செவ்வாய், 14 நவம்பர், 2023

முத்தான முத்துக்குமரா முருகையா வா ! வா!

விராலி மலை சண்முகநாதர் கோவில்


கந்தசஷ்டி விழாவில்  முருகனை சிந்திப்போம் என்று  முருகன் பாடல்கள்  பகிர்வை  முருகன் அருளால் பதிவு செய்கிறேன். இன்று இரண்டாம் நாள்.  நேற்று 




இந்த பதிவில் நிறைய கோவில்  படங்கள் இருக்கும். புதிய விவரங்கள் இருக்கும்.





 https://www.youtube.com/watch?v=KvuyqDSlzSM 

காணொளி சில நேரம் வராது, அதனால் சுட்டி கொடுத்து இருக்கிறேன். அதில் கேட்கலாம்.  விராலிமலை கோவிலை அழகாய் காட்டுகிறார்கள், மயில் ஆடுவதை பார்க்கலாம்.


முத்தான முத்துக்குமரா முருகையா வாவா
சித்தாடும் செல்வக் குமரா சிந்தைமகிழ வாவா
நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் வருகுதையா

பெங்களூர்  ரமணி அம்மா அவர்கள் பாடிய இந்த பாட்டைக்  கேட்கும் போதலெல்லாம்  மனக்கண்ணில்     ,வேலும், மயிலும் ஆடிவருவதும், மக்கள் கூட்டம் வரும் காட்சியும் விரியும்.. 
அப்படி பட்ட காட்சியை  2009ல் விராலிமலை  போன போது பார்த்தோம்.

இந்த பாட்டில் வருவது போல மயிலாடி  பின் படிகளில் ஏறி  வந்தது .

மயில் எங்களுக்கு முன் நடந்து போனது கண்டு எங்கள் மனம் மகிழ்ந்து போனது.

அப்போது  மழை  மேகம்  இருந்ததால்  இன்னொரு  மயில்  தன் தோகையை  விரித்து அகவியவாறு  ஆடியது. அது முருகனைப்   நினைத்து பாடியாடிதைப்  போல இருந்தது. இருந்தாலும்  அதன் பின்புறத்தைக்  காட்டியவாறு ஆடிக்கொண்டிருந்தது. பக்தர்கள், "திரும்பியாடு முருகா "என்று ஆரவாரித்தார்கள். ஆனால் அது நீண்டநேரத்திற்குப் பின் தான் திரும்பியது.திரும்பும்போதே அது தன் தோகையைச் சுருக்க ஆரம்பித்தது. அவசரமாக எடுத்ததால் அந்தப் படம் தெளிவாக இல்லை.








 ஆடிவருகுது வேல் என்று 2009 ல் போட்ட பதிவு. முதன் முதலில் 2009ம் வருடம் விராலி மலை  போய் வந்து போட்ட பதிவு.

2022ல் மகனுடன் மீண்டும் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது  முருகன் அருள்.




திரு. சற்குருநாத ஓதுவார் அவர்கள்  பாடிய விராலி மலை  திருப்புகழ் 

குன்றுதோறாடிய ஆறுபடை முருகனை சஷ்டி காலத்தில்   வணங்கி  அவன் அருள் பெறுவோம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. பல வருடங்களுக்கு முன்பு விராலி மலை சென்றது. அங்கு மயில்கள் நிறைய இருக்கும். முத்தான முத்துக் குமரா அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      //பல வருடங்களுக்கு முன்பு விராலி மலை சென்றது. அங்கு மயில்கள் நிறைய இருக்கும். முத்தான முத்துக் குமரா அருமையான பாடல்.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். பகிர்வு அருமை. தோகை மயில், படிகளில் ஏறும் மயில் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். பகிர்வு அருமை. தோகை மயில், படிகளில் ஏறும் மயில் அழகு.//

      ஆமாம், ராமலக்ஷ்மி மயில் ஏறும் அழகை பார்த்து கொண்டு எல்லோரும் நின்றது நினைவுகளில் வந்து போகிறது. பழைய பதிவில் உள்ள படம் நீங்கள் முன்பே பார்த்து இருப்பீர்கள்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. நாங்களும் குடும்பத்தினருடன் அங்கே சென்றிருந்தோம் - சில வருடங்களுக்கு முன்னர். மயில்கள் பார்க்க முடியவில்லை என்றாலும் குரங்குகள் நிறையவே இருந்தன. சமீபத்தில் செல்ல வாய்ப்பு அமையவில்லை.

    இனிமையான பாடல். யூட்யூபில் கேட்டு ரசித்தேன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்

      //நாங்களும் குடும்பத்தினருடன் அங்கே சென்றிருந்தோம் - சில வருடங்களுக்கு முன்னர்.//

      நாங்களும் நாலுதடவை போய் இருப்போம். நீங்கள் சொன்னது போல குரங்குகள் தொந்திரவு இப்போது அதிகம். இரண்டு தடவை மயில்களை நிறைய பார்த்தோம். இப்போது குரங்குகள் தான்.

      //இனிமையான பாடல். யூட்யூபில் கேட்டு ரசித்தேன் மா.//


      பாடலை யூட்யூபில் கேட்டது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  4. விராலிமலை தரிசிக்க வேண்டிய திருத்தலம்..

    அருமையான பதிவு.

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜு, வாழ்க வளமுடன்

      //விராலிமலை தரிசிக்க வேண்டிய திருத்தலம்..//

      ஆமாம். அருமையான் திருத்தலம்.


      அருமையான பதிவு.

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..//

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. விராலிமலை இதுவரை பார்த்ததில்லை.  ஒருமுறை சென்றுவரவேண்டும்.  படி ஏறும் மயில் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //விராலிமலை இதுவரை பார்த்ததில்லை. ஒருமுறை சென்றுவரவேண்டும். படி ஏறும் மயில் அழகு.//

      விராலிமலை போவது இப்போது எளிது. மலைமேல் வாகனத்தில் போகலாம். படி ஏறாமல் முருகனை பார்க்கும் வசதிகள் செய்து இருக்கிறார்கள். ம்கனுடன் சென்று போட்ட பதிவை படித்து பார்த்தால் தெரியும். நீங்கள் படித்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  6. பெங்களூரு ஏ ஆர் ரமணி அம்மாளின் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன்.  காட்சிகள் விராலிமலையைக் காட்டுகிறார்கள் என்றால் ஒருமுறை அந்த காணொளியை பார்க்கிறேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெங்களூரு ஏ ஆர் ரமணி அம்மாளின் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். காட்சிகள் விராலிமலையைக் காட்டுகிறார்கள் என்றால் ஒருமுறை அந்த காணொளியை பார்க்கிறேன். //

      விராலிமலை முருகனின் அபிஷேகம், அலங்காரம் காட்டுகிறார்கள். மற்றும் கடைத்தெரு, மக்கள் காவடி சுமந்து செல்வதை காட்டுகிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. சமீபத்தில் சென்றிருந்த, கும்பகோணம் அருகிலுள்ள கிராமத்தில் சில மயில்களைப் பார்த்தேன். மயில்கள் அகவும் குரல் காவிரியில் குளிக்கும்போது கேட்டுக்கொண்டே இருந்தது.

    அப்போது ஒருவர், விராலிமலையில் நிறைய மயில்கள் உண்டு என்று சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //சமீபத்தில் சென்றிருந்த, கும்பகோணம் அருகிலுள்ள கிராமத்தில் சில மயில்களைப் பார்த்தேன். மயில்கள் அகவும் குரல் காவிரியில் குளிக்கும்போது கேட்டுக்கொண்டே இருந்தது.//

      ஆமாம், அடிக்கடி மயில்களை நானும் பார்த்து இருக்கிறேன்.

      //அப்போது ஒருவர், விராலிமலையில் நிறைய மயில்கள் உண்டு என்று சொன்னார்//

      ஆமாம் , நிறைய உண்டாம் முன்பு. விராலிமலையில் மயில்கள் சரணால்யம் உண்டாம். பல்விதமான மயில்கள் இருக்கிறதாம்.
      திருசெந்தூர் போகும் போது எல்லாம் மயிலகளை பார்த்து இருக்கிறேன். முருனம் இருக்கும் இடமெல்லாம் மயில்களும் இருக்கும் தானே!

      நீக்கு
  8. கோவில் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

    தோகையுடன் மயிலைப் பார்த்தால் சந்தோஷம். இன்று பதிவர் வை.கோ சார் மயில்கள் காணொளி அனுப்பியிருந்தார். உங்களுக்கு அனுப்புகிறேன். பலவித நிறங்களில் தோகைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன//

      முன்பு கை அடக்கமான சின்ன காமிராவில் எடுத்த படங்கள்.

      //தோகையுடன் மயிலைப் பார்த்தால் சந்தோஷம். இன்று பதிவர் வை.கோ சார் மயில்கள் காணொளி அனுப்பியிருந்தார். உங்களுக்கு அனுப்புகிறேன். பலவித நிறங்களில் தோகைகள்.//

      தோகை மயிலை கண்டால் மகிழ்ச்சிதான்.
      பாடலும், மயிலின் ஆட்டமும் மிக அருமை. பலவித நிறங்கள் கண்ணை கவர்கிறது.
      பகிர்வுக்கு நன்றி.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. அருமையான பாடல்...

    முதல் பாடல் அதன் இணைப்பில் தான் வந்தது...

    முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      அருமையான பாடல்...

      முதல் பாடல் அதன் இணைப்பில் தான் வந்தது...//

      ஆமாம் , இணைப்பில் தான் வருகிறது.
      முருகா சரணம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. விராலி மலை போனதில்லை கோமதிக்கா..மயில் உங்கள் முன் ஏறி வந்தது மகிழ்ச்சியா இருந்திருக்கும்.

    முத்தான பாடல் ரொம்ப நன்றாக இருக்கிறது.

    திருப்புகழும் கேட்டேன் அக்கா. இவரது பாடல்கள் ரொம்பப் பிடித்துப் போனது. குறித்துக் கொண்டுவிட்டேன். கேட்பதற்காக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //மயில் உங்கள் முன் ஏறி வந்தது மகிழ்ச்சியா இருந்திருக்கும்.//

      ஆமாம் கீதா.

      முத்தான பாடல் ரொம்ப நன்றாக இருக்கிறது.

      //திருப்புகழும் கேட்டேன் அக்கா. இவரது பாடல்கள் ரொம்பப் பிடித்துப் போனது. குறித்துக் கொண்டுவிட்டேன். கேட்பதற்காக.//

      இவர் பாடும் தேவாரம், திருவாசகமும் நன்றாக இருக்கும். என் மாமனார் 95 வது வயது கனபிஷேகத்திற்கு இவர் வந்து தேவாரம் பாடினார். மயிலை கபாலீஈஸ்வரர் கோவில் ஓதுவாராக இருக்கிறார்.

      நீக்கு
  11. 22 ஆம் வருஷம் போட்ட பதிவு நினைவு இருக்கிறது. கட்டுமானங்கள் நடந்து கொண்டிருந்த படம் பார்த்த நினைவு. உங்கள் மகன் இருந்ததும். விராலி மலை போக வேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால் இன்னும் அது ஈடேறவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //22 ஆம் வருஷம் போட்ட பதிவு நினைவு இருக்கிறது. கட்டுமானங்கள் நடந்து கொண்டிருந்த படம் பார்த்த நினைவு. உங்கள் மகன் இருந்ததும். //
      மாயவரம் போகும் போது போனோம்.

      //விராலி மலை போக வேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால் இன்னும் அது ஈடேறவில்லை.//

      உங்கள் எண்ணம் ஒரு நாள் ஈடேறும் கீதா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. தோகை விரித்தாடும் மயில் திருச்செந்தூர் முருகனின் பெருமை சொல்லும் போது அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      //தோகை விரித்தாடும் மயில் திருச்செந்தூர் முருகனின் பெருமை சொல்லும் போது அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. விராலிமலை சென்றதில்லை. டடங்கள் அழகு. தோகை மயில் அழகு.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //விராலிமலை சென்றதில்லை. டடங்கள் அழகு. தோகை மயில் அழகு.
      முருகா சரணம்.//

      விராலி மலை பார்க்க வேண்டிய முருகன் கோவில் வாய்ப்பு கிடைத்தால் வந்து பாருங்கள் மாதேவி.
      முருகா சரணம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  14. விராலிமலை முருகன் கோயிலுக்கு நான் இதுவரையில் போனதில்லை.

    தகவல்களும், காணொளிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //விராலிமலை முருகன் கோயிலுக்கு நான் இதுவரையில் போனதில்லை.//

      வாய்ப்பு கிடைக்கும் போது பாய் வாருங்கள் நன்றாக இருக்கும் கோயில்.

      //தகவல்களும், காணொளிகளும் சிறப்பு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு