ஞாயிறு, 5 நவம்பர், 2023

நண்பர்கள் வீட்டு நவராத்திரி விழா


மகன் இருக்கும் அரிசொனாவில்  அவன் நண்பர்கள் இல்லங்களில் வைத்த நவராத்திரி கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

முந்தின பதிவு நவராத்திரி திருவிழா .
நவராத்திரி விழாவுக்கு வந்தவர்களை மறுநாளும் வர சொன்னேன்  அரிசோனா நண்பர்கள் வீட்டு  கொலு பார்க்க.


இவர்கள் வீட்டில் திருப்பதி கோவில் 




திருப்பதி போக முடியவில்லை , அதனால் திருப்பதியை  வீட்டுக்கு வரவழைத்து விட்டேன் என்றார். நானும் மனதால் ஏழுமலையானை படிகளில் ஏறி தரிசனம் செய்து கொண்டேன். 


இந்த வீட்டிலும் திருப்பதி மலைக் கோவில் வைத்து இருக்கிறார்கள் வலது பக்கம்.


இந்த வீட்டில் அவர்கள்  வரைந்த படங்களை  சுவரில் மாட்டி வைத்து இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிலும் பெருமாள், அலமேலு தாயார் தரிசனம் முதல் படியில்.
இந்த வீட்டில் இராஜராஜேஸ்வரிக்கு லட்சுமி, சரஸ்வதி கவரி வீசும் காட்சி அழகு. முதல் படியில் பெருமாள், தாயார் தரிசனம்.  நான்காவது படியில் திருப்பதி கோபுரம்.

இவர்கள் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு தாம்பூலம் பெற்றுக் கொள்ளுங்கள்

இவர்கள் வீட்டில் முதல் படியில் மீனாட்சி கல்யாணம் இடம் பெற்று இருக்கிறது.
 கீழ் படியில் சங்கீத மும்மூர்த்திகள் ,  அனுமன் லட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி  மூலிகை இருக்கும்  மலையை பெயர்த்து வந்த காட்சி இருக்கிறது.

ஒரு வீட்டில் சாய் வாழ்க்கை வரலாறு  வைத்து இருக்கிறார்கள்.




மேலே உள்ள படங்கள் எல்லாம் மருமகள் அனுப்பியது.

இங்கும் திருப்பதி  பெருமாள் கோவில் , அங்கு உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்கள், கீழே விழுந்து கும்பிடும் அன்பர்கள்  இருக்கிறார்கள். வலது பக்கம் இருக்கிறது.  இடது பக்கம் இராமாயணகாட்சி சேதுக்கு அணை  கட்டும் வானரங்கள் காட்சி. இடம்பெற்று இருக்கிறது.

ஆறாவது படியில் இரண்டு திருமண செட்கள் இருக்கிறது, ஒன்று 20 வயதில்   செய்யும் கல்யாணம், 60 வயதில்  செய்யும் மணிவிழா. இரண்டு திருமண காட்சிகள் அடுத்து அடுத்து இருக்கிறது பாருங்கள். முதல் கல்யாணம் கீழே அமர்ந்த கோலம், 60ல் நாற்காலியில் அமர்ந்த கோலம். 60 வயதில்   சிலருக்கு  கீழே உட்கார முடியாமல் இருக்கும் நிலையை சொல்கிறது பொம்மைகள்.

இடது பக்கம் பிள்ளையார்கள் காரம்போர்ட் விளையாடுகிறார்கள்.


பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் நந்தினியும், குந்தவையும் சந்தித்து கொள்ளும் காட்சி. அவர்கள் தோழிகளும் உடன் இருக்கிறார்கள்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்தி மூவர் திருவிழாவும் , அந்த சமயத்தில் கோவிலை சுற்றி உள்ள திருவிழா கடைகளும் 

இந்த வீட்டுக் கொலுவை ரசித்துப்பார்த்து பேரன் அனுப்பிய படங்கள்.  கடைத்தெரு அவனுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

வெற்றிலை பாக்கு , தினசரிகள், புத்தகம் விற்கும் பெட்டிக்கடை

பழைய காலத்து வீடியோ கடை

பஞ்சு மிட்டாய்

மிளகாய் பஜ்ஜி,, வாழைக்காய் பஜ்ஜி , வடை, போண்டா விற்கும் தள்ளு வண்டி  கடை

இட்லி, வடை, பூரி தோசை விற்கும் தள்ளுவண்டி கடை

கல்லில்  கல் தோசை இருக்கு , ரோஸ்ட் வேண்டுமென்றால் அடுத்து ஊற்றி தருவார்.
அய்யங்கார் பேக்கரி   வித விதமான கேக்குகள்

முராரி ஸ்வீட் கும்பகோணத்தில் மாயவரத்தில் உண்டு. அது   போல சென்னையில்  மூர்த்தியும் மிக பிரபலமான ஸ்வீட் கடை போலும். இனிப்பு மட்டும் அல்ல காரவகைகளும் இருக்கிறது, குளிர்பானமும் உண்டு.
நவராத்திரிக்கும் அதை தொடர்ந்து வரும் தீபாவளிக்கும் குழந்தைகளுக்கு வளையல் மணிமாலை, மருதாணி கோன் வாங்கலாம்

நவராத்திரிக்கு வாங்கியாச்சு என்று சொல்பவர்கள்  , தீபாவளிக்கும் பட்டுபுடவைகள் வாங்கலாம். என் போன்று பட்டு கட்ட மாட்டேன் என்றால் பட்டு போலவே உள்ள கைத்தறி புடவைகள் இருக்கிறதாம்  வாங்கலாம். 

அரிசோனா நவராத்திரி கொலு படங்கள் பிடித்து இருக்கா?

நன்றி- கூகுள்.

அரிசோனா நண்பர்கள் வீட்டு கொலு பார்க்க வந்தால்  சுண்டல் கிடைக்குமா என்று கேட்டார்கள் கீதா. அவர்கள் வீட்டு பிரசாதங்கள் படங்கள் அனுப்பவில்லை அதனால் 9 வகையான சுண்டல் பிரசாதங்களை  கூகுள் ஆண்டவர் கொடுத்து விட்டார். எடுத்து கொள்ளுங்கள் கீதா.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________

39 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.

    படங்களை பெரியதாக்கி ரசித்து பார்த்தேன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.//

      நன்றி.

      //படங்களை பெரியதாக்கி ரசித்து பார்த்தேன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//

      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //கண்கொள்ளாக் காட்சி அம்மா...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நேற்று "நவராத்திரி திருவிழா" காண வரவில்லை என்றதும் வெளியூரில் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

      நீக்கு
  3. நவராத்திரி கொலு சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன்.

    அதிலும் திருப்பதி கோவிலின் மாடல், மனதை மிகவும் கவர்ந்தது. எத்தனை முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பை இறைவன் வழங்கியிருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

    சமீப காலங்களிலும் பல முறை திருப்பதி கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஓரளவு கோவில் அமைப்பு அத்துப்படியாகிவிட்டது. நீங்கள் அடுத்த முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால், கருவறையின் வெளிப்புறச் சுவற்றில், பெருமாளுக்கு இடது புறம், தமிழ் கல்வெட்டுகளை மறக்காமல் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //அதிலும் திருப்பதி கோவிலின் மாடல், மனதை மிகவும் கவர்ந்தது//

      போன வருடமும் இவர்கள் வீட்டு கொலுவை எல்லோரும் பாராட்டி வாழ்த்து சொன்னீர்கள். போன வருடம் அறுபடை வீடு மயில் தோகை விரித்தார் போல படிகள் அமைத்து இருந்தார்.

      https://mathysblog.blogspot.com/2022/10/blog-post_17.html

      //எத்தனை முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பை இறைவன் வழங்கியிருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.//

      மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டே இருங்கள்.

      மாயவரத்தில் இருந்த போது நிறைய தடவை திருப்பதி போகும் வாய்ப்புகள் கிடைத்தன. கணவ்ருடம் மூன்று முறை, மகனும் நானும் அக்கம் பக்கத்து வீட்டாருடன், கோவில் வார வழிபாட்டு குழுவினருடன் என்று போய் இருக்கிறேன்.

      //சமீப காலங்களிலும் பல முறை திருப்பதி கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஓரளவு கோவில் அமைப்பு அத்துப்படியாகிவிட்டது. நீங்கள் அடுத்த முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால், கருவறையின் வெளிப்புறச் சுவற்றில், பெருமாளுக்கு இடது புறம், தமிழ் கல்வெட்டுகளை மறக்காமல் பாருங்கள்//

      இறைவன் அருளால் வாய்ப்பு கிடைத்தால் தமிழ் கல்வெட்டுகளை மறக்காமல் பார்க்கிறேன்.

      நீக்கு
  4. பேரன் அனுப்பிய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

    கடைத்தெருவில் உள்ள கடைகளை ஓரளவு அச்சு அசலாக வடிவமைத்திருக்கிறார்.

    உணவுப் பண்டங்கள் உண்மையோ எனத் தோற்றம் தருகின்றன. பஞ்சு மிட்டாய், சாட் வகைகள், பெட்டிக்கடை, பஜ்ஜிக்கடை என்று ஒவ்வொன்றிலும் மிகுந்த ரசனை வெளிப்படுகின்றது. இதனைச் செய்தவரை மனமாறப் பாராட்டுகிறேன்.

    வீடியோ கடை ஒன்றுதான் தற்போது காண இயலாத கடை.

    அனைத்தும் அருமை. பேரனின் ரசனையையும் அனுப்பிவைத்ததையும் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் அனுப்பிய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.//

      ஆமாம்., எல்லோர் மனதையும் கவரும் படங்கள் தான்.

      //கடைத்தெருவில் உள்ள கடைகளை ஓரளவு அச்சு அசலாக வடிவமைத்திருக்கிறார்.//
      ஆமாம்.

      //உணவுப் பண்டங்கள் உண்மையோ எனத் தோற்றம் தருகின்றன. பஞ்சு மிட்டாய், சாட் வகைகள், பெட்டிக்கடை, பஜ்ஜிக்கடை என்று ஒவ்வொன்றிலும் மிகுந்த ரசனை வெளிப்படுகின்றது. இதனைச் செய்தவரை மனமாறப் பாராட்டுகிறேன்.//

      ஆமாம், செய்தவரை பாராட்ட வேண்டும். நல்ல திறமையானவர். தோசை ரோல் அப்படியே உண்மையாக காட்சி அளிக்கிறது.
      சென்னையிலிருந்து அப்பா அனுப்பி வைத்தார்கள் என்றார்கள் கொலு வைத்தவர்கள்.

      //வீடியோ கடை ஒன்றுதான் தற்போது காண இயலாத கடை.//

      ஆமாம்.

      //அனைத்தும் அருமை. பேரனின் ரசனையையும் அனுப்பிவைத்ததையும் பாராட்டுகிறேன்.//

      பேரனின் ரசனையை பாராட்டியதற்கும், கொலுவை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கும் நன்றி நெல்லை.

      நீக்கு
  5. ராதா சில்க் எம்போரியம் சூப்பர்.

    இணையச் சுண்டலா? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா சில்க் எம்போரியம் சூப்பர்.//

      ஆமாம், புடவை வண்ணங்களும் மடிப்பும் அப்படியே உண்மையாக காட்சி அளிக்கிறது. அலமாரியில் அடுக்கி இருப்பதும் கொள்ளை அழகு.

      இணையச் சுண்டலா? ஹா ஹா ஹா//

      வேறு என்ன செய்வது சுண்டல் கேட்டு விட்டார்கள்.

      மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்தி மூவர் திருவிழாவும் , அந்த சமயத்தில் கோவிலை சுற்றி உள்ள திருவிழா கடைகளும் வைத்து இருக்கும் வீட்டு கொலுவில் பிரசாதம் "வால் பேரிக்காய் "வைத்து இருக்கிறார்கள். அதை எடுத்து கொள்ளலாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. பிரமாதம்.  படங்கள் எல்லாமே அருமை.  உழைப்பு தெரிகிறது.  விதம் விதமாய் பொம்மைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பிரமாதம். படங்கள் எல்லாமே அருமை. உழைப்பு தெரிகிறது. விதம் விதமாய் பொம்மைகள்...//

      ஆமாம், இங்கு என்றால் அழகாய் வைத்து இருக்கும் கொலுவை உள்ளூர் தொலைக்காட்சியில் போட போட்டி போட்டு கொண்டு வருவார்கள். அவர்கள் நன்கு உழைத்து செய்தது அனைவரையும் சென்றுடையும். பரிசும் கிடைக்கும்.

      நீக்கு
  7. குடந்தையில் ராதா சில்க் எம்போரியம் சென்று வந்தேன்.  சென்னைக் கடைகள் போல இல்லாமல் அது பழைய மாடல் கட்டிடத்தில் வித்தியாசமாய் இருந்தது.  அது நினைவுக்கு வந்து விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குடந்தையில் ராதா சில்க் எம்போரியம் சென்று வந்தேன். சென்னைக் கடைகள் போல இல்லாமல் அது பழைய மாடல் கட்டிடத்தில் வித்தியாசமாய் இருந்தது. அது நினைவுக்கு வந்து விட்டது!//

      நாங்களும் கும்பகோணம் , மற்றும் திருப்புவனத்தில் ராதா சில்க் எம்போரியம் போய் இருக்கிறோம். திருப்புவனத்தில் கோவில் அருகில் இருக்கும். கும்பகோணத்தில் தெப்பகுளம் அருகில் முன்பு இருந்தது .

      நீக்கு
  8. கடை பொம்மைகள் அழகோ அழகு.  இட்லி பூரிகள் தத்ரூபமாய் இருக்கின்றன.  சட்னி, சாம்பார் எல்லாம் போமாமியா நிஜமா?

    பதிலளிநீக்கு
  9. நவராத்திரி கொலு படங்கள் எல்லாமும் அருமையிலும் அருமை..

    கடைத்தெரு கடைகள் ஓரளவு அழகின் வடிவமைப்பு..

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கொலுவின் உச்சம்..

    ராதா சில்க் எம்போரியம் அழகு.. புடவையும் மடிப்பும் வண்ணங்களும் அடடா!..

    பேரனின் ரசனை!..

    வளரும் பயிர் முளையிலே தெரியும் - என சும்மாவா சொன்னார்கள்!..

    வாழ்த்துகள்..
    சூழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      நவராத்திரி கொலு படங்கள் எல்லாமும் அருமையிலும் அருமை..

      கடைத்தெரு கடைகள் ஓரளவு அழகின் வடிவமைப்பு..//

      ஆமாம் அழகான வடிவமைப்பு தான்.

      //மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கொலுவின் உச்சம்.//

      ஆமாம்.

      //ராதா சில்க் எம்போரியம் அழகு.. புடவையும் மடிப்பும் வண்ணங்களும் அடடா!..

      பேரனின் ரசனை!..

      வளரும் பயிர் முளையிலே தெரியும் - என சும்மாவா சொன்னார்கள்!..

      வாழ்த்துகள்..
      சூழ்க நலம்...//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து பேரனுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. கோம்திக்கா அசந்துவிட்டேன் கொலு பார்த்து. கடவுளே!!!! எப்படி இத்தனையும் இவ்வளவு அழகாகச் செய்திருக்காங்க. இவை கொலு பொம்மை கடைகளில் இப்படிச் செட்டாகப் பார்த்ததில்லை. இவங்க இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆர்டர் செய்து வாங்கிருப்பாங்களோ?

    திருப்பதி கோயில் செட் அருமை! இவர்களே வீட்டில் செய்தாங்களோ? உங்கள் மகன் வடிவமைப்பது போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோம்திக்கா அசந்துவிட்டேன் கொலு பார்த்து. கடவுளே!!!! எப்படி இத்தனையும் இவ்வளவு அழகாகச் செய்திருக்காங்க. இவை கொலு பொம்மை கடைகளில் இப்படிச் செட்டாகப் பார்த்ததில்லை. இவங்க இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆர்டர் செய்து வாங்கிருப்பாங்களோ?//

      கீதா இப்போது எல்லாம் செட் செட்டாக கிடைக்கிறது . கிரிக்கெட் செட், இராமயாண , மகாபாரத செட் , சீதா கல்யாணம், கிருஷ்ணபிறப்பு கதை என்று . முன்பு ஒரு பெட்டியில் பொம்மைகளை பத்திரபடுத்தி அதையே வருடா வருடம் வைப்போம். பார்க், மற்றும் கடைகள் , மலைக்கோவில், தெப்பகுளம் என்று காட்சிகள் மாறும் வருடா வருடம் .

      சின்னதோ, பெரிசோ கொலுவெல்லாம் திறமைகளை காட்டும் விழாவாக உள்ளது கீதா.

      பொம்மை வியாபாரிகளும் புதுசு புதுசாக பொம்மைகள் அறிமுகபடுத்துகிறார்கள்.

      //திருப்பதி கோயில் செட் அருமை! இவர்களே வீட்டில் செய்தாங்களோ? உங்கள் மகன் வடிவமைப்பது போல!//

      அவர்களே கோபுரம் மற்றும் படிகள் அமைத்து இருக்கிறார்கள்.
      போன முறையும் நன்றாக செய்து இருந்தார்கள்.

      நீக்கு
  11. எப்படி கோமதிக்கா இப்படி தோசை, பூரி இட்லி சட்னி சாம்பார் எல்லாம் தத்ரூபமாக வடிவமைச்சிருக்காங்க? இல்லை இவங்க வீட்டில் செய்ததை வைச்சிருக்காங்களஆ? சுண்டல் வைச்சிருக்காங்க வீட்டில் செய்தது என்று நினைக்கிறேன். எல்லாம் பார்த்து வரப்ப சுண்டலும் பொம்மையா என்று தோன்ற வைக்கும் அளவுக்கு மைலாப்பூர் கடைகள் அட்டகாசம்.

    மயிலாப்பூர் கோயில் அமைப்பு பிரமிக்க வைக்கிறது கோமதிக்கா. சுற்றிலும் கடைகள் ஆஹா! அட்டகாசம்.

    கவினின் ஆர்வமும் ஃபோட்டோ எடுத்த விதமும் அருமை அவர் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.

    ஒவ்வொரு பொம்மையும் பிரமிக்க வைக்கிறது. சாய்பாபா வரலாறு, ஊஞ்சலில் படுத்திருப்பது என்று எல்லாமே அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்படி கோமதிக்கா இப்படி தோசை, பூரி இட்லி சட்னி சாம்பார் எல்லாம் தத்ரூபமாக வடிவமைச்சிருக்காங்க? இல்லை இவங்க வீட்டில் செய்ததை வைச்சிருக்காங்களஆ? சுண்டல் வைச்சிருக்காங்க வீட்டில் செய்தது என்று நினைக்கிறேன். எல்லாம் பார்த்து வரப்ப சுண்டலும் பொம்மையா என்று தோன்ற வைக்கும் அளவுக்கு மைலாப்பூர் கடைகள் அட்டகாசம்.//

      ஆமாம் எல்லாம் தத்ரூபமாக செய்து இருக்கிறார் பொம்மை செய்பவர்.சுண்டல் வைக்கவில்லை அவர்கள். சுண்டல் இனையத்தில் உங்களுக்கு என்று எடுத்து போட்டேன்.

      //மயிலாப்பூர் கோயில் அமைப்பு பிரமிக்க வைக்கிறது கோமதிக்கா. சுற்றிலும் கடைகள் ஆஹா! அட்டகாசம்.//நமக்கு எல்லாம் பிடிக்கும் என்றுதான் கவின் அனுப்பினான்.

      //கவினின் ஆர்வமும் ஃபோட்டோ எடுத்த விதமும் அருமை அவர் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.//

      கவினை வாழ்த்தியதற்கு நன்றி. அவனிடம் இப்போது பேசும் போது உங்கள் எல்லோர் வாழ்த்தையும் கருத்தையும் சொல்லி விட்டேன்.

      //ஒவ்வொரு பொம்மையும் பிரமிக்க வைக்கிறது. சாய்பாபா வரலாறு, ஊஞ்சலில் படுத்திருப்பது என்று எல்லாமே அருமை//

      ஆமாம் . போன தடவை ஆண்டாள் வரலாறு சொன்ன வீடு. இந்த முறை சாய் வரலாறு.








      நீக்கு
  12. ஆமாம் கல்யாண செட் - முன்ன இளையவர்கள் கல்யாண செட் வந்திருந்தது இப்ப 60 எல்லாமும் வந்தாச்சு ஆமாம் நாற்காலியில் அமர்ந்து ....

    திருப்பதி உண்டியல் விழுந்து வணங்கும் செட் எல்லாமே அருமை, இப்போது நிறைய வகை பொம்மைகள் வரத் தொடங்கிவ்ட்டன என்று தெரிகிறது. இப்படியேனும் பொம்மை செய்யும் கலைஞர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைக்குமே. அவர்கள் எல்லோரையும் அவர்களது திறமையையும் பாராட்டுவோம். யோசித்து யோசித்து ஒவ்வொன்றும் செட் செட்டாகச் செய்யறாங்க பாருங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் கல்யாண செட் - முன்ன இளையவர்கள் கல்யாண செட் வந்திருந்தது இப்ப 60 எல்லாமும் வந்தாச்சு ஆமாம் நாற்காலியில் அமர்ந்து ....//

      காலத்துக்கு ஏற்ற நாற்கலி அமைப்பு பொம்மை.
      உறவினர் ஒருவர் வீட்டில் குட்டையான ஷோபா அமைத்து இருந்தார்கள். நாற்கலியிலும் வெகு நேரம் காலை தொங்கவிட முடியாதே சிலருக்கு. மனையை விட கொஞ்சம் உயரமாக அமைத்து இருந்தார்கள் மணமக்களுக்கு வசதியாக இருந்தது.

      //திருப்பதி உண்டியல் விழுந்து வணங்கும் செட் எல்லாமே அருமை, இப்போது நிறைய வகை பொம்மைகள் வரத் தொடங்கிவ்ட்டன என்று தெரிகிறது.//

      முன்பே உள்ள பழைய காலத்து பொம்மை தான் கீதா.


      //இப்படியேனும் பொம்மை செய்யும் கலைஞர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைக்குமே//
      இப்போது அவர்கள் உடைந்த பொம்மைகளை சரி செய்து கொடுப்பது, பழைய பொம்மைகளுக்கு வர்ணம் அடித்து கொடுப்பது என்று அதுவும் செய்கிறார்கள் நவராத்திரி காலம் மட்டும் செய்யமாட்டார்கள். நவராத்திரி முடிந்தவுடன் செய்து கொடுக்கிறார்கள்.

      .// அவர்கள் எல்லோரையும் அவர்களது திறமையையும் பாராட்டுவோம். யோசித்து யோசித்து ஒவ்வொன்றும் செட் செட்டாகச் செய்யறாங்க பாருங்க.//
      திறைமையை பாராட்டுவோம் கண்டிப்பாக.

      போன வருடம் அத்தி வரதர் செய்தார்கள் புதிதாக. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொம்மைகள் செய்தால்தான் அவர்கள் பிழைக்கமுடியும்.

      நீக்கு
  13. ராதா சில்க் எம்போரியம் என்னவே நிஜமாகவே புடவைகள் உள்ளே அடுக்கி வைத்திருப்பது போல தத்ரூபமாக இருக்கு.

    இவர்களே நேரம் கிடைக்கும் போது இப்படி வடிவமைப்பு எல்லாம் செய்கிறார்களோ வீட்டில்? அல்லது கடைகளில் ஆர்டர் கொடுத்து இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லி வாங்குகிறார்களா? அலல்து இபப்டியே செட்கள் வரத் தொடங்கிவிட்டனவா?

    அத்தனையும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ராதா சில்க் எம்போரியம் என்னவே நிஜமாகவே புடவைகள் உள்ளே அடுக்கி வைத்திருப்பது போல தத்ரூபமாக இருக்கு.

      இவர்களே நேரம் கிடைக்கும் போது இப்படி வடிவமைப்பு எல்லாம் செய்கிறார்களோ வீட்டில்? அல்லது கடைகளில் ஆர்டர் கொடுத்து இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லி வாங்குகிறார்களா? அலல்து இபப்டியே செட்கள் வரத் தொடங்கிவிட்டனவா?//

      மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்தி மூவர் திருவிழாவும் , அந்த சமயத்தில் கோவிலை சுற்றி உள்ள திருவிழா கடைகளில் ஒன்றுதான் இந்த ராதா சில்க் எம்போரியம் கீதா . ஒரே செட் தான் அத்தனையும்.

      அத்தனையும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//

      அத்தனையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. அந்த மாட்டு வண்டியில் சாக்கு மூட்டைகள் ஏறி வரும் செட் தத்ரூபம்....

    ஆனால் அதில் மாடுகளைத் தடியில் பூட்டுவதில் ஒன்று மட்டும் வண்டியுடன் இணைந்திருக்கு மற்றொன்று வண்டிக்கு வேளியே இருக்கு ....அதை கொலுவில் இவங்க வைத்து இணைக்கும் போது இப்படி ஆகிவிட்டது போலும்.

    ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. எனக்கு கொலு ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பழையகாலத்து வீடியோ கடை, தள்ளு வண்டி கடைக்ள் பஞ்சுமிட்டாய் கடை என்று பார்த்து பார்த்து முடியலை கோமதிக்கா. அப்படி ஈர்க்கின்றன அனைத்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ப்ழையகாலத்து வீடியோ கடை, தள்ளு வண்டி கடைக்ள் பஞ்சுமிட்டாய் கடை என்று பார்த்து பார்த்து முடியலை கோமதிக்கா. அப்படி ஈர்க்கின்றன அனைத்தும்.//

      ஆமாம் கீதா நமக்கே இப்படி என்றால் குழந்தைகளை மிகவும் கவரும் இந்த கடைத்தெரு.

      நீக்கு
  16. //அந்த மாட்டு வண்டியில் சாக்கு மூட்டைகள் ஏறி வரும் செட் தத்ரூபம்....//
    ஆமாம்.

    //ஆனால் அதில் மாடுகளைத் தடியில் பூட்டுவதில் ஒன்று மட்டும் வண்டியுடன் இணைந்திருக்கு மற்றொன்று வண்டிக்கு வேளியே இருக்கு///

    நுகத்தடி சரியாக மாட்ட வில்லை. கவனிக்கவில்லை போலும். நீங்கள் கவனித்து விட்டீர்கள்.

    ....//அதை கொலுவில் இவங்க வைத்து இணைக்கும் போது இப்படி ஆகிவிட்டது போலும்.//

    சரியாக வைக்கலாம். பார்த்து யாராவது சொல்லி இருந்தால் சரியாக மாட்டி இருப்பார்கள்.

    //ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. எனக்கு கொலு ரொம்பப் பிடிக்கும்.//

    கொலுவை ரசித்துப்பார்த்து கொடுத்த அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  17. எத்தனை புதுமையான கொலுக்கள். கடைத்தெரு கண்கொள்ளாக்காட்சி.

    தாங்களும் ரசித்து எங்களுக்கும் காண படங்கள் அனுப்பிய மகன் குடும்பத்தினர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //எத்தனை புதுமையான கொலுக்கள். கடைத்தெரு கண்கொள்ளாக்காட்சி.
      ஆமாம், கடைத்தெரு எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் தான் இந்த பகிர்வு மாதேவி.

      //தாங்களும் ரசித்து எங்களுக்கும் காண படங்கள் அனுப்பிய மகன் குடும்பத்தினர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் எங்கள் நன்றிகள்.//

      படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.






      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    ஆகா.. ஆகா.. பதிவு மிக அருமை. கொலு பொம்மைகள் ஒவ்வொன்றும் உயிர் பெற்று எழுவது போல் ஒரு தோற்றம். திர்ப்பதி கோவில் மயிலாப்பூர் கோவில் என எல்லா கோவில்களும் அப்படியே தத்ரூபம். உங்கள் எண்ணத்தைப் போல நானும் அந்த கோவில்களை மானசீகமாக சென்று தரிசித்து வந்தேன். கொலுக்களைப் பார்க்கப் பார்க்க வியப்பும், அவர்களின் உழைப்பையும் கற்பனைத் திறனையும் கண்டு ஆச்சரியப்பட வைக்கிறது. நீங்கள் சொல்வது போல் இந்த கொலுக்கள் இங்கிருந்தால் நிச்சயம் பரிசை தட்டுச் செல்லும்.

    ஒவ்வொரு வீட்டின் கொலுக்களும் போட்டிப் போட்டு நம்மை அசர வைக்கின்றன. இவர்களின் இந்த கடும் உழைப்பு கண்டு பிரமிக்கிறேன்.

    கடைகள் கண்காட்சி எதைப் புகழ்வது எனத் தெரியவில்லை. இட்லி, தோசை பூரி, ஸ்வீட் புடவை நகைகள் கடை என ஒவ்வொன்றும் கண்களை பறிக்கிறது. நம் வீட்டில் நிஜமாகவே இந்த உணவு வகைகளை செய்தால் கூட இந்த அளவு வடிவமைப்புடன் வராது. அவ்வளவு அழகாக உள்ளது.

    உங்களுக்கு இந்தப்படங்களை அனுப்பி வைத்த உங்கள் மருமகளுக்கும், பேரனுக்கும் மிக்க நன்றியை சொல்லுங்கள். அவர்களின் ரசனைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    அதுபோல், இந்த கொலுவை வைத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கச் சொல்லுங்கள். சுண்டல்களும், கண்களை கவர்கிறது. எனக்குப் பிடித்ததை கண்களால் எடுத்துக் கொண்டேன். நன்றி சகோதரி.

    தாங்கள் என் பதிவுக்கும் வந்து ஆறுதலாக சொன்ன கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. இங்கு என் இளைய மகன் மருமகளுடன் ஊரிலிருந்து நாளை மறுநாள் வருவதால் சில வேலைகள் அதனால் உடனே உங்கள் அனைவருக்கும் பதில் சொல்ல தாமதமாகிறது. பொறுத்துக் கொள்ளுங்கள்.அருமையான இந்தப்பதிவுக்கு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. ஆகா.. பதிவு மிக அருமை. கொலு பொம்மைகள் ஒவ்வொன்றும் உயிர் பெற்று எழுவது போல் ஒரு தோற்றம். திர்ப்பதி கோவில் மயிலாப்பூர் கோவில் என எல்லா கோவில்களும் அப்படியே தத்ரூபம். உங்கள் எண்ணத்தைப் போல நானும் அந்த கோவில்களை மானசீகமாக சென்று தரிசித்து வந்தேன். கொலுக்களைப் பார்க்கப் பார்க்க வியப்பும், அவர்களின் உழைப்பையும் கற்பனைத் திறனையும் கண்டு ஆச்சரியப்பட வைக்கிறது. நீங்கள் சொல்வது போல் இந்த கொலுக்கள் இங்கிருந்தால் நிச்சயம் பரிசை தட்டுச் செல்லும்.//

      ஆமாம், கமலா அவர்கள் உழைப்பும், கற்பனை திறனும் வியக்க வைப்பது உண்மைதான்.


      //உங்களுக்கு இந்தப்படங்களை அனுப்பி வைத்த உங்கள் மருமகளுக்கும், பேரனுக்கும் மிக்க நன்றியை சொல்லுங்கள். அவர்களின் ரசனைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.

      //அதுபோல், இந்த கொலுவை வைத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கச் சொல்லுங்கள்.


      //ஒவ்வொரு வீட்டின் கொலுக்களும் போட்டிப் போட்டு நம்மை அசர வைக்கின்றன. இவர்களின் இந்த கடும் உழைப்பு கண்டு பிரமிக்கிறேன்.//

      எல்லோரும் வேலைகள் பார்ப்பவர்கள் வேலை முடித்து வந்து இதை ஆர்வமாக செய்கிறார்கள். வந்தவர்களுக்கு உணவும் செய்கிறார்கள்.
      அவர்கள் திறமையை பாராட்ட வேண்டும்.

      //கடைகள் கண்காட்சி எதைப் புகழ்வது எனத் தெரியவில்லை. இட்லி, தோசை பூரி, ஸ்வீட் புடவை நகைகள் கடை என ஒவ்வொன்றும் கண்களை பறிக்கிறது. நம் வீட்டில் நிஜமாகவே இந்த உணவு வகைகளை செய்தால் கூட இந்த அளவு வடிவமைப்புடன் வராது. அவ்வளவு அழகாக உள்ளது.//

      ஆமாம். உணவு வகைகள் மிக அழகாய் உண்மையான உணவு வகைகள் போலவே உள்ளது.

      அதுபோல், இந்த கொலுவை வைத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கச் சொல்லுங்கள்.//

      கண்டிப்பாய் சொல்ல சொல்கிறேன். அவர்களுக்கு அது மேலும் உற்சாகமாக நவராத்திரி விழாவை சிறப்பாக செய்ய உதவும்.

      //தாங்கள் என் பதிவுக்கும் வந்து ஆறுதலாக சொன்ன கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.//


      இதற்கு எதற்கு நன்றி? ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக , ஆறுதல் வார்த்தைகளை பரிமாறி கொள்வோம்.

      //இங்கு என் இளைய மகன் மருமகளுடன் ஊரிலிருந்து நாளை மறுநாள் வருவதால் சில வேலைகள் அதனால் உடனே உங்கள் அனைவருக்கும் பதில் சொல்ல தாமதமாகிறது. பொறுத்துக் கொள்ளுங்கள்.//

      அவசரமே இல்லை மெதுவாக சொல்லுங்கள். பிள்ளைகள் வரும் போது அவர்களுக்கு வேண்டியதை பாருங்கள். நாம் எப்போது வேண்டுமென்றாலும் நிதானமாக பேசி கொள்ளலாம்.

      மகன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  19. ஒவ்வொரு கொலுவும் வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது. என்ன கற்பனை வளம்! செய் நேர்த்தி..! ஏ அப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //ஒவ்வொரு கொலுவும் வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது. என்ன கற்பனை வளம்! செய் நேர்த்தி..! ஏ அப்பா!//

      ஆமாம். அருமையான கற்பனை வளம் தான்.

      உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  20. நேர்த்தியான, விதம் விதமான கருக்களில் கொலுக்கள்! படிக்கட்டுகளில் இருப்பவற்றை குறிப்பாகக் கவனிக்க நீங்கள் தந்திருக்கும் குறிப்புகள் பெரிதும் உதவின. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன். திருப்பதி கோயில், திருமணக் காட்சிகள், கபாலீஸ்வரர் கோயில், குந்தவை-நந்தினி சந்திப்பு.. அருமை! பகிர்ந்த தங்களுக்கும், கடைத்தெருக் காட்சிகளை அழகாகப் படம் எடுத்துக் காணத் தந்த பேரனுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //நேர்த்தியான, விதம் விதமான கருக்களில் கொலுக்கள்! படிக்கட்டுகளில் இருப்பவற்றை குறிப்பாகக் கவனிக்க நீங்கள் தந்திருக்கும் குறிப்புகள் பெரிதும் உதவின. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன்.//

      நன்றி , மகிழ்ச்சி.

      //திருப்பதி கோயில், திருமணக் காட்சிகள், கபாலீஸ்வரர் கோயில், குந்தவை-நந்தினி சந்திப்பு.. அருமை! பகிர்ந்த தங்களுக்கும், கடைத்தெருக் காட்சிகளை அழகாகப் படம் எடுத்துக் காணத் தந்த பேரனுக்கும் நன்றி.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துசொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.


      நீக்கு
  21. வணக்கம் சகோ, வாழ்க வளமுடன்
    புது பதிவு போட்டு விட்டேன்.
    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு