லில்லி மலர்கள்
மலர்கள் தரும் ஆனந்தம் சொல்லி முடியாது. மார்கழி மாதம் காலை வேலையில் இறைவழிபாடு, இளம் குளிரில் மலர்களின் ஆனந்த காட்சி மனதுக்கும் உடலுக்கு புத்தண்ர்வு கொடுக்கும்.
காலை எங்கள் வளாகத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கி அப்படியே எங்கள் குடியிருப்பு மலர்களை பார்த்து கொண்டு (ஒரு வலம் வந்து) வீட்டுக்கு வந்து விடுவேன்.
மார்கழி மாதம் கோவில்களுக்கு போய் வருவேன் முன்பு. இப்போது வளாகத்தில் இருக்கும் பிள்ளையாரை மட்டும் வணங்கி வருகிறேன் மார்கழி ஆராதனையாக.
இந்த பதிவில் வளாகத்தில் கீழ் வீட்டில் இருப்பவர்கள் வைத்து இருக்கும் செடிகளில் மலர்ந்து இருக்கும் மலர்களின் படங்கள் இடம்பெறுகிறது.
மலர்களை தூவி இறைவனை வணங்கும் அடியார்கள் பாமாலையுடன், பூமாலையை அணிவித்து அழகு பார்ப்பார்கள்.
//பூவார்மலர்கொண்டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்றதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல், அண்ணாமலையாரே//
- திருஞானசம்பந்தர் அருளியது
//தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்டல் ஆருயிர் ஆய தன்மையர்
கண்டனார் கருவூருள் ஆனிலை
அண்டனார் அருல் ஈயும் அன்பரே//
- திருஞானசம்பந்தர் நாயனார் அருளியது
//வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மல்ர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!//
- திருநாவுக்கரசு நாயனார் அருளியது
//பெற்றார் தளை கழல் பேர்த்து ஓர் குறள் உருவாய்
செற்றார் படி கடந்த செங்கண்மால் நல் தா
மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று//
- பொய்கை ஆழவார் அருளிய - முதல் திருவந்தாதி
//வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் -செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.//
- பொய்கை ஆழவார் அருளியது
கனகாம்பரம் இரண்டு வகை
வெள்ளை அரளி
ஆரஞ்சு வண்ண ரோஜா
மணம் அதிகமுள்ள ஜாதிப்பூ
Yellow alder இந்த மஞ்சள் மலர் மகிழ்ச்சி அலையை பரப்பும்
மஞ்சள் ரோஜா
லில்லி மலர்கள் பல வண்ணத்தில் உண்டு இவை இரண்டு மூன்று நாள் வாடாமல் இருக்கிறது. ஒவ்வொரு இதழாக கீழே விழுகிறது.
இதழ்கள் கீழே விழுந்து குச்சியாக நிற்கிறது பாருங்கள்.
மலர்களிடம் நெருங்கி பழகும் மனிதர்கள் இருக்கிறார்களா? இருக்க முடியும், இருக்ககூடும் . இத்தையக அனுபவம் குழந்தைகளிடம் இருக்கவே இருக்கிறது என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல கீழ் வீட்டுக்குழந்தை செடிகளுக்கு தண்ணீர் விடுகிறாள் மகிழ்ச்சியாக. இவள் மகிழ்ச்சி பூக்களாக பூத்து அவையும் இந்த குழந்தையைப்பார்த்து சிரிக்கிறது.
என் குட்டித் தோழி இவள். நான் பிள்ளையாரை மாலை வேளைகளில் சுற்றி வரும் போது என்னுடம் சேர்ந்து சுற்றி வருவாள், என்னைப்பார்த்தவுடன் மலர்ந்த முகத்தோடு ஓடி வருவாள் மலர் செண்டு போல.
ஸ்ட்ராபெர்ரி மரம் என்கிறார்கள். பூக்கள் பூத்து மறுநாள் ரோஸ் வண்ண பொடியாக உதிர்ந்து மணம் பரப்புகிறது பக்கத்து குடியிருப்பு மரம். ஸ்டாராபெர்ரி கலரில் மரம் ஆப்பிள் பழம் போல சுவையுடைய சிறு பழம் இருக்கும் என்கிறார்கள். நான் பார்த்தது இல்லை.
அந்த மரத்தில் பூத்த பூ கைபேசியில் எடுத்த படம்.
பக்கத்து குடியிருப்பு முருங்கை மரம் எங்கள் வளாகத்தில் சுதந்திர தினம் அன்று நடப்பட்ட (புன்னை மரம் என்று நினைக்கிறேன்) மரத்தின் மேல் முருங்கை பூக்களை உதிர்த்து நன்றாக வளர்வாயாக ! என்று ஆசீர்வாதம் செய்வது போல இருக்கிறது.
எங்கள் குடியிருப்பில் வைத்து இருக்கும் பன்னீர் மலர்கள்
இந்த மலரை மரமல்லி என்கிறார்கள் . நாங்கள் இந்த மரத்தை பன்னீர் மரம் என்று தான் சொல்வோம்.
அதிகாலை அதன் மணம் மனதுக்கு இதம் தரும்.
இந்த மரத்தையும் பன்னீர் புஷ்ப மரம் என்று சொல்வார்கள்.
மாயவரத்தில் எங்கள் குடியிருப்பில் இருந்தது. இதன் பூவும் மிக வாசமாக இருக்கும். இதன் இலையை என் மாமனார் சிவபூஜைக்கு பயன்படுத்துவார்கள். திருச்செந்தூரில் இந்த இலையில் சிறப்பாக இலை விபூதி என்று கொடுப்பார்கள்.
இந்த மரத்தில் வந்து அமர்ந்து தேன் குடிக்கும் தேன்சிட்டுகளை முன்பு படம் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன்.
இந்தமலர்கள் பூத்து குலுங்கி புதிதாக இருக்கும் போது அனைவரையும் மகிழ்ச்சி படுத்துகிறது.இவை உலர்ந்த பின் செடிகளுக்கு உரமாக்கலாம்.
//மண் எதை நம்மிடம் கொடுத்ததோ அதை மீண்டும் மண்ணிடம் கொடுத்து விட வேண்டும். இல்லையேல் மண் ஏழ்மையுற்றுவிடும்.//
மலர்கள் உறவாடும் எண்ணங்களை போல
எண்ணங்கள் போலவே அவையும் எண்ணற்றவை.
உவகைக்குரிய கூட்டாளிகள்.!
மனம் சார்ந்த இணைப்புக்கு பூக்களின் நேசம் உதவும்.
- ஸ்ரீ அரவிந்த அன்னை
நீங்களும் எடுத்து கொள்ளுங்கள்
தம்பி வருட வருடம் புதுவருட காலண்டர், கேக் கொண்டு வந்து கொடுத்து வாழ்த்து சொல்லி செல்வான். இந்த ஆண்டு பழனி, குருவாயூர் சென்று வந்தான் அதனால் பஞ்சாமிர்தம், அரவணை பாயாசம் கிடைத்தது . பழனி முருகன்,குருவாயூர் கண்ணன் பிரசாதங்கள் கிடைத்தது மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவன் இந்த வருடம் மகள் வீட்டுக்கு பொங்கலுக்கு போவதால் முன்பே பொங்கல் சீரும் கொடுத்து விட்டான்.
இன்று இரவு எங்கள் குடியிருப்பில் புதுவருட விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அது அடுத்த பதிவில் வரும்.
இறைவன் பாடல்கள் , சினிமா பாடல்கள் பழசு, புதுசு என்று நேயர் விருப்பமாக பாடினார்கள். குழந்தைகள் ஆடல் , பாடல் என்று நிகழச்சி நன்றாக இருந்தது.
இணையம் தந்த தாமரை மலர் கோலம். நான் போட்ட மார்கழி கோலங்கள் இன்னொரு பதிவில் இடம்பெறும்.
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
மற்றும் உலக மக்கள் அனைவரும் நலமோடும், வளமோடும் வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? எப்படியுள்ளீர்கள்? அருமையான பதிவு. பக்தி மிகுந்த பாடல்களுடன் மலர்களின் அழகான படங்கள் கண்களையும், மனதையும் கவர்கிறது. விதவிதமான மலர்களை பார்ப்பதென்றால் மனதுக்கும், உடலுக்கும் எப்போதும் ஒரு உற்சாகந்தான். அத்தனை படங்களும் மிக அழகாக இருக்கிறது. தங்கள் குட்டித் தோழிக்கும் நல்வாழ்த்துகள்.
நாங்கள் இறைவனருளால், கோவில் தரிசனத்திற்கு சென்று இனிதான பல கோவில்களுக்கும் சென்று சென்ற வாரத்திலேயே நலமாக வீடு திரும்பி விட்டோம். இப்போது ஆங்கில வருடப் பிறப்பிற்காக வீட்டில் கண் முழித்து காத்திருந்த போது நம் எபியில் சகோதரர் நெல்லைத் தமிழர் என்னைப்பற்றி அக்கறையுடன் அன்பாக விசாரித்திருந்தை கண்டு படித்து அவருக்கும் ஒரு கருத்தை தந்தேன். அப்படியே என் நண்பர்கள் பக்கத்தில் வந்த உங்கள் பதிவையும் கண்டு படித்து புத்தாண்டின் துவக்கமான இந்த அருமையான பொழுதில் அழகான மலர்களின் தரிசனம் பெற்றேன்.
அழகாக மலர்ந்து வந்த இந்தப் புத்தாண்டு இவ்வினிய மலர்களைப் போல நல்ல வாசத்துடன் உலக மக்கள் அனைவருக்கும் நல்லபடியாக மணம் வீசி பரப்ப வேண்டுமெனவும், அனைவரையும் எல்லா நலத்துடன் வைத்திருக்க வேண்டுமெனவும், இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் தங்கள் பதிவுக்கும், தங்களது அன்பான புத்தாண்டு வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
தங்களுக்கும், தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் தெரிவியுங்கள். தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹறிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குதங்கள் குட்டித் தோழிக்கும் நல்வாழ்த்துகள்.//
பதிவை ரசித்து என் குட்டி தோழிக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
கோவில் தரிசனம் செய்து வந்தது மகிழ்ச்சி.
//அழகாக மலர்ந்து வந்த இந்தப் புத்தாண்டு இவ்வினிய மலர்களைப் போல நல்ல வாசத்துடன் உலக மக்கள் அனைவருக்கும் நல்லபடியாக மணம் வீசி பரப்ப வேண்டுமெனவும், அனைவரையும் எல்லா நலத்துடன் வைத்திருக்க வேண்டுமெனவும், இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் தங்கள் பதிவுக்கும், தங்களது அன்பான புத்தாண்டு வாழ்த்திற்கும் மிக்க நன்றி.//
அருமையாக சொன்னீர்கள். உங்கள் பிராத்தனைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
//தங்களுக்கும், தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் தெரிவியுங்கள். தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.//
சொல்கிறேன் என் மகன்,மகள் குடும்பத்தினருக்கு.
உங்கள் அருமையான விரிவான கருத்துக்கு நன்றி.
மலர்கள் பற்றிய பதிவு என்றதுமே எனக்கு பாண்டிச்சேரி அன்னைதான் நினைவுக்கு வந்தார். "மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.. பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே" பாடல் மனதினில் ஓடத்தொடங்கியது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்கள் பற்றிய பதிவு என்றதுமே எனக்கு பாண்டிச்சேரி அன்னைதான் நினைவுக்கு வந்தார். "மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.. பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே" பாடல் மனதினில் ஓடத்தொடங்கியது.//
எனக்கும் மலர்களை கண்டால் இறைவனுக்கு சமர்மணம் செய்ய சொன்ன அன்ணையின் நினைவுதான் வரும். இறைவனின் படைப்பில் மலர்கள் நமக்கு மகிழ்ச்சியை தர இறைவனால் படைக்கப்பட்டது . அதை அவருக்கே படைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.
பாட்டுக்குள் போட ஆசை, பதிவு நீண்டு போகிறது. அதனால் பாடல் பகிரவில்லை.
"மலர்கள் நனைந்தன பனியாலே.. என் மனமும் குளிர்ந்தது தமிழாலே.." நீங்கள் பகிர்ந்துள்ள மலர் பாசுரங்களை படித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குதேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்த பாடல்களில் மலர்கள் நிறைய இடம்பெறுகிறது சிறு துளிதான் நான் கொடுத்தது.
நீக்குஇசை பிரியர்களுக்கு மலர் பாடல்கள் நினைவுக்கு வரும் தான்.
நான் மலர் பாடல்கள் என்ன என்ன உங்களுக்கு தெரியும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றால் முதலில் நீங்கள்தான் பகிர்வீர்கள்.
முதலில் அப்படி நினைத்தேன், அப்புறம் அதை கேட்கவில்லை.
நீங்கள் பகிர்ந்துள்ள மலர்களின் படங்களைக் கண்டு மனதுக்குள் "மலர்களில் பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்" என்று பாடிக்கொண்டேன்!
பதிலளிநீக்குநீங்கள் பகிர்ந்துள்ள மலர்களின் படங்களைக் கண்டு மனதுக்குள் "மலர்களில் பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்" என்று பாடிக்கொண்டேன்!//
நீக்குஇன்று காலை ரேடியோவில் இந்த பாடலை கேட்டேன் முன்பு மலர்கள் படம் போட்ட பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருக்கிறேன்.
மலர்கள் படம் போடும் போது இந்த பாடலும் நினைவுக்கு வந்தது.
லில்லி மலருக்கு கொண்டாட்டம்... , ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக செண்பகத்தை வாங்கி வந்தேன், என்று ஒவ்வொரு படத்தைக் காணும்போதும் பாடல்கள் மனதில் வரிகட்டுகின்றன!
பதிலளிநீக்கு//லில்லி மலருக்கு கொண்டாட்டம்... , ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக செண்பகத்தை வாங்கி வந்தேன், என்று ஒவ்வொரு படத்தைக் காணும்போதும் பாடல்கள் மனதில் வரிகட்டுகின்றன!//
நீக்குபாடல்கள் வரிசை கட்டுகிறதா? மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்தும் அருமை.
ஸ்ட்ராபெரி பெண்ணே.. சே.. ஸ்ட்ராபெரி பூக்கள் அருமை. அழகிய நிறம். முருங்கைப் பூக்கள் விழுந்தால் எடுத்து சுத்தப் படுத்தி வைத்துக் கொண்டால் சமையலுக்காகும். ரசத்தில் போடலாம்,சுவையான பொரியல் செய்யலாம்!
பதிலளிநீக்கு//ஸ்ட்ராபெரி பெண்ணே.. சே.. ஸ்ட்ராபெரி பூக்கள் அருமை. அழகிய நிறம். முருங்கைப் பூக்கள் விழுந்தால் எடுத்து சுத்தப் படுத்தி வைத்துக் கொண்டால் சமையலுக்காகும். ரசத்தில் போடலாம்,சுவையான பொரியல் செய்யலாம்!//
நீக்குபாடல் நினைவுக்கு வந்து விட்டதா? முருங்கை பூ குறிப்புகள் அருமை.
நான் மாயவரத்தில் இருக்கும் போது பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் முருங்கைபூ கொடுத்து இருக்கிறார்கள் செய்து இருக்கிறேன்.
இங்கு வேப்பம் பூ, முருங்கை பூ எல்லாம் வீணாகி போகிறது யாரும் சேகரிப்பது இல்லை.
நன்றி மலர்களின் அழகிய தொகுப்போடு மனம் மலரச் செய்து விட்டீர்கள். இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//நன்றி மலர்களின் அழகிய தொகுப்போடு மனம் மலரச் செய்து விட்டீர்கள். இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//
நீக்குஆமாம், அன்னை சொல்வது போல அன்பும், நேசமும் தரும் தாவரங்களுக்கு நன்றி.
உங்கள் மனம் மலர்ந்தது மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
மலர்கள்.... அழகிய தொகுப்பு.
பதிலளிநீக்குகனகாம்பரப் படங்கள், எங்கள் வீட்டில் இருந்த பச்சை கனகாம்பரச் செடிகளை நினைவுபடுத்தியது
வணக்கம் நெல்லைத்தமிழன் , வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்கள்.... அழகிய தொகுப்பு.//
நன்றி.
//கனகாம்பரப் படங்கள், எங்கள் வீட்டில் இருந்த பச்சை கனகாம்பரச் செடிகளை நினைவுபடுத்தியது//
எங்கள் வீட்டிலும் பச்சை கனகாம்பரம் இருந்தது. முன்பு பதிவு செய்து இருக்கிறேன். மகன் ஊருக்கு போன போது எல்லா பூத் தொட்டிகளையும் உறவினர்களுக்கு கொடுத்து விட்டேன்.
இப்போது பூச்செடிகள் இல்லை.
பழனி பஞ்சாம்ருதம் வந்தது விசேஷம்தான். ஸ்ட்ராபெர்ரி மரமும் அதன் மலர்ப்பொடிகளும் மனதைக் கவர்ந்தன
பதிலளிநீக்கு//பழனி பஞ்சாம்ருதம் வந்தது விசேஷம்தான்.//
நீக்குபுதுவருடத்திற்கு இறைவனின் பிரசாதம் கிடைத்தது மகிழ்ச்சியை தந்தது. (என் கணவரின் இஷ்ட தெய்வத்திடமிருந்து )
ஸ்ட்ராபெர்ரி மரமும் அதன் மலர்ப்பொடிகளும் மனதைக் கவர்ந்தன//
மரங்கள் தன் பூக்களை கீழே உதிர்க்கும் போதும் கூட மகிழ்ச்சி தருகிறது.
பன்னீர் புஷ்ப மரங்களின் படங்களை பஹ்ரைனில் எடுத்திருக்கிறேன். வாய்ப்பு வரும்போது பகிர்கிறேன்.
பதிலளிநீக்கு//பன்னீர் புஷ்ப மரங்களின் படங்களை பஹ்ரைனில் எடுத்திருக்கிறேன். வாய்ப்பு வரும்போது பகிர்கிறேன்.//
நீக்குபன்னீர் புஷ்பம் படம் உயரம் அதிகமாக இருக்கிறது, கைபேசியில் எடுத்தேன். காமிரா கொண்டு போய் எடுத்தால் நன்றாக இருக்கும்.
நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நான் போட்ட பன்னீர் மரம் இல்லை.மரமல்லி என்கிறார்கள்.
நீக்குநாங்கள் அதை பன்னீர் மரம் என்று தான் அழைப்போம்.
மாயவரத்தில் இருந்த குடியிருப்பில் பன்னீர் மரம் இருந்தது. அதன் படம் ஒரு பதிவில் போட்டு இருக்கிறேன். எடுத்து போடுகிறேன், என் மாமனார் சிவபூஜைக்கு அந்த இலைகளை(பத்திரம் என்று சொல்வார்கள்) பறிப்பார்கள். அதன் பூ சிறிது நேரத்தில் கறுத்துப்போய் விடும். காலை மணம் வீசும். உதிருந்து விட்டால் கறுத்து போய் விடும்.
நான் போட்டு இருக்கும் படத்தை பாருங்கள் அதைதான் பஹ்ரைனில் எடுத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
/// மலர்கள் தரும் ஆனந்தத்தைச் சொல்லி முடியாது.. ///
பதிலளிநீக்குஉண்மை..
உண்மை..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉண்மை..
உண்மை..//
ஆமாம்.
பதிவில் திருப்பாசுரங்களையும் இணைத்து பூக்களின் பெருமையைச் சொல்லி இருப்பது சிறப்பு..
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
//பதிவில் திருப்பாசுரங்களையும் இணைத்து பூக்களின் பெருமையைச் சொல்லி இருப்பது சிறப்பு..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..//
நிறைய பாடல்கள் இருக்கிறது, சிறு துளிதான் பகிர்ந்து இருக்கிறேன். நன்றி.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குவாழ்க நலம் என்று நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்..
நீக்குவாழ்க நலம் என்று நல்வாழ்த்துகள்.//
நன்றி, நன்றி.
அழகிய படங்களுடன் கவிதையாகப் பதிவு..
பதிலளிநீக்கு//அழகிய படங்களுடன் கவிதையாகப் பதிவு..//
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்! லில்லி மலர் அழகு! வசீகரமாக இருக்கின்றது முதல் படமே!
பதிலளிநீக்குமீண்டும் வரேன் அக்கா. அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//லில்லி மலருக்குக் கொண்டாட்டம்! லில்லி மலர் அழகு! வசீகரமாக இருக்கின்றது முதல் படமே!//
உங்களுக்கும் பாடல் நினைவுக்கு வந்து விட்டதா?
//மீண்டும் வரேன் அக்கா. அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.//
வாங்க மெதுவா அழைப்புகளை ஏற்று உரையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணம்.
மலர்களின் படங்கள் உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருந்தது.
பதிலளிநீக்குபடங்கள் எடுத்து விதம் அருமை
தங்களுக்கு 2024-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்களின் படங்கள் உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருந்தது.//
மகிழ்ச்சி.
//படங்கள் எடுத்து விதம் அருமை
தங்களுக்கு 2024-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜி.
மலர்களே மலர்களே இது என்ன சுகமா பாட்டு நினைவுக்கு வந்தது. மலரே மௌனமாய்....அது ரொம்பப் பொருத்தம். மலர்கள் அனைத்தும் மௌனமாக ஒரு மொழியை நமக்குப் பரப்புகின்றன. ஆமாம் மகிழ்ச்சி! ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு விதத்தில் அழகு.
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் ரொம்ப அழகுகோமதிக்கா. ரோஜா, வெவ்வேறு கலர் லில்லி மலர்கள்! ரொம்ப அழகு.
பூக்கள் அனைத்தையும் ரசித்தேன்
கீதா
//மலர்களே மலர்களே இது என்ன சுகமா பாட்டு நினைவுக்கு வந்தது. மலரே மௌனமாய்....அது ரொம்பப் பொருத்தம். மலர்கள் அனைத்தும் மௌனமாக ஒரு மொழியை நமக்குப் பரப்புகின்றன. ஆமாம் மகிழ்ச்சி! ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு விதத்தில் அழகு.//
நீக்குஆமாம் கீதா மலர்கள் மெளனமாய் தலையாட்டி நம்மை அழைக்கும்,
நம்முடன் உரையாடும் மெளனமாய். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். இன்னொரு பூ பகிர மறந்து விட்டேன். அது மிகவும் அழகு, இறைவன் மிக அழகு உணர்ச்சி உடையவன் என அந்த மலரை பார்த்தால் தெரியும். இன்னொரு சமயம் அதை பகிர்கிறேன்.
//படங்கள் அத்தனையும் ரொம்ப அழகுகோமதிக்கா. ரோஜா, வெவ்வேறு கலர் லில்லி மலர்கள்! ரொம்ப அழகு.
பூக்கள் அனைத்தையும் ரசித்தேன்//
பதிவை ரசித்து அழகான கருத்துக்களுக்கு நன்றி.
ஸ்ட்ராபெர்ரி மரமா....உதிர்ந்த பூக்களின் நிறம் அப்படி இருந்தாலும்....இப்படி இன்னும் உதிர்ந்தால் ஏதோ கார்பெட் விரித்தது போல இருக்கும் இல்லையா? இதுவே அழகா இருக்கு. மெலிதான பூ போல. துகள் போல வீழ்ந்திருக்கே.
பதிலளிநீக்குகடைசியில் மணம் பரப்பும் பூ சட்டென்று பெயர் நினைவுக்கு வர மாட்டேங்குது. ஆமா இது ரொம்ப மணமா இருக்கும். பனீர் பூ இல்லை ஆனால் அதன் குடும்பமோ என்று நினைக்கிறேன். இதன் பெயர் டக்கென்று மனதில் கிடைக்கவில்லை.
புதுவரட தினத்தில் பிரசாதம் கிடைத்தது மகிழ்ச்சி. தேவாரம் திருவாசகம், பிரபந்தம் பாடல்கள் பகிர்ந்தது பொருத்தம்.
மலர்கள் என்றாலே பாண்டிச்சேரி அன்னைதான் நினைவுக்கு வருவார்!
கீதா
//ஸ்ட்ராபெர்ரி மரமா....உதிர்ந்த பூக்களின் நிறம் அப்படி இருந்தாலும்....இப்படி இன்னும் உதிர்ந்தால் ஏதோ கார்பெட் விரித்தது போல இருக்கும் இல்லையா? இதுவே அழகா இருக்கு. மெலிதான பூ போல. துகள் போல வீழ்ந்திருக்கே.//
பதிலளிநீக்குஆமாம், இன்னும் உதிருந்தால் நீங்கள் சொல்வது போல கார்பெட் போல தான் இருக்கும்.
//கடைசியில் மணம் பரப்பும் பூ சட்டென்று பெயர் நினைவுக்கு வர மாட்டேங்குது. ஆமா இது ரொம்ப மணமா இருக்கும். பனீர் பூ இல்லை ஆனால் அதன் குடும்பமோ என்று நினைக்கிறேன். இதன் பெயர் டக்கென்று மனதில் கிடைக்கவில்லை.//
பன்னீர் பூ தான் கீதா, பன்னீர் புஷ்பம் வேறு. இரண்டுமே மரம் தான். இரண்டும் மணம் வீசும்.
பன்னீர் புஷ்ப இலை சிவ பூஜைக்கு ஏற்றது, திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி கொடுப்பார்கள். பன்னீர் பூ இல்லை முல்லை பூ இலை மாதிரி சின்னதாக இருக்கும்.
//புதுவரட தினத்தில் பிரசாதம் கிடைத்தது மகிழ்ச்சி. தேவாரம் திருவாசகம், பிரபந்தம் பாடல்கள் பகிர்ந்தது பொருத்தம்.//
நன்றி.
//மலர்கள் என்றாலே பாண்டிச்சேரி அன்னைதான் நினைவுக்கு வருவார்!//
ஆமாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
இந்த மரத்தை மரமல்லி என்று சொல்கிறார்கள் கீதா. நாங்கள் அதன் வாசத்தை வைத்து பன்னீர் பூ என்றுதான் சொல்வோம்.
நீக்குஓ மரமல்லின்னு சொல்றாங்களா? அக்கா இந்த ப்பூ மரம் சென்னையில் எங்க மாமியார் மாமனார் வீட்டில் இருந்தது. மாமனார் தினமும் இத பறிச்சு சாமிக்கு வைப்பாங்க. ஸ்டூல் போட்டுக் கூட, பறிப்பாங்க. நாங்க பயப்படுவோம்.
நீக்குகீழ விழுந்தா வாடிப் போய்விடும் ரொம்ப மென்மையான பூ. ரொம்ப சோர்ந்து சொங்கிப் போய் விழும். நாம எடுத்தா துவண்டு போயிருக்கும்.
கீதா
வாழ்த்துக் கோலம் சூப்பரா இருக்கு.
நீக்குஉங்கள் கோலங்களையும் பகிருங்கள் கோமதிக்கா.
கீதா
//ஓ மரமல்லின்னு சொல்றாங்களா? அக்கா இந்த ப்பூ மரம் சென்னையில் எங்க மாமியார் மாமனார் வீட்டில் இருந்தது. மாமனார் தினமும் இத பறிச்சு சாமிக்கு வைப்பாங்க. ஸ்டூல் போட்டுக் கூட, பறிப்பாங்க. நாங்க பயப்படுவோம்.//
பதிலளிநீக்குநாங்க மரமல்லி என்று சொல்வது வாசம் இல்லாமல் பிச்சிபூ போல ஒரு பூ இருக்கும் ஒரு வாசமும் இருக்காது. மாயவரத்தில் அதுதான் நிறைய கிடைக்கும் அதைதான் மர மல்லி என்று சொல்வோம்.
கூகுளில் தேடிய போது நான் போட்டு இருக்கும் மரத்தை சிலர் வெண் பூ, என்றும் மர மல்லி என்று சொல்கிறார்கள் மரத்தில் மிக வாசமாக பூத்து இருக்கும் பூ என்பதால். ஆனால் பன்னீர் மரம் தான் நாங்கள் சொல்வோம்.
இன்னொரு மாயவரத்தில் இருந்தது என்று போட்டு இருக்கிறேன் அல்லவா அதுதான் பன்னீர் புஷ்ப மரம்.
//கீழ விழுந்தா வாடிப் போய்விடும் ரொம்ப மென்மையான பூ. ரொம்ப சோர்ந்து சொங்கிப் போய் விழும். நாம எடுத்தா துவண்டு போயிருக்கும்.//
ஆமாம். மரத்திலிருந்து பறிப்பது கஷ்டமாக இருக்கும். மதியம், மாலை எல்லாம் அதுவாக கீழே விழும் விழுந்த கொஞ்ச நேரத்தில் நிறம் மாறிவிடும். வாசம் இருக்காது.
ஆனால் பன்னீர் மர பூ கீழே விழுந்தாலும் நல்ல மணம் பரப்பும்.
தாமரை கோலம் நன்றாக இருந்தது இந்த வருடமும் போட்டு இருந்தது அதனால் தான் பகிர்ந்தேன்.
நான் போட்ட கோலங்களை பதிவு செய்கிறேன். சின்ன சின்ன கோலங்கள் தான் கீதா.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மலர்களும் அந்த குட்டி குழந்தையும் மிகவும் அழகு! பன்னீர்ப்பூவைப் பார்த்து நிறைய வருடங்கள் ஆகி விட்டன! உங்களால்தான் இப்போது ரசிக்க முடிந்தது! அன்பு நன்றி!
பதிலளிநீக்குஏனோ இதையெல்லாம் பார்த்தபோது பவழமல்லிப்பூக்களும் மகிழம்பூவும் நினைவில் எழுந்தன. அவற்றையும் பார்த்து நிறைய வருடங்கள் ஆகி விட்டன!!
வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்களும் அந்த குட்டி குழந்தையும் மிகவும் அழகு! பன்னீர்ப்பூவைப் பார்த்து நிறைய வருடங்கள் ஆகி விட்டன! உங்களால்தான் இப்போது ரசிக்க முடிந்தது! அன்பு நன்றி!//
நேற்று பொம்மை போல இருந்தால் புது கவுன் அணிந்து நடனம் ஆடினாள். புதுவருட விழாவில்.
//ஏனோ இதையெல்லாம் பார்த்தபோது பவழமல்லிப்பூக்களும் மகிழம்பூவும் நினைவில் எழுந்தன. அவற்றையும் பார்த்து நிறைய வருடங்கள் ஆகி விட்டன!!//
பவழமல்லி என் மாமியார் வீட்டில் உண்டு. அவர்கள் தினம் மாலை கட்டி சுவாமி படங்களுக்கு போடுவார்கள். கோவிலுக்கு கொடுப்பார்கள்.
மகிழம்பூ வாசம் மிக நன்றாக இருக்கும் நீடூர் கோவிலில் தலவிருட்சம்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதால் இப்போது பல பூ மரங்களை நினைத்துப்பார்த்து கொள்ள வேண்டியதுதான். எங்கள் வளாகத்தில் வைத்து இருப்பதால் பார்த்து ரசிக்க முடிகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி அக்கா, ஆரம்பமே மலர்களோடு ஆரவாரமாக இருக்கிறீங்கள் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவணகம் முற்றும் அறிந்த அதிரா, வாழ்க வளமுடன்
நீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி அக்கா, ஆரம்பமே மலர்களோடு ஆரவாரமாக இருக்கிறீங்கள் மகிழ்ச்சி..//
உங்கள் வரவும், வாழ்த்தும் மகிழ்ச்சி அதிரா.
ஆரம்ப ஆண்டில் மலர் போல எல்லோரும் மகிழட்டும் என்று தான்.
இந்த பதிவு. மகிழ்ச்சியான் அதிராவை அழைத்து வந்து விட்டதே!
பறவைகள், மலர்கள் இவற்றை எல்லாம் பார்த்து ரசித்து முடியாது, ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வாசமும் ஒவ்வொரு அழகும் உண்டு, கடவுளை நினைத்து நான் வியக்கேன்!!!
பதிலளிநீக்குஅந்த லில்லி எனச் சொல்லிப் போட்டிருக்கும் மலர்கள், குளிர் நாட்டு மலர் அது நம் நாட்டில் வருவது கஸ்டம் என நினைக்கிறேன் அதனாலதான் மார்கழியில் மலருது. அவை இங்கு இருக்கு, இங்கெனில் பெரிய வீரியமாக வளர்ந்து சூப்பராக பூக்கும், பல கலர்களில் உண்டு.
//பறவைகள், மலர்கள் இவற்றை எல்லாம் பார்த்து ரசித்து முடியாது, ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வாசமும் ஒவ்வொரு அழகும் உண்டு, கடவுளை நினைத்து நான் வியக்கேன்!!!/ /
நீக்குநானும் இறைவனின் ரசனையை எண்ணி வியக்கிறேன்.
அழகான உலகை படைத்து அதில் அழகான மலர்கள், பறவைகளை படைத்ததற்கு நாளும் நன்றி சொல்லவேண்டும் இறைவனுக்கு.
//அந்த லில்லி எனச் சொல்லிப் போட்டிருக்கும் மலர்கள், குளிர் நாட்டு மலர் அது நம் நாட்டில் வருவது கஸ்டம் என நினைக்கிறேன் அதனாலதான் மார்கழியில் மலருது.//
வெகு விரைவில் பூத்து விட்டது. கொஞ்சநாள் முன் தான் வாங்கி வைத்தார்கள். தொட்டியில் இவ்வள்வு பெரிதாக பூத்து இருக்கு என்றால் தரையில் வளர்ந்தால் இன்னும் பெரிதாக பூக்கும்.
பல கலர்களில் நான் மகன், மகல் ஊரில் பார்த்து இருக்கிறேன்.
ஊட்டி, கொடைக்கனாலில் பூத்து இருப்பதை பார்த்து இருக்கிறேன்.
அவை இங்கு இருக்கு, இங்கெனில் பெரிய வீரியமாக வளர்ந்து சூப்பராக பூக்கும், பல கலர்களில் உண்டு.
செம்பரத்தை , அந்த வாசமுள்ள மல்லிகைப்பூ இங்கு நானும் முந்தின வீட்டில் வளர்த்தேன், பூக்கள் சுவாமிக்கு வைத்தேன்... அதை அங்கேயே விட்டுப்போட்டு வந்திட்டேன்:(...
பதிலளிநீக்குமுருக்கம்பூப் பார்க்க ஆசையாக இருக்கு, எங்கள் ஊரில்.. யாழ்ப்பாணத்தில் .. எனில் இந்த மழைக்காலத்தில் முருங்கையில் மசுக்குட்டி வந்திடும்[மயிர்கொட்டிப்புளு எனவும் சொல்வார்கள்], அதனால் யாரும் கிட்டப்போவதில்லை.. இப்போ எப்படியோ தெரியவில்லை.
//செம்பரத்தை , அந்த வாசமுள்ள மல்லிகைப்பூ இங்கு நானும் முந்தின வீட்டில் வளர்த்தேன், பூக்கள் சுவாமிக்கு வைத்தேன்... அதை அங்கேயே விட்டுப்போட்டு வந்திட்டேன்:(...//
நீக்குதோட்டகலையில் ஆர்வம் உள்ளவர்கள் நீங்கள் மறுபடியும் இந்த வீட்டில் வையுங்கள்.
//முருக்கம்பூப் பார்க்க ஆசையாக இருக்கு, எங்கள் ஊரில்.. யாழ்ப்பாணத்தில் .. எனில் இந்த மழைக்காலத்தில் முருங்கையில் மசுக்குட்டி வந்திடும்[மயிர்கொட்டிப்புளு எனவும் சொல்வார்கள்], அதனால் யாரும் கிட்டப்போவதில்லை.. இப்போ எப்படியோ தெரியவில்லை.//
இங்கும் வரும் முஷ்கொட்டை புழு என்பார்கள். முருங்கை மரத்துக்கு. அது மேலே ஏறி விட்டால் உடலில் அரிப்பு எடுக்கும். அப்போது மரத்தை வெட்டி விடுவார்கள். எரிப்பார்கள் அந்த புழுவை.
கேக் எடுத்துக் கொண்டேன், நானும் செய்தேனே வீடியோப் பார்த்திருப்பீங்கள்.. அனைத்தும் அழகு.
பதிலளிநீக்கு/கேக் எடுத்துக் கொண்டேன், நானும் செய்தேனே வீடியோப் பார்த்திருப்பீங்கள்.. அனைத்தும் அழகு.//
நீக்குபார்த்தேன் அதிரா. கிறிஸ்மஸ் அலங்கரங்களும் பார்த்தேன்.
அருமையாக இருந்தது.
முட்டையில்லா, பஞ்சு போல கேக் நன்றாக இருந்தது அதிரா.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
தலைப்போடு ஒத்துப் போகிறேன். அத்தனை அழகான மலர்கள்.. படங்கள்.. பதிவு.. ! உங்கள் குட்டித் தோழியைப் பற்றி முன்னரும் ஒரு பதிவில் சொல்லியிருந்த நினைவு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//தலைப்போடு ஒத்துப் போகிறேன். அத்தனை அழகான மலர்கள்.. படங்கள்.. பதிவு.//
நன்றி .
. ! உங்கள் குட்டித் தோழியைப் பற்றி முன்னரும் ஒரு பதிவில் சொல்லியிருந்த நினைவு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!//
ஆமாம், முகநூலில் அவள் செடிக்கு தண்ணீர் ஊற்றும் படம் போட்டு சொல்லி இருந்தேன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
மலர்கள் அழகு மட்டுமல்ல, துல்லியமும். ஓவியமோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்கள் அழகு மட்டுமல்ல, துல்லியமும். ஓவியமோ என்று தோன்றுகிறது.//
உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.