ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பிறந்தநாள்! இன்று பிறந்த நாள்!

பேரன் அழைப்பது போல் மருமகள் செய்த கேக்  ஏ.டி தாத்தா என்று தான் அழைப்பான்.

பிறந்தநாள் அடிக்கடி கொண்டாடுவான் பிறந்தநாள் விழாவிற்கு மேஜை ரெடி


விளையாட்டு சாமான் தொப்பி அணிந்து இருக்கிறான். விளையாட்டு சாமானில் செய்த கேக்கை  அப்பாவை  சரி பார்க்கச் சொல்கிறான்  . 

முன்பு மகன் வீடு போன போது கொண்டாடிய பிறந்த நாள் விழா.
இன்று என் கணவருக்கு வயது 70 .

போன வருடம் பிறந்தநாளுக்கு (69 க்கு)  கோவை போனோம் , அத்தைஅவர்கள் வரச்சொல்லி இருந்தார்கள். வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் அபிஷேகத்திற்கு கொடுத்தார்கள் அத்தை. அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தோம். கணவரின் உடன்பிறந்தவர்களின் ஆசிகள், அத்தை அவர்களின் ஆசிகளுடன் பிறந்தாள் இனிதானது.

இந்த வருடம்  'தான் இருக்க மாட்டோம்' என்று முன்பே மனதில் தோன்றியதோ என்னவோ சென்ற ஆண்டே அழைத்து ஆசீர்வாதம் செய்து விட்டார்கள்.

அத்தை அவர்கள் இறைவனடி சென்று ஒரு வருடம் ஆகவில்லை ,  அத்தை, மாமாவிடம் மானசீகமாக ஆசி பெற்று    மீனாட்சி அம்மனைத் தரிசனம் செய்து வந்தோம்.
குழந்தைகள் ஸ்கைப்பில் பேசி வாழ்த்தினார்கள். உறவினர்களும்  போனில் வாழ்த்தினார்கள்.

அதிகாலையில் கோயிலுக்குப் போய் விட்டதால் கூட்டம் இல்லை. மீனாட்சிக்கு  அலங்கார பூஜை பார்த்தோம். ஸ்வாமிக்கு அபிஷேகம் பார்த்தோம்.
பின் ஆண்டாள் புரத்தில் உள்ள ஷீரடிசாய் பாபா கோவில் போனோம். அங்கு இன்று வருஷாபிஷேகச் சிறப்பு பூஜை பார்த்து வந்தோம். மனம் குறை நீங்கி நிறைவானது.

                                                 வாழ்க வளமுடன்.

33 கருத்துகள்:

 1. உங்கள் கணவருக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத்தெரிவியுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
   உங்கள் வாழ்த்துக்களை சொன்னேன்.
   உங்கள் வாழ்த்துக்கு மகிழ்ந்து நன்றி சொன்னார்கள்.

   நீக்கு
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வணக்கம்! கேக் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளாமுடன்.
   உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி .

   நீக்கு
 3. ஐயாவிற்கு எங்கள் வாழ்த்துகளும் மா....

  இன்று போல் என்றும் இனிதாக அமைந்திட எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி .
   சார் உங்களுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவிக்க சொன்னார்கள்.

   நீக்கு
 4. ஸாருக்கும் உங்களுக்கும் நமஸ்காரங்கள்.

  ஸாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   சார், உங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

   நீக்கு
  2. உடல்நலக் குறைவை பொருட்படுத்தாமல் சாரை வாழ்த்த வந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ஸாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்றைய தினம் சிறப்பாக அமைந்ததை அறிந்து மகிழ்ச்சி. படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   ஆமாம், இறைவன் அருளால் இன்றைய தினம் இறைவழிபாட்டுடன் சிறப்பாக அமைந்தது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   உங்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   சார்
   உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  படங்கள் அனைத்தும் மிக அருமை. தங்கள் பேரனுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  தங்கள் அன்பு பேரனின் பாச மழையில் நனையும் பேறு பெற்ற உங்கள் இருவருக்கும் என் அன்பான மனம் நிறைந்த சந்தோஷங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தங்கள் கணவரை வாழ்த்த எனக்கு வயதில்லையாததால்,என் நமஸ்காரங்கள். இன்று போல் என்றும் நீங்கள் வாழ மன மகிழ்வுடன் இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்றைய தினம் மீனாட்சி அம்மனையும், சாய்பாபாவையும் தாங்கள் தரிசித்து வந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

   பேரனுக்கும் வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
   உங்கள் அருமையான கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.


   சார் உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

   நீக்கு
 8. வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
   சார் உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

   நீக்கு
 9. மாமாவுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அவர் நல்ல ஆயுளோடும் நலமோடும் சுகமோடும், உங்கள் அரவணைப்போடும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்ம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   மாமா உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
   நானும் நன்றி சொல்லிக்கிறேன் அழகான வாழ்த்துக்கு அதிரா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம் சகோ ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
   உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.சார்.

   நீக்கு
 11. Sir க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன். கவிகுட்டியின் குதூகலத்திற்கு ஈடுயிணையில்லை, மருமகளின் கேக் அழகு.
  நீங்கள் இருவரும் ஊஞ்சலில் இருக்கும் படம் அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
   உங்கள் வாழ்த்து அருமை.
   அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.சார்.

   நீக்கு
 12. அன்பு கோமதி. உங்கள் சாருக்கு எங்கள் வாழ்த்துகள். அடுத்த பிறந்த நாளை இன்னும் சிறப்பாகக் கொண்டாடணும். படங்கள் அத்தனையும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு வல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
   உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.
   சார் நன்றி சொல்ல சொன்னார்கள்.
   உங்கள் எண்ணம் பலிக்கட்டும்.
   இறைவன் அருள்புரியட்டும்.

   நீக்கு
 13. சிவஸ்ரீ ஐயா அவர்களுக்கும்
  அவர்தம் இல்லத்தரசியாகிய தங்களுக்கும் எளியேனின் பணிவான வணக்கங்கள்...

  ஆண்டுகள் பலநூறு
  ஆயுள் ஆரோக்கியம்
  சுற்றம் சூழல் எனும்
  ஐஸ்வர்யங்களுடன் வாழ்ந்திட
  எல்லாம் வல்ல ஸ்ரீஅபிராமவல்லி உடனாகிய அமிர்தகடேஸ்வரரை வேண்டுகின்றேன்..

  வாழ்க பல்லாண்டு.. வாழ்க.. வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி திருக்கடையூர் போவோம்.

   //எல்லாம் வல்ல ஸ்ரீஅபிராமவல்லி உடனாகிய அமிர்தகடேஸ்வரரை வேண்டுகின்றேன்..//
   உங்கள் வாழ்த்து அங்கு போய்வந்த மனநிறைவை தருகிறது.

   உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் சார்.

   எங்கள் வாழ்த்து எப்போதும் உண்டு உங்களுக்கு.
   வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி.


   நீக்கு
 14. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு தன் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 15. சார் க்கு எனது வணக்கங்களும் மா.

  என்றும் இறை அருள் துணை இருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
   சாரின் வாழ்த்துக்களும், நன்றியும்.
   என்றும் இறை அருளால் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
   அருமையான கருத்து.

   நீக்கு
 16. ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா..என்றும் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது வணக்கங்கள் உங்கள் இருவருக்கும் மா.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
  பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு