எங்கள் வீட்டு கண்ணன்
நேற்று கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்த படங்களும் , பாடல்களும் இடம்பெறுகிறது இந்த பதிவில்.
பாலும், தயிரும், வெண்ணையும் அவல் பாயசமும், துளசியும் வைத்து வணங்கி விட்டேன்.
கல்லும் கூடக் கரையச் செய்யும்
கனிமுகங்க கொண்ட கிருஷ்ணா
நீலவண்ண கண்ணா வாடா!
பாலும் தயிரும் மோரும், வெண்ணெயும்
உனக்காகத்தான் கிருஷ்ணா
பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு
பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன்
உண்ணும் வழியுரைப்பான்,
அழைக்கும் பொழுதினிற் போக்கு சொல்லாமல்
அரைநொடிக் குள்வருவான்
மழைக்கு குடை, பசிநேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண்ணன்
- பாரதியார்
கோகுல கிருஷ்ணா வா வா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கோகுல கிருஷ்ணா வா வா
காலிற் சதங்கை சிணுங்கிக் கிணுங்க
ஓடிவா வா கிருஷ்ணா
ராதையின் கண்ணன்
யூடியூப் வீடியோக்கள் பார்த்தேன். பாடல்கள் கேட்டு அபிசேகம் ஆராதனைகள் பார்த்தேன் அதிலிருந்து சில படங்கள்.
பால் அபிஷேகம்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கருமை நிற கண்ணனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்
தயிர் அபிஷேகம்
இளநீர் அபிஷேகம்
சந்தன அபிஷேகம்
பலப் பலகாரம் பஷ்ணமெல்லாம்
உனக்காகத்தான் கிருஷ்ணா
நான், வெண்ணெய், தயிர், பால், அவல்பாயசம் மட்டுமே வைத்தேன். இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ற படம் கூகுள் கொடுத்தது.
முடியில் சூடிய மயிலறகாட ஆடிவா வா கிருஷ்ணா
கண்ணன் பாட்டு தளத்தில் கவி நயா பாடிய "கிருஷ்ணா கிருஷ்ணா" பாடலில் உள்ள சில வரிகள் படங்களுக்கு கீழே இடம்பெற்று இருக்கிறது. கவிநயா அவர்களுக்கு நன்றிகள்.
//கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணாகோகுல கிருஷ்ணா வா வா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கோகுல கிருஷ்ணா வா வா
பலப் பலகாரம் பக்ஷணமெல்லாம்
உனக்காகத்தான் கிருஷ்ணா
பாலும் தயிரும் மோரும் வெண்ணெயும்
உனக்காகத்தான் கிருஷ்ணா
புல்லாங்குழலை ஊதிக் கொண்டு
புவியை மயக்கும் கிருஷ்ணா
கல்லும் கூடக் கரையச் செய்யும்
கனிமுகங் கொண்ட கிருஷ்ணா
கரு விழி இரண்டும் வண்டாய்ச் சுழலும்
கார் மேக வண்ணக் கிருஷ்ணா
குறும்புச் சிரிப்பு இதழ்களில் ஆடும்
கட்டிக் கரும்பே கிருஷ்ணா
காலிற் சதங்கை சிணுங்கிக் கிணுங்க
ஓடி வா வா கிருஷ்ணா
முடியில் சூடிய மயிலறகாட
ஆடி வா வா கிருஷ்ணா
தேவகியோடு யசோதையோடு
நானும் ஓர் தாய் கிருஷ்ணா
மடியினில் வாரி மார்போடணைப்பேன்
நீ என் சேயே கிருஷ்ணா//
--கவிநயா
கண்னன் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருள வேண்டுகிறேன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------
கண்ணைக் கவரும் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குஇனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
வணக்கம் சகோ தேவகோட்டை, ஜி வாழ்க வளமுடன்
நீக்கு//கண்ணைக் கவரும் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
எளிமையாகவும் அருமையாகவும் கொண்டாடியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு. திரை முழுவதும் கண்ணன் அபிஷேகப் படம்.
இன்னொரு கண்ணன் தொட்டமளூரா?
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//எளிமையாகவும் அருமையாகவும் கொண்டாடியிருக்கிறீர்கள்.//
பண்டிகையை விட கூடாது என்பதால் மட்டும் இப்போது நடக்கிறது, இந்த அளவுக்கு உடல் பலத்தை கண்ணன் அருள வேண்டும்.
//படங்கள் மிக அழகு. திரை முழுவதும் கண்ணன் அபிஷேகப் படம்.//
நேரில் பார்ப்பது போல பார்த்து கொண்டு இருந்தேன்.
//இன்னொரு கண்ணன் தொட்டமளூரா?//
ஆமாம். இணைய படம்.
போன பதிவு படிக்கவில்லையா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு கண்ணன் தரிசனமும், தொலைக்காட்சியில் பல்வேறு கண்ணன் வடிவ தரிசனங்களும் கிடைத்தது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம் ,வாழ்க வளமுடன்
நீக்கு//கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள். //
உங்கள் வீட்டு கண்ணன் தரிசனமும், தொலைக்காட்சியில் பல்வேறு கண்ணன் வடிவ தரிசனங்களும் கிடைத்தது.//
ஆமாம், தொலைக்காட்சி கண்ணனுடன் பண்டிகையை கொண்டாடி விட்டேன். மகன் வீட்டு பண்டிகையை நேரடி காட்சியாக கண்டு களித்தேன். கண்ணன் பாட்டு தளத்தில் கண்ணன் பாடல்கள் கேட்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கிருஷ்ண ஜெயந்தி
பதிலளிநீக்குஅருமையாக அழகாக கொண்டாடியிருக்கின்றீர்கள்..
கண்ணன் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
வாழ்க வையகம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//கிருஷ்ண ஜெயந்தி
அருமையாக அழகாக கொண்டாடியிருக்கின்றீர்கள்..
கண்ணன் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
வாழ்க வையகம்..//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
கோம்திக்கா உங்கள் கண்ணன் அலங்காரம் பிரமாதம். அழகு. கூடவே மேலே ஒளித்திரையில் கண்ணனுக்கு பல அபிஷேகங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் நெய்வேத்தியங்கள் எளிமை. அது போதும் கண்ணனுக்கு அவல் வெண்ணை முக்கியம் இல்லையா...
கவிநயா அவர்களின் பாடல் அருமை. அவங்களுக்கு முன்ன அவர்கள் எழுதும் வரிகளுக்குப் பாடி அனுப்புவதுண்டு. இப்போது அனுப்ப இயலவில்லை. பாடுவது சிரமமாகவும் இருக்கு. மற்ற பணிகள் என்று. முன்பு அனுப்பியவை அவங்க ப்ளாக்ல சேர்த்திருப்பாங்க.
படங்கள் நல்லாருக்கு கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோம்திக்கா உங்கள் கண்ணன் அலங்காரம் பிரமாதம். அழகு. கூடவே மேலே ஒளித்திரையில் கண்ணனுக்கு பல அபிஷேகங்கள்.//
அபிஷேகங்களை பார்த்து கொண்டு பூஜை செய்தேன்.
//உங்கள் நெய்வேத்தியங்கள் எளிமை. அது போதும் கண்ணனுக்கு அவல் வெண்ணை முக்கியம் இல்லையா...//
அவருக்கு அவலும், துளசியும் , வெண்ணையும் போதும் தான்.
குழந்தைகள் இருந்த போது முறுக்கு, சீடை , தட்டை எல்லாம் செய்வேன். இப்போது பாலும், வெண்ணையும், தயிரும் போதுமென்று விட்டான்.
//கவிநயா அவர்களின் பாடல் அருமை. அவங்களுக்கு முன்ன அவர்கள் எழுதும் வரிகளுக்குப் பாடி அனுப்புவதுண்டு. இப்போது அனுப்ப இயலவில்லை. பாடுவது சிரமமாகவும் இருக்கு. மற்ற பணிகள் என்று. முன்பு அனுப்பியவை அவங்க ப்ளாக்ல சேர்த்திருப்பாங்க.//
முன்பு கவிநயா அவர்கள் பாடலை சுப்பு தாத்தா பாடி அனுப்ய்வார் கேட்டு இருக்கிறேன் அவர் வலைத்தளத்தில் . உங்கள் பாட்டு கேட்ட நினைவு இல்லை. அவர்கல் பக்கத்தை தொடர்ந்து கொண்டு இருந்தேன், அதில் பார்க்கிறேன். சுட்டி இருந்தால் கொடுங்கள்.
//படங்கள் நல்லாருக்கு கோமதிக்கா//
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
படங்கள் அழகு...
பதிலளிநீக்குஅருமையான கொண்டாட்டம்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகு...
அருமையான கொண்டாட்டம்...//
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
தாமதமான கிருஸ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கோமதி அக்கா.
பதிலளிநீக்குஇருவர் ஒரேமாதிரி வச்சிருக்கிறீங்களே.. ஒருவர் கிருஸ்ணரும் குட்டிக் கண்ணனுமோ?..
படங்கள் அழகு, உறியும் பானைகளும் மிக அழகு.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குதாமதமான கிருஸ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கோமதி அக்கா.//
பரவாயில்லை வரும் போது சொல்லலாம், வாழ்த்துக்கு நன்றி.
//இருவர் ஒரேமாதிரி வச்சிருக்கிறீங்களே.. ஒருவர் கிருஸ்ணரும் குட்டிக் கண்ணனுமோ?.//
இருவரும் பெரிய கண்ணன் தான். பெரிய கண்ணன் நான் கொலுவிற்கு வாங்கியது.
அதே போல உள்ளது என் மகளின் இந்தி டீச்சர் கொலு பார்க்க வரும் போது கொண்டு வந்தார்கள்.
//படங்கள் அழகு, உறியும் பானைகளும் மிக அழகு//
உறியும் பானையும் திருசெந்தூர் போய் இருந்தோம் அப்போது வாங்கியது. சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் தஞ்சாவூர் ஓவியம் டெல்லிகட்டில் வாங்கியது. பட்டாடை உடுத்தி தலையில் மயீல்பீலி சூட்டிய கண்ணன் மதுராவில் வாங்கியது.
குட்டி கண்ணன் வெண்ணை வைத்து இருப்பது என் மகன் சென்னையில் வேலை பார்க்கும் போது வாங்கி வந்தான்.
தவழும் கண்ணன் மாயவரத்தில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கொலுவிற்கு கொடுத்தது.
தொட்டிலில் உள்ள வெள்ளி குட்டி கண்ணன் என் அம்மா கொடுத்தது ஊஞ்சல் என் அண்ணியின் அம்மா கொடுத்தது.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நினைவுகளும் கதையும் இருக்கிறது அதிரா.
இன்னும் ராதையும் கண்ணனும் இணைந்த பொம்மை இருக்கு, கல்யாண கோலத்தில் ஊஞ்சலில் அமர்ந்த கண்ணன் இருக்கிறார்.அதை எல்லாம் எடுத்து வைக்கவில்லை.
எங்கட கண்ணனை இதில் பாருங்கோ, இது இப்போ மதுரா போயிருந்தபோது அங்கு வாங்கிய கண்ணன்:)..
பதிலளிநீக்குhttps://youtube.com/shorts/oEZoAO7idI0?si=6Ydc7jqkdSyuu79O
//எங்கட கண்ணனை இதில் பாருங்கோ, இது இப்போ மதுரா போயிருந்தபோது அங்கு வாங்கிய கண்ணன்:)..
நீக்குhttps://youtube.com/shorts/oEZoAO7idI0?si=6Ydc7jqkdSyuu79O//
உங்களை காணவில்லையே! ஏதாவது யூடியுப் வீடியோ போட்டு இருக்கிறீர்களா என்று பார்த்தேன், அப்போது மதுரா கண்ணன் வீடியோ படங்கள் பார்த்து லைக் போட்டு விட்டேன் முன்பே.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
இதற்கு முந்தின பதிவு பார்த்தீர்களா?
ஓ அப்படியா கோமதி அக்கா, மிக்க நன்றி. இல்லை கோமதி அக்கா, புதுப்போஸ்ட்டுக்கு வரவே போராட்டமாக இருக்குது ஹா ஹா ஹா..
நீக்கு//ஓ அப்படியா கோமதி அக்கா, மிக்க நன்றி. இல்லை கோமதி அக்கா, புதுப்போஸ்ட்டுக்கு வரவே போராட்டமாக இருக்குது ஹா ஹா ஹா..//
நீக்குஅப்படியா! என்ன போராட்டம்?
பழைய மாதிரி என் வலைத்தளம் வர முடியவில்லையா?
அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லையா?
முடிந்த போது வந்து கொண்டு இருங்கள்.
நன்றி மீள் வருகைக்கு அதிரா.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி பகிர்வும் பகிர்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅழகிய கிருஷ்ணன் படங்கள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
எளிமையான அதே சமயம் சிறப்பான கொண்டாட்டம். கண்ணன் படங்கள் நானும் இனித் தான் பகிரணும். கவிநயா இப்போதும் தொடர்பில் இருக்காரா? பல வருடங்கள் ஆகிவிட்டன எனக்கு அவர் தொடர்பிலேயே இப்போ இல்லை. அம்மன் பாட்டு எனில் அவர் நினைவு கட்டாயம் வரும். இந்தப் பாடலும் கேட்ட நினைவு.
பதிலளிநீக்கு