புதன், 9 ஆகஸ்ட், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 2

வள்ளி, தெய்வானையுடன் முருகன்

மலேசியாவில் புகழ் பெற்ற  குகை கோவிலுக்கு ஜூன் 7 ம் தேதி குடும்பத்துடன்   போய் தரிசனம் செய்து வந்தோம். 
பத்துமலை  ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் முதல் பகுதி  படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 

முருகனை ஆடி கிருத்திகை அன்று பார்ப்போம். என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். முருகனின் அருளால் இந்த பதிவில் முருகனின்  படங்கள் இடம்பெறுகிறது.
----------------------------------------------------------------------------------------------

ஸ்ரீசுப்பிரமணியர் இருக்கும் சன்னதி  இங்கு திரை போட்டு இருப்பாதால் மேலே  40  படிகள் ஏறி அங்கு வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை வணங்கி வர சென்றோம். 

நானும் பேரன் கவினும் ஏற போவதை மகன் மேல் படியிலிருந்து எடுத்த படம்

மிகவும் சின்ன படிகள் படிகளின் ஓரம் கொஞ்சம் உடைந்து உடைந்து இருந்தது. கவனமாக ஏற வேண்டும்.

சேவல்கள் நிறைய இருக்கிறது. எங்களுக்கு முன் அது படி ஏறி சென்றது. மலை முழுவதும்   கொக்கரக்கோ  என்ற ஒலி கேட்டு கொண்டே இருந்தது. நான் காணொளி எடுக்கும் போது சத்தம் இல்லை. சிறிய காணொளிதான் பாருங்கள்.

பேரன் நீண்ட காணொளி எடுத்து இருக்கிறான் அதன் கொக்கரக்கோ ஒலியை கேட்க, அது சத்தம் கொடுக்காமல்  ஓடி கொண்டே இருந்தது.

முருகன் சன்னதி


முருகன் சன்னதிக்கு நாங்கள் போன போது மாலை  மணி 4.30  திரை போட்டு இருந்தது, சற்று நேரத்தில் திறந்து விடுவோம் என்றார்கள். 5 நிமிடத்தில் திரை விலகியது, அற்புத காட்சி கொடுத்தார் முருகன் வள்ளி தெய்வானையோடு புன்முறுவல் சிந்த விபூதி அலங்கார்த்தில்  நின்றார். 

அங்கு இருந்த குருக்கள் பூஜை செய்து பிரசாதம் கொடுத்தார். மகனுக்கு திருமணநாள் என்று சொன்னதும் ஆசீர்வாதம் செய்து நாளை காலை  பால் அபிஷேகத்திற்கு 50 வெள்ளி  பணம் கொடுக்க சொன்னார்   கொடுத்தோம். இன்னொருவர் தேவாரம் பாடினார் அவருக்கும் மகன் பணம் கொடுத்தான்.
பூர்வீகம் தஞ்சை என்றாலும் அவர்கள் தாத்தா , பாட்டி காலத்திலே இருந்தே மலேசியாவில் வசிப்பாதாக சொன்னார்கள்.

குகைக்குள் இருப்பதால் மாலை நேரம் இருட்டாக இருக்கிறது
மேலே  இருந்து வெளிச்சம் கொஞ்சம் வருகிறது
முருகனின்  விமானம் குகைகுள்  நடுவில் இருப்பதை பார்க்க அழகு. 1991 ம் ஆண்டு இந்த முருகன் சன்னதி கட்டப்பட்டதாம்.
முருகன் பிரகாரத்தை சுற்றி வரும் இடத்தில் ஆசனம்  நல்லோர் உபயம் 

நாரதர் , தந்தைக்கு உபதேசம் செய்யும் குருநாதர் ,  , பிரணவத்திற்கு பொருள் சொல்ல முடியாத பிரம்மா , மற்றும் இடும்பன் சிலை .


மலையை  தலையில் தாங்கி நிற்பது போல
குகைக்குள்  பார்க்க அழகான முருகன் விமானம்

குகையின் அழகிய தோற்றங்கள்

மழை காலத்தில் மழையும், வெயில் காலத்தில் வெயிலும்  இந்த திறந்தவெளியிலிருந்து வருவது பார்க்க அருமையாக இருக்குமாம், எவ்வளவு வெயில் அடித்தாலும்  குகையின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்குமாம். 4.30க்கு அங்கு இருந்தோம் வெயில் தெரியவில்லை, மெல்லிய மழைச்சாரல் இருந்தது. மழை பன்னீர் தூவலாக இருந்தது நன்றாக இருந்தது.


சுண்ணம்பு குன்றும், இயற்கையாக அமைந்த குகையும் பார்க்க பார்க்க அழகு

அந்த குன்றில் நமக்கு நிறைய வடிவங்கள்   கண்களுக்கு தெரிகிறது!
மரம் செடி, கொடிகளின் மரகத பச்சை வண்ணம்  அழகு



மேலே அந்த திறந்தவெளியை படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

பெற்றோர்களுடன் முருகனை தரிசனம் செய்து விட்டு இறங்கும் குழந்தை


மேல் படியிலிருந்து மகன் எடுத்த படங்கள்

மலைக்கு நடுவில் கோபுரம்  பளிச் என்று தெரிய போக்கஸ் லைட் போட்டு பார்க்க அழகு. 


 கீழே குகை அடிவாரத்தில்   இருக்கும்  மூலவர்  ஸ்ரீ சுப்பிரமணியர்  , முன்னால் வேலும் உற்சவ முருகரும் இருக்கிறார்கள். தை பூசத்திற்கு வரும் பால்குடங்கள் இந்த வேலுக்கு தான் ஆகுமாம்.  பால் காவடி எடுத்து வருவது  இங்கு உள்ள மக்கள் போல் யாராலும் செய்ய முடியாதாம், ஆழமான பக்தி கொண்டவர்களாம், இங்கு வாழ் மக்கள்.

முன்பு தொலைகாட்சியில் பார்த்து இருக்கிறேன்  குகை நன்றாக தெரியும் இப்போது தங்கநிறத்தில்  கலர் அடித்து உள்ளார்கள். கிரானைட் போட்டு இருக்கிறார்கள் .


//80 களில் வெளிவந்த வருவான் வடிவேலன் எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பத்துமலை, சிங்கப்பூர் தைப்பூச விழாவைக் காண மாட்டோமா என்ற ஆவல் வந்தது..

முருகன் அருளால் அது நிறைவேறியது.. சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள்.. தைப்பூச விழாவில் கலந்து கொண்டு படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றேன்..//


இப்படி சகோ துரை செல்வராஜூ அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். நானும் பார்த்து இருக்கிறேன் அந்த படம் என்றேன். அதில் கண்ணதாசன் எழுதிய பாடல்


 சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் முன்னனி பாடகர்கள் அனைவரும் பாடியது.   பாடிய பாடல் மிகவும் அருமையாக இருக்கும். கேட்டு பாருங்கள். அது பெரிய பாடல் அவ்வளவும் இந்த காணொளியில் இடம் பெறவில்லை.

பத்துமலைத் திரு முத்துக்குமரனை என்ற பதிவில் பாடல் வரிகளையும் இந்த பாடலையும் கேட்கலாம்.  பத்துமலை முருகனையும் தரிசிக்கலாம். 
முருகனருள்  வலைத்தளம். 

பத்துமலைத்திரு முத்துக்குமரனைப் பார்த்து களித்திருப்போம்.

மூலவர் படங்கள் மேலும் வரும.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. கோமதிக்கா, படங்களும் குகையும் என்ன அழகு! விசாகப்பட்டினம் போரா குகைகள் போல இருக்கு.

    கீழே நீங்கள் இருவரும் தெரியறீங்க. படிகள் கல் படிகள் போல விளிம்பு கூர்மையாக இருக்கும் போலத் தெரிகிறது உடைந்தும் இருக்கு. காணொளியில் நன்றாகத் தெரிகிறது. சேவல்கள் அழகா ஏறுகின்றன! எப்படி இங்கு சேவல்கள் நிறைய? வளர்க்கிறாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா, படங்களும் குகையும் என்ன அழகு! விசாகப்பட்டினம் போரா குகைகள் போல இருக்கு//

      ஆமாம் கீதா.

      //கீழே நீங்கள் இருவரும் தெரியறீங்க. படிகள் கல் படிகள் போல விளிம்பு கூர்மையாக இருக்கும் போலத் தெரிகிறது உடைந்தும் இருக்கு. காணொளியில் நன்றாகத் தெரிகிறது. சேவல்கள் அழகா ஏறுகின்றன! எப்படி இங்கு சேவல்கள் நிறைய? வளர்க்கிறாங்களோ?//

      சேவல்கள் நிறைய இருக்கிறது. கோவிலுக்கு நேர்ந்து விட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


      நீக்கு
  2. கொக்கரக்கோ சத்தம் கேட்டுக் கொண்டே படியேறும் போது இனிமையா இருந்திருக்கும். சேவற்கொடியோனாச்சே! அதனால் சேவல்கள் நிறைய இருக்கு போல!

    நான் உங்ககிட்ட கேட்க நினைச்சேன்...அக்கா நீங்க காணொளி பெரிசா எடுத்திருக்கலாமோ சேவல் சத்தம் கேட்குமே என்று....உங்கள் அடுத்த வரியில் பேரன் எடுத்திருப்பதைச் சொல்லியிருக்கீங்க. பாருங்க டபாய்ச்சிருச்சு கொக்கரக்கோ சத்தம் போடாம!!!

    வள்ளி தெய்வானை முருகன் - காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக் காண ஆயிரம் கண் வேண்டும்! பாடல் டக்கென்று மனதில் தோன்றியது.
    மகனுக்கு அவரது திருமண நாளில் தேவாரப் பாடலுடன் ஆசி கிடைத்தது மிக மகிழ்ச்சி! ஆமாம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் போயிருக்காங்க. சிலரில் நான்காவது தலைமுறை இப்ப.

    குகைகள் இருட்டாக இருந்தாலும் அந்த வெளிச்சத்தில் படங்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன,கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொக்கரக்கோ சத்தம் கேட்டுக் கொண்டே படியேறும் போது இனிமையா இருந்திருக்கும். சேவற்கொடியோனாச்சே! அதனால் சேவல்கள் நிறைய இருக்கு போல!//

      ஆமாம். இனிமையாக இருந்தது, சேவற்கொடியோன் தான் .அதனால் முருகனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

      //நான் உங்ககிட்ட கேட்க நினைச்சேன்...அக்கா நீங்க காணொளி பெரிசா எடுத்திருக்கலாமோ சேவல் சத்தம் கேட்குமே என்று....உங்கள் அடுத்த வரியில் பேரன் எடுத்திருப்பதைச் சொல்லியிருக்கீங்க. பாருங்க டபாய்ச்சிருச்சு கொக்கரக்கோ சத்தம் போடாம!!!//

      நான் எடுத்த காணொளிகளை போட்டு பார்க்க வேண்டும். ஏதாவதில் அதன் சத்தம் கேட்டால் பகிர்கிறேன்.

      //வள்ளி தெய்வானை முருகன் - காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக் காண ஆயிரம் கண் வேண்டும்! பாடல் டக்கென்று மனதில் தோன்றியது.//

      ஆமாம். ஆயிரம் கண் வேண்டும் தான். முருகன்
      பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் நம்மை பார்த்தாலே போதும்.


      //மகனுக்கு அவரது திருமண நாளில் தேவாரப் பாடலுடன் ஆசி கிடைத்தது மிக மகிழ்ச்சி!//

      ஆமாம். மன நிறைவை தந்தது.


      //ஆமாம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் போயிருக்காங்க. சிலரில் நான்காவது தலைமுறை இப்ப.//

      ஆமாம்.

      நீக்கு
    2. சென்ற வாரம் வெள்ளி வீடியோவில் நான் பகிர்ந்திருந்த "குன்றுவளர் கந்தன் வரும் நேரம் எது கூறிவிட்டு கொக்கரக்கோ என்று கூவும் சேவலே" பாடலும், "சேவல் கூவும் நேரம் கானம் ஒலித்தது, தேவனின் கோவிலில் கானமும் ஒலித்தது" என்கிற பாடலும் நினைவுக்கு வருகின்றன.

      நீக்கு
    3. சென்ற வாரம் வெள்ளி வீடியோவில் நான் பகிர்ந்திருந்த "குன்றுவளர் கந்தன் வரும் நேரம் எது கூறிவிட்டு கொக்கரக்கோ என்று கூவும் சேவலே" பாடலும், "சேவல் கூவும் நேரம் கானம் ஒலித்தது,//

      ஓ! அற்புதம், அந்த சேவல் திரை விலக போகிறது கந்தன் காட்சி அளிக்க போகிறான் என்று சொல்லி கூவி கொண்டு இருந்த்தது போலும், அதுவும் கந்தனைப் பார்க்க எங்களுடன் மலை ஏறியது போலூம்.

      //தேவனின் கோவிலில் கானமும் ஒலித்தது" என்கிற பாடலும் நினைவுக்கு வருகின்றன//

      நல்ல பாடல் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  3. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது
    குறுகிய இடத்திலும் கோணங்கள் சரியாக எடுத்து இருப்பது சிறப்பு.

    விபரங்கள் அருமை காணொளி கண்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது
      குறுகிய இடத்திலும் கோணங்கள் சரியாக எடுத்து இருப்பது சிறப்பு.//

      நன்றி.

      //விபரங்கள் அருமை காணொளி கண்டேன் அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.


      நீக்கு
  4. ஆமாம், முருகனின் விமானம் குகைக்குள் அழகாக இருக்கிறது.
    //நாரதர் , தந்தைக்கு உபதேசம் செய்யும் குருநாதர் , , பிரணவத்திற்கு பொருள் சொல்ல முடியாத பிரம்மா , மற்றும் இடும்பன் சிலை .//

    அழகான அமைப்பு. குருகுகன்!!! சுவாமிமலை யில்தானே தந்தைக்கு உபதேசம் செய்த புராணம் இல்லையா?

    பேரன் மலையைத் தலையில் தாங்கி நிற்பது போன்ற படம் நன்றாக வந்திருக்கு

    ஆமாம் அக்கா இந்தக் குகைக்குள் வெயில் காலத்திலும் கூடக் குளிர்ச்சியாக இருக்கும். இங்கு போராலு குகைகள் உட்புறம் கூட அப்படித்தான் என்று சொன்னாங்க.

    மெல்லிய மழைச்சாரல் இருந்தது. மழை பன்னீர் தூவலாக இருந்தது நன்றாக இருந்தது.//
    முருகன் குகைக்குள் மழை பெய்யும் போது பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.

    மரம் செடி, கொடிகளின் மரகத பச்சை வண்ணம் அழகு//

    இந்தப் படம் மிக அழகு. இப்படியான குறை பாறைகளில் நமக்கு பலவித உருவங்கள் தெரியும். திறந்த வெளிப் படங்கள் அனைத்தும் அத்தனை அழகு.

    மேல்படியில் இருந்து மகன் எடுத்த படங்கள் அனைத்தும் நல்ல கோணத்தில் செம க்ளிக்ஸ்!

    மலைக்கு நடுவில் கோபுரம் பளிச் என்று தெரிய போக்கஸ் லைட் போட்டு பார்க்க அழகு.//
    இந்தப் படமும் செம அழகு. நல்ல க்ளிக்!

    மூலவர் குகை மழு மழு என்று இருக்கிறது இல்லையா? இந்த இடம் பளிச் சுத்தமாகவும் மனதைக் கவரும் வகையில் இருக்கு.

    மலேசியா, சிங்கப்பூர், இலங்கைத் தமிழ் மக்கள் போல் காவடி, பால்குடம் எடுப்பது போல் யாராலும் செய்ய முடியாதுதான். அவர்கள் முருக பக்தர்கள். சிவன் குடும்ப பக்தர்கள்!

    தைப்பூசக் காணொளியும் பார்த்தேன் கோமதிக்கா. வருவான் வடிவேலன் படம் பார்த்ததில்லை.

    அத்தனை படங்களையும் பார்த்து ரசித்தேன். நல்ல விவரங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. //அழகான அமைப்பு. குருகுகன்!!! சுவாமிமலை யில்தானே தந்தைக்கு உபதேசம் செய்த புராணம் இல்லையா?//
    ஆமாம்.

    //பேரன் மலையைத் தலையில் தாங்கி நிற்பது போன்ற படம் நன்றாக வந்திருக்கு//
    நன்றி.

    //ஆமாம் அக்கா இந்தக் குகைக்குள் வெயில் காலத்திலும் கூடக் குளிர்ச்சியாக இருக்கும். இங்கு போராலு குகைகள் உட்புறம் கூட அப்படித்தான் என்று சொன்னாங்க.//

    அந்தக்காலத்தில் குகைகளில் மனிதர்கள், சித்தர்கள் எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள்.


    //முருகன் குகைக்குள் மழை பெய்யும் போது பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.//

    நாங்கள் போய் வந்த இரவு நல்ல மழை பெய்து இருக்கிறது. மழை பெய்யும் போது பார்த்தால் அழகாய் இருக்கும் தான்.

    //மேல்படியில் இருந்து மகன் எடுத்த படங்கள் அனைத்தும் நல்ல கோணத்தில் செம க்ளிக்ஸ்!

    மலைக்கு நடுவில் கோபுரம் பளிச் என்று தெரிய போக்கஸ் லைட் போட்டு பார்க்க அழகு.//
    இந்தப் படமும் செம அழகு. நல்ல க்ளிக்!//

    நன்றி.

    //மூலவர் குகை மழு மழு என்று இருக்கிறது இல்லையா? இந்த இடம் பளிச் சுத்தமாகவும் மனதைக் கவரும் வகையில் இருக்கு.//
    கரடு முரடாக இருந்ததை இப்படி மழு மழு என்று மாற்றி இருக்கிறார்கள்.

    //மலேசியா, சிங்கப்பூர், இலங்கைத் தமிழ் மக்கள் போல் காவடி, பால்குடம் எடுப்பது போல் யாராலும் செய்ய முடியாதுதான். அவர்கள் முருக பக்தர்கள். சிவன் குடும்ப பக்தர்கள்!//

    ஆமாம்.

    //தைப்பூசக் காணொளியும் பார்த்தேன் கோமதிக்கா. வருவான் வடிவேலன் படம் பார்த்ததில்லை.//
    அந்த படத்தில் முருகன் கோவில்கள் நிறைய காட்டுவார்கள் அதற்கு கதையும் உண்டு.

    //அத்தனை படங்களையும் பார்த்து ரசித்தேன். நல்ல விவரங்கள்//
    அத்தனையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  6. ஆகா..

    கிருத்திகை நாளில் அருமையான தரிசனம்..

    விமான தரிசனம்..
    சர்வ பாப விமோசனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      ஆகா..

      கிருத்திகை நாளில் அருமையான தரிசனம்..

      விமான தரிசனம்..
      சர்வ பாப விமோசனம்..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. எனது கருத்துரையையும் பதிவில் சொல்லியிருப்பதற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கருத்துரையையும் பதிவில் சொல்லியிருப்பதற்கு நன்றி..//
      உங்களுக்கும் நன்றி.
      அதனால் தான் வருவான் வடிவேலன் பாடலை தேடி போட்டேன் ஆனால் அவ்வளவு தெளிவாக இல்லை.

      நீக்கு
  8. பல சிரமங்களுக்கு இடையே மலைப் படிகளில் ஏறி இறங்கி எங்களுக்கும் தரிசனம் கிடைக்கச் செய்தீர்கள்..

    நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல சிரமங்களுக்கு இடையே மலைப் படிகளில் ஏறி இறங்கி எங்களுக்கும் தரிசனம் கிடைக்கச் செய்தீர்கள்..//
      என் மகனுக்கு நான் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.இப்போதும் கொஞ்சம் சிரமபடுகிறேன் நீண்ட நேரம் காலை தொங்கபோட்டு அமர முடியாதபடி வலி இருக்கிறது.

      நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.. நன்றி//
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. இயற்கை தூண்களாய் மலைகள் ஓங்கி நிற்க நடுவில் காட்டப்பட்ட கோபுரங்களை சிறப்பான கோணத்தில் படம் பிடித்திருக்கிறீர்கள்.
    புகைப்படங்கள் நன்றாக உள்ளன.

    காணொளி அவ்வளவாக திருப்தி ஆகவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //இயற்கை தூண்களாய் மலைகள் ஓங்கி நிற்க நடுவில் காட்டப்பட்ட கோபுரங்களை சிறப்பான கோணத்தில் படம் பிடித்திருக்கிறீர்கள்.
      புகைப்படங்கள் நன்றாக உள்ளன.//

      நன்றி.

      //காணொளி அவ்வளவாக திருப்தி ஆகவில்லை//

      ஆமாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் அற்புதம்...

    நேரில் காண்பது போல் உணர்ந்தேன்... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அற்புதம்...//

      நன்றி

      /நேரில் காண்பது போல் உணர்ந்தேன்... நன்றி அம்மா..//
      மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. நேற்று உங்கள் பதிவை படித்தவுடன், இன்றைய எனது பதிவின் தலைப்பையும் நேற்றே நினைத்துக் கொண்டேன்...

    முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று உங்கள் பதிவை படித்தவுடன், இன்றைய எனது பதிவின் தலைப்பையும் நேற்றே நினைத்துக் கொண்டேன்...//

      தலைப்பு அருமை.

      முருகன் உங்களுக்கு நேற்று தலைப்பை கொடுத்து விட்டார். உங்கள் நினைவுக்கு கொண்டு வந்து விட்டார். இதை படித்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது.
      முருகா சரணம்.

      நீக்கு
  12. காணொளியில் சேவலை இரண்டாம் முறை ஓட்டி கண்டுபிடித்தேன்!  படிகள் மிகக் குறுகலாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //காணொளியில் சேவலை இரண்டாம் முறை ஓட்டி கண்டுபிடித்தேன்! படிகள் மிகக் குறுகலாக இருக்கின்றன.//

      படிகள், ஏறுவதுக்கும், இறங்குவதற்கும் என்று இரண்டு பகுதியாக வைத்து இருப்பாதால் குறுகலாக இருக்கிறது.
      சேவலை கண்டு பிடித்து பார்த்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  13. "மேலே இருந்து வெளிச்சம் கொஞ்சம் வருகிறது" தலைப்பிற்கான படம் மிக் அருமை.  எல்லாப் படங்களுமே சிறப்பு.  மலையை தலையில் தங்கி நிற்பது போல படம் அ'பாரம்'!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மேலே இருந்து வெளிச்சம் கொஞ்சம் வருகிறது" தலைப்பிற்கான படம் மிக் அருமை. எல்லாப் படங்களுமே சிறப்பு. மலையை தலையில் தங்கி நிற்பது போல படம் அ'பாரம்'!//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. படங்கள் அந்த இடங்களின் அழகைக் காட்டுவதால் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை.  கேமிராவிலேயே இவ்வளவு அழகாக இருந்தால் நேரில் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்...  அருமை.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் அந்த இடங்களின் அழகைக் காட்டுவதால் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை. கேமிராவிலேயே இவ்வளவு அழகாக இருந்தால் நேரில் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்... அருமை. நன்றி.//

      படங்களில் பார்ப்பதை விட நேரில் இன்னும் அழகுதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. நிறைவான தரிசனம். பார்த்துக்கொண்டே, படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

      //நிறைவான தரிசனம். பார்த்துக்கொண்டே, படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போல் உள்ளது.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. படங்களைப் பார்த்தாலே உங்களுடன் கூடவே வந்ததுபோல இருக்கிறது.

    தெய்வ தரிசனம் நன்று.

    நல்ல பதிவு. நீங்கள் ரொம்ப கஷ்டப்படாமல் தரிசனம் செய்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்களைப் பார்த்தாலே உங்களுடன் கூடவே வந்ததுபோல இருக்கிறது.//

      நன்றி.

      //தெய்வ தரிசனம் நன்று.

      நல்ல பதிவு. நீங்கள் ரொம்ப கஷ்டப்படாமல் தரிசனம் செய்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி//

      ஆமாம், முருகன் அருளால் கஷ்டப்பாடாமல் தரிசனம் செய்து வந்து விட்டேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல சிறப்பாக எடுத்துள்ளீர்கள்.

    வீபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருவது கண்களுக்கும், மனதிற்கும் நிறைவாக உள்ளது. கீழே உள்ள சிறு தங்க மயமான குகைக்குள் வேலும், மயிலுமாக தனியாக நின்றிருக்கும் முருகனும், அவ்வளவு அழகு. இன்று உங்கள் தயவால், பத்துமலை முருகனை நல்ல விபரங்களுடன் அழகான படங்களுடன் தரிசித்துக் கொண்டேன். குகையின் தட்ப வெப்ப நிலைகள் ஆச்சர்யம் அளிக்கிறது.

    குகையின் ஒவ்வொரு பகுதியும் நல்ல அழகு. சிறு வெளிச்சம் படும்டடியாக அமைத்திருக்கும் குகையின் அமைப்பு காண கண் கோடி வேண்டும். நீங்கள் சொல்வது போல் குகையின் பாறையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு உருவங்கள் தெரிகின்றன. எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தேன்.படங்கள் அனைத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.

    தங்கள் மகன், பேரன், மருமகள் மூவரும் தங்களுக்கு எந்த ஒரு கஸ்டமும் வராமல் பார்த்துப் பார்த்து அன்புடன் அத்தனைப் படிகள் ஏற்றி அழைத்துச் சென்று முருகனை தரிசனம் செய்வித்தது மாதிரி, நீங்களும் பத்துமலை குகையின் ஒரு பகுதியையும் விடாது எங்களுக்கு படங்களுடன் விளக்கிச் சொல்லி, புரிய வைத்து, நாங்களும் நெடுநாட்களாய் பார்க்க வேண்டுமென நினைத்த அந்த பத்துமலை முருகனை கண்ணெதிரே கொண்டு வந்து தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள்.

    வீட்டிலிருந்தபடியே நாங்கள் பார்த்து, பார்த்து ரசித்தாலும், உங்களுடன் வந்த திருப்தியை தங்கள் எழுத்து எங்களுக்கு தந்தது. இதற்கு உங்களுக்கு கோடானுகோடி நன்றி சொன்னாலும் போதாது சகோதரி. 🙏.

    சிறந்த பதிவு. மிக்க நன்றி சகோதரி. இதை அன்றே ஏதோ வேலைகளாலும், நேற்று உறவுகளின் வருகையாலும் படிக்க இயலாமல் போய் விட்டது. அதனால் நேற்று வந்த பதிவை படித்து இன்று மதியம் கருத்து தந்துவிட்டு, இப்போது இதை மிகவும் ரசித்து படித்துவிட்டேன். தாமதமான வருகைக்கு பொறுத்துக் கொள்ளவும் சகோதரி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல சிறப்பாக எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி.

      //வீபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருவது கண்களுக்கும், மனதிற்கும் நிறைவாக உள்ளது. கீழே உள்ள சிறு தங்க மயமான குகைக்குள் வேலும், மயிலுமாக தனியாக நின்றிருக்கும் முருகனும், அவ்வளவு அழகு.//

      ஆமாம், நமக்கு பார்த்து கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.

      //குகையின் தட்ப வெப்ப நிலைகள் ஆச்சர்யம் அளிக்கிறது.//

      ஆமாம் , அது ஆச்சர்யம் தான்.


      //நீங்கள் சொல்வது போல் குகையின் பாறையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு உருவங்கள் தெரிகின்றன. எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தேன்.படங்கள் அனைத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.//

      பெரிதாக்கி பார்த்து கற்பனைக்கு ஏற்றார் போல உருவங்களை கண்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //தங்கள் மகன், பேரன், மருமகள் மூவரும் தங்களுக்கு எந்த ஒரு கஸ்டமும் வராமல் பார்த்துப் பார்த்து அன்புடன் அத்தனைப் படிகள் ஏற்றி அழைத்துச் சென்று முருகனை தரிசனம் செய்வித்தது மாதிரி, நீங்களும் பத்துமலை குகையின் ஒரு பகுதியையும் விடாது எங்களுக்கு படங்களுடன் விளக்கிச் சொல்லி, புரிய வைத்து, நாங்களும் நெடுநாட்களாய் பார்க்க வேண்டுமென நினைத்த அந்த பத்துமலை முருகனை கண்ணெதிரே கொண்டு வந்து தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள்.//

      நான் கனவிலும் நினைக்காத பத்துமலை முருகனை தரிசனம் செய்ய வைத்த மகனுக்கும் , மருமகளுக்கும், பேரனுக்கும் எப்போதும் என் வாழ்த்துகளும், நன்றிகளும் உண்டு.
      நீங்களும் என்னுடன் வந்து தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சி.

      //சிறந்த பதிவு. மிக்க நன்றி சகோதரி. இதை அன்றே ஏதோ வேலைகளாலும், நேற்று உறவுகளின் வருகையாலும் படிக்க இயலாமல் போய் விட்டது. அதனால் நேற்று வந்த பதிவை படித்து இன்று மதியம் கருத்து தந்துவிட்டு, இப்போது இதை மிகவும் ரசித்து படித்துவிட்டேன். தாமதமான வருகைக்கு பொறுத்துக் கொள்ளவும் சகோதரி. நன்றி.//

      குடும்ப கடமைகளுக்கு இடையே பதிவை படித்து படங்களை ரசித்து ஒவ்வொன்றுக்கும் அருமையான விரிவான கருத்து பதிவு செய்து மீண்டும் எழுத உற்சாகம் படுத்துவதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் கமலா.
      நன்றி, நன்றி.

      நீக்கு
  18. படங்கள் அழகு. பத்துமலை முருகன் மீண்டும் எங்கள் மனங்களில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு