வியாழன், 24 அக்டோபர், 2024

மகிழ்ச்சியைத் தரும் நவராத்திரி பண்டிகை



இதற்கு முன் போட்ட பதிவு  நவராத்திரி கொலுவும் பேரனின் பக்தபிரகலாதா நாடகமும்  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

இங்கு (அரிசோனாவில்) மகனின் நண்பர்கள் வீட்டில் வைத்த கொலுவுக்கு நாங்கள் போய் வந்தோம், அந்த படங்கள்  பதிவில்  இடம்பெறுகிறது.

சனி, 19 அக்டோபர், 2024

நவராத்திரி கொலுவும், பேரனின் பக்தபிரகலாதா நாடகமும்

மீனாட்சி கல்யாணம் போல அமைப்பு கொலுப்படிகள் இந்த முறை. 

அரிசோனாவில் மகன்  வீட்டு கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

புதன், 16 அக்டோபர், 2024

புத்தம் புது காலை பொன்னிற வேளை



காலை எழுந்தவுடன் சூரிய வணக்கம்  செய்வது நல்லது.

எனக்கு காலை நேரம் சூரியன் உதிப்பதை பார்ப்பது பிடிக்கும், அதில் ஆனந்தம் கிடைக்கும். இங்கு மகன் வீட்டுத்தோட்டத்திலிருந்து காலையில் மலைகளுக்கு இடையே சூரியன் எழுவது பார்க்க அழகாய் இருக்கும், அப்போது வானத்தின் அழகு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நான் பார்த்து ரசித்த சூரிய உதயத்தை   இங்கு  உங்கள் பார்வைக்கு இந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

காலை நேர முழுநிலவும் பறக்கும் பலூனும்



காலை நேரம் பேரன் பள்ளிக்கு போகும் போது வழி அனுப்ப முன் வாசலுக்கு வந்த போது  பார்த்த காட்சிகள்.

அதிகாலை வேளையில் காலநிலை நன்றாக இருப்பதால் சில நாட்களாய்  வானில் பலூன்கள் பறக்கிறது. நானும் அதைப்பார்க்கும் போது குழந்தையாகி போய்விடுவேன். எனக்கு பலூன் பறப்பதை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

முன் வாசல் எதிரே  காலை முழு நிலவு பக்கம் போன பலூன் படங்கள், மற்றும் பின்னால்  தோட்டத்துப்பக்கம்  வீட்டுக்கு அருகில் போன பலூன்கள் படங்கள்   இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வியாழன், 19 செப்டம்பர், 2024

நேற்று வந்த நிலா, இன்று வந்த நிலா


அரிசோனாவில் செவ்வாய்க்கிழமை  சந்திரகிரகணம் அன்று   இரவு 7 மணிக்கு எடுத்த   எடுத்த நிலவு படங்கள். புதன் கிழமை  காலை, மாலை எடுத்த நிலவு படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. 

சனி, 14 செப்டம்பர், 2024

Wupatki National Monument (வுபட்கி தேசிய நினைவுச் சின்னம்)

 

வுபட்கி தேசிய நினைவுச் சின்னம் . இது வட -மத்திய அரிசோனாவில் கொடிக்கம்பத்திற்கு(Flagstaff) அருகில் அமைந்துள்ளது.

ஹோப்பி மக்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீடு.  பழங்காலத்தில் எப்படி வீடுகளை கட்டி வாழ்ந்தார்கள் என்பதற்கு  அடையாளமாக எஞ்சி இருக்கும் பகுதிக்கு  சென்று இருந்தோம். அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில்.

இதற்கு முந்திய பதிவாக சன்செட் க்ரேட்டர் எரிமலை  தேசிய நினைவு சின்னம் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை -1

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை - 2

அடுத்த போன இடம் பழங்குடியினர்  வாழ்ந்த இல்லம். பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன். 

வியாழன், 5 செப்டம்பர், 2024

கற்பக விநாயகா போற்றி ! கருணை கடலே போற்றி!



இந்த முறை மகா கண்பதி கோவிலுக்கு மகன்  செய்து கொடுத்த பிள்ளையாருடன் பேரன் இருக்கிறான்.


"மகா கணபதி ஆலயம் "அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவிலில்  வருடா வருடம்  பிள்ளையார் சதுர்த்தி   விழா சிறப்பாக நடக்கும்.
பிள்ளையார் சதுர்த்திக்கு சில தினங்களுக்கு முன் குழந்தைகள் களிமண்ணால் தங்கள் கைகளால்  பிள்ளையார் செய்வார்கள். அதற்கு விளம்பர பலகைகள் மகன் செய்து தருவான். பல இடங்களில் இந்த கோவிலின் சார்பாக நடைபெறும்.    இந்த முறை 24  இடங்களில் நடைபெறுகிறது. அதற்கு 6 பிள்ளையார்கள்  செய்து கொடுத்து இருக்கிறான் மகன்.
தாங்கள் செய்த பிள்ளையாரை வைத்து பிள்ளையார் சதுர்த்திக்கு பூஜை செய்வது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி.

உங்கள் அனைவருக்கும் "பிள்ளையார் சதுர்த்தி" வாழ்த்துகள்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை (Sunset Crater volcano ) தேசிய பூங்கா நிறைவு பகுதி





இந்த இடம் கொகோனினோ கவுண்டி என்று அழைக்கப்படும்  அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃபிற்கு வடக்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ளது இந்த  பூங்கா.

1000 வருடங்களுக்கு முன்   எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள். ஜூலை மாதம் மகன்  அழைத்து போனான். 

முதல் பதிவு  படிக்கவில்லைஎன்றால் படிக்கலாம்.
இந்த   பதிவு நிறைவு பகுதி.

புதன், 21 ஆகஸ்ட், 2024

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை (Sunset Crater volcano ) தேசிய பூங்கா


 சூரிய அஸ்தமன பள்ளம்  எரிமலை பார்வையாளர் மையம்


இந்த இடம் கொகோனினோ கவுண்டி என்று அழைக்கப்படும்  அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃபிற்கு வடக்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ளது இந்த  பூங்கா.

1000 வருடங்களுக்கு முன்   எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள். ஜூலை மாதம் மகன்  அழைத்து போனான்.
அங்கு எடுக்கப்பட்ட படங்களும், இணையம் மூலம் அறிந்து கொண்ட செய்திகளும் இடம் பெறுகிறது இந்த பதிவில்.

புதன், 7 ஆகஸ்ட், 2024

பூங்காவில் நடைபயிற்சியும், வளர்ப்பு செல்லங்களும்

ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அரிசோனாவிற்கு அருகில் இருக்கும்    ஃ பிளாக்ஸ்டாப்  என்ற இடத்தில் அமைந்துள்ள   "எருமை பூங்காவிற்கு" அழைத்து சென்றான் மகன். 

முன்பு போட்ட Buffalo Park Flagstaff, 

இந்த பதிவில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அவர்கள் அன்பாக வளர்க்கு தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் நடைபயிற்சி செய்தார்கள், செல்லங்களுடன் ஓடினார்கள். செல்ல பிராணியாக    நாய் தான் அனைவராலும் விருப்பமாக வளர்க்கப்படுகிறது.

அவை இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

Buffalo Park Flagstaff

எருமையின்  வெண்கல சிற்பம்


ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அரிசோனாவிற்கு அருகில் இருக்கும்    ஃ பிளாக்ஸ்டாப்  என்ற இடத்தில் அமைந்துள்ள   "எருமை பூங்காவிற்கு" அழைத்து சென்றான் மகன்.  சான் பிரான்சிஸ்கோ சிகரம் என்று அழைக்கப்படும் மிக அழகான மலைச்சிகரம் பின் புலத்தில் தெரியும்  அழகான  பெரிய பூங்கா. அரிசோனாவிலிருந்து 120 மைல் தூரத்தில் உள்ளது . வேறு சில இடங்களும் பார்த்து விட்டு ஞாயிறு மாலை வீடு வந்து சேர்ந்தோம். இந்த பதிவில் பூங்கா இடம் பெறுகிறது.

திங்கள், 22 ஜூலை, 2024

குரு பூர்ணிமாவும்,குரு வணக்கமும்


முழு நிலவு 


சனிக்கிழமை  குரு பூர்ணிமாவுக்கு முந்தின நாள் அரிசோனாவில் இருக்கும் சாய் கோவில் போய் இருந்தோம். 
அங்கு நடந்த நிகழ்வுகள் படங்கள், மற்றும் குருமார்களை பற்றிய செய்திகளும்  இந்த பதிவில் இடம் பெறுகிறது.

திங்கள், 15 ஜூலை, 2024

மெக்சிகோ கடைவீதியும் மந்திர பீன்சும்

 

மெக்சிகோ கடை வீதி


மே 31 ஆம்  தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.






இதற்கு முந்திய பதிவுகள்.

இந்த பதிவில் மெக்சிகோ கடைத்தெரு படங்கள் இடம் பெறுகிறது.

திங்கள், 8 ஜூலை, 2024

மெக்சிகோவில் உள்ள சாண்டோ ஒயின் ஆலை



1888  ம்ஆண்டு  இந்த ஓயின் ஆலை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது
கட்டிடம் படரும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது


மே 31 ஆம்  தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.

கப்பல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இங்கு இடம்பெறுகிறது.  மெக்சிகோவில் சில இடங்களை பார்த்தோம்  அவை இந்த பதிவில்.

எங்கள் வழிகாட்டி இசாபெல் "சாண்டோ தாமஸ் "என்கிற  பழமையான  ஓயின் ஆலைக்கு அழைத்து சென்றார் 

திங்கள், 1 ஜூலை, 2024

மெக்சிகோ வரலாற்று சிறப்பு மிக்க ஹோட்டல் ரிவியரா டெல் பசிஃபிகோ




எங்கள் கப்பலும் இன்னொரு கப்பலும்  நிற்கிறது.      பஸ்ஸில் போகும் போது பார்த்து எடுத்த படம்.


மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.

கப்பல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இங்கு இடம்பெறுகிறது. இந்த பதிவில் மெக்சிகோவில் சில இடங்களை பார்த்தோம்  அவை இந்த பதிவில்.



இதற்கு முந்திய பதிவுகள்.

வியாழன், 27 ஜூன், 2024

திருமதி பக்கங்கள் வலைத்தளத்திற்கு ஜூன் மாதம் பிறந்த நாள்.

நான் 2009   ஜூன் மாதம் 1 ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்த நாள். இன்று எங்கள்பளாக்கில்  கீதா ரெங்கன் 

//ஹப்பா எபிக்கு வயசு 16!!! எண்ணிரண்டு பதினாறு வயது!

கீதா//

 அப்போதுதான் எனக்கும் நினைவு  வந்தது நான் ஆரம்பித்ததும்  2009 ஜூன் மாதம் தானே என்று.

மார்கழி மாதம்  என்பதால் கிளிக்கோலம் போட்டு பதிவை  ஆரம்பித்தேன்.  பூ பூக்கும் மாதம் தை மாதம் என்பது போல வலைத்தளத்தில் பூக்களும் கிளிக்கு பிடித்த கோவைகனிகளும்  கோலம் போட்டு இருக்கிறேன்.

கோவை என்றால் தொகுப்பு என்று சொல்வது போல வலைத்தளம் ஆரம்பித்த கதையை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

ஜனவரி மாதம் 2 ம் தேதி  2012 ம் வருடம்  வலைச்சரத்தில்  ஆசிரியர் பொறுப்பு ஏற்க கேட்டு கொண்டார்கள். அப்போது என்னைப்பற்றி எழுதியதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

வலைத்தளம் ஆரம்பித்த வரலாறு. வரலாறு முக்கியம் இல்லையா? 

----------------------------------------------------------------------------------------------------

வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்,   புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த புது வருடம் எல்லோருக்கும், எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் தரட்டும்.

என்னை வலைச்சர ஆசிரியராக இந்த வாரம் அழைத்து இருக்கும் திரு. சீனா அவர்களுக்கும், அவரிடம் என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.

என்னைப் பற்றி:

என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. நான் பிறந்தது திருவனந்தபுரம். என் அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும் உத்யோகம், அதனால் அப்பா, அம்மா செட்டில் ஆனது மதுரை. 

பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பாதியில் திருமணம். என் கணவர் கல்லூரிப் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இப்போது வேறு ஒரு கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளாராய் இருக்கிறார்கள். நான் திருமணத்திற்குப் பின் பள்ளிப் படிப்பை முடித்து, B.A பொருளாதாரம் படித்தேன், அதுவும் ஒரு வருடப்படிப்புடன் நின்று விட்டது.

 காலையில் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் கல்லூரிக்கும் சென்றவுடன் ஆங்கிலத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சு, (ஆங்கில, தமிழ் தட்டச்சு ஒரே நேரத்தில் படித்தேன்) தையல், என்று போனேன். 

காலையில் நான் போகும்போது வழியில் பார்க்கும்  பள்ளி பிள்ளைகள் ’குட் மார்னிங் டீச்சர்’ என்பார்கள் . என்னைப் பார்த்தால் டீச்சர் போல் தோன்றி இருக்கிறது.(கையில் குடை, ஆர்கண்டி வாயில் சேலை, கண்ணாடி)

 குழந்தைகள் மனதில் பட்டது பலித்து விட்டது. நான் ஆசிரியர் ஆகிவிட்டேன். எப்படி என்று கேட்கிறீர்களா? உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா , தியானம், முத்திரைகள் படித்து அதில் ஆசிரியர் பயிற்சி, பொறுப்பாசிரியர் பயிற்சி எல்லாம் எடுத்தேன்.

கடமைகள் முடிந்து விட்டன நினைத்த எனக்கு இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது.  


விடுமுறைக்கு வந்த என் மகள் அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.

அவளும் வலையில் எழுதுபவள் தான் சிறுமுயற்சி வைத்து இருக்கும் முத்துலெட்சுமி.  

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 ஜூன்  1 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்று கிளிக்கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கையதன்  சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//

இப்படி வலைச்சரத்தில் என்னைப்பற்றி சொல்லி இருப்பேன்.


வலைஉலகம் பெரிய கடல் அதில் துளிதான் நான் கற்றுக் கொண்டது. தினம் அதில் கற்க வேண்டியது நிறைய உள்ளது.”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்! எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள்.

அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை ,அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது. 

பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். வாழ்க்கையில் நம்மாலும் எழுத முடியும் என்ற நினைப்பே மனதுக்கு உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பத்திரிக்கைகளும் நம்மை வரவேற்கின்றன. 

என்னுடைய மார்கழிக் கோலங்கள் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்றது, போன மார்கழியில். தேவதையில் ’குருந்தமலை குமரன்’ என்ற என் ஆன்மிகப் பதிவும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ 

என்ற பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும், ’எண்ணம் முழுதும் கண்ணன் தானே’ என்று என் பேரனைப் ப்ற்றி எழுதிய பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும் வெளி வந்தன. நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சீனா சாரிடம், வை .கோ சாரிடம் என் மகளை பற்றி அப்போது சொல்லவில்லை.  கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டம் பார்த்து தெரிந்து கொண்டு  பின்னூட்டத்தில் கேள்வி கேட்டார்.

//வருக வருக கோமதி அரசு - அருமையான அறிமுகம். முத்து லெட்சுமி தங்கள் மகளா .... அவர் வலைச்சர நிர்வாகத்தில் இருக்கிறார் ... தெரியுமா தெரியாதா .... மகளின் நிர்வாகத்தில் இருக்கும் வலைச்சரத்தில் தாயார் ஆசிரியப் பொறுப்பேற்பது இருவருக்கும் பெருமை தான்.//


சீனா சாரை மகளுடன் மதுரையில் பதிவர் சந்திப்பின் போது சொன்னோம். வலைச்சரத்தில் எழுதிய போது சொல்லவே இல்லை நீங்கள் என்று கோபித்து கொண்டார் செல்லமாக. 

சீனா சாருக்கு முன் வலைச்சர பொறுப்பாசிரியராக இருந்தாள். 

முந்தைய பொறுப்பாசிரியர்கள் கயல்விழிமுத்துலெட்சுமி, பொன்ஸ் என்று போட்டு இருக்கும் வலைச்சரத்தில் பார்த்து இருப்பீர்கள். 

மூன்றோ, அல்லது நான்கு முறையோ ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நிறைய பதிவர்களின் பதிவை படித்து அதை அறிமுக படுத்தினேன். மனதுக்கு மகிழ்ச்சி அளித்த பணி.

வலைச்சரத்தில் ஜூன் மாதம் மறந்து போய் மே 31 என்று எழுதி இருப்பேன். 

பின்னூட்டங்களை படித்து பாருங்கள் நன்றாக இருக்கும்.
எழுதுவதற்கு மனது அலுப்பு பட்டால் இந்த பதிவை படிப்பேன்,நட்புகள் தந்த பின்னூட்டங்களால் மீண்டும் புத்துணர்வு கிடைக்கும் .  நம்மாலும் எழுத முடிகிறது, நம் எழுத்தை படித்து பார்த்து , கருத்து சொல்லி நட்பு பாராட்டும் உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சி தரும் தானே! பின்னூட்டம் இட்டவர்களை விட  ஒவ்வொரு பதிவையும் படித்தவர்கள் எண்ணிக்கையை பார்க்கும் போது மனது மகிழ்ச்சியில் துள்ளும்.


அந்த காலம் மிகவும் இனிமையானது, நிறைய படித்தோம், நிறைய எழுதினோம், நட்புகள் நிறைய கிடைத்தது.  இப்போது  ஒரு சில பதிவர்கள் பதிவுகள் தான் படிக்க முடிகிறது, பின் தொடர முடிகிறது. மற்ற வலைபதிவுகளை  காட்டவும் மாட்டேன் என்கிறது.  நம் நட்புகள் பின் தொடரும் பதிவுகள் என்று தங்கள் வலைத்தளத்தில் வைத்து இருப்பதை வைத்து   ஒரு சிலரை படிக்க முடிகிறது.

நான்  தொடர்ந்து எழுத  உங்கள் பின்னூட்டங்கள் தான் காரணம்.  உற்சாக பின்னூட்டங்கள் ஊக்கம் தருகிறது எழுத.   என்றும் உங்கள் பின்னூட்டகளை விரும்பும் கோமதி அரசு.

கிளி பறவையை போட்டு பதிவு ஆரம்பித்தவள் , பறவைகளை விரும்புகிறவள்  இந்த   வலைத்தள பிரந்த நாளில்   பறவை போடாவிட்டால் எப்படி அதனால் கோடையில் தண்ணீர் உணவை தேடி குடும்பத்தோடு வந்த காடை பறவைகள் படம்  இதில் இடம்பெறுகிறது.



தண்ணீரை குடித்து தண்ணீரில்   அமர்ந்து இருக்கிறது

சிட்டுக் குருவி

காடை குடும்பத்தோடு ஒரு மணிப்புறாவும் நட்போடு அமர்ந்து இருக்கிறது.

நாங்கள்  போனதை பார்த்தவுடன் மீண்டும் கீழே படையெடுப்பு


கண்ணாடி கதவு வழியாக அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும் படம். சிறு அசைவு தெரிந்தாலும் பறந்து போய் மதில் மேல் அமர்ந்து கொள்ளும்.


 
மேலே தொங்க விட்டு இருக்கும் உணவு பாத்திரத்திலிருந்து புறா, குருவி கொத்தி சிதறி கிடக்கும் தானியங்களை  இந்த காடை குஞ்சுகள்  தின்ன வருகிறது. கோடை வந்து விட்டது என்று தொட்டிகளில் கீழே எல்லாம் விதைகள் போட்டார்கள்.


அத்தனை விதைகளையும் கொத்தி தின்று விட்டு அதில் பள்ளம் பறித்து குழுமைக்கு அமர்ந்து கொள்கிறது. 




பள்ளத்தில் படுத்து குளிர்ச்சியில்   சுகமாய்   கண்  மூடி தூக்கம்

மாதுளைச்செடி, முருங்கை மரம்  கீழே பள்ளமாக இருக்கும் நிறைய தண்ணீர் மாலையில் விட்டது இருக்கும், அதில் மதிய நேரம் வந்து அமர்ந்து கொள்கிறது.



காடை பறவைகள் குடும்பமாக  சாலையை கடந்து செல்லும் போது பார்க்கவே அழகாய் இருக்கும்,  வரிசையாக நடந்து போகும்.

தொட்டியில் போட்ட டேபிள் ரோஸ் செடி விதைகளையும் தின்று விட்டது, தப்பி பிழைத்தவை வருகிறது . தொட்டி மேல் ஏறி விதைகள் இருக்கா என்று நோட்டம் இடுகிறது காடை குஞ்சு.



சிறிய காணொளிதான் பாருங்கள்.

15 , 16 பறவைகள் இருக்கும் . பதினாறும்  பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்பது காடை பறவைகளுக்கு பொருந்தும்.
அப்பா, அம்மா, குஞ்சுகளுடன் அவை நடைபயின்று வரும் போது "பதினாறும்  பெற்று பெருவாழ்வு  வாழ்க!" இப்படி தான் வாழ்த்த தோன்றுகிறது. வேற்று உயிர்களிடமிருந்து  தப்பி பிழைத்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவேன்  காடை குஞ்சுகளைப்பார்த்து.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
------------------------------------------------------------------------------------------

திங்கள், 24 ஜூன், 2024

இயற்கை வரைந்த ஓவியம்


உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம்.

- பாரதி


பெளர்ணமி அன்று நிலவைபார்க்க தோட்டம் பக்கம் போனேன், அன்று நிலவு வரவில்லை ஆனால் வானம் மிக அழகாய் பொன்னிறமாக இருந்தது.   அந்த  வானில் தெரிந்த அழகிய  காட்சிகளை  காமிராவில்  எடுத்து கொண்டு இருந்தேன், "அம்மா  முன் பக்கமும் வானம் அழகாய் இருக்கு போய் பாருங்க" என்றான் மகன்   பொன்னிற வானம் முன் பக்கம் தான் கிடைத்தது.

மாலை நேரம் எடுத்த  வானின் படங்களும், கவிதைகளும் இடம்பெறுகிறது இந்த பதிவில்.

சனி, 22 ஜூன், 2024

கப்பல் பயணம் க்ரூஸில் சுற்றுலா


கப்பல் பயணத்தின்   மூன்றாம் நாள்.எங்கள் கப்பல் இந்த துறைமுகத்தில் நின்றது. 

மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.

   CARNIAL RADIANCE  என்ற கப்பலில் பயணம் செய்த அனுபவங்கள்  தொடர் பதிவாக   வருகிறது. 





கடல் பார்க்க பார்க்க  ஆசையாக இருக்கும் . கடலில் போய்  கொண்டே இயற்கையை ரசிப்பது ஆனந்தம் தான்.

இந்த பதிவில் கப்பல் மேல் தளத்தில் விளையாடும் இடம், மற்றும்  நடைப்பயிற்சி செய்யும் இடங்களின்படங்கள் இடம்பெறுகிறது.

திங்கள், 17 ஜூன், 2024

தோட்டத்திற்கு வந்த பறவைகள்




இரண்டு நாட்கள் முன்பு மாலை நேரம்   ரோட் ரன்னர் பறவை மகன் வீட்டு  முன் பக்கம் வந்து நடந்து கொண்டு இருந்தது, நான் பேரனை "காமிராவை எடுத்துவா படங்களை எடுக்கலாம்" என்றேன், கவின் காமிராவை எடுத்து வந்து  "நானே எடுக்கிறேன்"  என்று அதன் பின்னலேயே போய் படங்ககளும், காணொளியும்

எடுத்து வந்தான்.  

சனி, 15 ஜூன், 2024

கடல் பயணத்தில் பார்த்து ரசித்த காட்சிகள்


கப்பல் பயணம் (CARNIVAL RADIANCE CRUISE )

மே மாதம் 31 தேதி முதல், ஜூன் 3 ம் தேதிவரை  கப்பல் பயணம் செய்த போது பார்த்த காட்சிகள், கடல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

கப்பல் மேல் தளத்தில் நின்று  காலை நேரம் எடுத்த படங்கள். காலை நேரம் கொஞ்சம் குளிர் காற்றும் பனி மூட்டமும் இருந்தது.

 மேல் தளத்திலிருந்து பார்த்த பறவைகள், மற்றும் அங்கு நின்ற வேறு ஒரு கப்பலின் படங்கள்,  நின்ற இடத்திலிருந்து ஊரின் அழகு  இந்த பதிவில்  இடம்பெறுகிறது.

இதற்கு முன் போட்ட பதிவுகள்.

ஜூன் 2 ம் தேதி இந்த இடத்தில் கப்பல் நின்றது 

புதன், 12 ஜூன், 2024

மலரும் நினைவுகளை தந்த வாழைக்காய் அப்பளம்


வாழைக்காய் அப்பளம்


எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்  

திங்கள் பதிவுக்கு சமையல் குறிப்பு கேட்டார்கள்


கீதா அக்கா சொல்லி இருப்பது போல உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு சமையல் குறிப்பு உடனேஎதிர்பார்க்கலாமா? பேராசை எனக்கு!


//உற்சாக மன நிலையில் உணவு சமைத்தபோது படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன்.//

என்ற என் பின்னூட்டத்தில் போட்டதை வைத்தே என்னை எழுத வைத்து விட்டார் ஸ்ரீராம்.


//இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பலாமே....! தயிர் சாதம் கூட வித்தியாசமாக செய்திருந்தால் அதைக்கூட அனுப்பலாம். நீங்களோ புகைப்படங்கள் எடுப்பதிலும் மன்னி!//

இப்படி வேறு   கூடை நிறைய ஐஸ் வைத்தால் எழுதாமல் இருக்க முடியுமா?

//திங்கட்கிழமை. "திங்க"ற கிழமை! //  


 திங்கட்கிழமை வெளியாகும் சமையல் பதிவை  பாராட்டி கீதா சாம்பசிவம் அவர்கள்  அழகாய் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும்  படித்து இருப்பீர்கள். அந்த புகழ் பெற்ற திங்கட்கிழமையில் நானும்  இணைவதில் பெருமை கொள்கிறேன்..

இப்படி எழுதி வைத்து பல வருடம் ஆச்சு. எழுதி வைத்ததை மறந்தே விட்டேன்.

நேற்று கொஞ்சம் வாழைக்காய் அப்பளம் மகன் கேட்டான் என்று செய்தேன். அப்போது நான் மாயவரத்தில் இருந்த போது போட்ட பதிவு நினைவுக்கு வந்தது. போட்ட பதிவை தேடி    படித்த போதுதான்  டிராப்பிட்டில் இருந்த இந்த பதிவு கிடைத்தது. அதை இங்கே பகிர்கிறேன் இன்று.

கப்பல் பயண தொடர் அடுத்து வரும்.

திங்கள், 10 ஜூன், 2024

கார்னிவல் ரேடியன்ஸ் குரூஸ் (CARNIVAL RADIANCE CRUISE ) பொழுது போக்கு நிகழ்ச்சிகள்


மே மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்  வந்து கப்பலில் மெக்ஸிகோ வரை   பயணம் செய்தோம் . அது இங்கு தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

  முதல் பகுதி  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

இந்த பதிவில் கப்பலில் நடந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. நீங்கள் எல்லோரும் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அனைவருக்கும்.

வெள்ளி, 7 ஜூன், 2024

கப்பல் பயணம் (CARNIVAL RADIANCE CRUISE ) பகுதி -1




மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன்.  

"சேத்னா காயத்ரி உணர்வு மையம்" முந்திய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்

மே 30 தேதி வியாழன்  மதியம் இரண்டு மணிக்கு மேல்  அரிசோனாவிலிருந்து கிளம்பி ஆறுமணி நேரம் பயணம் செய்து   லாஸ் ஏஞ்சல்ஸ் அடைந்தோம்,   அங்கு ஓட்டலில் தங்கி விட்டோம் இரவு .  மே 31 ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் தான் எங்கள் பயணம் தொடங்கும்,  

இந்த கப்பலில் தான் பயணம் செய்தோம். இந்த கப்பலின் பெயர்  CARNIAL RADIANCE  மே மாதம் 31 ம் தேதி வெள்ளிக்கிழமை  மதியம் இரண்டு மணிக்கு வந்தோம். 3 மணிக்கு எல்லா பரிசோதனைகள்  முடிந்து உள்ளே போக அனுமதி சீட்டு பெற்று கப்பலில் ஏறினோம்.    

வெள்ளி, சனி, ஞாயிறு  மூன்று இரவுகள் கப்பலில் இருந்தோம்.திங்கள் காலை உணவுக்கு பின் கப்பலை விட்டு இறங்கினோம்.

எங்களுக்கு பின்னால் தெரிவது வேறு ஒரு கப்பல்

வியாழன், 6 ஜூன், 2024

சேத்னா காயத்ரி உணர்வு மையம் (All World Gayatri Pariwar Anaheim)

வேத மாதா காயத்ரி
மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன்.  மூன்று இரவுகள் கடற்பயணம், திங்கள் காலை  வந்தோம்.

மே 30 தேதி வியாழன்  மதியம் இரண்டு மணிக்கு மேல்  அரிசோனாவிலிருந்து கிளம்பி ஆறுமணி நேரம் பயணம் செய்து   லாஸ் ஏஞ்சல்ஸ் அடைந்தோம்,   அங்கு ஓட்டலில் தங்கி விட்டோம் இரவு . வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் தான் எங்கள் பயணம் தொடங்கும்,  அதனால் மே 31 ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் இந்த காயத்ரி கோவிலுக்கு அழைத்து சென்றார் மகன். 

செவ்வாய், 28 மே, 2024

போர் வீரர்களின் நினைவை போற்றும் பூங்கா(Anthem Veterans Memorial Park )-பகுதி - 2


ஒரு மாலை பொழுதில் அரிசோனாவில்  வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னம் உள்ள  அழகிய பூங்கா சென்று இருந்தோம். அங்கு பார்த்தவைகள் தொடர் பதிவாக வருகிறது.
முதல் பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.


1971 முதல் மே மாதத்தின் கடைசி திங்கள் கிழமை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 போரில் தங்கள் இன்னூயிரை நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள், மற்றும் போர் வீரர்களை கெளரவிக்க  விடப்படும் விடுமுறை நாளாக இருக்கிறது.

அந்த நாளில் போர்வீரர்களின் நினைவு இடத்திற்கு சென்று மலர்கள் வைத்து  வருகிறார்கள், அவர்களின் உறவினர்களை அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து உரையாடி வருகிறார்கள். 

ஞாயிறு, 26 மே, 2024

போர் வீரர்களின் நினைவை போற்றும் பூங்கா(Anthem Veterans Memorial Park)


படைவீரர்கள் நினவு சின்னம்

அரிசோனாவில் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னம் உள்ள  இந்த இடத்திற்கு  மாலை நேரம் போய் இருந்தோம்.


புரட்சிகர  தேசபக்தர்கள் அமெரிக்க  சுதந்திரத்திற்கு பாடு பட்ட ஆண்கள், மற்றும் பெண்களின் தியாகத்தை போற்ற  நினைவூட்ட அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த நினைவுச்சின்னம்.

1775- 1783 ல்  சுதந்திர புதிய தேசத்தை   உருவாக்க   போராடியவர்கள்.  250 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்கப் புரட்சியின்  ஓகோட்டில்லோ அத்தியாயம்  மகள்களால் வழங்கப்பட்டது.

வியாழன், 23 மே, 2024

வைகாசி பெளர்ணமி



வைகாசி பெளர்ணமி  முருகன் அவதரித்த   நாள். 
முருகனை வணங்கி   நிலவை பார்ப்போம்.

செவ்வாய், 21 மே, 2024

முதியவர்- காப்பான்




பேரன் தமிழ்பள்ளிக்கு செய்த  திட்டப்பணி
"முதியவர் காப்பான்"  இதன் பயன்பாடுகளை படித்து உடனே ஆர்டர் செய்யுங்கள். 

வியாழன், 16 மே, 2024

தோட்டத்திற்கு வந்த தேனீக்கள்

 


இரண்டு நாள் முன்பு மாலை வேளை மகன் "அம்மா வாங்க, வாங்க, நம்ம தோட்டத்து மரத்தில் தேனீ கூடு கட்டி விட்டது என்றான்" எனக்கு ஆச்சரியம் !  "மாலை நடைபயிற்சி தோட்டத்தில் செய்தேன் அப்போது அந்த மரத்தில் உள்ள குருவிகளை படம் எடுத்தேன் பார்க்கவில்லையே ! என்றேன். "இப்போது தான் நான் மாடி பால்கனியில் நிற்கும் போது பார்த்தேன் கும்பலாக பறந்து வந்து அமர்ந்தது என்றான்."

ஞாயிறு, 12 மே, 2024

அரிசோனா தமிழ்ப்பள்ளி பேரனின் பட்டமளிப்பு விழா

சனிக்கிழமை காலையில்  அரிசோனா தமிழ்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. பேரன் எட்டாவது படித்து வெற்றி பெற்று இருக்கிறான். விழா படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வியாழன், 9 மே, 2024

ஞாயிறு உலாக்கள்





 

இந்த மாதம்  அரிசோனா ஊர் முழுவதும்  மஞ்சள் பூ பூத்த மரங்களை பார்க்க முடிந்தது.  வானத்தின் நீலமும், வெண்மேகமும் மஞ்சள் பூக்களும் பார்க்கவே அழகு.

இந்த மரம் அரிசோனாவின் மாநில மரம். இதன் பேர் "பாலோ வெர்டே"  மார்ச்  பிற்பகுதியில்  பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் , மே வரை அழகாய் பூத்து குலுங்கும். 

சனி, 4 மே, 2024

குருவிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்



 மஞ்சள் குருவி

தலை, முகம் மஞ்சள்  நிறம்

மகன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் எப்போதும் வந்து அமரும் குருவிகளின் படம். இந்த பதிவில் இடம்பெறுகிறது.

இந்த மரம் மேல் பகுதி குச்சி குச்சியாக இருக்கும்  அதில் அமர்வது எல்லா பறவைகளுக்கும் பிடிக்கும்.