.ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 செப்டம்பர், 2018

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை

செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில்   ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள்  கோவில்

நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று   நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.  தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில்  இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால்  இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும்  கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.