பத்துமலை தொடர் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை தொடர் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 5

பத்துமலை மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடு கோவில்.

ஜூன் 7ம் தேதி மகன் குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகனை தரிசனம் செய்து வந்தேன்.  அங்கு போய் வந்ததை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.

இந்த பதிவு நிறைவு பகுதி. இதில் அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் இடம்பெறுகிறது.

--------------------------------------------------------------------------------------------------

முன்பு பகிர்ந்த பதிவுகள்:-





மாலை நேரம், மழை மேகம் வந்து சிறு தூறல் போட ஆரம்பித்து விட்டது.

அழகிய வேலைப்பாடு , மேலே அலங்கார வளைவுக்குள் அழகிய பிள்ளையார்கள்  வடிவங்கள்.


முதலில் நடுநாயகமாக  பிள்ளையார் இருந்தார். அந்த  பிள்ளையார்  போன பதிவில் இடம்பெற்று விட்டார். அன்று சதுர்த்தி அவருக்கு அபிசேகம் செய்ய தயார் ஆகி கொண்டு இருந்தார்கள். ஹோமம் நடந்து கொண்டு இருந்தது.

பிள்ளையார் பக்கவாட்டில் ஆறுபடை முருகனுக்கும் சன்னதிகள் வரிசையாக இருந்தது. குருக்கள் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். 

  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்
  • பழனி
  • சுவாமிமலை
  • திருத்தணி
  • பழமுதிர்சோலை

ஆறுபடை வீடுகள் முருகன்கள் சன்னதி வரிசையாக இருக்கிறது.

                                    திருப்பரங்குன்றம்

                                           திருச்செந்தூர்

                                                       பழனி

சுவாமி மலை முருகனும், பழனி மலை முருகனும் கொஞ்சம் ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் குழப்பம். இருவர் கை  வேல் மட்டும் வித்தியாசமாக  இருக்கும். முருகனுக்கு பின்னால் சுவாமிமலை கோபுரம் தெரியும், பழனி முருகன் பின்னால் பழனி மலை தெரியும்.

சுவாமி மலை முருகனை கொஞ்சம் கிட்டத்தில் எடுத்த படம்


திருத்தணி

பழமுதிர்ச்சோலை

கோவில் பள பள என்று இருக்கிறது
கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது,   கல்யாணங்கள் நடக்கும் போலும்
மீனாட்சி சொக்கநாதர் திருமண கோலம்




அம்மன் சன்னதி என்று நினைக்கிறேன் மூடி இருந்தது
சுவரிலிருந்த ஓவியம்
தூண்கள், சிற்பங்கள் எல்லாம் அழகு


கஜபிஷ்டம் அமைப்பில் இருந்த பகுதியில்  சுற்றி  உற்சவர்களை வைத்து  இருந்தார்கள்.


நாங்கள் உள்ளே போன போது இப்படி மூடி இருந்தது  சிறிது நேரத்தில் திறந்து வைத்தார்கள்

சோமாஸ் கந்தர்

முருகன் வள்ளி தெய்வானை
மாரியம்மன்

உற்சவர் இருக்கும் எதிர் பக்கம் மேலே போக படிக்கட்டுக்கள் இருந்தன.



கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில் படிக்கட்டுக்கள் இருந்தன ,   மேலே சிவனும் அம்மனும் இருக்கிறார்கள். எனக்கு படி இறங்கி வந்த களைப்பு , அதனால் சன்னதி    திறந்து இருந்தால் வருகிறேன் என்றேன், மகன் போய் பார்த்து விட்டு மூடி இருக்கிறது சுவாமியை,  பார்க்க முடியாது என்று எதிரில் இருக்கும் நந்தியை மட்டும் படம்  எடுத்து வந்தான்.




மலையிலிருந்து இறங்கும் போது  கீழே இருக்கும் கோவிலும் கோவிலின் மேல் பகுதியில்  நந்தியும் தெரிந்தது. அதனால் மகனை மேலே போய் பார்த்து வர சொன்னேன். 

ஆடி கிருத்திகை 9 ஆம் தேதி என்பதால் 7ம் தேதி ஆரம்பித்தேன் முதல் பதிவை, அடுத்த கிருத்திகையில்  நிறைவு செய்து இருக்கிறேன். இன்று கிருத்திகை.

இத்துடன் பத்துமலை கோவில் நிறைவு அடைகிறது.
இன்று ஆசிரியர் தினம். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவும் இடம் பெறுகிறார்.

தந்தைதா யாவானும், சார் கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம் தமக் காவானும்- எந்த முயிர் 
தானாகு வானும் சரணாகு வானும்அருட்
கோனாகு வானும் குரு.
-
- குருவணக்கம்.

அருள் குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லை பிசைந்து தெய்வக்கனியாக மாற்றி அமைகக வல்லவன். என் உடல் , பொருள், ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகுக.
- தினசரி தியான புத்தக பகிர்வு.

என் கணவர், மாமனார் மற்றும்  அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வணக்கங்கள்.


எனக்கு குருவாக இருந்து சொல்லி தந்த   குடும்பம் , மற்றும் நட்புகளுக்கு , சொந்தங்களுக்கு நன்றி  நன்றி. 
வாழ்க்கையில் நாள் தோறும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் அனைவரும்  குருவே.


அடுத்து வேறு பதிவில் சந்திப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------