ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

Stone Mountain State Park, Georgia


ஜார்ஜியாவில் உள்ள இந்த பூங்காவிற்கு வியாழக்  கிழமை மகள் அழைத்து சென்றாள்,  மிக அழகான இடம்.

திங்கள், 24 ஏப்ரல், 2023

காவிங்கடன் டவுன் டவுன் சதுக்கம் ஜார்ஜியா


  காவிங்கடன் டவுன்டவுன்     (Covington Downtown Square) 

காவிங்கடன் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் நிறுவபட்டது.

காவிங்கடன் டவுன்டவுன் சதுக்கம் ஜார்ஜியாவின் அழகிய நகரங்களில் ஒன்று  என்று தேர்வு செய்யப்பட்ட இடம்.

அட்லாண்டாவுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த இடத்திற்கு   புதன் கிழமை  மாலை    அழைத்து போனாள் மகள்.  வீட்டிலிருந்து 30 மைல் இருக்கும்.

பார்க்க மிக அழகாய் இருந்தது.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

மோன தவத்தில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி


மோன தவத்தில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி

அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் மரத்தின் துளிர் இலையில் வந்து அமர்ந்த வண்ணத்துப்பூச்சி.
அதை பார்த்து படம் எடுத்தவுடன் என் மனதில் தோன்றியது இந்த பதிவு.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கிழக்கு நீலப்பறவை (Eastern Bluebird )


கிழக்கு நீலப்பறவை (Eastern Bluebird )
அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவை. குளிர் காலம் போனபின் கோடை வந்து விட்டால் இந்த பறவையின் வரத்து அதிகமாக இருக்குமாம்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு.
 மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, 
தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே
 கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை 
கண்விழித்தவுடன் இநத மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு 
முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம்
 செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.

புதன், 12 ஏப்ரல், 2023

மியாவ் மியாவ் பூனைக்குட்டிமகள் வீட்டுத்தோட்டத்திற்கும் .வீட்டுக்கும் வந்த பூனைகள்


உங்களை எல்லாம் பார்த்தவுடன்  மகிழ்ச்சியாக இருக்கிறது. தினம்  வாங்க நீங்கள் எல்லாம்" என்று சொல்லி இருக்கிறேன். பறவைகளும், அணில்களும் பூனைகளும் இனி தொடர்ந்து வருவதாக வாக்கு அளித்து இருக்கிறார்கள்.  என்று போன  அணில் பதிவில்  சொல்லி இருந்தேன், நினைவு இருக்கும்.

திங்கள், 10 ஏப்ரல், 2023

தோட்டத்திற்கு வந்த அணில்                       மகள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த அணில்.

காலை முதல் மாலை வரை அணில்கள், பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சியான பொழுது போக்கு. மகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்து விட்டு பின் அவைகளை பார்ப்பது மகிழ்ச்சி.

இரண்டு மூன்று அணில்கள் மரத்தில் ஓடி பிடித்து விளையாடின. இந்த பதிவில் ஒரு அணில் மட்டும் தான் இடம்பெறுகிறது.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

சிறு மலர்கள்வசந்தம் வந்ததும் புல் பூண்டுகள் நன்றாக பச்சை பசேல் என்று வளர்ந்து இருக்கிறது. மழை பெய்து புற்கள் வளர்ந்தவுடன் அதனுடன் சேர்ந்து சிறு சிறு செடிகளும் வளர்ந்து குட்டி குட்டி பூக்கள்  மிக அழகாய் பூத்து இருந்தது. அட்லாண்டாவில் உள்ள மகள் வீட்டு தோட்டத்தில் .

இன்னும் புல் பெரிதாக வளர்ந்தால் வெட்டி விடுவார்கள், அப்போது இந்த அழகிய குட்டி பூக்களும் போய் விடும். அதற்குள் படம் எடுத்து விட்டேன்.

திங்கள், 3 ஏப்ரல், 2023

மலர்களே மலருங்கள்மகன் வீட்டுத் தோட்டத்தில் வெயில் வந்தவுடன் மலர் செடிகள் துளிர்த்து மொட்டுக்கள் வைத்து, மலர்கள் பூக்க  ஆரம்பித்து விட்டது. 

குளிர் குறைந்து வருகிறது. கோடை வரப்போகிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள், ஆரஞ்சு வண்ணத்தில் பூக்கள் சாலை ஓரங்களில் பூத்து அழகாய் இருக்கிறது. மலைகளில் மஞ்சள் பூக்கள் பூக்கும் செடிகள் படர்ந்து இருக்கிறது. மஞ்சள் போர்வை போர்தி இருப்பது போல் உள்ளது.