புதன், 14 நவம்பர், 2018

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்மகன் இந்த முறை நவராத்திரிக்கு  சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.
கந்தன் கருணையில் வரும் காட்சியை    முருகனும், சூரனையும்  பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து இருந்தான்.   நவீன பொம்மலாட்டம். கொலுவிற்கு வந்த குழந்தைகள் , பெரியவர்கள் ரசித்தனர். நீங்களும்
பார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கள்.
இன்று திருப்பரங்குன்றத்தில்  முருகனுக்கும், தேவயானைக்கும் திருமணம்.
தெய்வம் படத்தில்   திருமணக்காட்சி வரும் பாடல். பாடலை பாடியவர் பெங்களூர் ரமணி அம்மா அவர்கள்.

//குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
முருகப் பெருமானை


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் … கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா//


பாடல் வரிகள்   கிடைத்த இடம் தமிழ்பா என்ற வலைத்தளம் அவர்களுக்கு நன்றி.


தேவர்கள் குறை தீர அன்று தேவசேனாதிபதியாய், முடி சூட்டிக் கொண்ட சிங்கார வேலர் இன்று திருமணமகனாய்ச் சுந்தரக் கோலம் பூண்டார்.

//பொன்னான சுப முகூர்த்த வேளையில் பிரம்ம தேவன் திருமாங்கல்யத்தை பொற்தட்டில் வைத்து முருகப் பெருமான் தெய்வயானை தேவியாரின் திருக்கழுத்தில் திருமாங்கல்யத்தைத்தாரணம் செய்தார்.
திருமணச் சாலையில் எழுந்த வாழ்த்தோலி பிரபஞ்சமனைத்தும்  எதிரொலித்தது. எங்கும் பூமழை பொழிந்தது.//
- கந்தபுராணம்.


தெய்வானை முருகப்பெருமான் திருமணக் கோலம்.


திருமணத்திற்கு வந்தவர்கள் சாப்பிட்டுச் செல்லுங்கள்

உணவு அருந்திய பின் தாம்பூலம் தரித்துக் கொள்ளுங்கள்.

திருமணத்திற்கு வந்தவர்கள் தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்.

படங்கள் கூகுள் - நன்றி.நீலங்கொள் மேகத்தின்  மயில்மீதே நீ வந்த வாழ்வைக்  கண்டதனாலே
மால் கொண்ட பேதைக்குன்மண நாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப் பண் டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே!
                                                                    -திருப்புகழ்                                                         வாழ்க வளமுடன்
--------------------------------------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:

 1. குட் மார்னிங்.

  திருக்கல்யாண நாள். குன்றத்திலே குமரனுக்குப் பாடலின் உற்சாகமும், காட்சிகளும் மனதில் எழுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்., வாழ்க வளமுடன்.
   பாடலை ரசித்து காட்சியை மனகண்ணில் கண்டது மகிழ்ச்சி.

   இன்று காலை ஆறுமணிக்கு பதிவு செய்து விட்டு குடும்ப விழாவில் கலந்து கொள்ள போய் விட்டேன். தம்பி மகளுக்கு திருமணம் உறுதி செய்தல் விழா. மாலை தான் வந்தேன்.

   நீக்கு
 2. கல்யாணத்திருக்கோல தரிசனம்...

  வள்ளிக்குமரனின் மணநாள்... நம் வாழ்வின் சுடரொளிப் பெருநாள்...

  இந்த வரிகளும் மனதில் ஓடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இந்த பாட்டும் எனக்கும் தோன்றியது.
   இன்று தெய்வானை திருமணம் அதனால் அந்த பகிர்வு மட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. ஆட்டம் போட வைக்கும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...

  பக்கத்தில் விருந்தும்உண்டு தாம்பூலம் எடுத்துக் கொண்டேன் அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வனக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   ஆமாம், ஆட்டம் போட வைக்கும் பாடல்தான்.
   விருந்து உண்டு தாம்பூலம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. பெங்களூரு ரமணியம்மாள் பாடல் கேட்டு ரசித்தேன்.
  வாழைஇலை விருந்தும், உபசரிப்பும் ஸூப்பர் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
   பாடலை ரசித்து விருந்து உபசாரத்தை ஏற்று கொண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. கோமதிக்கா! வாவ்!! ஹையோ அசந்துவிட்டேன்...வியந்துவிட்டேன்....அருமையான படைப்பு, படைப்புத் திறன்... உங்கள் மகனின் திறமைக்கும், கற்பனைக்கும், உழைப்பிற்கும் வார்த்தைகளே இல்லை..அழகாக எடிட்டிங்க் செய்து அந்தக் காட்சிகளுக்கேற்ப பொம்மலாட்டம்...சூப்பர் சூப்பர் ரொம்பவே ரசித்தோம் அக்கா...மகன், மரும்கள், கவின் எல்லோருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்...அதில் அந்த வேலில் உங்கள் பெயர்கள் எல்லாம் வரும்படி செய்து ஆசிகளுடன் என்று தங்களது படைப்பைச் செய்ததும் அருமை...அழகான குடும்பம் நல்ல எண்ணங்களுடனான குடும்பம்.. இறைவன் எல்லோரையும் எப்போதும் நலமுடன் மகிழ்வுடன் வைத்திருக்கட்டும் பிரார்த்தனைகள்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   மகனின் பொம்மலாட்ட காணொளியைப் பார்த்து கருத்து சொன்னத்ற்கு நன்றி கீதா. எங்கள் இருவர் பேருடன் மருமகளின் அம்மா பேரும் போட்டு இருக்கிறார்கள்.
   உங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லி விடுகிறேன்.
   உங்கள் வாழ்த்தும், பிரார்த்தனைகளும் மகிழ்ச்சியை தந்தது கீதா.

   நீக்கு
 6. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டாம் பாடல் செம பப்ளி பாடல்...ரொம்ப உற்சாகமான பாடல்...மிகவும் பிடிக்கும்...சாப்பிட்டு, தாம்பூலம் எடுத்துக் கொண்டு முருகனின் அருளும் பெற்றோம் அக்கா...சூப்பர்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா, இந்த பாடலை ரசித்து கேட்டு, விருந்து உண்டு தாம்பூலம் எடுத்துக் கொண்டு முருகனின் அருளை பெற்றது மகிழ்ச்சி கீதா.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. முருகன் திருக்கல்யாணத்தை நேரில் கண்ட நிறைவு மா

  ...

  நவீன பொம்மலாட்டம். ..மிக சிறப்பு ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
   நவீன பொம்மலாட்டத்தை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 8. மிக மிக அருமையான பகிர்வு. அதுவும் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் என்னால் மறக்கவே முடியாத பாட்டு! இந்தப்பாடலுக்கு அதைக் கேட்டதுமே என் பெண் ஒரு வயசிலிருந்து அப்படி ஓர் ஆட்டம் ஆடுவாள்! அக்கம்பக்கம் அனைவரும் பார்த்து ரசிப்பதோடு இந்த மாதிரிக் குழந்தை ஆடுவது ஆச்சரியம் என்பார்கள். அந்த நினைவுகள் இப்போதும் மங்காமல் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   குழந்தைகள் விரும்பி ஆடினால் மகிழ்ச்சி தரும் எல்லோருக்கும்.
   ஒரு வயதில் ஆடினால் மேலும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தான்.
   மலரும் நினைவுகளை இந்த பாடல் தந்தது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. சில நேரங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது நீங்கள் சொன்னவுடன் சரி செய்து விட்டேன்.

   நீக்கு
 9. >>> குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!.. <<<

  குமரனுக்கு மட்டுமா!...

  நமக்கும் தான் கொண்டாட்டம்...

  காணவும் கேட்கவுமாக அருமையான பதிவு...

  அம்மா பெங்களூர் ரமணியம்மாள் பாடல்களைக் கேட்டாலே ஆட்டம் தன்னால் வரும்...

  அந்தக் காலத்தில்
  சூலமங்கலம் சகோதரிகள், பெங்களூர் ரமணியம்மாள், TMS, சீர்காழியார்
  - போன்ற மதிப்புக்குரியவர்களால் பக்தியும் அதனால் நல்லொழுக்கமும் மேம்பட்டன...

  இன்றைக்கு - திரைப்படப் பாடல்களை விடுங்கள்...

  பக்திப் பாடல்களைக் கூட காது கொடுத்துக் கேட்க முடியாதபடிக்கு இரைச்சல்...

  ஒரே ராகத்தில் - மெட்டில் ஏழெட்டு பாடகர்கள் ஒரே விஷயத்தை பாடி வைக்கிறார்கள்...

  ஸ்ரீமதி அனுராதா பட்வால் அவர்களின் - ஓம் ஜகதீஷ் ஹரே என்ற பாடலின் மெட்டிலும்
  காயத்ரி மந்திரத்தின் சந்தத்திலும் எத்தனை எத்தனை பாடல்கள்!...

  அவை அத்தனையும்
  சூலமங்கலம் சகோதரிகள், பெங்களூர் ரமணியம்மாள், TMS, சீர்காழியார் - ஆகியோர் பாடிய பாடல்களுக்கு முன் நிற்கவே முடியாது!...

  சூலமங்கலம் சகோதரிகள், TMS, சீர்காழியார் - மூவரது கச்சேரிகளையும் கேட்டு மகிழ்ந்த பெருமை நம்முடையது!...

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   ரமணி அம்மா பாடல் ஆட சொல்லும் பாடல்தான்.
   நீங்கள் சொல்வது சரிதான். நம் காலம் மிகவும் இனிமையானது.
   இனிமையாக் பாடுபவர்கள், பாட்டு வரிகளை எழுதியவர்கள், இசை அமைத்தவர்கள் என்று காலத்தால் அழியாத என்றும் நிலைத்து இருக்கும் புகழை பெற்றவர்கள்.
   நாமும் அவர்கள் புகழ் பாடி மகிழ்வோம்.
   நீங்கள் சொன்னது போல் புதிதாக வந்த பக்தி பாடல்களை கேட்க பிடிக்கவில்லைதான்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. வீடியோவில் பொம்மலாட்டம் பெரிதாக புரியவில்லை.

  எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  திருக்கல்யாணம் அழகு.. ஊரில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன், சூப்பராக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தது மகிழ்ச்சி.

   பொம்மலாட்டம் என்பது மேலே கயிரு வைத்து காட்டுவது இல்லை, இது பப்பட் ஷோ போல் கையால் செய்யாமல் முருகனையும், சூரனையும் மோட்டார் வசதியால் சுற்றி சுற்றி வர செய்து இருக்கிறான், புகை வர செய்து இருக்கிறான் அது தான் அதில் விசேஷம். வசனம் வரும் சமயம் ரிமோட் மூலம் அவர்களை அங்கு நிற்க வைப்பதும் செய்து இருக்கிறான். சிறிய முயற்சிதான் ஷோ.

   திருமணத்தை நேரில் பார்ப்பது கண்கொள்ளாகாட்சிதான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. பொம்மலாட்டம் மிக அருமை. எடிட்டிங் வெகு சிறப்பு. ரசித்தேன்.

  பாடலும் பதிவும் படங்களுமாக வழக்கம்போலவே பகிர்வு வெகு நன்று.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  பொம்மலாட்டத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  கருத்துக்கள் அவனை மேலும் நன்றாக செய்ய ஊக்கம் அளிக்கும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 13. குன்றத்தில் மணம்செய்தவருக்கும் பங்கு கொண்டவருக்கும் கொண்டாட்டம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

   நீக்கு
 14. குழந்தைகள் எது செய்தாலும் ஊக்கப்படுத்த வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது உண்மை.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

   நீக்கு
 15. கவின் கலையரங்கின் காணொளியினை இன்று தான் காண முடிந்தது...

  அறுபடை அழகனின் பெருமையை
  ஐந்து நிமிடத்தில் கவினுறக் காட்டியது - காணொளி...

  மெய்மறந்து போனேன்!..
  அருமை.. அபாரம்...

  முருகன் திருவருள் முன்னின்று காக்கும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   கவின் கலையரங்கின் காணொளியை கண்டது மகிழ்ச்சி.

   உங்கள் வாழ்த்துக்களும், பாராட்டும் அவனுக்கு மகிழ்ச்சி தரும்.
   சொல்கிறேன் மகனிடம்.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 16. கவின் கலையரங்கத்தின் காணொளி மிகச் சிறப்பு.

  குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - ஆல் டைம் ஃபேவரைட் பாடல். என்ன குரல் வளம்.

  சற்றே தாமதமாகவே இங்கே வர முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
   காணொளி பார்த்தது மகிழ்ச்சி.
   ரமணி அம்மாவின் குரல்வளம் கடவுள் கொடுத்த வரம்.
   முடிந்த போது வாருங்கள் வெங்கட்.
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு