ஞாயிறு, 22 அக்டோபர், 2023

எங்கள் வீட்டு கொலு பார்க்க வாங்க


நல்வரவு வாங்க வாங்க 

 இந்த பதிவில் அரிசோனாவில் இருக்கும் மகன் வீட்டு கொலு இடம் பெறுகிறது.



மதுரை மீனாட்சி கோவில் பின்னனியில் கொலுப்படிகள்
மேல் படியில் உள்ள மீனாட்சி  இந்த ஆண்டு புது வரவு.

லட்சுமி, பார்வதி, சரஸ்வதி
மூன்று தேவியரும்  எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும். சரஸ்வதி மகனின் நண்பர்  செய்து கொடுத்தது. சரஸ்வதி பூஜைக்கு வேறு அம்மன் வைப்பாள்.

மருமகள் செய்த தாமரையில் லட்சுமி தேவி வீற்றிருக்கிறாள்
அன்னை பார்வதி தேவி

நவராத்திரி நாளில் மூன்று தேவியர் அருளால் தினம்  வந்தவர்களை வரவேற்று நானும் மருமகளின் அம்மாவும் நேரலையில் கண்டு மகிழ்ந்தோம்.   போன வருட கொலுவுக்கு மருமகளின் அம்மா அங்கு இருந்தார்கள். இப்போது  அவர்கள் இங்கு இருக்கிறார்கள் .

சரஸ்வதி பூஜைக்கு சரஸ்வதிக்கு வீணை செய்து இருக்கிறாள் மருமகள்.



பேரன்  தன்  பொம்மலாட்டத்திற்கு இப்படி முன் அறிவிப்பு செய்து இருந்தான்.


 
பேரன் செய்த  இராமாயண பொம்மலாட்டம்   . இராமாயணத்தில் எந்த பகுதியை  எடுத்து இருக்கிறான்? எப்படி இருக்கிறது  பொம்மலாட்டம் என்று பார்த்து விட்டு சொல்லுங்கள். கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் அவன்தான் குரல் கொடுத்து இருக்கிறான். 



பொம்மலாட்ட காட்சிகள்.



 பேரனின் பொம்மலாட்டத்தை  பார்க்கும் நட்புகள்
விஞ்ஞானிகளாக   அமர்ந்து இருப்பது பேரனின் லேகோ செட் பொம்மை மனிதர்கள்.  

  
சந்திரயான் -3 விண்கலம் விக்ரம் லேண்டர் 

மகனுடன்    மாயவரத்தில் ஏ.வி.சி கல்லூரியில் படித்தவர்.  

இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில்  இவரும் ஒருவர்   அவரை பாராட்டி  தான் படித்த கல்லூரிக்கு பெருமை சேர்த்தவருக்கு  வாழ்த்துமடல் அனுப்பி இருந்தான்.  காணொளி நிறைவு பகுதியில் அவர் பேசுவதை இணைத்து இருக்கிறான் . 


இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென் துருவத்தில் நாம் காலடி வைத்துள்ளோம். 











இந்த நிகழ்வு எப்போதும் நினைவில் இருக்க ஒலி- ஒளி காட்சி அமைத்து விட்டான் மகன்.  

மகன் செய்த சந்திரயான் -3 விண்கலம்  ஒலி -ஓளி காட்சி பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.





பிரசதாங்கள் எடுத்து கொள்ளுங்கள். 



தாம்பூல பை எடுத்து கொள்ளுங்கள்.

மகன் , மருமகள், பேரன் வைத்த நவராத்திரி கொலுவை பார்த்தவர்கள் அனைவருக்கும் நன்றி.


அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ,  மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம்! வாழ்கவையகம்! வாழ்க வளமுடன்!

-------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான படங்களுடன் கூடிய தங்கள் வீட்டு கொலு பார்க்க மிகவும் அழகாக உள்ளது. மீனாட்சி சிலையும், அந்த கோவிலின் பின்னனியுடன் கொலுவை அமைத்தது மிக நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். முப்பெருந்தேவியர்களை தங்கள் மருமகள் அமைத்த விதம் கண்களை கவர்கிறது. தங்கள் மருமகள் தாமரை மலரை அழகாக வடிவமைத்திருக்கிறார். அவரிடம் என் பாராட்டுக்களை கூறி விடுங்கள்.

    பேரன் அமைத்த கலை அரங்கமும், பொம்மலாட்டமும் வெகு அருமையாக உள்ளது. நல்ல குரலில் மாற்றி, மாற்றி அந்தந்த கதாபாத்திரங்களுக்கான குரலில் பேசி நடிக்க வைத்துள்ளார். அவருடைய திறமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவரிடமும் கூறுங்கள்.

    தங்கள் மகன் செய்த சந்திராயன் ஒளி ஒலி காட்சி படங்கள் அமர்க்களமாக உள்ளது. தன்னுடன் படித்தவரை அவரின் திறமைக்காக பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்திருப்பது சிறப்பு. அதன் தொகுப்பாக பாடங்கள் யாவும் நன்றாக உள்ளது.. காணோளியை பிறகு கேட்கிறேன். மகனுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.

    கொலுவுக்கு செய்த பிரசாதங்கள் நன்றாக உள்ளது. நானும் எடுத்துக் கொண்டேன். விதவிதமான உணவுகளை தந்ததோடு மட்டுமின்றி, இறுதியில் தாம்பூல பையுடன் விடை தந்தது உங்கள் வீட்டு கொலுவுக்கு வந்து அனைத்தையும் ரசித்த திருப்தியை தந்தது. மகன், மருமகள், பேரன் என மூவரும் கொலுவுக்கு மிகவும் பாடுபட்டுள்ளார்கள். அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. அருமையான பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமை. அழகான படங்களுடன் கூடிய தங்கள் வீட்டு கொலு பார்க்க மிகவும் அழகாக உள்ளது. மீனாட்சி சிலையும், அந்த கோவிலின் பின்னனியுடன் கொலுவை அமைத்தது மிக நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். முப்பெருந்தேவியர்களை தங்கள் மருமகள் அமைத்த விதம் கண்களை கவர்கிறது. தங்கள் மருமகள் தாமரை மலரை அழகாக வடிவமைத்திருக்கிறார். அவரிடம் என் பாராட்டுக்களை கூறி விடுங்கள்.//

      உங்கள் பாராட்டுக்களை சொல்லி விட்டேன். நன்றி சொன்னார்கள்.

      //பேரன் அமைத்த கலை அரங்கமும், பொம்மலாட்டமும் வெகு அருமையாக உள்ளது. நல்ல குரலில் மாற்றி, மாற்றி அந்தந்த கதாபாத்திரங்களுக்கான குரலில் பேசி நடிக்க வைத்துள்ளார். அவருடைய திறமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவரிடமும் கூறுங்கள்.//

      பேரனுக்கு வாழ்த்துகள் சொல்லி பாராட்டியதற்கு நன்றி மகிழ்ச்சி.

      //தங்கள் மகன் செய்த சந்திராயன் ஒளி ஒலி காட்சி படங்கள் அமர்க்களமாக உள்ளது. தன்னுடன் படித்தவரை அவரின் திறமைக்காக பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்திருப்பது சிறப்பு. அதன் தொகுப்பாக பாடங்கள் யாவும் நன்றாக உள்ளது.. காணோளியை பிறகு கேட்கிறேன். மகனுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.//

      உடன் படித்த தோழி சாதனையாளாராக இருப்பது பெருமையான விஷயம் அதை பாராட்டி வாழ்த்தி சகதோழர்கள் மகிழ்ந்தார்கள்.
      மகனுக்கு உங்கள் அன்பார்ந்த வாழ்த்துகள் கிடைத்தது மகிழ்ச்சி,நன்றி. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அவனை மேலும் உற்சாகமாக செய்ய வைக்கும்.

      //கொலுவுக்கு செய்த பிரசாதங்கள் நன்றாக உள்ளது. நானும் எடுத்துக் கொண்டேன். விதவிதமான உணவுகளை தந்ததோடு மட்டுமின்றி, இறுதியில் தாம்பூல பையுடன் விடை தந்தது உங்கள் வீட்டு கொலுவுக்கு வந்து அனைத்தையும் ரசித்த திருப்தியை தந்தது. மகன், மருமகள், பேரன் என மூவரும் கொலுவுக்கு மிகவும் பாடுபட்டுள்ளார்கள். அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//

      பிரசாதங்களை எடுத்து கொண்டு பாராட்டி உங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.//

      உடனே வந்து விரிவான கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி நன்றி.

      நீக்கு
  2. மதுரை மீனாட்சி கோவில் பின்னணியில் அழகு.  மருமகள் செய்த தாமரைப்பூ அழகு.  இனிய கற்பனை, செயல்திறன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மதுரை மீனாட்சி கோவில் பின்னணியில் அழகு. மருமகள் செய்த தாமரைப்பூ அழகு. இனிய கற்பனை, செயல்திறன்.//

      நன்றி. மருமகள் சரஸ்வதிக்கு வீணை செய்து இருந்தாள். மகன் இன்று அனுப்பினான் படம் அதை இப்போது இணைத்து இருக்கிறேன். நீங்களும் கமலா அவர்களும் படிக்கும் போது இல்லை. நேரம் இருந்தால் பாருங்கள்.
      மருமகளின் செயல் திறனை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  3. கவின் நடத்திய பொம்மலாட்டம் அற்புதம்.  பெரிய முயற்சி. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  மிக அருமையாக இருந்தது.  கதையை உள்வாங்கி மாரீச மானில் தொடங்கி ராமபட்டாபிஷேகம் வரை..  அசத்தல்.  நடுவில் ராமசேதுவும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவின் நடத்திய பொம்மலாட்டம் அற்புதம். பெரிய முயற்சி. //

      ஆமாம், நிறைய நேரம் கருதி கட் செய்து விட்டான். வருபவர்கள் நிறைய வீட்டு கொலு பார்க்க போக வேண்டும் நம் வீட்டிலேயே வெகு நேரம் அமர முடியாது என்று மகன் சொல்லி விட்டதால் சுருக்கமாக கதையை சொல்லி விட்டான் அவன் பேசும் மொழியிலேயே!


      //வாழ்த்துகளும், பாராட்டுகளும். மிக அருமையாக இருந்தது. கதையை உள்வாங்கி மாரீச மானில் தொடங்கி ராமபட்டாபிஷேகம் வரை.. அசத்தல். நடுவில் ராமசேதுவும் அற்புதம்.//

      உங்கள் வாழ்த்துகள், பாராட்டுகளுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மகன் செய்திருக்கும் சந்திரயான் விண்கல காணொளியும் சூப்பர்.  அசத்துகிறார்கள் உங்கள் மகன், மகள், பேரன்.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  அர்ப்பணிப்புடன் முயற்சித்திருக்கிறார்கள்.  நல்ல கைத்திறன், கற்பனை, செய்நேர்த்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் செய்திருக்கும் சந்திரயான் விண்கல காணொளியும் சூப்பர். அசத்துகிறார்கள் உங்கள் மகன், மகள், பேரன். வாழ்த்துகளும், பாராட்டுகளும். அர்ப்பணிப்புடன் முயற்சித்திருக்கிறார்கள். நல்ல கைத்திறன், கற்பனை, செய்நேர்த்தி.//

      மகன், மருமகள், பேரனை பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.
      உற்சாகம் ஊட்டும் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. காலத்திற்கேற்ப கொலு அலங்காரம் அமைப்பு..

    மனதிற்கு இதம்..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜு, வாழ்க வளமுடன்

      //காலத்திற்கேற்ப கொலு அலங்காரம் அமைப்பு..

      மனதிற்கு இதம்..

      வாழ்க வையகம்..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. கவின் கொண்ட
    கலை கொண்டு
    கடல் தாண்டிச் சென்றங்கு
    கலை காட்டி நிற்கின்ற
    கலை வாழ்க வாழ்க.

    நிலை கொண்டு
    நின்றாங்கு
    நிறை புகழ் கொள்கவே..
    பிறை கொண்ட சென்னியான்
    பேரருள் சூழ்கவே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவினை கவிதையால் வாழ்த்தியதற்கு நன்றி.
      பேரனுக்கு உங்கள் கவிதையை அனுப்பினேன். நன்றி சொன்னான்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்து கவிதைக்கும் நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளிகள் மூன்றும் கண்டேன் அருமை.

    தங்களது பெயரன் கவினுக்கு வாழ்த்துகள்.

    இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

      காணொளிகள் மூன்றும் கண்டேன் அருமை.//

      நேரலையில் பார்த்தேன், மகன் படங்கள் அனுப்பி வைத்தான்.
      படங்கள், காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //தங்களது பெயரன் கவினுக்கு வாழ்த்துகள்.

      இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள்.//

      கவினுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி, ஆயுத பூஜை வாழ்த்துகளுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  8. அரிஸோனாவிலும் தென் இந்திய பாரம்பரியத்தில் கொலு, நவராத்ரி கொண்டாட்டங்கள் என்று அசத்தி விட்டீர்கள். கவினின் ராமாயணம் பாவை கூத்து மிகவும் நன்றாக இருந்தது. சந்திரயான் ஒளி ஒலி காட்சியும் அருமை.

    அருமையான நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //அரிஸோனாவிலும் தென் இந்திய பாரம்பரியத்தில் கொலு, நவராத்ரி கொண்டாட்டங்கள் என்று அசத்தி விட்டீர்கள்.//

      நன்றி.

      //கவினின் ராமாயணம் பாவை கூத்து மிகவும் நன்றாக இருந்தது. சந்திரயான் ஒளி ஒலி காட்சியும் அருமை.

      அருமையான நல்ல பதிவு.//

      காணொளிகளை கண்டு பதிவை பாராட்டி கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

      நீக்கு
  9. முதல்ல கண்ணில் பட்டவை பிரசாதங்கள் எடுத்துக் கொண்டுவிட்டேன் இதோ கொலு பார்க்கப் போகிறேன் கோமதிக்கா

    இங்கு வோல்டேஜ் கம்மியா இருக்கு அதனால் பவர் கம்ப்யூட்டருக்கு இல்லை....எப்போது மூடிக் கொள்ளும் தெரியலை அதுவ்ரை கருத்து ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல்ல கண்ணில் பட்டவை பிரசாதங்கள் எடுத்துக் கொண்டுவிட்டேன் இதோ கொலு பார்க்கப் போகிறேன் கோமதிக்கா//

      பிரசாதங்கள் எடுத்து கொண்டு கொலு பார்பதற்கு நன்றி.

      //இங்கு வோல்டேஜ் கம்மியா இருக்கு அதனால் பவர் கம்ப்யூட்டருக்கு இல்லை....எப்போது மூடிக் கொள்ளும் தெரியலை அதுவ்ரை கருத்து ...//

      அங்கும் வோல்டேஜ் பிரச்சனை இருக்கா?

      நீக்கு
  10. கொலு மிகவும் சிறப்பாஅக இருக்கிறது.

    கவினின் பொம்மலாட்டம் வீடியோ பார்த்தேன் கோமதிக்கா...மாரீசன் மான்...தொடங்கி பட்டாபிஷேகம் என்று கலக்கல். நன்றாகவே சொல்லியிருக்கிறார். திறமை அசாத்தியம். வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க

    அது போல மகனின் ஒலி ஒளி காட்சி அட்டகாசம். விக்ரம் லேண்டர் இற்ங்கி நகர்வது போல் செய்திருப்பது அட்டகாசம் கோமதிக்கா.

    மருமகளின் தாமரை ஆஹா!!! மீனாட்சி கோயில் பின்புறத்தில் கொலு சூப்பர்!

    மகன், மருமகள், கவின் என்று மூவருமே அசாத்திய திறன் கொண்டவர்கள் வாழ்த்துகள் பாராட்டுகள். அம்மா அப்பா....அப்பாவுக்குத் தன் அப்பாவின் கை வண்ணம் அம்மாவின் திறமைகள் என்று எல்லாம் வந்திருக்க அது அப்படியே கவினுகும் அவர் அம்மாவுக்கும் திறமைகள் எனவே எல்லம் கலந்து கட்டி பரம்பரையாக வருகிறது! இறைவனின் அருளுடனும்!

    எல்லாம் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

    கணினி மூடிக்கொண்டுவிடும் இப்போது எனவே போய் வருகிறேன் கோமதிக்கா பவர் ரொம்ப படுத்துகிறது இன்று,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலு மிகவும் சிறப்பாஅக இருக்கிறது.

      //கவினின் பொம்மலாட்டம் வீடியோ பார்த்தேன் கோமதிக்கா...மாரீசன் மான்...தொடங்கி பட்டாபிஷேகம் என்று கலக்கல். நன்றாகவே சொல்லியிருக்கிறார். திறமை அசாத்தியம். வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க//

      கண்டிப்பாய் உங்கள் பாராட்டையும், வாழ்த்தையும் சொல்கிறேன் .

      //அது போல மகனின் ஒலி ஒளி காட்சி அட்டகாசம். விக்ரம் லேண்டர் இற்ங்கி நகர்வது போல் செய்திருப்பது அட்டகாசம் கோமதிக்கா.

      மருமகளின் தாமரை ஆஹா!!! மீனாட்சி கோயில் பின்புறத்தில் கொலு சூப்பர்!//

      கீதா. எல்லோரையும் பாராட்டி வாழ்த்து சொன்னதற்கு நன்றி.


      //எல்லாம் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா//
      அனைத்தையும் ரசித்துப்பார்த்து பலவித இடையூறுகளுக்கு இடையே கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  11. அற்புதமாக உள்ளது அம்மா...

    அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அற்புதமாக உள்ளது அம்மா...

      அனைத்தும் சிறப்பு...//

      அனைத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  12. கொலு பொம்மைகளோடு, சந்திராயன் சிறப்பு., தங்களின் பெயரனுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //கொலு பொம்மைகளோடு, சந்திராயன் சிறப்பு., தங்களின் பெயரனுக்கு வாழ்த்துகள்//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.



      நீக்கு
  13. கொலு படங்கள் மிக அழகாகவும் நிறைவாகவும் உள்ளது. தாமரைப்பூவில் இருக்கை மற்ற அலங்காரங்களும் ரசிக்கும்படி இருந்தது.

    மாரீச மான் பகுதியை நன்றாகச் செய்திருக்கிறான் கவின். ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். சீதா தேவிக்குக் குரல் கொடுத்தது யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கொலு படங்கள் மிக அழகாகவும் நிறைவாகவும் உள்ளது. தாமரைப்பூவில் இருக்கை மற்ற அலங்காரங்களும் ரசிக்கும்படி இருந்தது.//

      நன்றி.
      //மாரீச மான் பகுதியை நன்றாகச் செய்திருக்கிறான் கவின். ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். சீதா தேவிக்குக் குரல் கொடுத்தது யார்?//

      சீதாதேவிக்கும் கவின் தான் குரல் கொடுத்து இருக்கிறான். அனைத்து கதாபாத்திரங்ககுக்கும் கவின் தான் குரல்.
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நெல்லை.





      நீக்கு
    2. எனக்கு கவின் குரலை மாற்றிப் பேசியிருப்பான் என்று தோன்றியது (முழுதும் அவனுடைய முயற்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பான்). நல்ல முயற்சி. நிச்சயம் அவனுக்கு பாராட்டைத் தெரிவியுங்கள். அவனுடைய பெற்றோர்களுக்கும் பாராட்டு போய்ச் சேரவேண்டும். அவர்களுடைய திறன் ஜீனின் வழியாக வந்திருந்தாலும், அவர்களுடைய ஊக்கம் மிகப் பெரிது. கவின் நல்ல எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறான்.

      நீக்கு
    3. கவின் தான் ஒவ்வொருவருக்கும் குரலை மாற்றி பேசினான்.

      //(முழுதும் அவனுடைய முயற்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பான்). //

      ஆமாம். நீங்கள் நினைத்தது சரிதான். கதை வசனம் எல்லாம் அவனே தான். திருத்தவில்லை அவன் பெற்றோர்களும். அவன் எப்படி பேசுவானோ அதே முறையில் அவன் பேசி இருக்கிறான். கொலு முதல் தான் அவன் பெற்றோர்கள் பார்த்தார்கள். என்னிடம் மட்டும் தினம் போட்டு காட்டுவான்.

      //நல்ல முயற்சி. நிச்சயம் அவனுக்கு பாராட்டைத் தெரிவியுங்கள். அவனுடைய பெற்றோர்களுக்கும் பாராட்டு போய்ச் சேரவேண்டும்.//

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //அவர்களுடைய திறன் ஜீனின் வழியாக வந்திருந்தாலும், அவர்களுடைய ஊக்கம் மிகப் பெரிது. கவின் நல்ல எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறான்.//

      பெற்றோர்களின் ஊக்கமும் உங்கள் எல்லோர் பாராட்டுகளும், வாழ்த்துகளும் அவன் செய்யும் செயல்களுக்கு எதிர்காலத்துக்கு உந்து சக்தியாக இருக்கும்.
      மீண்டும் வந்து உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. சந்திராயன், அது சம்பந்தமான பகுதிகளை கொலுவில் வைத்தது சிறப்பு. கலாச்சாரம், அறிவியல், தேசம் கலந்த கொலுவாக அமைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்திராயன், அது சம்பந்தமான பகுதிகளை கொலுவில் வைத்தது சிறப்பு. கலாச்சாரம், அறிவியல், தேசம் கலந்த கொலுவாக அமைந்துவிட்டது.//

      தன் தோழியை பாராட்டியும் அதை கொலுவுக்கு வருபவர்களுக்கு காட்டவும் அமைத்து விட்டான் சந்திராயன் உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  15. சந்த்ரயான் ஒலி ஒளியும் அருமை.

    இந்தப் பதிவை எப்படி விட்டுவிட்டளன் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்த்ரயான் ஒலி ஒளியும் அருமை.

      இந்தப் பதிவை எப்படி விட்டுவிட்டளன் என்று தெரியவில்லை.//

      சந்திரயான் ஒலி, ஒளி காட்சியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி நெல்லை.
      நீங்கள் கவனித்து இருந்தால் கொலு பார்க்க வந்து இருப்பீர்கள் .
      கொலு பார்க்க வந்து அனைத்தையும் ரசித்து கருத்துகள் சொன்னதற்கு நன்றி நெல்லை.
      உங்கள் எல்லோர் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் மேலும் அவர்களை பணிகள் செய்ய உற்சாகம் தரும். நன்றி.

      நீக்கு
  16. யாரைப் பாராட்டுவது? யாரை விடுவது? கவின் ராமாயணத்தைப் பொருள் புரிந்து படித்து அதை பொம்மலாட்டமாக வடித்திருக்கான் எனில் உங்கள் மகனோ தற்கால விண்வெளீ ஆராய்ச்சியைச் சிறப்பாகச் செய்துள்ளார். கூடப் படித்த தோழியின் திறமைக்கும் ஒரு பாராட்டு. உங்கள் மறுமகளோ இத்தனைக்கும் ஆதாரமான கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு வீண செய்திருக்கிறார். கூடவே தாமரைப்பூச் செய்ததும் அழகு. புராதனமும் நவீனமும் கலந்ததொரு கொலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள். மகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கள். அனைவருக்கும் எங்கள் ஆசிகள்>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //யாரைப் பாராட்டுவது? யாரை விடுவது? கவின் ராமாயணத்தைப் பொருள் புரிந்து படித்து அதை பொம்மலாட்டமாக வடித்திருக்கான் எனில் உங்கள் மகனோ தற்கால விண்வெளீ ஆராய்ச்சியைச் சிறப்பாகச் செய்துள்ளார். கூடப் படித்த தோழியின் திறமைக்கும் ஒரு பாராட்டு. உங்கள் மறுமகளோ இத்தனைக்கும் ஆதாரமான கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு வீண செய்திருக்கிறார். கூடவே தாமரைப்பூச் செய்ததும் அழகு. புராதனமும் நவீனமும் கலந்ததொரு கொலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள். மகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கள். அனைவருக்கும் எங்கள் ஆசிகள்>//

      மகன், மருமகள், பேரனை மனதார பாராட்டி, வாழ்த்துகளை சொன்னதற்கு நன்றி. உங்கள் ஆசிகள் அவர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி நன்றி.
      மகன் மருமகள், பேரனிடம் உங்கள் ஆசிகளை, பாராட்டுகளை, வாழ்த்துகளை சொல்கிறேன்.

      நீக்கு
  17. மதுரை மீனாக்‌ஷி அழகோ அழகு. மீனாக்‌ஷியைப் பார்த்தே சில வருடங்கள் ஆகின்றன. இங்கே பார்த்து வணங்கிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரை மீனாக்‌ஷி அழகோ அழகு. மீனாக்‌ஷியைப் பார்த்தே சில வருடங்கள் ஆகின்றன. இங்கே பார்த்து வணங்கிக் கொண்டேன்.//

      மகன் வீட்டு கொலுவிற்கு வந்தவர்களும் நீங்கள் சொன்னது போலவே சொன்னார்கள்.

      நான் மகன் வந்த போது போய் வந்தேன். அப்புறம் போகவில்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. மகன் வீட்டுக் கொலு மிக அருமை. முதல் படியில் மதுரை மீனாட்சியும் கோயில் பின்னணியும் பிரமாதம்.

    மருமகள் லக்ஷ்மிக்கு செய்த தாமரையும் சரஸ்வதிக்கு செய்த வீணையும் அழகு.

    பேரனின் பொம்மலாட்டம் வியக்கவும் ரசிக்கவும் வைத்தது.

    அறிவியல் காட்சிகளும், மகன் தயாரித்திருக்கும் ஒலி-ஒளியும் சிறப்பு.

    ஒவ்வொருவரும் தத்தமது பங்கிற்கு அசத்தியிருக்கிறார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //மகன் வீட்டுக் கொலு மிக அருமை. முதல் படியில் மதுரை மீனாட்சியும் கோயில் பின்னணியும் பிரமாதம்.

      மருமகள் லக்ஷ்மிக்கு செய்த தாமரையும் சரஸ்வதிக்கு செய்த வீணையும் அழகு.//

      நன்றி.

      //மகன் வீட்டுக் கொலு மிக அருமை. முதல் படியில் மதுரை மீனாட்சியும் கோயில் பின்னணியும் பிரமாதம்.

      மருமகள் லக்ஷ்மிக்கு செய்த தாமரையும் சரஸ்வதிக்கு செய்த வீணையும் அழகு.

      பேரனின் பொம்மலாட்டம் வியக்கவும் ரசிக்கவும் வைத்தது.

      அறிவியல் காட்சிகளும், மகன் தயாரித்திருக்கும் ஒலி-ஒளியும் சிறப்பு//

      மகன் பேரன், மருமகள் செய்தவைகளை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //ஒவ்வொருவரும் தத்தமது பங்கிற்கு அசத்தியிருக்கிறார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்!//

      அவர் அவர் திறைமையை காட்ட நல்ல சந்தர்ப்பம் இந்த நவராத்திரி பண்டிகை.

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் , வாழ்த்துகளுக்கும்
      நன்றி ராமலக்ஷ்மி.



      நீக்கு
  19. மிகவும் அழகிய நவராத்திரி கொலு.

    பேரன் , மகன், மருமகள் அனைவரின் கை வண்ணக் காட்சிகள் பார்த்து வியந்தோம் மிக அருமை அனைவருக்கும் எங்கள் வாழ்த்தையும் பாராட்டுக்களையும் கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //மிகவும் அழகிய நவராத்திரி கொலு.//

      நன்றி.

      //பேரன் , மகன், மருமகள் அனைவரின் கை வண்ணக் காட்சிகள் பார்த்து வியந்தோம் மிக அருமை அனைவருக்கும் எங்கள் வாழ்த்தையும் பாராட்டுக்களையும் கூறுங்கள்.//

      பேரன், மகன், மருமகள் மூவருக்கும் உங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் கண்டிப்பாய் சொல்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு