ஜுலை 5ம் தேதி(5/7/2014) நாங்கள் காட்டுமன்னார்குடியில் இருக்கும் வீரநாராயணப்பெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலமென்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற விருது பேர்பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது.
காட்டுமன்னர்கோவில் அருகில் வீராணம் ஏரி இருக்கிறது.
முன்பு இது வீரநாராயண ஏரி என்று குறிப்பிடப்பட்டது. சரித்திரப் புகழ்பெற்ற நாவல் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்’ நாவலில் இந்த ஏரி குறிப்பிடப்படும். ஆடி, ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியில் நீர் நிரம்பி ததும்பி இருக்கும் என்று இந்த ஏரியைப்பற்றி அதில் வரும்.
//ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறி பிரயாணம் செய்து கொண்டிருந்தான்//
என்று வரும். இந்த கதையைப் படித்தவர்கள் அந்தவாலிப வீரர் பேரை சொல்லுங்களேன் !
நாங்கள் வீரநாராயணப் பெருமாள் கோவில் போனபோது , ஆனி மாத 10 நாள் திருவிழா கோவிலில் நடந்து கொண்டு இருந்தது.
இந்தக்கோயிலில்,
பெருமாள் பெயர்-வீரநாராயணப்பெருமாள்,
உற்சவர்- ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.
தாயார் - மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.
தீர்த்தம்- வேதபுஷ்கரணி, காவேரி நதி
தலவிருட்சம்- நந்தியாவட்டை.
கோவில் விஷேசம்:-
(ஸ்ரீமதநாதமுனிகள் திருவரசு என்று நாதமுனிகளைப்பற்றியும் , அவர் பேரர் ஸ்ரீ ஆளவந்தார் பற்றியும் எழுதி இருக்கிறேன் முன்பு.)
”லக்ஷ்மி நாத சமாரம்பாம்” என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்
நாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு அபிஷேக ஆராதனை விழா நடந்து கொண்டு இருந்தது. திவ்யபிரபந்தம் பாடி முடிந்தவுடன் பூஜை ஆனது. பின் தயிர்சாதம் பிரசாதமாய் கொடுத்தார்கள்.
அதன்பின்தான் பூட்டி இருந்த வீரநாராயணப் பெருமாள் சந்நதியைத் திறந்து காட்டினார்கள். ”பூஜை பார்த்துவிட்டு போகிறீர்களா? அல்லது ஆரத்தி மட்டும் போதுமா” என்று பட்டர் கேட்டார்கள். நாங்கள் அடுத்து திருநாரையூர் போக வேண்டி இருந்ததால் ஆரத்தி. சடாரி, தீர்த்தம், துளசி பெற்றுக்கொண்டோம்.
பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். அவரையும் தரிசித்து வந்தோம்.
பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். அவரையும் தரிசித்து வந்தோம்.
முதலில் அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி.
அனுமன், எதிரில்இருக்கும் பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்.
இறைநம்பிக்கை எனும் துடுப்பைக் கொண்டு வாழ்க்கைப் படகை நடத்திச் செல்லலாம் என்று உணர்த்தும் வண்ணம் காட்சி அளிக்கிறது -தெப்பக்குளத்தில் உள்ள படகு.
தாரகம் என்றால் கடத்துவிப்பது, படகிலே வைத்து ஓட்டிக் கொண்டு போய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம்.ப்ரணவத்தையும், ராமநாமாவையும் தாரகமந்திரம் என்று சொல்வது வழக்கம். “தாரகநாமா” என்று தியாகராஜர்கூட ராமசந்திர மூர்த்தியை தாபத்தோடு பாடியிருக்கிறார்.ஸம்சாரக்கடலில் விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிற நம்மைப் படகிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் தாரக மந்திரம்.
அருள்வாக்கு:-
----ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.
10 நாள் திருவிழாவில் ஒருநாள் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு
பெருமாள் கோபுர தரிசனம்
கொடிமரமும் கருடாழ்வார் சன்னதியும்
பெருமாள் சன்னதி விமானம்
கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர் , எதிரில் ராமர் சன்னதி உள்ளது.
ஸ்ரீ விஷ்ணு பாதம்
பெருமாளும் ஸ்ரீமதங்க மகரிஷியும் , பின்புறம் பெருமாளும், ஆண்டாளும்
ஆண்டாள் சன்னதி விமானம்
ஸ்ரீஆண்டாள்அருளிசெய்த திருப்பாவை- ஆண்டாள் சன்னதியில்
ஸ்ரீ மதங்கமகரிஷி நேர் எதிரே அழகிய தூண்களுட்ன் கூடிய தீர்த்தக்கிணறு
தாயார் சன்னதி
தாயார் சன்னதியில் நல்ல கருத்து உள்ள வாசகம்
தாயார் சன்னதி விமானம்
, முன் மண்டபம் அபிஷேக மண்டபம். பின்புறம் ஸ்ரீ ஆளவந்தார் சன்னதி
ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி விமானம்
நைவேத்தியத்துக்கு நித்தியபடி கட்டளைக்காரர் பற்றிய குறிப்புள்ள கல்வெட்டு
பின்வரும் படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ’தரிசனம் காணவாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் காட்டுமன்னார்குடி பற்றி வைத்தபோது டிவியிலிருந்து எடுத்த படங்கள், இந்த பதிவில் பகிரலாம் என்று எடுக்கப்பட்டது, நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு.
ஸ்ரீராஜகோபாலன்
ஸ்ரீராஜகோபாலன் மஹாலக்ஷ்மி, மரகதவல்லி
ஸ்ரீமத் நாதமுனிகள், ஆளவந்தார்
அலங்கார தோற்றம்
அலங்கார பூஜை நாதமுனிகளுக்கும், ஆளவந்தாருக்கும்
அலங்காரத்தில் சுந்தரகோபாலனாகக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
வாழ்க வளமுடன்.
---------------------------------