ஏப்ரல் 11ம் தேதி அமெரிக்க பயணம். எட்டு மாதம் ஆன பேரனைப் பார்க்க.
19 மணி நேரம் பயணித்து வந்த கஷ்டம் எல்லாம் பேரன் மலர் போல சிரித்த முகத்துடன்
மலர் செண்டு கொடுத்து வரவேற்றவுடன் மறந்து விட்டது.
அவனின் கள்ளமில்லா சிரிப்பில் எங்களை மறந்தோம்.
இரண்டு நாள் சுவை மறந்த நாக்குக்கு புத்துயிர் கொடுத்தாள் மருமகள்.
இந்த புத்தாண்டு மகன், மருமகள், பேரனுடன்.
முக்கனியில் ஒன்று குறைந்தாலும் மற்ற பழங்கள் கிடைத்தன,’விஷுகனி காணல்’
சிறப்பாய் நடந்தது.
ஆசிர்வாதம் செய்து கை நீட்டம் அளித்தார் என் கணவர்.இந்த புத்தாண்டு வாழ்வில் இனிமை சேர்க்கும் புத்தாண்டு.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.