செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 5

பத்துமலை மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடு கோவில்.

ஜூன் 7ம் தேதி மகன் குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகனை தரிசனம் செய்து வந்தேன்.  அங்கு போய் வந்ததை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.

இந்த பதிவு நிறைவு பகுதி. இதில் அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் இடம்பெறுகிறது.

--------------------------------------------------------------------------------------------------

முன்பு பகிர்ந்த பதிவுகள்:-





மாலை நேரம், மழை மேகம் வந்து சிறு தூறல் போட ஆரம்பித்து விட்டது.

அழகிய வேலைப்பாடு , மேலே அலங்கார வளைவுக்குள் அழகிய பிள்ளையார்கள்  வடிவங்கள்.


முதலில் நடுநாயகமாக  பிள்ளையார் இருந்தார். அந்த  பிள்ளையார்  போன பதிவில் இடம்பெற்று விட்டார். அன்று சதுர்த்தி அவருக்கு அபிசேகம் செய்ய தயார் ஆகி கொண்டு இருந்தார்கள். ஹோமம் நடந்து கொண்டு இருந்தது.

பிள்ளையார் பக்கவாட்டில் ஆறுபடை முருகனுக்கும் சன்னதிகள் வரிசையாக இருந்தது. குருக்கள் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். 

  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்
  • பழனி
  • சுவாமிமலை
  • திருத்தணி
  • பழமுதிர்சோலை

ஆறுபடை வீடுகள் முருகன்கள் சன்னதி வரிசையாக இருக்கிறது.

                                    திருப்பரங்குன்றம்

                                           திருச்செந்தூர்

                                                       பழனி

சுவாமி மலை முருகனும், பழனி மலை முருகனும் கொஞ்சம் ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் குழப்பம். இருவர் கை  வேல் மட்டும் வித்தியாசமாக  இருக்கும். முருகனுக்கு பின்னால் சுவாமிமலை கோபுரம் தெரியும், பழனி முருகன் பின்னால் பழனி மலை தெரியும்.

சுவாமி மலை முருகனை கொஞ்சம் கிட்டத்தில் எடுத்த படம்


திருத்தணி

பழமுதிர்ச்சோலை

கோவில் பள பள என்று இருக்கிறது
கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது,   கல்யாணங்கள் நடக்கும் போலும்
மீனாட்சி சொக்கநாதர் திருமண கோலம்




அம்மன் சன்னதி என்று நினைக்கிறேன் மூடி இருந்தது
சுவரிலிருந்த ஓவியம்
தூண்கள், சிற்பங்கள் எல்லாம் அழகு


கஜபிஷ்டம் அமைப்பில் இருந்த பகுதியில்  சுற்றி  உற்சவர்களை வைத்து  இருந்தார்கள்.


நாங்கள் உள்ளே போன போது இப்படி மூடி இருந்தது  சிறிது நேரத்தில் திறந்து வைத்தார்கள்

சோமாஸ் கந்தர்

முருகன் வள்ளி தெய்வானை
மாரியம்மன்

உற்சவர் இருக்கும் எதிர் பக்கம் மேலே போக படிக்கட்டுக்கள் இருந்தன.



கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில் படிக்கட்டுக்கள் இருந்தன ,   மேலே சிவனும் அம்மனும் இருக்கிறார்கள். எனக்கு படி இறங்கி வந்த களைப்பு , அதனால் சன்னதி    திறந்து இருந்தால் வருகிறேன் என்றேன், மகன் போய் பார்த்து விட்டு மூடி இருக்கிறது சுவாமியை,  பார்க்க முடியாது என்று எதிரில் இருக்கும் நந்தியை மட்டும் படம்  எடுத்து வந்தான்.




மலையிலிருந்து இறங்கும் போது  கீழே இருக்கும் கோவிலும் கோவிலின் மேல் பகுதியில்  நந்தியும் தெரிந்தது. அதனால் மகனை மேலே போய் பார்த்து வர சொன்னேன். 

ஆடி கிருத்திகை 9 ஆம் தேதி என்பதால் 7ம் தேதி ஆரம்பித்தேன் முதல் பதிவை, அடுத்த கிருத்திகையில்  நிறைவு செய்து இருக்கிறேன். இன்று கிருத்திகை.

இத்துடன் பத்துமலை கோவில் நிறைவு அடைகிறது.
இன்று ஆசிரியர் தினம். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவும் இடம் பெறுகிறார்.

தந்தைதா யாவானும், சார் கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம் தமக் காவானும்- எந்த முயிர் 
தானாகு வானும் சரணாகு வானும்அருட்
கோனாகு வானும் குரு.
-
- குருவணக்கம்.

அருள் குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லை பிசைந்து தெய்வக்கனியாக மாற்றி அமைகக வல்லவன். என் உடல் , பொருள், ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகுக.
- தினசரி தியான புத்தக பகிர்வு.

என் கணவர், மாமனார் மற்றும்  அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வணக்கங்கள்.


எனக்கு குருவாக இருந்து சொல்லி தந்த   குடும்பம் , மற்றும் நட்புகளுக்கு , சொந்தங்களுக்கு நன்றி  நன்றி. 
வாழ்க்கையில் நாள் தோறும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் அனைவரும்  குருவே.


அடுத்து வேறு பதிவில் சந்திப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.

    விளக்கத்தோடு சொன்ன விதம் அருமை சகோ.

    சுவரில் ஓவியம் யானையும், காளையும் ஒரே தலை இராமேஸ்வரத்தை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.

      விளக்கத்தோடு சொன்ன விதம் அருமை சகோ.//

      நன்றி.

      இன்று ஆசிரியர் தினம் கடைசியில் வாழ்த்து சொல்லி இருக்கிறேன்.
      நட்புகளிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன். அதனால் அவர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும் சொல்லி இருக்கிறேன்.

      //சுவரில் ஓவியம் யானையும், காளையும் ஒரே தலை இராமேஸ்வரத்தை நினைவூட்டியது.//

      ஓ அப்படியா? நிறைய கோவில்களில் கல்லில் சிற்பமாக வடித்து இருப்பார்கள், மீனாட்சி அம்மன் கோவிலும் இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ

      நீக்கு
  2. பத்துமலை பயணக்கட்டுரை படங்களுடன் சிறப்பாக அமைந்தது. கொஞ்சம் கோயில் உருவான கதையையும் சேர்த்திருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஜெயக்குமார், சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

    //பத்துமலை பயணக்கட்டுரை படங்களுடன் சிறப்பாக அமைந்தது. கொஞ்சம் கோயில் உருவான கதையையும் சேர்த்திருக்கலாம்.//

    முதல் பதிவில் கோவில் யாரால் உருவானது என்று பகிர்ந்து விட்டேன் சார்.


    கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய திரு. கே தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த மலைக்கோவில்

    அவர்தான் கீழே அடிவாரகோவிலையும் கட்டி இருக்க வேண்டும்.
    மேலும் விவரம் தெரிந்தால் சொல்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...

    முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...

      முருகா சரணம்...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. கிருத்திகையில் தொடங்கி கிருத்திகையில் பதிவை முடிப்பதும் முருகன் அருள்தான். சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //கிருத்திகையில் தொடங்கி கிருத்திகையில் பதிவை முடிப்பதும் முருகன் அருள்தான். சிறப்பு.//

      ஆடி கிருத்திகைக்கு சிறப்பு பதிவாக பொட நினைத்து போட்டேன், ஆவணி கிருத்திகை நிறைவு செய்ய முடிந்து இருக்கிறது. எல்லாம் அவன் அருள்தான்.

      நீக்கு
  6. படங்கள் யாவும் அழகு.  கோவில் பளபளவென்று இருக்கிறது.  பின்னாட்களில் இந்தக் கோவில்கள்தான் பிரபலம் ஆகுமோ என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் அழகு. கோவில் பளபளவென்று இருக்கிறது. பின்னாட்களில் இந்தக் கோவில்கள்தான் பிரபலம் ஆகுமோ என்னவோ!//

      குகை கோவிலை பார்க்க வரும் கூட்டம் இவரையும் பார்த்து தானே போவார்கள். அறுபடை முருகன் விஷேச நாட்களில் சிறப்புகள் செய்வார்கள்.

      நீக்கு
  7. மேலிருந்து எடுத்திருக்கும் புகைப்படம் - வலது புறம் நந்தி கண்ணில் தெரிகிறார் - அருமையாய் இருக்கிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலிருந்து எடுத்திருக்கும் புகைப்படம் - வலது புறம் நந்தி கண்ணில் தெரிகிறார் - அருமையாய் இருக்கிறது. //

      நான் படி இறங்கும் போது அலைபேசியில் எடுத்த படம்.
      இந்த பதிவில் உள்ள படங்கள் எல்லாம் அலைபேசியில்தான் எடுத்தேன்.
      பெரிய நந்தி படம் மகன் அவன் அலைபேசியில் எடுத்து வந்தான் மேலே போய்.



      நீக்கு
  8. ஆறுபடை முருகனையும் வைத்திருக்கிறார்கள் .  படம் எடுத்து அழகாய் இங்கு பகிரநததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆறுபடை முருகனையும் வைத்திருக்கிறார்கள் .//

      ஆமாம், ஒரே இடத்தில் ஆறுபடைவீடுகளையும் தரிசனம் செய்த மன நிறைவு ஏற்படுகிறது நமக்கு.

      படம் எடுத்து அழகாய் இங்கு பகிரநததற்கு நன்றி.//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. முதல் படம் அழகு,கோமதிக்கா. இப்பகுதி குகைக்கு வெளியே இல்லையா? இப்பதான் அமைப்பு புரிகிறது. ஆனாலும் குகைக்குளேயே பெரிய இடம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல் படம் அழகு,கோமதிக்கா. இப்பகுதி குகைக்கு வெளியே இல்லையா? இப்பதான் அமைப்பு புரிகிறது. ஆனாலும் குகைக்குளேயே பெரிய இடம்தான்.//

      இது மலை அடிவாரம் கீதா. குகைகுகுள் இல்லை.
      முதல் படம் பார்த்தால் தெரியும் உங்களுக்கு.

      நீக்கு
  10. வேலைப்பாடு படங்கள் அழகு. வெளியிலும் இவ்வளவு பெரிய இடம் இருக்கிறதே......முந்தைய பதிவுகளில் உள்ள படங்களில் நீங்க சொன்னீங்க ஆறுபடை வீடு கீழே என்று ஆனால் அப்ப தெரியலை இப்ப பெரிய இடம் தெரிகிறது,

    தூண்கள் வேலைப்பாடு உட்பக்க வேலைப்பாடு ஹால் எல்லாம் செம அழகு. ஆமாம் பிள்ளையார் போன பதிவில் ..நினைவு இருக்கிறார்.
    ஆமா பழனி முருகனும். சுவாமிமலை முருகனும் பார்க்க ஒரே மாதிரி இருக்காங்க. சுவாமி மலை நான் சென்றதில்லை.

    கோவில் பள பள பார்க்கவே ஈர்க்கிறது. அப்படினா பராமரிப்பு எவ்வளவு இருக்கும் என்று தோன்றுகிறது. நல்லவிதமா பராமரிக்கறாங்க.

    சிற்பங்கள் எல்லாம் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேலைப்பாடு படங்கள் அழகு. வெளியிலும் இவ்வளவு பெரிய இடம் இருக்கிறதே......முந்தைய பதிவுகளில் உள்ள படங்களில் நீங்க சொன்னீங்க ஆறுபடை வீடு கீழே என்று ஆனால் அப்ப தெரியலை இப்ப பெரிய இடம் தெரிகிறது,//

      ஆமாம், நிறைய இடம் இருக்கிறது கோவிலுக்கு.

      //தூண்கள் வேலைப்பாடு உட்பக்க வேலைப்பாடு ஹால் எல்லாம் செம அழகு. ஆமாம் பிள்ளையார் போன பதிவில் ..நினைவு இருக்கிறார்.
      ஆமா பழனி முருகனும். சுவாமிமலை முருகனும் பார்க்க ஒரே மாதிரி இருக்காங்க. சுவாமி மலை நான் சென்றதில்லை.//

      பழனி முருகன் சின்ன உருவமாக இருக்கும், சுவாமிமலை முருகன் உயரமாக இருப்பார். அவரை இப்படி மொட்டை தலையுடன் நான் பார்த்ததே இல்லை எப்போது கீரீடம் அணிந்தே பார்த்து இருக்கிறேன்.

      //கோவில் பள பள பார்க்கவே ஈர்க்கிறது. அப்படினா பராமரிப்பு எவ்வளவு இருக்கும் என்று தோன்றுகிறது. நல்லவிதமா பராமரிக்கறாங்க.

      சிற்பங்கள் எல்லாம் அழகு//

      இப்போது புதிதாக புதுபித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


      நீக்கு
  11. படங்கள் செம, கோமதிக்கா. ஓவியமும், நந்தியும் அழகா இருக்கு....படிகளில் இறங்கும் போதுகீழே இருக்கும்கோயிலும் அதன் மேற்புறத்தில் நந்தியும் தெரியறாங்க...

    மேலே படங்கள் பார்த்தப்ப புரிந்த அமைப்பு இப்ப குழம்பிவிட்டது ஹாஅஹாஹாஹா...இவை எல்லாம் குகையிலிருந்து வெளியே வரும் போதுஇருப்பவையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் செம, கோமதிக்கா. ஓவியமும், நந்தியும் அழகா இருக்கு....படிகளில் இறங்கும் போதுகீழே இருக்கும்கோயிலும் அதன் மேற்புறத்தில் நந்தியும் தெரியறாங்க...//

      மேல இருந்து பார்க்க வெகு அழகாய் இருந்தது கீதா.

      //மேலே படங்கள் பார்த்தப்ப புரிந்த அமைப்பு இப்ப குழம்பிவிட்டது ஹாஅஹாஹாஹா...இவை எல்லாம் குகையிலிருந்து வெளியே வரும் போதுஇருப்பவையோ?//

      ஆமாம், மேலே குகை கோவிலை பார்த்தபின் கீழே உள்ள கோவிலை பார்த்தோம். அதனால் கீழே உள்ள கோவில் பின்னால் வருகிறது.
      இருட்டுமுன் மேலே போய் வந்து விடலாம் என்று மேலே இருக்கும் முருகனை வணங்க போய் விட்டோம். அப்புறம் தான் கீழே ஆறு படை முருகனை வழிபட்டோம்.

      நீக்கு
  12. போன கிருத்திகையில் தொடங்கி இந்தக் கிருத்திகையோடு முடிச்சிருப்பது சிறப்பு கோமதிக்கா. படங்களும் விவரங்கள் எல்லாம் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //போன கிருத்திகையில் தொடங்கி இந்தக் கிருத்திகையோடு முடிச்சிருப்பது சிறப்பு கோமதிக்கா. படங்களும் விவரங்கள் எல்லாம் ரசித்தேன்.//

      இடையில் வேறு சில பதிவுகள் போட்டு விட்டதால் , கிருத்திகையில் நிறைவு பெற்று இருக்கிறது பதிவு.
      முருகன் அருளால் அது நடந்து இருப்பதாக நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி. நன்றி கீதா.

      நீக்கு
  13. கோவில் இப்போதுதான் கும்பாபிஷேகம் ஆனதுபோல இருக்கிறது.

    பளிச் என்று வெகு தூய்மையாக இருக்கிறது. ஆலய நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும். பக்தர்களும் இதற்கு ஒரு காரணம் (நம்ம ஊர்ல குங்குமத்தை தூண்களில் போடுவது, பொங்கல் கையை தூணில் துடைப்பது என்று செய்துவிடுகிறார்கள்)

    படங்களும் மிக அழகு.

    பத்துமலை முருகன் பதிவுகளைச் சிறப்பாப வெளியிட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கோவில் இப்போதுதான் கும்பாபிஷேகம் ஆனதுபோல இருக்கிறது.//

      ஆமாம், புதுபித்து இருக்கிறார்கள்.


      //பளிச் என்று வெகு தூய்மையாக இருக்கிறது. ஆலய நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும். //

      ஆமாம், பாராட்ட வேண்டும்.

      பக்தர்களும் இதற்கு ஒரு காரணம் (நம்ம ஊர்ல குங்குமத்தை தூண்களில் போடுவது, பொங்கல் கையை தூணில் துடைப்பது என்று செய்துவிடுகிறார்கள்)

      பக்தர்களும் கோவிலை நன்றாக வைத்து இருக்க ஒத்துழைப்பதால் தான் கோவில் இவ்வளவு சுத்தமாக இருக்கிறது.அவரக்ளியயும் பாராட்ட வேண்டும்.

      //படங்களும் மிக அழகு.

      பத்துமலை முருகன் பதிவுகளைச் சிறப்பாப வெளியிட்டிருக்கிறீர்கள்//

      நிறைவு பகுதியை படித்து மனதுக்கு நிறைவாக கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.


      நீக்கு
  14. அறுபடை வீடுகளின் முருகன் சன்னிதிகளும் மிக அருமை. சமீபத்தில் சென்ற சுவாமிமலை முருகன் நினைவுக்கு வந்தார் (அந்தக் கோவிலுன் பஞ்சாம்ருதமும் அருமை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறுபடை வீடுகளின் முருகன் சன்னிதிகளும் மிக அருமை. சமீபத்தில் சென்ற சுவாமிமலை முருகன் நினைவுக்கு வந்தார் (அந்தக் கோவிலுன் பஞ்சாம்ருதமும் அருமை)//

      சுவாமி மலைக்கு சார் வருடத்தில் இரண்டு தடவை போய் விடுவோம்.
      பிரசாதம் நன்றாக இருக்கும். வெண்பொங்கல், புளியோதரை, எலுமிச்சைசாதம், தயிர் சாதம், வடை என்று பிரசாதங்கள் இருக்கும். அவற்றை வாங்கி மதியம் உணவை முடித்து கொள்வோம்.

      ஆறுபடை வீடுகளில் பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை அடிக்கடி போகும் கோவில்கள். திருபரங்குன்றம் அடுத்தபடி. திருச்செந்தூர் குடும்பத்தில் யாராவது குழந்தைகளுக்கு முதல் மொட்டை , காது குத்து வைப்பார்கள் பார்த்து விடுவோம்.
      திருத்தணி மட்டும் இரண்டு மூன்று தடவை தான் பார்த்து இருக்கிறோம்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு