மணிப்புறா
புல் புல் பறவைகள்
செண்பகப் பறவை
செண்பகப் பறவை
பெண்குயில்
பெண்குயில்
மணிப்புறா
கருங்குயில்
பெண்குயில்
கருங்குயில்
காகம்
கருங்குயில்கள்
பெண்குயில்
மணிப்புறா
வளைத்து வேப்பழத்தை தின்ன முயல்கிறது
உண்டு களித்து பறக்க தயார்
வேப்பழத்தை தின்று இனிமையாகபிங் பிங் என்று பாட தயார்.
சிறு வயதில் வாரம் ஒருமுறை வேப்பம் கொழுந்து அரைத்து அம்மா ஒரு சின்ன
உருண்டையாகக் கொடுத்து எங்களை விழுங்கச் சொல்வார்கள்.(அதிகாலையில் வெறும்
வயிற்றில்) அப்போது கசப்பு பிடிக்காது . முகத்தை சுளித்து வேண்டாம் என்று அழுது
அடம் செய்து இருக்கிறேன். அதன் நன்மைகள் தெரிந்து என் குழந்தைகளுக்கு கொடுக்கும்
போது அவர்கள் வேண்டாம் என்று மறுத்தபோது வேப்பம்கொழுந்தின் மகிமைகளைச்
சொல்லிஅவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
அதுபோல் இந்தப் பறவைகளுக்கும் தெரிந்து இருக்கிறது. அதிகாலையில் வேப்பமரத்தில்
வந்து அமர்ந்து வேப்பம் பழங்களை வளைத்து வளைத்து 6மணியிலிருந்து 7மணி வரை
சாப்பிடுகிறது, அனைத்து பறவைகளும். (புல் புல், கருங்குயில், புறா, செண்பகப்பறவை,
பெண்குயில், காகம்.) எங்கள் ஊருக்குச்சென்று இருந்த போது என் வீட்டு ஜன்னல்
வழியாக தெரியும் வேப்பமரத்தில் அமர்ந்த பறவைகளை எடுத்தவை.
வேப்பம் காற்று உடலுக்கு நன்மை அளித்து பலநோய்களைக் குணமாக்கிறது.. வேப்பம்
மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் உடையது. உடல்
ஆரோக்கியத்திற்கு வேப்ப மரம் மருந்தாகிறது. வேப்பமரக்காற்று உடலுக்கு நல்லது
என்று கிராமப்புறங்களில் மரத்தின் அடியில் கட்டிலைப்போட்டுப் படுப்பார்கள்.
குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் படுக்கவைத்து விட்டுப் பெண்கள்
வயல்வெளியில் வேலைபார்ப்பார்கள்.
பூச்சிக் கடி, மற்றும் மனநோய்க்கு வேப்பிலை அடித்தலும் உண்டு. வேப்பிலையால் வீசி
வீசி மந்திரிப்பார்கள். அந்தக் காற்றுஉடலுக்குள் சென்று நரம்புத் தளர்ச்சியை
குணமடைய செய்யுமாம்.
வேப்ப மரத்தை வீட்டின் முன் வளர்த்துத் தெய்வமாய் வணங்குகிறார்கள் சிலர்.
வாழ்க வளமுடன்
===========================