ஞாயிறு, 16 டிசம்பர், 2018

திரும்பிப் பார்க்கிறேன்

Image may contain: night and outdoor
ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்திர சாயி கோபுரம்
No automatic alt text available.
                                 தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்
Image may contain: text

No automatic alt text available.

 மார்கழியில் வீட்டு வாசலில் அவசர அவசரமாய் ஒரு சின்னக் கோலம் போட்டு விட்டு குளித்து வீட்டில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி பூஜை செய்து விட்டு முகநூலில் மார்கழி பதிவு போட்டு விட்டேன்.

அதன் பின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோவில் தரிசனம்.
அங்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது.
அதன் பின் உறவினர் வீட்டு மணிவிழாவிற்குப் போய்விட்டு இப்போதுதான் வலைப் பக்கம் வரமுடிந்தது.

மார்கழி பதிவு போட்டு இருந்தவர்களின் பதிவு எல்லாம் படித்து விட்டேன்.
12ம் தேதி தென்காசியில் தம்பி மகள் வளைகாப்பு விழாவிற்கு போய்  இருந்தோம். போகும் வழியில்  கிருஷ்ணாபுரம் அனுமன் கோவில்.
தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில், மதுரை திரும்பும் போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் பார்த்து தரிசனம் செய்து வந்தோம்.
திருவிழா :பகல் பத்து"  நடந்து கொண்டு இருந்தது அதனால் எங்கும் படம் எடுக்க முடியவில்லை. வடபத்திர சாயி கோபுர படம் மட்டும் எடுத்தேன்.

முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் பதிவில் நிறைய படங்கள் பகிர்ந்து இருக்கிறேன்.
கூட்டமே இல்லாமல் நன்கு தரிசனம் செய்தோம்.
இந்த பதிவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்திர சாயி கோவில் கோபுரம் இடம் பெறுகிறது.

மார்கழி என்றால்   குளிர் - இப்போது குளிரே இல்லை.

 ஆண்டாள் அருளி செய்த  திருப்பாவையும் ,
  மாணிக்கவாசகர் அருளி செய்த திருவெம்பாவையும்  தினம் பாடி இறைவனை துதிக்கும் அற்புதமான மாதம் மார்கழி.

காலை வானொலியில்  திருப்பாவை, திருவெம்பாவை கேட்டு அதன் விளக்கவுரை கேட்போம். அது இப்போது தொடர்கிறது. தொலைக்காட்சியிலும் கேட்கிறேன்.

டிசம்பர் இசைவிழாவும் வந்து விடும். மாலை கேட்க வேண்டும். காலை கேட்கவில்லை விழாவிற்குப் போய் விட்டதால்.

நான் மார்கழி மாதம் போட்ட பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்து இருக்கிறேன்.
நேரமும், விருப்பமும் இருந்தால் படிக்கலாம்.

பழைய கோலங்கள் :-  பழைய சேமிப்பு கோலங்கள்

மார்கழி மாத நிகழ்வுகள் :-  மார்கழி மாதம் நடக்கும் விழாக்கள்

மார்கழிக் கோலங்கள் :- மார்கழியின் சிறப்பும் கோலங்கள் போடுவதால் நன்மையும் .

மார்கழி நினைவுகள் :-  மார்கழி பதிவுகளின் நினைவுகள்

மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து :  - நான் முதல் முதலில் வலைத்தளம் ஆரம்பித்த போது இந்த கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் ”மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி என் பதிவுகளை ஆரம்பித்தேன்.  வண்ணக் கோலங்கள் அதில் பல உள்ளன.

மார்கழியின் சிறப்பு:- இசை, கோலங்கள், பக்தி


புதுவருட வாழ்த்து கோலங்கள் :- மார்கழி மாதம் வரும் புதுவருடத்தில் போட்ட கோலங்கள்.

இவைகளை தவிர லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில் வந்த சிறு வயது  மார்கழி நினைவுகள்  தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் ஒரு நாள் பகிர்வேன்.


நானும் மார்கழி பதிவு போட்டாச்சு.

அதிராவுக்கு விடிந்தவுடன் படிக்க வசதியாக.
                                                  வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

43 கருத்துகள்:

 1. ஸ்ரீவில்லிப்புத்தூர் - நான் ஆரம்ப காலங்களில் பணிசெய்த ஊர். முதல் கோபுரத்தின் படமே மிக அருமை. அங்கு பணி செய்தபோது சென்றிருக்கிறேன். மறுபடி அங்கு செல்லும் வாய்ப்பு சீக்கிரமே கிடைக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   உங்களுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் போய் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் விரைவில் என்று வேண்டிக் கொள்கிறேன்.
   மலரும் நினைவுகள் வந்து இருக்கும் உங்களுக்கு இல்லையா?
   (பணி செய்த காலங்கள்)

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. ஆம், மார்கழி என்றால் குளிர். ஆனால் குளிரில்லாத மார்கழி. சென்னையில் மேகமூட்டமாய் இருக்கிறது. இன்று வெயிலைக்காணோம். பழைய நினைவில் என் மாமியார் ஸ்வெட்டரும், குல்லாயும் அணிந்து வலம் வருகிறார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மார்கழி மாதம் போலவே இல்லை, குளிர் இல்லை.
   கோலங்கள் பார்க்க கிடைக்கவில்லை. பனி இல்லாத மார்கழியா? என்ற பாடல் நினைவுக்கு வருது.
   மார்கழி கோவில்களின் பாடல்கள் எனக்கு கேட்க மாட்டேன் என்கிறது.
   பக்கத்து ஐயனார் கோவில் பாட்டு மட்டும் மெலிதாக கேட்கிறது.
   மாயவரத்தில் நாங்கு தெருக்களில் உள்ள பிள்ளையார் கோவில்களிலிருந்து பாடல்கள் 4.30க்கு கேட்க ஆரம்பித்துவிடும்.

   சிலருக்கு மார்கழி என்றலே குளிர் என்ற நினைவு வந்து விடும் அதனால் ஸ்வெட்டர், குல்லா எல்லாம் அணிந்து கொள்வார்கள். அவர்களுக்கு குளிர் அடித்தாலும் அடிக்கலாம், பக்கத்தில் மரம் செடிகொடிகள் அதிகமாய் இருக்கிறதோ?

   நீக்கு
 3. ஆம், மார்கழி என்றால் குளிர். ஆனால் குளிரில்லாத மார்கழி. சென்னையில் மேகமூட்டமாய் இருக்கிறது. இன்று வெயிலைக்காணோம். பழைய நினைவில் என் மாமியார் ஸ்வெட்டரும், குல்லாயும் அணிந்து வலம் வருகிறார்!

  பதிலளிநீக்கு
 4. முதல் படம் அட்டகாசமாக வந்து இருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒருமுறை சென்று இருக்கிறேன்.

  மார்கழி பதிவு சிறப்பு. சுட்டிகளுக்கு செல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   முதல் படம் அவசர அவசரமாய் எடுத்த படம்.
   நன்றாக இருக்கிறது என்று சொன்னது மகிழ்ச்சி.
   நான் சிறு வயதில் சிவகாசியில் இருந்த போது அடிக்கடி பார்த்த கோவில்.
   போனமுறை தம்பிமகள் திருமணத்திற்கு போன போது போனோம்.
   இப்போது வளைகாப்பிற்கு போகும் போது போய் இருக்கிறோம்.
   எத்தனை முறைப் பார்த்தாலும் பார்க்க ஆவலைத்தூண்டும் கோவில்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. ஸ்ரீவில்லிபுத்தூர் - இதுவரை சென்றதில்லை. அழைப்பு இதுவரை வரவில்லை!

  படங்கள் அழகு. உங்கள் மார்கழி நினைவுகளையும் இங்கே பகிர்ந்தமை சிறப்பு. நான் காலை மார்கழி முதல் நாள் நிகழ்வு ஒன்றிற்குச் சென்று மதியம் தான் திரும்பினேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

   ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோவில், பக்கத்தில் மடவார்விளாகத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், எல்லாம் பார்க்கலாம் அருமையான கலைநயத்தோடு கட்டிய கோவில்கள். அடுத்த முறை தமிழகம் வரும் போது உங்களை அவர் அழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

   முன்பு பகிர்ந்து இருக்கிறேன் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் படங்களை. வடபத்ரசாயியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. பச்சைவண்ணத்தில் செந்தாமரை கண்களுடன். விரட்டவே இல்லை யாரும் நின்று நிதானமாய் பார்த்து வந்தோம் இந்த முறை. கூட்டம் எல்லாம் உற்சவர்களை காண அமர்ந்து இருந்தார்கள். பூஜை சமயம் தான் திரை விலக்கப்படும். நாங்கள் பார்க்க முடியவில்லை 1மணி நேரம் ஆகும் என்றார்கள். மதுரை திரும்பவேண்டும் என்பதால் காத்து இருந்து தரிசனம் செய்ய முடியவில்லை.

   நீங்களும் மார்கழி முதல்நாள் நிகழ்வுக்கு சென்று இருந்தீர்களா?

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. அழகான படங்களுடன் மார்கழிக்கு வரவேற்பு...

  ஆண்டாள் திருக்கோயிலுக்கு இருமுறை சென்றுள்ளேன்..
  அப்போதெல்லாம் நிழற்படம் எடுக்க வாய்ப்பு இல்லை...

  இனிய மலரும் நினைவுகளுடன் மனங்கவரும் பதிவு...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   நீங்கள் என்னிடம் பதிவு இல்லையே நலமா என்று கேட்டதாலும், உங்கள் மார்கழி பதிவுகளை கண்டதும் நானும் விழாவுக்கு சென்று வந்து அவசர பதிவு போட்டு இருக்கிறேன்.
   மலரும் நினைவுகள் வந்துவிடும் மார்கழி என்றாலே!
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. அது தானே ... பனியில்லாத மார்கழி ஆகியது ஏன்?...

  இங்கும் கூட இரவில் மட்டுமே குளிர்..
  பகலில் சுள்ளென்று வெயில்!..

  இயற்கையைப் புதிராக ஆக்கி வைத்த பெருமை
  நமக்குரியதாகி விட்டது!...

  நலம் வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பனி இல்லாமார்கழிதான் காலநிலைகள் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதே!
   தென்காசியில் சாரல் காற்றும்(பொதிகை சாரல்) குளிரும் இருக்கும் என்று உறவினர்கள் சால்வை, ஸ்கார்ப் எல்லாம் எடுத்து வந்தார்கள் வாடகை கார் எடுத்து சென்றோம் குளிரும் என்று எல்லோரும் கார் ஜன்னலை அடைத்தார்கள் அப்புறம் பார்த்தால் வேர்க்க ஆரம்பித்து விட்டது. தென்காசியில் வெயில் கொளுத்தியது. நிறைய பேர் குற்றாலம் போனார்கள் . நாங்கள் ஸ்ரீவெல்லிப்புத்தூர் போனோம்.
   இயற்கையை புதிராகதான் ஆக்கி விட்டோம் நீங்கள் சொல்வது போல்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   நலம் அடைந்து வருகிறேன்.
   (கணுக்கால் வலி குறைந்து வருகிறது)

   நீக்கு
 8. அன்பு கோமதி,
  கணுக்கால் வலி குறைந்திருப்பது நல்லது. ஏனக்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம். நான் மார்கழிப் பதிவுகள் எழுதியது எல்லாம் கனவாகத் தோன்றுகிறது.

  தினமும் மனனம் செய்கிறேன். கேட்கிறேன்.
  எல்லோரும் கண்ணன் அருள் பெற்று இன்புற்றிருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போலக் குளிரும் இல்லை. ஒலி பெருக்கிப் பாடல்கள் இல்லை.
  பரவாயில்லை அண்ணாமலை யாரும், திருமால் அனைவரும் நம்மைக் காப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   உங்கள் ஆசீர்வாதத்தால் கால்வலி குறைந்து வருகிறது அக்கா.
   இரண்டு நாளில் மீண்டும் ஒரு இரத்த பரிசோதனை , அதன் பின் சில மருந்துகள் எடுத்துக் கொண்டால் பூரண நலம் பெறலாம் என்றார் டாகடர்.

   நீங்கள் முகநூலில் போடும் படங்கள் எல்லாம் கண்ணுக்கு நிறைவாய் இருக்கிறது.
   தினமும் பாடல்கள் பாடி வருவது மகிழ்ச்சி.

   //அண்ணாமலை யாரும், திருமால் அனைவரும் நம்மைக் காப்பார்கள்.//
   அதுதான் நமக்கு வேண்டும் வேறு என்ன வேண்டும் இனி?
   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 9. >>> நலம் அடைந்து வருகிறேன்.
  (கணுக்கால் வலி குறைந்து வருகிறது)..<<<

  கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...

  விரைவில் நலம் பெறுவீர்களாக!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் நலம் பெறுவீர்களாக!...//

   மீண்டும் வந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி.

   நீக்கு
 10. மார்கழி மாத நினைவுகள் கவர்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
   உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
   எப்போது பதிவுகள் போடுவீர்கள் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. ஒரு முறை மதுரையில் இருந்து தென்காசிக்கு ஒரு திருமணத்துக்குச் சென்றபோது ஸ்ரீ வில்லிப் புத்தூர் சென்றிருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   மதுரையிலிருந்து தென்காசி செல்லும் போது வழியில் இருப்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் தரிசனம் செய்ய வசதி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. பதிவர் ரத்ன வேலின் ஊர் அல்லவா

  பதிலளிநீக்கு
 13. வில்லிப்புத்தூர் கோபுரம் இரவிலே எடுத்திருக்கிறீங்கபோல இருக்கு.. ரொம்ப அழகாக இருக்கு லைட்ஸ் உடன்.. மிக அமைதியாகவும் இருக்கு.. ஏலோரெம்பாவாய்.. சின்ன வயதை நினைவு படுத்துதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   இரவுதான் போனோம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு.
   இரவில் எடுத்தபடம்தான்.
   மார்கழி என்றால் சிறுவயது நினைவு இல்லாமலா?

   நீக்கு
 14. //மார்கழியில் வீட்டு வாசலில் அவசர அவசரமாய் ஒரு சின்னக் கோலம் போட்டு விட்டு //
  ஆவ்வ்வ் அவசரக் கோலமே இவ்ளோ அழகாக இருக்கு கோமதி அக்கா.. தினமும் போடுவீங்களோ? மறக்காமல் படம் எடுங்கோ.. கலர்க் கோலமும் போடுங்கோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமும் போடுவோம் கோலம். மார்கழி என்றால் தினம் செம்மண்இடவேண்டும். வாசலில் அதிகாலையில் விளக்கு வைக்க வேண்டும். கார்த்திகை மாதம் மாலையும் மார்கழியில் காலையும் விளக்கு வைக்க வேண்டும் தை பொங்கல் வரை.
   கல்ர் கோலமும் போடுவேன். அத்தைக்கு முதல் வருடம் 29 ம்தேதி அதன் பின் தான் கலர் கோலம் போடலாம்.
   என் பழைய பதிவுகளில் கலர் கோலங்கள் இருக்கிறது பாருங்கள் அதிரா.
   இன்று சின்னக்கோலம் தான். (கோவில் போவதால் )

   நீக்கு
 15. //அங்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது.//

  ஆவ்வ்வ்வ்வ்வ் கோயில் பிரசாதம் சாப்பிட்டு நீண்டகாலமாகுது.. நினைக்கவே வாயூறுதே... என்னை நினைச்சும் சாப்பிடுங்கோ அடுத்த தடவை:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்தான்.
   உங்களையும் நினைத்துக் கொள்கிறேன் அதிரா.

   நீக்கு
 16. //போகும் வழியில் கிருஷ்ணாபுரம் அனுமன் கோவில்.
  தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில், மதுரை திரும்பும் போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் பார்த்து தரிசனம் செய்து வந்தோம்.//

  ஆவ்வ்வ்வ் எந்தக் கோயிலையும் விட்டு வைப்பதில்லையோ.. மனதுக்கு இதம் தரும் ஆலய தரிசனம்..

  ஊரில் எனில்.. காலை 3.30 க்கு முதல் மணி ஆரம்பமாகும் என நினைக்கிறேன்.. எங்கள் ஊரும் கோயில்களுக்குப் பிரசித்தி பெற்றது.. தடக்கி விழுந்தால் கோயிலாகத்தான் இருக்கும். அப்போ தொடர்ந்து மணிச்சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும்.. அந்த ஓசையை வச்சே அம்மம்மா சொல்லுவா.. இது வைரவற்ற மணி.. இது கந்தசாமியாற்ற.. ஆ இது பிள்ளையாற்ர மணி அப்போ 4.30 ஆகிட்டுது இனி எழும்போணும் எனச் சொல்லிக்கொண்டே எழும்புவா.. ஊருக்கு விடுமுறை காலங்களில் போய் நிற்கும்போது அனுபவிப்பவை இவை..:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடலில் பலம் இருக்கும் வரை ஆலயதரிசனம் செய்யவேண்டும் அதுவும் வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்துவிட வேண்டும்.
   அனுமன் கோவில் பார்க்காத கோவில். பச்சைப்ப்சேல் வயல்களுக்கு இடையே கோவில் இருக்கிறது. பதிவு போடுகிறேன்.

   ஆமாம் கோவில் மணிகள் ஒலிக்கும் சத்தம் பழகி விட்டால் அடையாளம் கண்டு கொள்ளலாம் எந்த கோவில் என்று.
   இலங்கை வானொலியில் காலை பாடல்கள் கேட்ட காலத்தில் ஆலய மணிகள் ஒலிக்க பாடல்கள் ஒலிப்பரப்புவார்கள். சிவராத்திரி நேரடி ஒலிப்பரப்பு உண்டு. பொன்ன்ம்பலகோவிலிருந்து.
   அந்தக் காலம் இனிமையானது. நான் தினமும் காலை 4 மணிக்கும் இன்றும் எழுந்து கொள்கிறேன் .

   நீக்கு
 17. //மார்கழி என்றால் குளிர் - இப்போது குளிரே இல்லை.//
  இங்கு படு குளிரும் இருட்டும்.. காலையில் விடியவே 8.30 ஆகிடுது பின்னேரம் 3.30 க்கே இருட்டி விடுது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு குளிர் பனி பொழிவு எல்லாம் இருக்கும் இல்லையா?
   மாயவரத்தில் இருக்கும் போது காலை குளிர் காற்று, குளிர் எல்லாம் அனுபவித்தேன்.
   இங்கு குளிர் இல்லை.

   நீக்கு
 18. //நானும் மார்கழி பதிவு போட்டாச்சு.

  அதிராவுக்கு விடிந்தவுடன் படிக்க வசதியாக.
  வாழ்க வளமுடன்.//

  ஹா ஹா ஹா கோமதி அக்கா.. ஞாயிறில் போட்டமையால் இப்போதான் புளொக் பக்கம் எட்டிப் பார்த்தேன்...

  என்னால தைப்பதிவு கூடப் போட முடியுமோ தெரியவில்லை.. பார்ப்போம்ம் விரைவில் போஸ்ட் போடோணும் இல்லை எனில் மறந்திடப்போறேன்ன்..

  நீங்களும் நீண்ட இடைவெளி விட்டே போட்டிருக்கிறீங்க என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா , மார்கழி மாதம் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
   என் பழைய பதிவுகளில் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதைப் படித்து கருத்து சொன்னால் மகிழ்வேன்.
   ஆமாம் நானும் நீண்ட இடைவெளிதான்.
   உங்கள் பின்னூட்டங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தருது.
   நன்றி ந்னறி.

   நீக்கு
 19. உங்கள் கணுக்கால் வலி குறையப் பிரார்த்தனைகள். மார்கழிப் பதிவுகள்னு நானும் தனியா ஏதும் போடாமல் பழைய பதிவுகளின் சுட்டி தான் கொடுத்திருக்கேன். உங்கள் பழைய பதிவுகளையும் சென்று பார்க்கிறேன். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 2,3 தரம் போயும் படங்கள் எல்லாம் எடுக்கும்படி ஏற்பாடுடன் போகலை! மறுபடி வாய்க்குமானும் தெரியாது! படங்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்.
  தென்காசி கோவிலில் படம் எடுக்க கூடாது என்றார்கள் , செல்போன் பேச கூடாது என்றார்கள்.காமிரா கொண்டு போய் இருந்தோம். வெளியே கோபுர வாசலில் மட்டும் எடுத்தோம்.
  அதனால் அங்கு அணைத்தயை மறந்தே போய் விட்டேன். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒன்று சொல்லவில்லை ஆனால் வீடு திரும்பும் அவசரம் செல்போனை இயங்க வைத்து எடுப்பதற்குள் எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள், அதனால் அவரமாய் வடபத்ரசாயி கோபுரம் மட்டுமே எடுத்தேன். வெளியே வந்து எல்லோரும் காப்பி குடிக்கவும், பால்கோவா வாங்குவதுமாய் இருந்தார்கள் , இப்படி என்று தெரிந்து இருந்தால் இன்னும் நிதானமாய் சில படங்கள் எடுத்து இருப்பேன்.
  உங்கள் பிரார்த்தனைகளூக்கு நன்றி, உங்கள் பிரார்த்தனைகளால் தான் குண்மாகி வருகிறேன். நவராத்திரி முதல் கஷ்டபட்டேன், இப்போது நலம் அடைந்து வருகிறேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்பு பலமுறை சென்றுள்ளேன்... ராஜபாளையத்தில் படித்தேன் என்பதால்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   ராஜபாளையத்தில் படித்ததால் நல்ல வாய்ப்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்க்க அருமை.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 22. ஓ அக்கா மார்கழிப் பதிவு வந்தாச்சா..இதை மிச் செய்துட்டேன்...பயணம் முடிந்து வந்ததும் பார்த்தப்ப சிட்டுக்கு தான் இருந்தது நான் பார்த்தப்ப....அப்புறம் நேற்று பார்க்கலை...

  கோபுரம் ரொம்ப அழகாக இருக்கு கோமதிக்கா...
  அவசரக் கோலம் கூட ரொம்ப அழகா போட்டுருக்கீங்கக்கா..

  ஆஹா புளியோதரை சர்க்கரைப் பொங்கலா...அதுவும் கோயில் பிரசாதம் என்றால் ஊறுது நாவு!

  போகும் பயணத்திலும் கூட கோயில் எல்லாம் தரிசனம்!! சூப்பர் கோமதிக்கா...

  ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் சென்று பல வருடங்கள் ஆகிறது.

  உங்கள் கணுக்கால் வலி பற்றியும் கேட்க் நினைத்திருந்தேன்....இங்கு நீங்களே சொல்லிருக்கீங்க குணம் அடைந்து வருவதாக...மிக்க மகிழ்ச்சிக்கா....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   கோபுரம், கோலம் இரண்டையும் ரசைத்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

   //ஆஹா புளியோதரை சர்க்கரைப் பொங்கலா...அதுவும் கோயில் பிரசாதம் என்றால் ஊறுது நாவு!//

   நீங்கள் புளியோதரை நன்கு செய்வீர்களே!
   பயணத்தில் உடன் வந்தவர்கள் விருப்பம், இறைவன் அருள் கிட்டியது.
   கணுக்கால் வலியும் இறைவன் அருளால் குறைந்து இருக்கிரது. உங்கள் பிரார்த்தனைகளுக்கும் பலன் எனக்கு கிடைத்தது.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 23. தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும் போயிருக்கேன் ரொம்ப அழகா இருக்கும். குற்றாலம் எல்லாம் சில வருடங்கள் முன்பு. அப்புறம் வாய்ப்பு கிடைக்கவில்லை. கோபுரம் அழகா இருக்குக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தென்காசி கோபுரம் அழகுதான். குற்றலாம் சில உறவினர் சென்றார்கள்.
   நாங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் போனோம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு