திங்கள், 17 டிசம்பர், 2018

இறை அருள் கிடைக்கும் மார்கழி

மார்கழி அதிகாலையில் குளித்து, தன் வீட்டிலும் கோலம் போட்டுவிட்டு ஐயனார் கோவிலிலும் வந்து கோலம் போடும் கோதையர்கள்
சிறு பெண்கள் இப்போது  இப்படி காலையில் எழுந்து கோவிலுக்கு வந்து கோலம் போடுவதைப் பாராட்டவேண்டும். நான் பாராட்டினேன். அவர்களுக்கு மகிழ்ச்சி, வெட்கம் கலந்த புன்னைகையுடன் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். அவர்களிடம் கேட்டுக்கொண்டு அவர்கள் கோலம் போடுவதைப்  படம் எடுத்தேன்.

ஐயனார் கோவில்
ஐயனார் கோவில் நேர் எதிரில் நின்று கொண்டு இருந்த யானை. இது நேற்று எடுத்த படம்.

இன்றும் இருந்தது கோழியை விரட்டிக் கொண்டு இருக்கிறது
தென்னை ஓலையைச் சுவைத்துக் கொண்டு இருக்கிறது. ஐயனார் கோவில் வாசலில் இருந்து அலைபேசியில் எடுத்த படம்.  தூரம் அதிகம்.

மாடுகள்  எல்லாம் ஓய்வு எடுக்குது.  ஐயனார் கோவிலுக்கு உள் நுழையும் வாசலில். 

காலையில் அவிழ்த்து விட்டுவிடுகிறார்கள் பால் கறந்தவுடன். அப்புறம் இரவு வரை குப்பைகழிவுகளை நம்பி வாழ்கிறது இந்த மாடுகள். பாலிதீன் பைகளுடன் உணவைச் சாப்பிடுது. பார்க்கவே கவலையாக இருக்கிறது.
முன்பு பசு மாட்டுச் சாணம் வீடுகளில் எடுத்து வந்து சாணம் தெளித்து கோலம் போடுவோம், மண் தரையாக இருக்கும்; சாணமும் கெட்டியாக இருக்கும். பரங்கிப் பூ வைக்க, பிள்ளையார் பிடிக்கவும் வசதியாக இருக்கும்.
திருநீறு செய்யவும், வரட்டி தட்டவும் இப்போது முடியவே முடியாது.

பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, அரிசி வடித்த கஞ்சி,  கழுநீர், பச்சைப்புல்  சாப்பிட்டு  ஆரோக்கியமாய் இருந்தது. அதன் சாணம் பச்சை கலரில் வரி வரியாகக் கட்டியாக இருக்கும்.

இப்போது கண்டதைச் சாப்பிட்டு சாணம் தண்ணீர் போல் கறுப்புக் கலரில் இருக்கிறது, எடுக்கக் கூட முடியாது கீழே இருந்து . மண்தரைகளும் இப்போது இல்லை. முன்பு வீட்டு  சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய கட்டிச் சாணத்தை எடுத்து வந்து பத்துகளை ஒத்தி ஒத்தி எடுத்து விட்டுத் துணியால் துடைத்து எடுப்போம் , அப்போது தான் சுத்தமாகும் என்பார்கள் வீட்டுப் பெரியவர்கள்.


பரங்கிப் பூ இலைகள் கரும்பச்சையாக இருக்கிறது , வாகனப்புகையால் 
பாதையில் கண்ட பூ :- மார்கழியில் பூக்கும் மலர்கள் எல்லாம் மாலவனுக்கே சொந்தம்.  அதனால் தான் "மலரிட்டு நாம் முடியோம்" என்று ஆண்டாள் சொல்கிறார்.

எங்கள் இரண்டு பேருக்கும் கொடுத்த பிரசாதம்.
அதிரா அவரை நினைத்துக் கொண்டு சாப்பிடச் சொன்னார். அதனால் அவரை நினைத்துக் கொண்டு  சாப்பிட்டேன்.
இன்று ஒரு சின்னக்கோலம் 

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் 
பேசும்போது எப்போதும் இப்போதார் அமளிக்கே 
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
-திருவெம்பாவை

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
- திருப்பாவை.

காலை படிக்க வேண்டிய பாடல்களை மதியம் பதிவிடுகிறேன்.
நேரம் கிடைக்கமாட்டேன் என்கிறது . போடவும் ஆசை பொறுத்தருள வேண்டுகிறேன்.

                           வாழ்க வளமுடன்.

35 கருத்துகள்:

 1. உண்மைதான் இன்றைய கல்லூரி பெண்கள் அதிகாலையில் எழுவது ஆச்சர்யமான விடயமாகி விட்டது.

  எல்லாம் செல்போன் வந்ததால் வந்தவினை நள்ளிரவுவரை வாட்ஸ்-ஆப் உபயோகம் காலையில் எழுவது கடினமாக இருக்கிறது.

  எல்லோர் வீட்டிலும் ஒரேபெண் என்று செல்லம் கொடுத்து வளர்க்கின்றார்கள். புகுந்த வீட்டில் பிரச்சனை தொடங்குவதே இதனால்தான்.

  இப்படிச் சூழலில் இந்தப் பெண்களின் செயலை மனதார பாராட்டுவோம்.

  படங்களும் அழகு. திருவெம்பாவையோடு பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
   அதிகாலையில் எழும் குழந்தைகளும் இருக்கிறார்கள் ஜி.
   அப்படி எழுந்து கோலம் போடும் குழந்தைகளை பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
   அவர்கள் வீட்டிலும் கலர் கோலம் போட்டு வந்தார்களாம்.
   திருஅலகிடுதல் என்பார்கள் கோவிலில் இப்படி செய்வதை. அவர்களுக்கு இறைவன் எல்லா அருளையையும் தர வேண்டும்.
   புகுந்த இடத்திலும் நல்ல பேர் எடுக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்.

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 2. அதிரா வரும்போது பொங்கலும், புளியோதரையும் இருக்காது காலி இலை மட்டுமே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆவ்வ்வ்வ்வ்வ் கோயில் பிரசாதம் சாப்பிட்டு நீண்டகாலமாகுது.. நினைக்கவே வாயூறுதே... என்னை நினைச்சும் சாப்பிடுங்கோ அடுத்த தடவை:)..//

   அதிரா என்னை நினைச்சும் சாப்பிடுங்கோ என்றார்கள் ஜி.

   நீக்கு
 3. மார்கழி பிறந்தால் ஆன்மீகப் பதிவர்களுக்கு எழுதுபொருள் கிடைத்து விடுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. கோலம் போடும் வனிதையர் வாழ்க்கை செழிக்கட்டும். யானை அந்தக் கோவிலுக்குச் சொந்தமானதா?

  இலையில் இருப்பது புளியோதரை இல்லை, பொங்கல் என்று நினைக்கிறேன். எனவே அதிராவே எடுத்துக் கொள்ளட்டும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   வனிதையரை வாழ்த்தியது மகிழ்ச்சி.

   அந்த கோவில் யானை கிடையாது.

   யானை தினம் காலையில் அங்கிருந்து கிளம்பி போகிறதாம்.
   சார் தினம் காலையில் ஐயனார் கோவில் அருகில் பார்ப்பேன் என்பார்கள் நடைபயிற்சியின் போது. நான் இந்த இரண்டு நாளாக பார்க்கிறேன். நாளை எந்த கோவில் யானை என்று கேட்க வேண்டும்.

   இலையில் இருப்பது புளியோதரை தான். சர்க்கரை பொங்கல் போல் குழைவாய் இருக்கிறது. அதிராவுக்கு குழை சாதம் பிடிக்கும் என்பதால் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   புளியோதரைக்கு தனியாக சாதம் வடிக்காமல் ஒரே சாதமாய் வடித்து இரண்டும் சாதமும் செய்து விடுவார்கள் அந்த கோவிலில்.ஆனால் புளியோதரை ருசியாக இருக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. ஆமாம் கோமதிக்கா அதிராவுக்கு குழை சாதம் என்றால் ரொம்பவே பிடிக்குமே!

   நானும் பொங்கல் என்றுதான் நினைத்தேன் இப்பத்தான் தெரிகிறது அது புளியோதரை என்று. கோயில் பிரசாதம் என்றால் அது தனி ருசிதான்...

   கீதா

   நீக்கு
  3. கீதா, சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் இருக்கிறது அதில்.
   குழைசாதம் என்று போட்டாலும் போட்டார் அதிரா எல்லோரும் அதை பிடித்துக் கொண்டோம். அதிரா என்ன சொல்லபோகிறார் தெரியவில்லை.
   குழைவாக இருந்தாலும் புளியோதரை வாசமாய் ருசியாக இருந்தது

   நீக்கு
  4. ஶ்ரீராமுக்கு புளியோதரை என்றால்கூட பங்கில்லை முழுவதும் எனக்கே:)... இலையைப் பார்க்கவே ஆசையா இருக்கு.

   நீக்கு
  5. எனக்கு சாத வகைகள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும் கீதா, ஆனா வீட்டில் யாருக்கும் பிடிக்காது, ஒன்றோடொன்று ஒட்டாத ரைஸ் அல்லது பிரியாணி வகைதான் பிடிக்கும் அதனால சாதம் செய்வதில்லை நான்.

   நீக்கு
  6. ஆமாம், கையில் ஒட்டாத ரைஸ்தான் இப்போது குழந்தைகளுக்கு பிடிக்குது.

   நீக்கு
  7. ஸ்ரீராமுக்கு புளியோதரை அதுவும் ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் இருக்க வேண்டும், இந்த புளியோதரை குழைந்து விட்டதால் உங்களுக்கே கொடுக்க சொல்கிறார்.
   இலை அங்கு கிடைக்கவில்லையா?

   நீக்கு
 5. பதிவுக்கும் தகவல்களுக்கும் நன்றி. இன்னமும் காலை எழுந்து கோலம் போடுபவர்கள் இருப்பது ஆச்சரியம் தான்! இது தொடரப் பிரார்த்தனைகள். பிரசாதம் இந்த மாதிரி ஒரே இலையில் கலந்து கொடுத்தால் எனக்கென்னமோ சாப்பிடக் கொஞ்சம் யோசனையா இருக்கும். தனித்தனியா வாங்கினால் தான் பிடிக்கும். :) என் மாமியார் பஞ்சாமிர்தம், புளியோதரை, பொங்கல்,தயிர்சாதம் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் கொண்டு வந்து சாப்பிட வற்புறுத்துவார். சும்ம்ம்ம்மா ஒரே ஒரு சின்ன உருண்டை எடுத்துப்பேன் பிரசாதம் என்பதால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம்.

   நானும் எங்கள் வீட்டுக்கு எதிர் வரிசையில் வசிக்கும் பெண்ணும் காலையில் ஐந்து மணிக்கு போட்டு விடுவோம் தினம். மார்கழி என்றால் இன்னும் சீக்கீரமாய் நாலுமணிக்கு . மார்கழிக்கு சிறப்பு வேண்டும் அல்லவா?
   இந்த பெண்கள் தங்கள் வீட்டில் அதிகாலை போட்டு விட்டு இங்கு 5.30 க்கு கோவிலில் போட்டது தான் சிறப்பு.

   இந்த கோவில் வழக்கம் என்னவென்றால் ஒவ்வொரு சன்னதி முன்பும் ஒரு இலையில் பிரசாதங்களை வைப்பார்கள். பிள்ளையார், முருகன், அனுமன், கருப்பண்ணசாமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பேச்சியம்மன், சப்தகன்னியர், முனீஸ்வரர், ஐயனார், நவகிரகங்கள் இருக்கிறார்கள். ஒரே பாத்திரத்தில் வைத்து காட்டமாட்டார்கள்.
   இறைவனுக்கு வைத்த அந்த இலை பிரசாதம் தான் எங்களுக்கு கிடைத்தது.

   நீங்கள் சொல்வது போல் கோவில்களில் ஒரே இலையில் பஞ்சாமிர்தம், புளியோதரை, சுண்டல், தயிர்சாதம் எல்லாம் வைத்துக் கொண்டு வருவார்கள். எல்லாம் கலந்து சாப்பிட என்னோவோ போல்தான் இருக்கும் இறைவன் பிராசதம் என்று பொறுத்துக் கொள்ள வேண்டும். என் மாமியார் பஞ்சாமிர்தம் வாங்கவே மாட்டார்கள். நான் கையில் அதை வாங்கி கொள்வேன்.
   வரிசையில் நானும் அவர்களும் நின்றால் இந்த இலையில் புளியோதரை வைத்து விடுங்கள், தயிர்சாதத்தை அடுத்த இலையில் வையுங்கள் என்று என் மாமியார் கேட்டு வாங்கி விடுவார்கள்.
   எனக்கு அப்படி கேட்க கஷ்டமாய் இருக்கும்.

   ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக தொன்னை கொடுப்பது கூட்டத்திற்கு கட்டுபடியாகது என்று நினைப்பார்கள் போலும்.

   மாயவரத்தில் குழந்தைகள் வீட்டிலிருந்து கிண்ணங்கள் எடுத்து வருவார்கள் அதில் வாங்கி செல்வர்வார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. நான் சிறு வயதில் கிண்ணங்கள் எடுத்துச் சென்றுவிடுவோம். ஆனால் கோமதிக்கா எனக்கும் கேட்க கஷ்டமாய்த்தான் இருக்கும்.

   மைலாப்பூரில் மடத்துக் கோயிலில்...ஹயக்ரீவருக்கு பெரிதாகப் பூசை நடக்கும் தினத்தன்று ஒரு பாக்குமட்டைத் தட்டு அல்லது இலை கொடுத்துவிட்டு (உபயதாரரைப் பொருத்து இருக்கும் அது இலையா பா மட்டையா அல்லது பேப்பர் ப்ளேட்டா என்பது) அதில் கையாலேயே பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கேசரி, சுண்டல், அப்புறம் அரிசிமாவு வெல்லம் கலந்த பொடி தயிர்சாதம் இத்தனையும் வைத்துவிடுவார்கள்...இன்னும் சில ஐட்டம்ஸ் இருக்கும் எல்லாம் உபயதாரர் பொருத்துதான்...ஒரு ஆள் ஒரு வேளைச்சாப்பாடு போல இருக்கும் வயிறும் நிறைந்துவிடும்....எல்லாம் கலந்து கட்டி வரும்..அவர்கள் போடப் போட நாம் தனித்தனியாகப் பிரித்து வைக்கனும் இல்லை என்றால் அவர்கள் அப்படியே கையால் தூக்கிப் போட்டுவிடுவார்கள் எல்லாம் கலந்துவிடும்...நானும் அவர்கள் போடும்படி போடட்டும் என்று இருந்துவிடுவேன். ஒரே ஒரு முறைதான் இப்படிக் கிடைத்தது அதன் பின் செல்லவில்லை..

   கீதா

   நீக்கு
  3. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   ஊருக்கு போய் விட்டு வந்தவுடன் பதிவுகளை படித்து கருத்து சொல்வதற்கு நன்றி.
   கீழே இல்லைபோட்டு பரிமறினால் எல்லாம் தனி தனியாக வைக்கலாம், கையில் கொடுக்கும் போது தர்மகோலில் தனி தனி பிரிவுடன் டிபன் தட்டு கிடைக்கிறது அதில் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் கொடுக்கலாம். ஆனால் அது செலவு அதிகம் ஆகும் இல்லையா?
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. மாடுகள் நிலை வேதனை அளிக்கிறது...

  கோலம் அருமை அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   மாடுகள் நிலை வேதனை அளிக்கிறது.

   ஆண்டாள் காலத்தில் பசுக்களின் அழகு படங்களில் தெரியும்.

   மாடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். காலை எழுந்ததும் அதன் முகத்தில் விழிக்க வேண்டும் என்பார்கள். இந்த கோவில் பக்கத்தில் ஒரு ஓட்டல் ஒன்று இருக்கிறது, அங்கு போடும் இலை, காய்கறி குப்பைகளுக்கு அவ்வளவு மாடும் நிற்கிறது. ஒரே அழுக்காய் இருக்கிறது.

   இரவு நேரத்திலும் வெளியில்தான் நிற்கிறது. பால் கறக்க மட்டும் அழைத்து செல்கிறார்கள்.பயமில்லை போலும், மாட்டை யாரும் திருடி போக மாட்டார்கள் போலும்!

   சின்ன அத்தை வீட்டில் மாடு இருக்கும் அப்படி கவனிப்பார்கள். மதுரை முழுவதும் திறந்தவெளியில் மாடுகள் நிற்கிறது அதற்கு என்று கொட்டகை கிடையாது.
   கோலத்தை பாராட்டியதற்கு நன்றி.


   நீக்கு
 7. மாலவனுக்கு சொந்தமான அந்த வெள்ளைப்பூ செம அழகு. நானும் பார்த்திருக்கேன். ஆனா பேர்தான் தெரில.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
   வெள்ளைப்பூ க்கு ஏதோ பேர் போட்டேன் முகநூலில் மறந்து விட்டது. கீதமஞ்சரி அவர்கள் இந்த பூவின் பேர் போட்டு இருந்தார்கள்.
   அந்த பதிவை முகநூலில் தேடினேன் உங்களுக்கு சொல்லிவிடலாம் என்று முடியவில்லை.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. நல்ல பதிவு...

  நாகரிகம் தலை விரித்தாடும் இந்தக் காலத்திலும் -
  இப்படியான பெண் பிள்ளைகள் கோயில் வாசலில் கோலம் போடுவதைக் கண்டு
  ஐயனாருக்கே மகிழ்ச்சியாக இருக்கும்..

  அவர்களுக்கு ஐயனின் அருள் என்றும் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்..

  மற்றபடிக்கு பல ஊர்களிலும் தெரு மேயும் கால்நடைகளின் கதி இதுவாகி விட்டது..

  முன்பெல்லாம் தங்கள் வீட்டில் மாடு இல்லையென்றாலும்
  கழுநீர் - சோறு வடித்த கஞ்சி இவற்றை வாளியில் நிரப்பி தெருவில் வைப்பார்கள்..

  பெரும்பாலும் வீடுகளில் பிரஷர் குக்கர் சோறாகிப் போன இந்தக் காலத்தில்
  மாடுகளின் வாழ்க்கை வற்றிப் போனது..

  பசுக்களும் சாணமும் அரிதாகிப் போயின...
  ஆனாலும் மூட்டை மூட்டையாய் திருநீறு விற்பனைக்கு வருகின்றது..

  எப்படி என்று புரியவில்லை!...

  அபரிமிதமாக புல்லுடன் வைக்கோலை தின்னும் மாடுகளின் சாணம் தான் எல்லாவற்றுக்கும் உகந்தது... கண்டதையும் தின்றுவிட்டு மாடுகள் கழிந்து வைக்கும் சாணம் எதற்கும் ஆகாது..

  வயல் வெளிகளில் இயந்திர அறுவடை... வைக்கோல் கூளமாகி விடுகின்றது..
  கூளத்தை மாடு தின்னாது....

  வீட்டைச் சுற்றிலும் ஊரைச் சுற்றிலும் என்னமோ ஆகி விட்டது..
  எதைச் சொல்வது?.. எதை விடுவது?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.

   //அவர்களுக்கு ஐயனின் அருள் என்றும் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்..//

   ஐயனார் மகிழ்ந்து வாழ்த்தட்டும் இந்த குழந்தைகளை.

   //முன்பெல்லாம் தங்கள் வீட்டில் மாடு இல்லையென்றாலும்
   கழுநீர் - சோறு வடித்த கஞ்சி இவற்றை வாளியில் நிரப்பி தெருவில் வைப்பார்கள்.//

   மாடு வைத்து இருப்பவர்கள் ஒரு கை சாணியை நம் வீட்டு வாசலில் வைத்து விட்டு கழுநீரை எடுத்து போவார்கள் முன்பு.

   இப்போதும் தங்கை வீட்டு வாசலில் வாளியில் கழுநீர் வைத்து விடுவாள் , வாழைபழம், கீரை என்று ஏதாவது அதற்கு கொடுத்து விடுவாள் தினம்.

   மதுரையில் நிறைய இடங்களில் வடித்த கஞ்சியும் பாத்திரத்தோடு வைக்கிறார்கள் குடிக்கிறது பசு.

   முன்பு வீட்டில் கட்டாமல் இப்படி திரிந்தால் பவுண்டில் அடைத்து விடுவார்கள். அப்புறம் பணம் கட்டி கூட்டி வர வேண்டும். இப்போது அப்படி இல்லை போலும்.

   பால்பண்ணையில் விபூதிக்கு சாணம் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன்.
   மேய்ச்சலுக்கு கூட்டி போகும் ஆட்களும் இல்லை. வயல்களும் நீங்கள் சொல்வது போல் இயந்திரமயமாய் ஆகிவிட்டது. மாடுகளுக்கு கூளமாகி போன வைக்கோல் சுவையற்றதாக ஆகிவிட்டது .
   நாட்டுமாடுகளும் இப்போது இல்லை, வெளிநாட்டு மாடுகள்தான் எல்லா இடங்களிலும் பார்க்கமுடிகிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. கோமதிக்காவின் பதிவைக் காணலியே கேட்கனும் என்று இருந்தேன் இன்று உங்கள் பதிவை பார்த்தேன்...வந்தாச்சு அக்கா என்று நினைத்துக் கொண்டேன்.

  ஐயனார் கோயில் வாசலில் கோலங்கள் போடும் கோதையர் ஆஹா!!! நிஜமாகவே அவர்களை எங்கள் சார்பிலும் பாராட்டிவிடுங்கள் இனி கண்டால்.

  அழகா போடுறாங்க. உங்கள் கோலம் ரொம்ப அழகா இருக்கு அக்கா..

  யானை அழகு!!! குட்டி யானை போல இருக்கே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா, ஊருக்கு ஒரு நாள்தான் காலையில் போனோம், இரவு வந்து விட்டோம். பதிவுகள் போட தோன்றாமல் இருந்தேன் கால் வலியில்.
   அவர்களை மீண்டும் பார்த்தால் பாராட்டி விடுகிறேன் உங்கள் சார்பிலும்.
   சின்னதாக போட்டு போட்டு பெரிய கோலம் போட கைவராது போல கீதா.
   குட்டி யானைதான். அதுதான் கோழியோடு விளையாடியது.
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 10. உங்கள் பதிவைப் பார்த்ததும் மார்கழி வந்துவிட்டது தெரிகிறது.
  அதிகாலையில் எழுந்து கோலம் போடும் அந்தப் பெண்குழந்தைகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
  யானை அழகோ அழகு.
  மாடுகள் தான் மிகப் பாவம். அந்த மாட்டுப் பாலைச் சாப்பிடுபவர்கள் கதி
  என்னாவது. வாழ்க நலம் கோமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   கோலம் போடும் குழந்தைகளை பாராட்டி வாழ்த்து சொன்னத்ற்கு நன்றி அக்கா.
   யானையை பக்கத்தில் போய் எடுத்து இருந்தால் நன்றாக இருக்கும், அது கட்டாமல் நின்று கொண்டு இருந்தது யானை பாகரும் பக்கத்தில் இல்லை அதனால் தூரத்திலிருந்தே எடுத்தேன்.
   இந்த மாடுகளின் பாலை குடித்தால் என்னாகும் என்பதும், மாடுகளுக்கு நோய் வருமே என்ற கவலையும் தான் மனதில்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 11. அந்நாளில் எங்கள் வீட்டிலும் மார்கழி மாதம் வாசலில் கோலமிட்டு சாணத்தை உருட்டி வைத்து அதன் மேல் பூ வைக்கும் வழக்கம் இருந்தது. வீட்டிலேயே பசுக்கள் உண்டு. இப்போது கிடைத்ததை உண்டு வாழும் அவற்றின் நிலைமை உங்கள் பதிவின் மூலம் அறிய வருகிறேன்.

  கோலமிடும் மங்கையர் மகிழ்ச்சி அளிக்கிறார்கள். உங்கள் கோலமும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது போல் இத்தனை பூக்கள் வைப்பது என்று போட்டி போட்டுக் கொண்டு வைப்போம். அதை தட்டி எருவாக்கி சிறுவீட்டுப்பொங்கல் வைப்போம். அந்த காலங்கள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்.
   மாடுகளை வீட்டில் வளர்த்த காலங்கள் போயின போல! பழைய கால வீடுகளில் மாட்டுதொழுவம் இல்லாத வீடு ஏது?
   கோலம் போடும் சிறுமிகளை கண்டால் மகிழ்ச்சிதான்.
   என் கோலத்தையும் பாராட்டியதற்கு நன்றி.
   பதிவுக்கு கருத்து சொன்னத்ற்கு நன்றி.

   நீக்கு
 12. கோமதி அக்கா இந்தப் போஸ்ட் என் கண்ணில் படவே இல்லை, அடுத்தடுத்துப் போட்டிருக்கிறீங்கபோல அதனால் நான் பார்க்க முன் இது உள்ளே போயிருக்கு, நான் இதுக்கு முந்தின போஸ்ட் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன் நல்லவேளை சொன்னீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   அடுத்த நாளே பதிவு போட்டேன் அதிரா.
   இன்று உறவினர் வீடு சென்று விட்டேன்., இப்போது தான் வந்தேன்.

   நீக்கு
 13. ஆனையார் எதுக்காம் கோழியைக் கலைக்கிறார்... விளையாடுறாரோ ஹா ஹா ஹா.
  அந்த சக்கரைப் பூசணி இலைகள் ...எவ்ளோ பொலூசன்.....
  வெள்ளைப்பூ புது அழகூ
  அந்த வெள்ளைப்பூ ஒரு ப்..

  பதிலளிநீக்கு
 14. ஆனையார் விளையாடுகிறார் கோழியோடு.
  சர்க்கரை இலைகள் பசுமை போய் அழுக்கடைந்து கருமை நிறமாய் மாறி விட்டது.
  வெள்ளைபூ அழகுதான் அதுதான் பகிர்ந்தேன்.
  கருத்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு