் குழந்தைகள் பெரியவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கும்மி , பாட்டு என்று பொங்கல்விழா சிறப்பாக நடத்தது. சுட்டி பையன் நடனம், பாட்டு என்று அனைத்து கலையிலும் சிறந்து விளங்குகிறான்.
நிறைய நடனம் ஆடினான்.
எங்கள் மகன் வீட்டில் நடந்த பொங்கல் பண்டிகை அடுத்த பதிவில்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
சனி, 14 ஜனவரி, 2023
தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
உடல் நலம் காப்போம்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.
தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி
தினமணி மருத்துவமலர்( 2001) கூறிய சில
கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்
மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக
இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய
வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி,
உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால்
உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை
செய்யும்.
ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல்
எடை இயல்பான அளவுக்குக் குறையும்,
இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால்
(எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும்,
நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும்.
மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல்
10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக்
கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன்
5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள்.
முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு
செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்
படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது
வாகனங்களைச் சிறிது தொலைவிலே
நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை
நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம்
ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:
கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய்
வைத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய்
அடையாள அட்டையை எப்போதும் சட்டைப்
பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது
நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்
பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை
நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.
இனி,
வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்
கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில்
வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள்
எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும்
கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள்
கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு
என்று எழுதியிருந்தார்.
அதை நான் இங்கு தருகிறேன்.
நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு
சொல்லலாம்.
// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்
தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.
மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று
துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு
படுக்கப் போகும் முன் அரை டம்ளர்
தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக
வெண்டைக்காய் துண்டங்களை வெளியே
எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக்
குடியுங்கள்.
(குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ
வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)
எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய்
உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே
வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என
திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர்
புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ்
பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில்
வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில்
மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை
தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல்
இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி
இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி
விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம்
எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின்
பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன்
தெரிவித்துள்ளார்.
தினம் ஒரு வெண்டைக்காய் தானே
செலவு.
திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:
நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான்.
190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து
வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல்
இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில்
குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின்
இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது
என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக
ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும்
எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம்.
உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி
ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.
ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால்
மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்
திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.
பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே
இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த்
தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள
என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது
ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.
இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி
வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு
வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி
எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து
கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த
டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத்
தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள
லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி
செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.
நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி.
ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//
நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட
வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.
வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.
வெள்ளி, 13 ஜனவரி, 2023
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
எங்கள் குலதெய்வ கோவிலை சுற்றிலும் வயல்களும் ஏரியும் உள்ளது.
மடவார் விளாகம், பாப்பாங்குளம் கிராமம் ஆலங்குளம் வட்டம், தென்காசி மாவட்டம். என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர் தர்ம சாஸ்தா" எங்கள் குலதெய்வம்.
களங்கள் இருக்கும் கோடியில் இருக்கிறது. கதிர் அடிக்கும் பெரிய களம் இருக்கிறது. அதனால் தான் இங்குள்ள ஐயனாருக்கு களக்கோடிஸ்வரர் என்று பேர்.
அறுவடை சமயத்தில் ஒரு முறை போய் இருக்கிறோம் பார்க்கவே அழகாய் இருக்கும்.
டிசம்பர் 4 ம் தேதி போய் இருந்தோம் , இப்போது நாற்று நடும் காலமாக இருந்தது.
இந்த பதிவில் நானும், மகனும் எடுத்த படங்கள் இடம்பெறுகிறது.
குலதெய்வ வழிபாடு இதற்கு முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
அடுத்த பதிவில் வயலும், ஏரியும் இடம்பெறும். என்று சொல்லி இருந்தேன்.
செவ்வாய், 10 ஜனவரி, 2023
குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் கோயில்
குலதெய்வம் கோயில் மடவார் விளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. மடவார்விளாகம் , பாப்பன்குளம் கிராமம், ஆலங்குளம் வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ளது. எங்கள் குலதெயவம் பேர் "களக்கோட்டீஸ்வரர் தர்ம சாஸ்தா"
போன மாதம் குலதெய்வம் கோயில் போய் இருந்தோம். கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது பொலிவுடன் இருந்தது கோயில் .
அங்குள்ள அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்து , புது வஸ்திரம் சாற்றி பொங்கல் வைத்து வணங்கி வந்தோம். இந்த பதிவில் குலதெய்வ படங்கள் இடம்பெறுகிறது.
வெள்ளி, 6 ஜனவரி, 2023
பேரூர் பட்டீஸ்வரம்
டிசம்பர் 16ம் தேதி கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் போகும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திருவாதிரை அதனால் இந்த கோயில் பதிவில் இடம் பெறுகிறது.
மூலவர் - பட்டீஸ்வரர்
அம்பாள் - பச்சைநாயகி, மனோன்மணி
தலவிருட்சம் - புளியமரம், பனைமரம்
இந்த புளியமரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிறவாபுளி என்று சிறப்பு பெற்றது. இதன் விதையை எங்கு நட்டாலும் வளராது.
பனைமரம் "இறவாபனை" என்று புகழ் பெற்றது.
காமதேனுவும் அவள் மகள் பட்டியும் வழிபட்ட தலம். சிவலிங்ககத்தின் தலையில் பட்டியின் கால் பட்ட தழும்பு இருக்கும்.
.
புதன், 4 ஜனவரி, 2023
செவ்வாய், 3 ஜனவரி, 2023
புத்தாண்டு ஆலய தரிசனம்
புத்தாண்டுக்கு கோயில் போனோம் முதலில் சாய் கோயில் . அடுத்து பெருமாள், சிவன், கிருஷ்ணர், ராமர், இருக்கும் கோயில் .அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில்.