இன்று அரிசோனாவில் மகன் வீட்டில் இருக்கும் போது எடுத்து வைத்து இருந்த சிவப்பு செம்பருத்தி பூக்கள் படம் இன்றைய பதிவில் இடம் பெறுகிறது. தினம் தினம் பூக்கும் பூக்களை படம் எடுத்து இருந்தேன்.
ஒன்று, இரண்டு , மூன்று , நான்கு, ஐந்து, ஆறு வரை பூத்து இருந்ததை படம் எடுத்து வைத்து இருந்தேன்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்.
பூக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது சிறு வயதில் விளையாடி விளையாட்டு நினைவுக்கு வந்தது.
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம் பாடலை பாடி நீங்களும் விளையாடி இருப்பீர்கள் தானே? சின்ன வயதில்.
இந்த பாடலை சிறுவர் சிறுமிகள் விளையாடும் போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பட உதவி
https://www.mamalisa.com/?t=es&p=6639ata
நன்றி.
முதல் படத்தில் உள்ளது போல இருவர் எதிர் எதிரே நின்று இரண்டு கைகளையும் கோர்த்து தலைக்கு மேலே கோபுரம் போல் உயர்த்தி பிடித்து நிற்க மற்ற சிறுவர் சிறுமிகள் இரண்டாவது படத்தில் இருப்பது போல கைகளுக்கு கீழ் குனித்து வெளியே நடந்து போவார்கள்.
10 வரை பாடுவார்கள். கடைசியில் வருபவர் மாட்டிக் கொள்வார் , மூன்றாவது படத்தில் உள்ளது போல மாட்டி கொள்வார். மாட்டி கொண்டவரிடம் ஏதாவது கொடுக்க சொல்லி கேட்பார்கள், அப்போதுதான் விடுவோம் என்று. ஏதாவது கொடுக்கிறேன் என்று சொன்ன பின் விடுவார்கள்.
நாங்கள் சின்ன வயதில் சொன்ன வரிகளை மாற்றி பாடுகிறார்கள் இப்போது. கேட்டு பாருங்களேன்.
பள்ளி பிள்ளைகள் எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள் என்று பாருங்கள்.
இந்த பாடலில் கடைசியில் ஒரு கூடை மாம்பழம் தந்தவுடன் விடுகிறார்கள்
இதில் கிள்ளு வேணுமா? அல்லது சுத்தி விட்டு போகிறாயா என்று கேட்கிறார்கள்.
இப்போதும் பிள்ளைகள் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதே மகிழ்ச்சி.
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்ததாம்
ஐந்து குடம் தண்ணி ஊத்தி ஐந்து பூ பூத்ததாம்.
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்ததாம்
நான் அங்கு இருக்கும் போது ஆறு பூ வரைதான் பூத்தது.
மகன் பூக்களுக்கு உணவு வாங்கி போட்டான்
வெயில் வர வர பூக்கள் கருக ஆரபித்து விட்டது
செம்பருத்திப் பூவின் நடுவே உள்ள மையச்சிவப்பும், அதிலிருந்து எழுகிற சிவந்த நரம்பும், அக்கினிச் சுவாலை போன்றது. உயர்ந்தெழும் சுவாலையில் அத்தனை மாசுகளும் பஸ்பமாகிவிடும்.
செம்பரத்தை உயர்ந்த மனதின் அன்பை வெகு அழகாய் வெளிக்காட்டுவது. அன்போடு வாழ்கவென்று நம்மை அழைப்பது.
நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும் , வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலர்களுக்கு உணடு.
செம்பருத்திபூ பற்றி அன்னையின் மந்திர மலர்கள் புத்தகத்தில் படித்தது .
பூஜைக்கு வந்த மலர்கள்.
கோவையில் என் கணவரின் தம்பி வீட்டில் பூத்த மலர்கள். செம்பருத்தியும், மந்தாரை மலர்களும்.
மலர் தூவி இறைவனை வணங்கும் போது கிடைப்பது ஆனந்தம் . அதுவும் நம் வீட்டில் பூத்த மலர் என்றால் மேலும் ஆனந்தம்.மகன் வீட்டு தோட்டத்து மலர்கள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
முதலில் பூக்களின் படங்கள் அருமை என்பதை சொல்லி விடுகிறேன். இந்தப் பூவின் நிறம் எப்போதுமே சட்டென கண்களில் நிறைந்து மனதில் தங்கிவிடும். வெயில் வந்ததுமே கருகத்தொடங்குவது கஷ்டம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//முதலில் பூக்களின் படங்கள் அருமை என்பதை சொல்லி விடுகிறேன்.//
நன்றி.
//இந்தப் பூவின் நிறம் எப்போதுமே சட்டென கண்களில் நிறைந்து மனதில் தங்கிவிடும். வெயில் வந்ததுமே கருகத்தொடங்குவது கஷ்டம்.//
ஆமாம், இந்த மென்மையான பூக்களை கோடை காலத்தில் பசுமை குடிலுக்குள்தான் வைக்க வேண்டும். கண்ணாடி குடிலில் வைக்கிறார்கள் சில வீடுகளில், பூங்காவில்.
ஒரு குடம் தண்ணீர் ஊற்றி விளையாட்டை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பாஸிடம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். இதை எங்கள் தெரு சிறுவர் சிறுமியர் வேறு விதமாக பாடுவார்கள் "இத்தே மட்டும் பணம் தர்றேன் விடுடா **க்கா" என்று பாடி சுற்றுவார்கள். முடிவு என்னவோ அதே போலதான். மூச்சுத் திணற வைத்து விடுவார்கள். இதற்கான படத்தை எங்கிருந்து பொருத்தமாக எடுத்தீர்கள்?
பதிலளிநீக்கு//ஒரு குடம் தண்ணீர் ஊற்றி விளையாட்டை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பாஸிடம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன்.//
நீக்குஓ! அதுதான் நான் பதிவு போட்டு விட்டேன் போலும்.
//இதை எங்கள் தெரு சிறுவர் சிறுமியர் வேறு விதமாக பாடுவார்கள் "இத்தே மட்டும் பணம் தர்றேன் விடுடா **க்கா" என்று பாடி சுற்றுவார்கள்.//
ஆமாம், தொகை ஏறி கொண்டே போகும் போதுமான பணமூட்டை கிடைத்தவுடன் விட்டு விடுவார்கள்.
//அதே போலதான். மூச்சுத் திணற வைத்து விடுவார்கள். இதற்கான படத்தை எங்கிருந்து பொருத்தமாக எடுத்தீர்கள்?//
நல்லவேளை நினைவு படுத்தி விட்டீர்கள். எப்போது நான் எடுத்த படமில்லை என்றால் சொல்லி விடுவேன். இப்போது சேர்த்து விட்டேன் எங்கிருந்து எடுத்தேன் இந்த படத்தை என்று.
பட உதவி
https://www.mamalisa.com/?t=es&p=6639ata
நன்றி ஸ்ரீராம்.
சார் இருக்கும் போது இந்த பதிவு போட்டு இருந்தால் சாரே படம் வரைந்து தந்து இருப்பார்கள்.
நீக்குஎங்கள் குடியிருப்பு வளாகத்தில் பெண் குழந்தைகள் விளையாடியதை படம் எடுத்து வைத்து இருந்தேன், தேடி கொண்டு இருக்கிறேன், கிடைத்தால் சேர்க்கவேண்டும் பதிவில்.
நீக்கு// சார் இருக்கும் போது இந்த பதிவு போட்டு இருந்தால் சாரே படம் வரைந்து தந்து இருப்பார்கள்.//
நீக்குநானும் நினைத்தேன். ஒரு நிமிடம், அவர் வரைந்த படமா என்றும் பார்த்தேன்.
உங்கள் நினைப்புக்கு நன்றி.
நீக்குஎங்கள் வீட்டில் இந்த செடி வைத்த போதும் ஏனோ அதிக பூக்கள் பூத்து நான் பார்த்ததில்லை. அதிகபட்சம் ஆறேழு பூக்கள்தான். கொத்து கொத்தாய் கொல்லென்று போது பார்த்ததில்லை. அதற்குப் போடும் வைட்டமின் எல்லாம் நாங்கள் போட்டதுமில்லை. தண்ணீர் மட்டும்தான்! மொட்டை மாடியிலும் வைத்திருந்தோம். கீழேயும் வைத்திருந்தோம்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் இந்த செடி வைத்த போதும் ஏனோ அதிக பூக்கள் பூத்து நான் பார்த்ததில்லை. அதிகபட்சம் ஆறேழு பூக்கள்தான்.//
நீக்குஇந்த பூ பூக்கும் பருவத்தில் நிறைய பூக்கும். மாயவரத்தில் பெரிய சிமெண்ட் தொட்டி வைத்து இருந்தேன் அடுக்கு செம்பருத்தி நிறைய பூக்கும். எங்கள் தாத்தாவீட்டில் இப்போது கொழுந்தனார் வீட்டில் நிறைய பூக்கிறது. அதற்கு மண் வளமாக இருக்க வேண்டும்.
சிலர் வீட்டின் முன் வைத்து இருப்பார்கள் பெரிய மரம் மாதிரி உயரமாக நிறைய பூத்து இருக்கும். அதற்கும் மனிதர்களின் உரையாடல் சத்தம் வேண்டி இருக்கிறது.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
// தற்கும் மனிதர்களின் உரையாடல் சத்தம் வேண்டி இருக்கிறது. //
நீக்குஆச்சர்யம்தான். இது சம்பந்தமாக சுஜாதா எழுதிய கட்டுரையொன்று கூட சமீபத்தில் படித்தேன்.
மாயவரத்தில் நிறைய வீடுகளில் வாசல் பக்கம் வைத்த முருங்கை, மற்றும் பூச்செடிகள் காய்த்து , பூத்து குலுங்குவதை பார்த்து இருக்கிறேன். தாவரங்களுக்கும் , மரங்களும் நம்மை மகிழ்விக்க மட்டும் அல்ல, அவையும் நம் அன்பை, நேசிப்பை விரும்புகிறது.
நீக்குமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
செம்பருத்திப் பூக்கள் படம் மிக அழகு. பூவின் பயனே இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுவதுதான் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குபதிவின் தலைப்பு என்னை ஈர்த்தது. கிராமத்தின் நினைவலைகளைக் கொண்டுவந்தது.ண
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//செம்பருத்திப் பூக்கள் படம் மிக அழகு. பூவின் பயனே இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுவதுதான் என்பது என் எண்ணம்.//
ஆமாம், பூவின் பிறவி பயன் இறைவனுக்கு அர்ச்சிக்கபடும் போது தான் முழுமை அடைகிறது என்பார்கள்.
சிறு வயதில் பூபறிக்க வருகிறோம் என்ற விளையாட்டு ஒன்றும் உண்டு. பூக்களின் பேரில் அணி வகுத்து இருபக்கமும் நிற்பார்கள். பூவின் பேர் தெரிந்து கொள்ள உதவும்.
மலர்ந்த பூக்கள் போன்ற குழந்தைகள் பூக்களை பறித்து மரபாச்சி பொம்மைகளுக்கு சூட்டி விளையாடுவார்கள்.
//பதிவின் தலைப்பு என்னை ஈர்த்தது. கிராமத்தின் நினைவலைகளைக் கொண்டுவந்தது.ண//
உங்கள் இளமைகால நினைவுகளை கொண்டு வந்தது என்று அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போது கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் விளையாடுகிரார்கள் என்று தெரிகிறது. பழமையை விரும்பும் சில பள்ளிகள் பழைய விளையாட்டை மீட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
எங்கள் டவரைச் சுற்றி நடக்கும் பாதையின் ஒரு புறம் செம்பருத்திச் செடிகள் மரம் போல உயர்கிறது. மழையோ காற்றோ வரும்போது நடப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. கம்ப்ளெயின்ட் பண்ண மனது வரவில்லை. அந்தச் செடிகள் என்ன நினைக்குமோ எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅதுபோல பால்கனியில் அணில் வந்து செடிகளைக் கடிக்கிறது. போகட்டும் எனவும் தோணுகிறது. கோபமும் வருகிறது.
//எங்கள் டவரைச் சுற்றி நடக்கும் பாதையின் ஒரு புறம் செம்பருத்திச் செடிகள் மரம் போல உயர்கிறது. மழையோ காற்றோ வரும்போது நடப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. கம்ப்ளெயின்ட் பண்ண மனது வரவில்லை. அந்தச் செடிகள் என்ன நினைக்குமோ எனத் தோன்றுகிறது//
நீக்குஆமாம், மனது வருவது இல்லை பூக்கும், காய்க்கும் மரங்களை வெட்ட.
அவைகளுக்கும் மனம் இருக்கே! நம்மை இப்படி வெட்டி விழ்த்தி விட்டார்களே என்று நினைக்கும் தான்.
//அதுபோல பால்கனியில் அணில் வந்து செடிகளைக் கடிக்கிறது. போகட்டும் எனவும் தோணுகிறது. கோபமும் வருகிறது.//
ஆமாம், நாம் ஆசையுடன் வளர்க்கும் செடிகளை நாசம் செய்தால் கோபம் வரும் தான்.
ஆனால் என்ன செய்வது அவைகளுக்கு சில நேரம் சில தாவரங்களை உண்பது மருந்தாகவும், விருந்தாகவும் இருக்கே!
உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
முதல் படம் அட்டகாசமாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குகாணொளிகள் மூன்றும் கண்டேன் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை காணும் பொழுது நமக்கும் சந்தோஷமாக உள்ளது.
மற்ற படங்களும் அழகு.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//முதல் படம் அட்டகாசமாக இருக்கிறது சகோ.//
நன்றி ஜி.
//காணொளிகள் மூன்றும் கண்டேன் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை காணும் பொழுது நமக்கும் சந்தோஷமாக உள்ளது//
நீங்கள் குழந்தைகளின் விளையாட்டை காணொளியில் கண்டு மகிழ்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மனம் சஞ்சலபடும் போது இப்படி குழந்தைகளின் காணொளி பாருங்கள் உங்கள் சஞ்சலங்கள் பறந்தோடும்.
முதல் காணொளியில் உடற்பயிற்சி ஆசிரியர் பிடிபடும் போது குழந்தைகள் சிரிக்கும் காட்சி மிக அருமையாக இருக்கிறது.
இங்கு வளாகத்தில் சனி, ஞாயிறு குழந்தைகள் விளையாடுவார்கள்.
அதுவும் விளையாடும் குழந்தைகள் நிறைய இல்லை.
அவர்கள் மகிழ்ச்சி ஆரவார ஒலி மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
//மற்ற படங்களும் அழகு.//
நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ தேவகோட்டை ஜி.
.
படங்கள் அழகு. காணொலி சிறப்பு
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை, காணொளிகளை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நினைவுகளை மலரச் செய்தன காணொளிகளின் பகிர்வு :). இப்போதும் குழந்தைகள் விளையாடுவதைக் காண மகிழ்ச்சி ஏற்படுகிறது.
பதிலளிநீக்குஒன்று முதல் ஆறு வரையிலுமாக உங்களுக்காகவே பூத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளன செக்கச் சிவந்த செம்பருத்திகள்.
வீட்டுத் தோட்டத்துப் பூக்களையே நானும் பூஜைக்குப் பயன்படுத்துகிறேன்.
இங்கே செடிகளாக இல்லாமல் பெரிய மரங்களாக வளர்ந்த விட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையில் பூக்கின்றன. அடர்ந்து வளர்வதால் சில மாதங்களுக்கு ஒருமுறை ட்ரிம் செய்ய வேண்டி வருகிறது.
சுவாரஸ்யமான பகிர்வு.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//நினைவுகளை மலரச் செய்தன காணொளிகளின் பகிர்வு :). இப்போதும் குழந்தைகள் விளையாடுவதைக் காண மகிழ்ச்சி ஏற்படுகிறது.//
ஆமாம், ராமலக்ஷ்மி இப்போது பள்ளியில் குழந்தைகள் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
//ஒன்று முதல் ஆறு வரையிலுமாக உங்களுக்காகவே பூத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளன செக்கச் சிவந்த செம்பருத்திகள்.//
ஆமாம், இந்த பாடலுக்கு பூத்தது போல பூத்து இருக்கிறது, அதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
ஆரஞ்சு கலர் செம்பருத்திகள் இப்படி பூத்து இருப்பதை முன்பு போட்டு இருந்தேன். அப்போதும் இந்த பாடலையும் விளையாடலையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று தான் கைகூடியது.
//வீட்டுத் தோட்டத்துப் பூக்களையே நானும் பூஜைக்குப் பயன்படுத்துகிறேன்.
இங்கே செடிகளாக இல்லாமல் பெரிய மரங்களாக வளர்ந்த விட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையில் பூக்கின்றன. அடர்ந்து வளர்வதால் சில மாதங்களுக்கு ஒருமுறை ட்ரிம் செய்ய வேண்டி வருகிறது.//
மாயவரத்திலிருந்தவரை தோட்டத்தில் பூத்த பூக்கள்தான் இறைவனுக்கு. இப்போது உதிரி பூக்கள் பலவித பூக்கள் கலந்த கலவை வாங்கி இறைவனுக்கு வைக்கிறேன்.
நல்ல மண்ணும், நல்ல கவனிப்பும் இருக்கும் போது செடிகள் மரங்கள் போல அடர்த்தியாக வளர்ந்து பூக்களை சொரியும் தான். வீட்டுத்தோட்டத்து பூக்கள் பூஜைக்கு பயன் படுத்துவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
சுவாரஸ்யமான பகிர்வு.//
பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
பாடல்கள் அனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...
வணக்கம் திண்டுக்கலதனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபாடல்களை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.
சிறப்பான படங்கள். எங்க வீட்டிலும் அநேகமாக நாலைந்து நிறங்களில் செம்பருத்தி இருந்தது.தலைக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. சிவப்புச் செம்பருத்திக் கஷாயமெல்லாம் குடிச்சிருக்கேன். சீயக்காயோடு சேர்த்துப் போட்டு அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிச்சிருக்கேன். எனக்கு இப்போதும் அவ்வளவா நரை தெரியலை என்பதால் இங்கே எல்லோரும் அதிசயமாய்க் கேட்பாங்க. நான் இதெல்லாம் தான் காரணம்னு நினைச்சுப்பேன். இப்போக் காது ஓரங்களில் எல்லாம் நரை தெரிய ஆரம்பிச்சிருக்கு. ஆனால் செம்பருத்திக்கு எங்கே போக? கூடவே தி.ஜானகிராமனின் "செம்பருத்தி"யும் நினைவில் வந்தது. அதற்கு கோபுலு வரைந்த படங்களொடு..
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//எங்க வீட்டிலும் அநேகமாக நாலைந்து நிறங்களில் செம்பருத்தி இருந்தது.தலைக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது.//
எங்கள் வீட்டிலும் இருந்தது. என் அம்மா செம்பருத்தி இலைகளை தேய்த்து குளிப்பார்கள், உடலுக்கு குளிர்ச்சி, அழுக்கு போகும் என்பார்கள். பூக்களை காயவைத்து பச்சைபயிறு மற்றும் சில பொருட்கள் சீயக்காயோடு போட்டு மிஷ்னில் திருச்சி தருவார்கள். நானும் பல வருடங்கள் செய்தேன் இப்போதுதான் விட்டு விட்டேன்.
கொதிக்கும் நீரில் செம்பருத்தி பூவை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து சர்பத் கலந்து கொடுப்பார் என் மகளின் இந்தி டீச்சர். இருதயத்திற்கு நல்லது என்பார்.
செம்பருத்தி கதை படித்தது இல்லை, ஆனால் பலரும் அந்த கதை பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஓவியம் நன்றாக இருக்கும் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. செம்பருத்தி மலரின் அழகே தனிதான். அதிலும் அந்த சிகப்பு நிறம். கண்களை கவர்ந்திழுக்கும்.
தங்கள் மகன் வீட்டில் வளர்ந்த செடியின் பூக்களை நீங்கள் எண்ணிக்கையோடு வரிசைப்படுத்தி எடுத்திருப்பது அழகாக உள்ளது. நல்ல பொறுமையாக படங்களை எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
"ஒரு குடம் தண்ணி ஊத்தி" பாடலும் பழைய நினைவுக்களை கொண்டு வந்தது . அந்த காலத்தில் எத்தனை முறை இந்த விளையாட்டை விளையாடி இருப்போம் என்ற கணக்கே கிடையாது. நாங்களும் விளையாடிய அப்பருவத்தில் பிடிபட்டவுடன் பாதத்திலிருந்து ஆரம்பித்து "இம்புட்டு பணம் தாரேன்.." என்றுதான் ஆரம்பித்து தலைக்கு மேல் வரை கணக்கில் வைப்போம்.
காணொளிகளை நீங்கள் சேகரித்து பதிவில் பொருத்தியது பதிவுக்கே ஒரு களை வந்து விட்டது. எல்லா காணொளியும் கண்டு களித்தேன் . இப்போதும் குழந்தைகள் இவ் விளையாட்டை விளையாடுவது சந்தோஷமாக உள்ளது.
நல்ல மலரும் நினைவுகளை அழகானமலரோடு சேர்த்து தந்து விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். நானும் எங்கு சென்றாலும் இந்த மலரை போனில் சிறை பிடித்து விடுவேன். எங்கள் வீட்டில் பால்கனியில் வளர்த்தோம் . நிறைய மலர்களை தந்தது. ஆனால், செம்பருத்தி செடி தொட்டியில் வளர்வதை விட நிலத்தில் நீடித்து வளருமாம். நல்ல அழகான பதிவை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.
தங்கள் மகன் வீட்டில் வளர்ந்த செடியின் பூக்களை நீங்கள் எண்ணிக்கையோடு வரிசைப்படுத்தி எடுத்திருப்பது அழகாக உள்ளது. நல்ல பொறுமையாக படங்களை எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
"ஒரு குடம் தண்ணி ஊத்தி" பாடலும் பழைய நினைவுக்களை கொண்டு வந்தது . அந்த காலத்தில் எத்தனை முறை இந்த விளையாட்டை விளையாடி இருப்போம் என்ற கணக்கே கிடையாது. //
உங்கள் பழைய நினைவுகளை கொண்டு வந்தது மகிழ்ச்சி.
//பிடிபட்டவுடன் பாதத்திலிருந்து ஆரம்பித்து "இம்புட்டு பணம் தாரேன்.." என்றுதான் ஆரம்பித்து தலைக்கு மேல் வரை கணக்கில் வைப்போம்.//
ஆமாம், அது விட்டு போய் விட்டது, நீங்கள் நினைவு படுத்தி விட்டீர்கள்.
//காணொளிகளை நீங்கள் சேகரித்து பதிவில் பொருத்தியது பதிவுக்கே ஒரு களை வந்து விட்டது. எல்லா காணொளியும் கண்டு களித்தேன் . இப்போதும் குழந்தைகள் இவ் விளையாட்டை விளையாடுவது சந்தோஷமாக உள்ளது.//
ஆமாம், மாற்றங்கள் இருந்தாலும் குழந்தைகள் இப்போதும் விளையாடுவது மனதுக்கு மகிழ்ச்சி.
//நல்ல மலரும் நினைவுகளை அழகானமலரோடு சேர்த்து தந்து விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.//
அருமையாக சொன்னீர்கள் . உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//நானும் எங்கு சென்றாலும் இந்த மலரை போனில் சிறை பிடித்து விடுவேன்.//
அவைகளை நேரம் இருக்கும் போது பதிவு செய்யுங்கள்.
//எங்கள் வீட்டில் பால்கனியில் வளர்த்தோம் . நிறைய மலர்களை தந்தது. ஆனால், செம்பருத்தி செடி தொட்டியில் வளர்வதை விட நிலத்தில் நீடித்து வளருமாம்.//
ஆமாம், நிலத்தில் நல்ல பெரிய மரம் மாதிரி வளரும். தொட்டியில் நாம் முடக்கி தான் போடுகிறோம்.
//நல்ல அழகான பதிவை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.//
பதிவை ரசித்து அருமையாக விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.
.
// செம்பருத்தி மலரின் அழகே தனிதான். அதிலும் அந்த சிகப்பு நிறம். கண்களை கவர்ந்திழுக்கும்.//
சிவப்பு செம்பருத்தி அழகுதான்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி" பாடலும் பழைய நினைவுக்களை கொண்டு வந்தது . அந்த காலத்தில் எத்தனை முறை இந்த விளையாட்டை விளையாடி இருப்போம் என்ற கணக்கே கிடையாது. நாங்களும் விளையாடிய அப்பருவத்தில் பிடிபட்டவுடன் பாதத்திலிருந்து ஆரம்பித்து "இம்புட்டு பணம் தாரேன்.." என்றுதான் ஆரம்பித்து தலைக்கு மேல் வரை கணக்கில் வைப்போம்.
ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்தது நிறைய விளையாடியிருக்கிறேன் சின்ன வயசுல.
நீக்குகாணொளிகள் பார்த்தேன். பரவால்லியே இப்பவும் விளையாடுகிறார்கள். அதுவும் ஒரு காணொளியில் ஆசிரியரும் விளையாடுகிறார் சிக்க வரும் போது காணொளி மாறு கிறது.
கீதா
ஆமாம் சுத்துறீங்களான்னு கேட்கிறார்கள், மாம்பழம்....எலலமே அருமை...மகிழ்ச்சியாக இருக்கு பார்க்க.
நீக்குகீதா
மகன் வீட்டுத் தோட்டம் அழகு கோமதிக்கா...
நீக்குகீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்தது நிறைய விளையாடியிருக்கிறேன் சின்ன வயசுல.//
ஆமாம், எல்லோரும் விளையாடி இருக்கிறோம் தான்.
//காணொளிகள் பார்த்தேன். பரவால்லியே இப்பவும் விளையாடுகிறார்கள். அதுவும் ஒரு காணொளியில் ஆசிரியரும் விளையாடுகிறார் சிக்க வரும் போது காணொளி மாறு கிறது.//
ஆமாம், ஆசிரியரும் பிள்ளைகளுடன் விளையாடுகிறார்.
அனைத்து கானோளிகளையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
'ஒரு குடம்...." பாடல் நாங்களும் சிறு வயதில் விளையாடி இருக்கிறோம். பேரன் இப்பொழுது விளையாடுகிறான் :)
பதிலளிநீக்குஉங்கள் மகன் வீட்டு செவ்வரத்தை நல்ல சிகப்பு நிறம். அழகு.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு'//ஒரு குடம்...." பாடல் நாங்களும் சிறு வயதில் விளையாடி இருக்கிறோம். பேரன் இப்பொழுது விளையாடுகிறான் :)//
பேரன் விளையாடுவது அறிந்து மகிழ்ச்சி.
//உங்கள் மகன் வீட்டு செவ்வரத்தை நல்ல சிகப்பு நிறம். அழகு.//
ஆமாம், சிவப்பு நிறம் அழகுதான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதிக்கா செம்பருத்திப் பூக்களின் படங்கள் செம. என்ன அழகான நிறம். அதன் உட்புறம் பள பளன்னு அது கூடத் தெரிகிறது புகைப்படத்தில். செம அழகு. எல்லாப் படங்களும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா...
பதிலளிநீக்குஅதற்கான சத்து எல்லாம் அருமை. ஆமா இங்கும் கிடைக்கிறது பூச்சி வராமல் இருக்க என்று இயற்கையான உரம். நான் வீட்டில் தேங்காய் நாரை செடிகளின் அடியில் போட்டு மண்ணொடும் போட்டு வைத்துவிடுகிறேன். அதனால கோக்கோ பீட் வாங்கலை. இந்த இயற்கை உரம் வாங்கலாமான்னு பார்க்கிறேன், அதிகம் செடிகள் இல்லை. மஞ்சள் மா இஞ்சி, பிரண்டை, எலுமிச்சை, துளசி எல்லாம் தொட்டியில்தான்,
கீதா
கோமதிக்கா செம்பருத்திப் பூக்களின் படங்கள் செம. என்ன அழகான நிறம். அதன் உட்புறம் பள பளன்னு அது கூடத் தெரிகிறது புகைப்படத்தில். செம அழகு.
நீக்குஎல்லாப் படங்களும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா...//
நன்றி கீதா.
//அதற்கான சத்து எல்லாம் அருமை. ஆமா இங்கும் கிடைக்கிறது பூச்சி வராமல் இருக்க என்று இயற்கையான உரம். நான் வீட்டில் தேங்காய் நாரை செடிகளின் அடியில் போட்டு மண்ணொடும் போட்டு வைத்துவிடுகிறேன். அதனால கோக்கோ பீட் வாங்கலை. இந்த இயற்கை உரம் வாங்கலாமான்னு பார்க்கிறேன், அதிகம் செடிகள் இல்லை. மஞ்சள் மா இஞ்சி, பிரண்டை, எலுமிச்சை, துளசி எல்லாம் தொட்டியில்தான்,//
இயற்கை உரம் நல்லதுதான். வீட்டில் காய்கறி குப்பை, கொஞ்சம் மணல், தேங்காய் நார் எல்லாம் சேர்த்து இயற்கை உரம் தயாரிப்பது நல்லது. நானும் முன்பு இப்படி செய்வேன்.
நல்ல தேவையானவைகளை தொட்டியில் வைத்து வளர்ப்பது மகிழ்ச்சி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பூக்களின் படங்கள் அருமை..
பதிலளிநீக்குமழலையர் பாடலும் அருமை..
எத்தனை வருடங்கள் ஆயிற்று!..
சிறப்பு..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ. வாழ்க வளமுடன்
நீக்குபூக்களின் படங்கள் அருமை..
மழலையர் பாடலும் அருமை..
எத்தனை வருடங்கள் ஆயிற்று!..
சிறப்பு..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
காணொளிகள் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
காணொளிகள் மகிழ்ச்சி..//
நீக்குஆமாம், காணொளிகள் மகிழ்ச்சி அலைகளை பரவ விடுகிறது,
//வாழ்க நலம்..//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.