வெள்ளி, 26 பிப்ரவரி, 2021
அழகே அழகே எதுவும் அழகே
செவ்வாய், 23 பிப்ரவரி, 2021
ஸ்ரீ மகா கணபதி ஆலயம்
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
கதிர் நரசிங்க பெருமாள்
கதிர்நரசிங்க பெருமாள்
திண்டுக்கல் அருகில் 12 கிலோமீட்டர் தூரத்தில் பழனி தேசியநெடுஞ்சாலையோரத்தில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் இருக்கிறது. போகும் வழியில் இருப்பதால் பார்க்க வசதியாக இருக்கிறது.
புதன், 17 பிப்ரவரி, 2021
மரங்கொத்திப் பறவைகள்
வியாழன், 11 பிப்ரவரி, 2021
திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்
(எம்பெருமான் மீது திருப்பாசுரம் பாடியருளல்)
(திருவெள்ளக்குளம்)
25. 1. 2012
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள் வலியால்
மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் - (தனியன்)
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடிஉய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிநான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
– திருமங்கையாழ்வார்.
தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி
அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை
நடக்கும். இந்த ஆண்டு 23.01.2012, 24.01.2012,
25.01.2012 ஆகிய நாட்களில் நடைபெற்றது. முதல்
நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து
புறப்பட்டு ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,
11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும்
விழா நடைபெறும். அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் ஹம்ஸவாஹன உத்ஸவமும் நடக்கும்.
முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு திருக்குறை
யலூர், திருமங்கைமடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி
ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள்
குளி மண்டபம் எழுந்தருளுவார்.அங்கு திருநறையூர்
நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகியமணவாளனையும்
மங்களாசாஸனம் செய்த பிறகு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும். அருகில்
இருக்கும் நதியில்இருந்து நீர் எடுத்து வந்து
திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருமஞ்சனம்
முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார்
குமுதவல்லிநாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக்கொள்கிறார். தன்னைக் கடைத்
தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த
வஸ்திரத்தை அணிந்துகொள்கிறார்.
மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து
புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப்
பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் - ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய்கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றியம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா
சாஸனம் செய்துமுடித்து இரவு மணிமாடக்கோயி
லுக்கு எழுந்தருளிய பின் அர்த்தஜாமம் நடைபெறும்.
இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில்
மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி
மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்வார்.
ஸ்ரீ புருஷோத்தமப்பெருமாள் ஸந்நிதியில்
எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம்
செய்வார். மாலை பதினொரு திவ்யதேசத்து
எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை
பெறும். இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட
சேவையும், ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ
வாஹன உத்ஸவமும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
நாங்கூர் மணிமாடக்கோயில்
மூன்றாம் நாள் காலை மணிமாடக்கோயிலில்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.பிறகு
காலையில் 11 மணியளவில் புறப்பட்டு திருவெள்ளக்
குளம், திருததேவனார்தொகை, திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்
செய்து திருநகரி சேர்வார். இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.
***
நாங்கள் கருடசேவையை முன்பு பார்த்திருக்கிறோம்.
ஆனால் திருமங்கையாழ்வார் 11 திவ்யதேசங்களை
மங்களாசாஸனம் செய்வதைப் பார்த்தது இல்லை.
25.01.2012 அன்று திருவெள்ளக்குளத்தில் ஆழ்வார்
மங்களாசாசனம் செய்யும் வைபவத்தைப் பார்க்கப்
போனோம். மூன்றாம் நாள் உற்சவத்தைப் பார்த்து
வந்தோம்.
திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் முதலில்
திருப்பாவை படித்தார்கள். அதன் பின் சர்க்கரைப்
பொங்கல், தயிர்சாதம் பிரசாதம் தந்தார்கள். பின்
திருமங்கையாழ்வார் பல்லக்கில் மனைவியார்
குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டார்.
பாண்டு வாத்தியம், மேளம், இவற்றோடு அண்ணன்
கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார். நாங்களும்
போனோம்
தெருவெல்லாம் வீடுகளில் கோலங்கள்
போட்டு அவரை சிறப்பாய் வரவேற்றனர்.
திருமங்கையாழ்வாரின் வடிவழகை ஸ்ரீ மணவாள
மாமுனிகள் வருணித்துப் பாடுகிறார். அப்படி ஒரு
அழகு. அவர் கையில் வைத்து இருக்கும் வேல்
போன்ற ஆயுதத்தில் சிவப்பு கற்களால் அழகூட்டப்
பட்டுள்ளது. குமுதவல்லித் தாயார் கையில் உள்ள
கிளிக்கும் சிவப்புக்கற்களால் அழகூட்டப்பட்டுள்ளது
.
பல்லக்கும் அழகு! அதைத் தூக்கி வருபவர்களுக்கு
பச்சைக் கலரில் பனியன் வழங்கி இருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமாய் தங்கள் பைகளை பல்லக்கின்
இரு புறமும் மாட்டி கொண்டு சந்தோஷமாய்
பல்லக்கை தூக்கி வருகிறார்கள்.
பல்லக்கு தூக்கி வரும் அடியார்களும் ஆழ்வார்கள்
தான் என்று அங்கு உபன்யாசம் செய்தவர் சொன்னார்.
***
அண்ணன் கோயில் சிறிய அழகிய கோயிலாக
உள்ளது.
திருக்கோயிலின் சிறப்புகள்
இக்கோயிலை அண்ணன் பெருமாள் கோயில்
என்பார்கள்-நாங்கூர்க்கோயில்களில் ஒன்று – இந்த
இடத்தை மேலச்சாலை என்று கூறுகிறார்கள்.
* மூலவர் திருநாமம்:
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன்,
அண்ணன் பெருமாள்.
* நின்ற திருக்கோலம்,
* கிழக்கே திருமுக மண்டலம்.
* தாயார் திருநாமம் :
ஸ்ரீ அலர்மேல் மங்கை,
ஸ்ரீ பூவார் திருமகள் நாசசியார். பத்மாவதி
* தீர்த்தம்: திருவெள்ளக்குளம்,ஸ்வேத புஷ்கரிணி
* விமானம்-தத்வத்யோதக விமானம்
* மங்களாசாசனம்- திருமங்கையாழ்வார்
1308-17(10 பாசுரங்கள்)
இத்தலத்து இறைவன் சுவேதராஜாவிற்கு இறவா
வரம் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துப்
பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்பர்.
திருப்பதி பெருமாளுக்கான பிரார்த்தனையை இங்கும்
செலுத்தலாம் என்கின்றனர்.
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், சேலார்
வயல்சூழ் திருவெள்ளக்குளம்,செந்தாமரை நீர்த்
திருவெள்ளக்குளம்,தேனார் பொழில்சூழ்
திருவெள்ளக்குளம் என்றெல்லாம் ஆழ்வார்
பாடுகிறார்
கோவிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில்
நீராழி மண்டபத்திற்குரியமேடை இருக்கிறது.
மண்டபம் தற்போது இல்லை. இரை தேடும் கொக்கு
அங்கே அமர்ந்திருந்தது. உச்சி வேளை வெயிலைத்
தாங்க முடியாத எருமைகள் திருக்குளத்தில் ஆனந்த
மாய் மூழ்கி இருந்தன.
ஆழ்வார் திருவெள்ளக்குளம் திருக்கோயிலை வலம்
வருகிறார்
ஆழ்வாரை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள்
திருமங்கையாழ்வார் கோயிலுக்கு முன்னே
வந்ததும் உள்ளே இருந்து ஸ்ரீ அண்ணன் பெருமாள்
சூடிய மாலை,அவர் உடுத்திக் களைந்த ஆடை
இவற்றைக்கொண்டு அவருக்குத் தந்து மரியாதை
செய்கிறார்கள். அவர் கோயிலுக்கு உள்ளே வர
நடை பாவாடை விரித்து அழைக்கிறார்கள்.
திருமங்கையாழ்வார் எழுந்தருளுவதை ‘வாங்கா’
வாத்தியம் எல்லோருக்கும் அறிவிக்கிறது
பின்னர் ஆழ்வார் திருக்கோயிலின் உள்ளே
அடியார்களுடன் எழுந்தருள்கிறார்.
அதன்பின்னர் மூலஸ்தானத்தருகே மங்களா
சாசனம் நிகழ்கிறது.
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர்
திண்ணார் மதில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே
என்று தொடங்கி அவர் பாடிய 10 திருப்பாசுரங்களை
பட்டாச்சாரியர்களும் பிறரும் சந்நிதியில்
பாடுகிறார்கள். கேட்டு அனுபவித்தோம்.
இந்த திவ்ய தேசத்தில் பல்லக்கு மூலஸ்தானத்தின்
அருகிலேயே போய் விடுகிறது. அந்த மண்டபத்
திற்குள் அந்தச்சமயத்தில் பெண்கள் போக அனுமதி
இல்லையாம். போட்டோ எடுக்கவும் அனுமதி
யில்லையாம்.
அந்தக் காலத்தில் திருமங்கையாழ்வார் பல்லக்கில்
எப்படி வயலிலும், சேற்றிலும், ஆற்றிலும் இறங்கி
நடந்து வந்து பெருமாள் கோயில்களுக்கு வந்து
திருப்பாசுரங்கள் பாடினாரோ அப்படியே அதை
இப்போது உத்சவமாக நடத்திக்காட்டுகிறார்கள்.
திருவெள்ளக்குளத்தில் மங்களாசாசனம் முடிந்ததும்
ஆழ்வார் திருத்தேவனார் தொகை, திருவாலி ஆகிய
தலங்களில் மங்களாசாசனம் செய்து திருநகரி
அடைகிறார்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
=====================================================================
புதன், 10 பிப்ரவரி, 2021
மாலைச்சூரியனும் கள்ளிகளும்
சனி, 6 பிப்ரவரி, 2021
மாப்பிள்ளை வந்தார்! மாப்பிள்ளை வந்தார்!
மதுரை ,திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள “குமரக கல்யாண மண்டபத்தில்” இரவு 7மணிக்கு ஒரே பரபரப்பு!
‘என்ன இன்னும் மாப்பிள்ளை வரலை ! ’என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டு இருந்தார்கள். ’கோவையிலிருந்து எத்தனை மணிக்கு புறப்படுவதாய் சொன்னார்கள், மாப்பிள்ளை அழைக்கப் போனவர்கள்’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள், பெண்ணின் அப்பாவிடம்.
கவலை தோய்ந்த முகத்துடன் கேள்வி கேட்கும் எல்லோருக்கும் நிதானமாய் உள்ளுக்குள் ஏற்பட்டு இருக்கும் பதட்டத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பெண்ணின் அப்பா . பெண்ணின் அம்மா எல்லா தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்போது போல் அந்தக் காலத்தில் அலைபேசி வசதிகள் இல்லை. கல்யாணமண்டபத்தின் தொலைபேசிக்கு காலதாமதத்தின் காரணத்தை சொல்ல மறந்து விட்டனர், மாப்பிள்ளை அழைக்கச் சென்றவர்கள்.
மாப்பிள்ளை அழைப்புக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் தங்கள் மாப்பிள்ளை அழைப்பு எப்படி நடந்தது என்றும், வேறு ஊரில் எப்படி அசம்பாவிதங்கள் மாப்பிள்ளை அழைப்பின் போது நடந்தது என்றும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது.
1973இல் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் பஸ் ஸ்டிரைக் வேறு. போக்குவரத்து இல்லை. அதனால் மிக நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்துவிட்டார்கள். மற்றவர்கள் ரயிலில் வந்துகொண்டு இருந்தார்கள் அவர்களை அழைக்க வேன், வாடகைக் கார் என்று ஏற்பாடு ஆகி இருந்தது.
வந்தவர்கள் எல்லாம் கேட்கும் கேள்வி - மாப்பிள்ளை வரவில்லையா? - என்பது தான். ஒரு வழியாக எல்லோர் பிரார்த்தனையின் பலனாய் நலமாக மாப்பிள்ளை வந்தார். வழியில் டயர் பழுது அடைந்து அதை மாற்றிவந்ததால் காலதாமதம். ( அந்தக்காலத்தில் 1973ல் நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை காலதாமதாய் வந்ததுபோல், 1997இல் நடந்த அவர்களின் மகளின் திருமணத்தின் போது மாப்பிள்ளை காலதாமதமாய் வந்தார். என்னே ஒற்றுமை! தஞசாவூரில் 1997-இல் பெரியகோயில் குடமுழுக்கு விழாவிற்கு முதல் நாள் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாய்ப் போக்குவரத்துப்பிரச்சினையால் அன்று அவர்கள் வருவது தாமதமானது. )
மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார். மாட்டு வண்டியிலே !
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
என்று அந்தக்காலப் பாட்டு உண்டு. அதுபோல் மாட்டு வண்டியில் வந்து இருந்தால் கூட வந்து இருக்கலாம் போல மாப்பிள்ளை. அலங்கரித்த காரில் வந்தார் வந்தார் வந்தாரே!
மண்டபத்தின் அருகில் இருந்த பிள்ளயார் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு சிறப்பாக நடைபெற்றது.
மணமகன் வரவில்லை என்ற விபரம் எல்லாம் தெரியாமல் மணப்பெண் தன் அறையில் தன் மாமா பெண், அத்தை பெண், தன் பெரியப்பா, சித்தப்பா பெண்கள், அண்ணன், தம்பிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இன்று போல் அன்று மாப்பிள்ளை , பெண் சேர்ந்து அமர்ந்து வரவேற்பு நடக்காது . மாப்பிள்ளை அழைப்பின்போது பெண் ஒளிந்து இருந்துதான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் .
மறுநாள் மணமேடையில் எதிர் எதிராக ஆசனம் போட்டு இருப்பார்கள். அதில் பெண்ணையும் , மாப்பிள்ளையையும் அமர வைத்து இருப்பார்கள். அப்போதுதான் இருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பெண் ஊஞ்சலில் இருப்பாள், அப்போது மணமகன் பார்த்துக் கொள்வார்.
அப்புறம் மோதிரம் மாற்றி, மாலை மாற்றி - பின் தான் திருமணம்.
அந்த மணமக்கள் யார் என்று தெரிந்ததா? தெரியவில்லையா? அவர்கள் நாங்கள் தான். எங்களுக்குத்தான் பிப்ரவரி 7-இல் திருமணம் ஆனது.
மோதிரம் மாற்றல் |
1973ஆம் வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி !
மாப்பிள்ளை அழைப்பு இப்படியாக நடந்தது.
அன்றைய தினம் நடந்த வேறு சில நாட்டுநடப்புகள் - சுதேசமித்திரன் நாளிதழில் இருந்து:- (40 ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்)
(இப்போது சுதேசமித்திரன் வருவதில்லை)
எங்கள் திருமணத்தின்போது தங்கத்தின் விலை என்ன தெரியுமா?
1 கிராம் தங்கத்தின் விலை- ரூ25.25பை
அதாவது ஒரு பவுன் (22 காரட்) =ரூ202
வேறு செய்திகள்:-
மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு
அப்போதும் தமிழகத்தில் மின்வெட்டு.
ஆலைத்தொழிலதிபர்களின் யோசனையைப் படித்துப்பாருங்கள்
அப்போதும் தெலுங்கானாப் போராட்டம்:-
அன்றைய ரேடியோ நிகழ்ச்சிகள்:-
73 கருத்துகள்:
1973 என்பதால் படத்தில் அரசு ஸார் ஓவியத்தில் வீடியோ வரையவில்லை பாருங்கள்! ஆஹா...
பதிலளிநீக்கு
அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்? ஆச்சர்யமாக இருக்கிறது! ரேடியோ நிகழ்ச்சிகள், அன்றும் மின்வெட்டு, தெலுங்கானா பிரச்னை...அடேடே.... வானொலியில் காலை 9.30க்கு உங்கள் விருப்பத்துடன் நிகழ்ச்சிகள் முடிந்து விடும். 11.30 க்கு கல்வி ஒலிபரப்பு, எல்லாம் நிகழ்ச்சி நிரல் பார்த்து நினைவுக்கு வந்தன.
திருமண நாள் வாழ்த்துகள் மேடம், உங்களுக்கும் ஸாருக்கும்!வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு
ஆம், நீங்கள் சொல்வது சரிதான்.அப்போது வீடியோ கிடையாது என்பதால் சார் வரைய வில்லை.
//அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்?//
எங்களுக்கு கல்யாணப்பரிசாக ஒரு சின்ன மேஜை கிடைத்தது. அதன் இழுப்பறையில்(டிரா) ஊரிலிருந்து கொண்டு வந்த பேப்பரை போட்டு அதன் மேல் சாமான்களை அடுக்கி வைத்து இருந்தோம். பழைய பேப்பராய் போய் விட்டது என்று புது பேப்பர் மாற்றலாம் என்னும் போது அதை எடுத்து படித்தோம். நம் திருமண சமயத்தில் உள்ள பேப்பர் இருக்கட்டும். அப்போது உள்ள நாட்டு நடப்புகள் இருக்கிறது என்று பத்திரப்படுத்தி வைத்தார்கள் என் கண்வர். வேறு ஒன்றும் காரணம் இல்லை. இப்போது பதிவு எழுத உபயோகப்பட்டு விட்டது.
இப்போது நீங்கள் எவ்வளவு ஆர்வமாய் படித்தீர்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.திருமண நாள் வாழ்த்துக்கள். அருமையான மலரும் நினைவுகளை எல்லோர் மனமும் மகிழ்வில் ஆச்சரியப்படும் படி படங்களுடன் சிறப்பான தகவல்களை பகிர்ந்து விட்டீர்கள்.
பதிலளிநீக்கு
அன்றைய பத்திரிகை முதல் அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது. அன்றைய உங்கள் திருமண பத்திரிகையும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.திருமண நாள் வாழ்த்துகளும், என் பிரார்த்தனைகளும் அக்கா. ஆரம்பம் முதலே அன்றைய செய்தித்தாளைப் பிரத்தியேகமாச் சேகரித்து வைத்திருக்கும் அருமையான திட்டம் எப்படி வந்தது என்று கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். கேட்குமுன்னே விடையும் கிடைத்துவிட்டது.
பதிலளிநீக்கு
மேஜையில் விரித்திருந்தது 6-ம் தேதி செய்தித்தாளாகவே அமைந்தது தற்செயலென்றாலும் ஆச்சரியப்பட வைக்கிறது.
அப்புறம், 1973-ல் தான் திருமணமா? அப்படின்னா முத்தக்காவுக்கு நாந்தான் அக்கா!! :-)))))அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள். அழகான பதிவு.
பதிலளிநீக்கு
பதிவுக்கான இணைப்புகள் பிரமாதம். ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.16/- மற்றும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள். பார்க்கவும், படிக்கவும் சுவையாக இருந்தது.
இன்னொன்று. வரையும் சித்திரங்களில் கால் விரல்களைப் வரைவது தான் மிகவும் கஷ்டமான காரியம் என்று எங்கோ படித்த ஞாபகம். அரசு சாரிடம் கேட்டுச் சொல்கிறீர்களா?..தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மேடம். இருபத்தொரு வருடங்களுக்கு முன்பு நடந்த எங்கள் திருமண அழைப்பிதழையே பத்திரப் படுத்தி வைக்கத் தோன்றவில்லை எனக்கு. தாங்களும் தங்கள் கணவரும் நாற்பத்தியொரு வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாள்களை பத்திரப் படுத்தி வைத்திருப்பது வியப்பிலும் வியப்பு. மனம் நிறைந்த பாராட்டுகள் இருவருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு
நீங்கள் சொல்வது போல் செய்தித்தாள்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு செயலும் நடப்பதைப் பார்த்தால் ஆச்சிரியங்களும் அற்புதங்களும் வாழ்வில் நிறைய இருக்கும் ஹுஸைனம்மா.
நான் பதிவு எழுதுவேன் அதற்கு உபயோகப்படும் என்று என் கணவர் பத்திரபடுத்தியது போல் உள்ளது.
ஆம் 1973- ல் தான் திருமணம்.
முத்தக்காவிற்கு அக்கா கிடைத்தது மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிராத்தனைகளுக்கும் மிகவும் நன்றி.வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு
எங்கள் திருமண ஆல்பத்தில் முன் பக்கத்தில் தமிழ் பத்திரிக்கை, ஆங்கிலப் பத்திரிக்கை கடைசியில் என்று ஒட்டிக் கொடுத்தார்கள் அப்பா.
அந்த ஆல்பம் அழகாய் தங்க கலரில் குஞ்சலம் தொங்க இருக்கும். படங்கள் உள் பக்கம் கறுப்பு கலர் பேப்பரில் ஒட்டி இருக்கும், டிஸ்யூ பேப்பர் ஒவ்வொரு பக்கத்திலும் படத்தை பாதுகாத்து இருக்கும். அப்புறம் அதை வேறு ஆல்பத்தில் ஒட்டி வைத்தாலும் பழைய் ஆல்பம் தூக்கிப் போட மனம் இல்லாமல் அப்பாவின் நினைவுகளை தாங்கி எங்களுடன் இருக்கிறது.
கல்யாணப் பத்திரிக்கை, தாம்பூலகவர், கல்யாணத்திற்கு வரமுடியாமல் தந்தி அடித்தவர்களுக்கு நன்றி கார்டு அடித்தோம் அதுவும் இருக்கிறது.
அதில் கையெழுத்து போட சொன்ன போது ஏற்பட்ட ஒரு வேடிக்கையை நினைவு வைத்துக் கொள்ள இருக்கிறது.
திருமணம் ஆனபின் கணவரின் இன்ஷியல் போடாமல் அப்பாவின் இன்ஷியலைப்போட்டு அது அனுப்ப முடியாமல் என்னிடம் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.மணமகன் அரசு அவர்களும், மணமகள் கோமதி அவர்களும் விரைவில்(இன்னும் 8,9ஆண்டுகளில்) காணவிருக்கும் பொன்விழாவிற்கும், தொடர்ந்து பவளவிழா, நூற்றாண்டுவிழாக்களுக்கும் இப்போதே என் வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முந்திய வரலாற்றுக் குறிப்புகளை விகடனும், தந்தியும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். அதைப் படித்தது போல இருந்தது உங்கள் திருமணம் பற்றிய பதிவு. வாழ்த்துகளுடன் வணக்கம்.
பதிலளிநீக்குதாமதமான திருமண நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
//இன்று போல் அன்று மாப்பிள்ளை , பெண் சேர்ந்து அமர்ந்து வரவேற்பு நடக்காது . மாப்பிள்ளை அழைப்பின்போது பெண் ஒளிந்து இருந்துதான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் .//
மதுரைப்பக்கம் நிச்சயத்தின் போதே பெண், மாப்பிள்ளையைச் சேர்த்து உட்கார வைப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் வழக்கம் இல்லை. என் கல்யாணத்தில் அதுக்கு ஒரு சின்ன வாதவிவாதம் நடந்து கொண்டிருக்கையிலேயே சுற்றி உள்ள சிலர் சேர்த்து அமர வைத்துவிட்டனர். :)))))வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு
திருநெல்வேலி பக்கம் பாளையங்கோட்டை எங்கள் ஊர்.. . எங்கள் வீடுகளில் முன்புதான் மாப்பிள்ளை ,பெண்ணை சேர்ந்து உட்கார வைக்கும் பழக்கம் இல்லை.
இப்போது நிச்சியத்திற்கு மாப்பிள்ளை வருகிறார், புடவை எடுத்துக் கொடுக்கிறார், இருவரையும் சேர்த்து உட்காரவைத்து ஆசிர்வாதம் செய்கிறார்கள். காலம் மாறி விட்டது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.