பல்லுயிர் ஓம்புக என்று ஒரு கட்டுரையை தஞ்சையம்பதி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் திரு . துரைசெல்வராஜூ அவர்கள் மே மாதம் 22ம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் அன்று எழுதி இருந்தார்கள். படிக்காதவர்கள் படிக்கலாம் அருமையான கட்டுரை. மரங்கள், குளங்களைப் பாதுகாத்தால் அதில் வாழும் உயிரினங்கள் வாழும் என்றார். உண்மைதான் குளம், குட்டைகள், ஏரிகள், மரங்களில் எவ்வளவு உயிரினம் அடைக்கலமாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. !
//பாலை நிலத்தைக் கூட இல்லை பாழ் நிலத்தை அல்லவா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல இருக்கிறோம் என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்கள். //
நான் அவர்கள் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டபோது இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப்பற்றியும் அங்கு இருக்கும் மரங்கள், பறவைகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.
எனக்கும் பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்று ஆசை உண்டு. இன்னும் இப்படி சில இடங்களில் கிராமிய மணம் கமழும் கோவில்கள் இருப்பது மனதுக்கு நிறைவு அளிக்கிறது.
கிராமக் கோவில்கள் மரங்கள் சூழ வெகு அழகாய் இருக்கும். ஏரி, குளம் என்று இருக்கும் சுற்றுவட்டார மக்கள் அந்த ஏரி, குளங்களில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். இப்போது கிராமங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது.
எங்கள் குலதெய்வம் இருக்கும் மடவார்விளாகம் (திருநெல்வேலி அருகில்) அமைந்து இருக்கும் இடம் ஆலமரங்கள் , பெரிய ஏரி வயல்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடமாய் விளங்கும். இந்த முறை போனபோது ஏரியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டமாய் இருந்தது. வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது.
காய்ந்து கிடக்கும் ஏரி
இங்கு மதுரை வந்தபோது , இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப் பார்த்தபோது எனக்கு எங்கள் கோவில் நினைப்பு வந்து விட்டது. இங்குள்ள ஆலமரம், வேப்பமரம், புளியமரம், வில்வ மரம், அருகில் இருக்கும் பனைமரம் எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். காற்று அடிக்கும்போது பனைமரம் போடும் சலசலப்பு, எவ்வளவு பறவைகள் இங்குள்ள ஆலமரத்திற்கு வந்து ஆலம்பழத்தைச் சாப்பிட்டு அதன் நிழலில் இளைப்பாறுகிறது.
புளியமரத்தில் பறவைக் கூடு இருக்கிறது.
வேப்பமரத்தில் பழுத்த பழங்களுக்கு கிளிகள் வருகிறது. பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வளர்க்கும், ஆடு, மாடு, கோழிகளுக்குக் கோவில் முன்பகுதி இடம் தான் வாழும் இடமாய் இருக்கிறது. இப்படி எல்லோருக்கும் அடைக்கலம் தரும் இடமாய் கோவில் இருக்க வேண்டும் எப்போதும்.
கோவிலை சீர் அமைப்பவர்கள் பழமையைச் சிதைக்காமல் காத்தால் நல்லது. மரங்களை வெட்டாமல் குளங்களைச் சீர் அமைத்தால் அதில் வாழும் பல்லுயிர்களும் வாழும்.
குளம் தூர்வாரப்படுகிறது என்று இன்றைய செய்தியில் சொன்னார்கள். குளங்களில் மீண்டும் நீர் வந்து எங்கும் இயற்கை பசுமையாக இருக்க வேண்டும்.
கோவிலின் முன் பகுதி - ஆடு, மாடு, கோழிகள், சுதந்திரமாய்த் திரியும், ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி குழந்தைகள் விளையாடுவார்கள்
இயற்கைப் பின்னணியில் கோவில் குதிரைகள்
ஆடு, மாடு, கோழி, சேவல்
ஆகிய செல்வங்களுடன் இந்நாட்டு மன்னர்
நெல்லை காந்திமதி அம்மன் குளம்
குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாகக் காட்சி அளித்தாலும் அங்கு கிடைக்கும் உணவுக்காகக் காத்து இருக்கும் முக்குளிப்பான்கள்
தென்காசி ஊரில் உள்ள குளத்தில் பறவைகள் (முக்குளிப்பான்கள்}
மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மொட்டை மரத்தில் மோன தவம் செய்யும் இரட்டைவால் குருவி.
மீண்டும் மரம் துளிர்த்து வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறதோ இந்த இரட்டை வால் குருவி. ! அதனுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தனை செய்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய
மக்கள் வளமாய் வாழ்க !
வாழ்க வளமுடன்.
"நாளை சர்வ தேச குழந்தைகள் தினம் " குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
.
61 comments:
முடிவில் சோகம் இல்லை... சின்ன கோபம்... ஹிஹி... வாழ்த்துக்கள் அம்மா...
நன்றி...
வெகு வெகு சிறப்பு
பொக்கிஷங்கள் என்பது
நிச்சயம் இந்தக் கருப்பு வெள்ளைப் படங்கள்தான்
பகிர்வு மனத்தை கொள்ளை கொண்டது
வாழ்த்துக்கள்
தாயன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை
என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு இருக்கிறோம்
எனும் அதே நேரத்தில்
ஒரு தாய் தன் மகனிடம் காட்டும் அன்பு, பரிவு, பாசம் எல்லாமே
அந்த மகனுக்கு ஒரு வாழ்க்கைத்துணை வருகையிலே
அவளுக்கும் தான் தாயாக , அதுவும்
வீட்டுக்கு வந்த அந்தப்பெண் உள்ளத்தால் இவளும் என் தாயே
என உணரும் வகையில் நடந்திடும் இல்லங்களில்
இனிமையான சூழ்னிலைக்கு ஒரு எல்லையே இல்லை.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
.
படங்கள் அருமை.எங்கிருந்தாலும் அன்னையும் தந்தையும் நம்மை மறவார்கள். நாமும் நம்குழந்தைகளுக்கு நல் ஆசிகள் வழங்குவோம்.
சிறந்த அன்னையர் தின வாழ்த்துகள் மா.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
பாரதி வரிகளுக்கு நன்றி.
மிக அழகான கட்டுரை. பாராட்டுக்கள்.
அள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே!.....//
அட்சயமாய் அன்பை அருளும் அன்னையர் தின வாழ்த்துகள்..!
உங்கள் முதல் வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நீங்கள் சொல்வதும் சரிதான் சின்ன கோபம் தான் அதில் ஏற்பட்ட சோகம்.
உங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் நன்றி.
உங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வெகு நாட்கள் ஆயிற்றே! நலமா?
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.
//வீட்டுக்கு வந்த அந்தப்பெண் உள்ளத்தால் இவளும் என் தாயே
என உணரும் வகையில் நடந்திடும் இல்லங்களில்
இனிமையான சூழ்னிலைக்கு ஒரு எல்லையே இல்லை. //
நீங்கள் சொல்வது உண்மை.
வீட்டுக்கு வந்த மருமகளை நன்கு பார்த்துக் கொள்ளவேண்டும் மாமியார், மாமியாரை மருமகள் நன்குப்பார்த்துக் கொள்வாள்.
அன்புக் கொடுத்தால் அன்பு கிடைக்கும்.
வீட்டில் ஆனந்தம் நிலைக்கும்.
குற்றம் பார்க்காமல் குணத்தை பார்க்க இருவரும் முயலவேண்டும்.
இனிமையான சூழல் அப்போது நிச்சயம்.
உங்கள் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.
நீங்கள் சொன்னது போல் நமக்கு எப்போதும் நம் பெற்றோர்களின் ஆசி நிச்சயம் உண்டு.
நம் குழந்தைகளுக்கும், நம் ஆசிகளை தினம் வழங்கி மகிழ்வோம்.
உங்கள் வ்ருகைக்கும், அன்பான அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
படங்கள் மற்றும் பாரதி பாடல்களை ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
//அன்பின் முகவரி அன்னை. அன்பின் ஆதி அன்னை.//
நீங்கள் சொல்வது உண்மை.
பாடல் பகிர்வு, கதை இவற்றை ரசித்தமைக்கு நன்றி.
சாரிடம் ஸ்ரீராம உங்கள் படம் ஏன் இல்லை என கேட்கிறார் என்றேன் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி அடுத்தபதிவில் வரைய வைத்துவிடுகிறேன்.
உங்கள் விசாரிப்புக்கு நன்றி.
//அட்சயமாய் அன்பை அருளும் அன்னையர் தின வாழ்த்துகள்..!//
உங்கள் அழகான அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அன்னையர் தின வாழ்த்துகள்!
கடைசிப் படத்தில் போட்டோகிராபர் ஒருவேளை ரொம்ப நேரம் போஸ் கொடுக்க வைத்திருப்பாரோ:)?
அரசு சாரின் ஓவியங்களை மிஸ் செய்கிறோம்.
உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும், நன்றி.
நீங்கள் சொல்வது போல் குடும்ப நலனுக்கு பாடும் படும் பெண்களை குடும்ப உறுப்பினர் அனைவருமே புரிந்து நடக்கவேண்டும் அப்போது தான் வீடும், நாடும் நலம்பெறும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
படத்தை எடுத்தவர் என் அப்பாவின் நண்பர். அந்த மாமா நிறைய படம் எடுத்து இருக்கிறார் அன்று.
அரசு சாரிடம் படம் போட சொல்லி விட்டேன் ,அடுத்தபதிவில் வரைய வைத்துவிடுகிறேன். ராமலக்ஷ்மியும் கேட்டுவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
அவர்களுக்கு மகிழ்ச்சி.
அன்னையின் பெருமை சொல்லில் அடங்காது என்பது உண்மை,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அந்த காலத்து போட்டோக்கள் ரொம்ப அழகு தான்.உங்கள் போட்டோ முன் பதிவிலேயே பார்த்தேன்,
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
//நேற்று அம்மாவுக்கு ஒரு சிறிய கவிதையும் எழுதினேன் ஆனால் நான் பிலாக்கில் பகிரவில்லை. அவர்களுக்கு போன் செய்து படித்து காண்பித்தேன்,.//
அம்மாவுக்கு எழுதிய கவிதையை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.
அப்பவும் நானும் படம் இப்போது தான் போட்டு இருக்கிறேன்.
அம்மாவுடன் உள்ள படம் முன்பே பகிர்ந்து கொண்டது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.
அந்தக் காலத்து அப்பாக்கள் எல்லாம் இந்த ஸ்டைல் தான் போல.என் அப்பாவின் படம் ஒன்றும் இது போல் உண்டு கோமதிக்கா.மிக அருமையான பகிர்வு.
'அரசு' சாரின் சிறப்பு ஓவியம் காணோமே இந்தச் சிறப்புப்பதிவில் :-)
ஆசியா உங்கள் அப்பாவும் இந்த ஸ்டையில் தானா ஒருமுறை உங்கள் அப்பா படத்தை எங்களுடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
சார் கிரிக்கெட் பார்ப்பதில் பிஸியாக இருந்தார்கள் அதனால் அவர்களை படம் கேட்கவில்லை. அடுத்தபதிவில் ஓவியத்தை கேட்டு வாங்கி விடுகிறேன். அவர்கள் ஓவியத்தை காணவில்லையே என்று ரசிகர்கள் கேட்பது அவர்களுக்கு ஆனந்தமாய் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சாரல்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
late..அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Vetha.Elangathilakam
பெற்ற குழந்தை பெண்ணாயிருந்தால் தாய் கொள்ளும் பெருமிதமே அவளையும் மிகச்சிறந்த தாயாக உருவாக்க வேண்டும் என்பது தான். அந்தத் தாய் தான் குழந்தையாயிருந்த திலிருந்து தெரிந்து கொண்ட தெளிவை ஒவ்வொரு செயலிலும் உணர்விலும் தன் பெண்ணுக்கு உணர்த்தி வளர்க்கிறாள். அப்படியாக வளரும் குழந்தைகள், பெரியவளாகி இன்னொரு தாய்க்கு மருமகளாகும்
பொழுதும் அவள் எதிர்பார்க்கும் தாயன்பு புகுந்த வீட்டிலும் மாற்றமில்லாமல் தொடர்கிறது. எப்படி வளர்ப்போ, அப்படியே வாழ்வுமாய்..
இது ஒரு வட்டம். மகளாய், தாயாய், மருமகளாய், மாமியாய்.. பெண்ணாய் பிறந்து விட்டால், எத்தனை கோடி உணர்வையும் உறவையும் மனசுள் பொத்திப் பொத்தி வைத்தாய், இறைவா!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நன்றாக சொன்னீர்கள் பெண் குழந்தைஎப்படி எல்லோரிடமும் நடக்க வேண்டும், பழக வேண்டும், புகுந்த வீட்டில் எப்படி அன்புடன், மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதை விட சிறந்த தாயாக அம்மா நடந்துக் கொள்ளும் போது அதைப் பார்த்து வளர்ந்த குழந்தை அதே பண்புகளுடன் இருக்கும்.நல்ல மகளாய் இருந்தவள்
நல்ல மருமகளாய், நல்ல தாயாய் மாறுகிறாள் பின் நல்ல மாமியாராய் உருவாகிறாள்.
//இது ஒரு வட்டம். மகளாய், தாயாய், மருமகளாய், மாமியாய்.. பெண்ணாய் பிறந்து விட்டால், எத்தனை கோடி உணர்வையும் உறவையும் மனசுள் பொத்திப் பொத்தி வைத்தாய், இறைவா! //
நீங்கள் சொன்னது போல் இந்த வட்டம் சரியாக இயங்கினால் எத்தனை கோடி இன்பங்கள் படைத்தாய் என்று பாடத்தோன்றும்.
உங்கள் வரவுக்கும் சிறப்பான வாழ்வியல் உண்மைகளை சொன்னதற்கும் நன்றி.
சூரி சாரும் உங்களை போல் நல்ல கருத்தை சொன்னார்கள்.
உங்கள் பெற்றோருடன் இருந்த புகைப்படங்கள் அன்னையர் தினத்தில் அருமையான நினைவஞ்சலியும் கூட!!
gmbat1649.blogspot.in/2011/06/blog-post_18.html வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது போல் எல்லா நாளும் அன்னையர் நாள் தான்.
நம் வழக்கம் வெளி ஊருக்கு சென்றாலோ, அல்லது பரீட்சை மற்றும் எல்ல சுபக்காரியங்களுக்கும் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்வது வழக்கம்.
உங்கள் பதிவை படிக்கிறேன் சார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
புகைப்படங்கள் அழகு. கருப்பு வெள்ளை என்றாலும் காலம் முழுவதும் மனத்தில் வண்ணங்களை வாரியிறைக்கும் நிழற்படங்கள் அல்லவா அவை!
நீங்கள் சொல்வது உண்மை கீதமஞ்சரி காலம் முழுவதும் மனதில் வண்ணங்களை வாரி இறைக்கும் நிழற்படம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கதைகள் பலவும் எடுத்து அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.
வாழ்க! அன்னையர்கள்.
நீங்கள் எல்லா பழைய பதிவுகளுக்கும் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.
உங்கள் அன்னையர் தின வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் அன்னையர்தின வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும், நன்றி.
உங்கள் பின்னூட்டத்தை தாமதமாய் பார்த்தேன்.மன்னிக்கவும்.உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.