வெள்ளி, 28 அக்டோபர், 2022

காவடியாம் காவடி கந்தவேலன் காவடி

 

கழுகு மலை குமரன் ஒரு முகமும் ஆறு கைகளும், இடதுபுறம் மயிலின் தலையும் அமைந்த  சிறப்பு அம்சம் , அருணகிரியார் கூப்பிய கைகளுடன்.

முருகனைச் சிந்திப்போம்- 4


கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 
நான்காவது நாள்  முருகனுக்கு உகந்த காவடிச் சிந்து பாடல்களைக்
 கேட்கலாம்  இந்த பதிவில்.

மருதமலை மாமணியே! முருகனை சிந்திப்போம்- 3 இதற்கு முன்பு
 போட்ட பதிவு.
 அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என 
அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் 
பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை
 பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூடப்
 பாடிச் சாதனை புரிந்தவர்.
அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார்
 கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். 
காவடிச் சிந்து, வீரைத் தலபுராணம், 
வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். 
ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் 
ஆதரிக்கப்பட்டவர்.
- விக்கிப்பீடியா
                                      
                                              பாடியவர் சுதா ரகுநாதன்

சென்னி குளநகர் வாசன் - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன், அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.

-அண்ணாமலை ரெட்டியார்


பழனி முருகன் காவடி சிந்து

அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன்-அவன்
அசுரர் தம்மை  வென்ற வடிவேலன் -நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் -அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்!- இந்த 
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி 
மகிழ்வேன் - உள்ளக்
குமறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

நீலமயில் மீதில் நிற்பொன் ஆவினங்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் 
காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம்  பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்

- அண்ணாமலை ரெட்டியார்


                                     'அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா'
இந்தப் பாடலில் அத்தனை படைவீடும் இருக்கிறது. எளிமையான பாடல் வரிகள். 
'சூரனுக்கும் வாழ்வு தந்த வேலைய்யா'
இந்தப் பாடலில் கரகாட்டம், ஒயிலாட்டம்  பொய்க்கால் குதிரை 
ஆட்டம் எல்லாம் வருகிறது.
பாடல் வரிகளைத் தேடி எடுத்துப் போட்டு இருக்கிறேன் காப்பி , 
பேஸ்ட் செய்ய முடியவில்லை. எழுதி எடுத்துப் போட்டு
 இருக்கிறேன்.
 கீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் பதிவிட்டு இருந்தார். 
அவருக்கு நன்றி.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா- உந்தன்
அருள்வடிவைக் காண்பதுதான் எப்பையா
சூரனுக்கு வாழ்வு தந்த வேலைய்யா- உந்தன்
ஜோதி முகம் காண்பதெந்த நாளைய்யா
சுப்பையா எப்பய்யா வேலைய்யா(அப்பனுக்கு)

குன்றத்திலே குடியிருக்கும் கந்தைய்யா -எங்கள் 
குடும்பத்தில் நீ பிறக்க வேணும் பிள்ளைய்யா
தெய்வானை மணமுடித்த குமரய்யா- அந்தத்
தேவரிலும் உன்னை வென்றோர் எவரய்யா (குன்றத்திலே)

பாலிருக்கும் பழனியிலே பழமிருக்கும் சோலையில்
நீதிமன்றம் வைத்தவனே நீயிரிக்கும் வரையிலே
வேலிருக்க வினையில்லை மயிலிருக்க பயமில்லை
வேலவனே நீயிருக்க ஏழைகட்குத் துயரில்லை
சுப்பையா எப்பைய்யா வேலையய்யா (அப்பனுக்கு)

திருத்தணிகை மழைத் திருநீறினை
நெற்றியில் தாங்கி வந்தோம் வேலா -அந்த
தகப்பன்சுவாமி மலையில் சந்தனம்
வாங்கி வந்தோம் வேலா
செந்தூர் குங்குமம் அள்ளியெடுத்து
சேர்த்து வந்தோம் வேலா

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் 
குளித்து வந்தோம் வேலா
வள்ளிமலை நாதா கருவண்டு விழிக் குமாரா
மழலை மொழிக் கந்தா எங்கள் மருதமலை முருகா
                                             -  கவிஞர் கண்ணதாசன்.
இசை-  பி.எஸ். திவாகர்
பாடியவர்- டி.எம்.எஸ் அவர்கள்.


பக்தர்கள் எல்லாம் காவடி தூக்கி வரும் பாட்டு 

தெய்வம் படத்தில் இடம்பெற்ற  பாடல் காவடி பாடல் 
எத்தனை விதமான காவடிகள்  ராதா, ஜெயலட்சுமி அருமையாக
பாடியது.  இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்
இசை குன்னக்குடி வைத்தியநாதன்.

.
//கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டு விடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன்
 சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே கந்தனருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே!//

காவடிப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்து இருக்கும் என்று
 நினைக்கிறேன்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். சில 
முருகன் கோயில்களை  பார்க்கலாம்
முருகனுக்கு உகந்த விழாக்களில் காவடிகள் இல்லாமல் இருக்காது.
 இந்தக் காணொளியில்  காவடிகளும் அபிஷேகம், அலங்காரம், 
பூஜை எல்லாம் இருக்கிறது. பக்தி பரவசமாக ஆடுவதை காணலாம்.

காணொளிகளை யூடியூபில் வலை ஏற்றிய அன்பர்களுக்கும் நன்றி.


நிறைய காவடிகள் இருக்கிறது. வழிநடை பாடலாக காவடி சிந்து பாடி 
இருக்கிறார்கள். அத்தனையும் அருமையாக கால்நடையாக 
காவடிகளை சுமந்து செல்லும் போது  களைப்பு தெரியாமல் இருக்க 
  பாடிகொண்டும்,  ஆடி கொண்டும் போவார்கள்.  

//பக்தரெல்லாம் கொண்டாடும்
காவடியாம் காவடி
பாமாலை பாடி ஆடி
நாடிவரும் காவடி//

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை

1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்
2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்
3.சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்,சமணர் கல்வெட்டுக்கள்

கழுகு மலை கழுகாசலமூர்த்தி கோயில்  பதிவு முன்பு பதிவு செய்தது 
கழுகுமலை கோயில் பார்க்கலாம்.  கழுகுமலை வெட்டுவான் கோயில்
சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் சமணர் கல்வெட்டுக்கள் 
இருக்கிறது. பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது 
பார்க்கலாம்.
இருக்கும் இடத்திற்கும் போய் தரிசனம் செய்து வந்தோம்.
கழுகரசன் சம்பாதி முக்தி பெற்ற திருத்தலம்

இரண்டு மூன்று முறை  இந்த கோயிலுக்கு போய் இருக்கிறோம்.
 குடைவரை கோயில். கந்தசஷ்டி சமயம் போனதுபற்றி  பதிவு செய்து 
இருக்கிறேன். .

1989 ல் கோவில்பட்டி நீலமணி அவர்கள்  எழுதிய கவசத்திலிருந்து  ஒரு பாடல்:-

வணங்கிடத் தலையும் தந்தாய்
வாழ்த்திட வாயும் தந்தாய்
இணங்கிட மனமும் தந்தாய்
இசைத்திட தமிழும் தந்தாய்
மணங்கமழ் மாலை கொஞ்சும்
மார்பனே ! காக்க காக்க
அணங்கொடு வந்தே காக்கும்
அழகனே! காக்க காக்க

அனைவரையும் காக்க வேண்டும் அழகன் முருகன்.

‘காவடிகள் உன்னைத் தேடி ஆடி வரும்!
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்!
சேவடியே சரணம் என வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருள்வான் கந்தவேலன்!


                  வாழ்க வையகம்! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன் !

18 கருத்துகள்:

 1. ரத்தினங்களாய் முத்து மணிகளாய் பதிவில் வாரி இறைத்திருக்கின்றீர்கள்..

  அரோகரா..
  அரோகரா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்
   //ரத்தினங்களாய் முத்து மணிகளாய் பதிவில் வாரி இறைத்திருக்கின்றீர்கள்.//.

   அரோகரா..
   அரோகரா..//


   நன்றி.

   நீக்கு
 2. காவடிச்சிந்து இயற்றிய அண்ணாமலை ரெட்டியார் அருளாளர்..

  சொல் சுத்தமும் ஜதி சுத்தமும் எல்லாம் முருகனருள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காவடிச்சிந்து இயற்றிய அண்ணாமலை ரெட்டியார் அருளாளர்..

   சொல் சுத்தமும் ஜதி சுத்தமும் எல்லாம் முருகனருள்..//

   ஆமாம், அருளாளர். அவர் இயற்றிய காவடி சிந்து மிக சிறப்பானது முருகன்ருள்தான்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. அனைத்து பாடல்களும் கேட்டேன் சிறப்பு.

  தங்களது கடந்த நான்கு பதிவுகளும் அலைபேசியில் முழுமையாக காண இயலவில்லை.

  ஆகவே இன்றுதான் கணினியில் திறக்க முடிந்தது. தரிசனம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   சிரமாக இருக்கிறது படிக்க அலைபேசியில் என்றுதான் அடுத்த இரண்டு பதிவுகளை பார்க்க வில்லையா?
   காப்பி, பேஸ்ட் செய்தேன் பழைய பதிவை அதுதான் காரணமாக இருக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. சஷ்டி விழாவின் நான்காம் நாளான இன்றைய காவடிச்சிந்து பதிவு நன்றாக உள்ளது. காணொளி முதலாவதை கேட்டேன். பிற காணொளி களையும் இதோ.. இப்போது கேட்கிறேன். காவடிச் சிந்து அதைப் போன்ற பல பாடல்களை இயற்றிய திரு. அண்ணாமலை ரெட்டியார் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன்.

  கழுகு மலை குமரனை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன். பல தெரியாத விஷயங்களை தேர்ந்தெடுத்து பதிவாக்கி வருகிறீர்கள். இன்றைய பதிவின் எழுத்துக்கள் ரொம்ப பொடிதாக உள்ளது. பெரிதாக்க வரவில்லை. எப்படியோ என் கைப்பேசியில் முருகனருளால் படித்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. இதோ.. நேற்றைய பதிவுக்கும் போகிறேன். நேற்று வர இயலவில்லை. நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //பதிவு அருமை. சஷ்டி விழாவின் நான்காம் நாளான இன்றைய காவடிச்சிந்து பதிவு நன்றாக உள்ளது//

   நன்றி.

   //இன்றைய பதிவின் எழுத்துக்கள் ரொம்ப பொடிதாக உள்ளது. பெரிதாக்க வரவில்லை. எப்படியோ என் கைப்பேசியில் முருகனருளால் படித்து விட்டேன்.//
   படிக்க கஷ்டபட்டீர்களா? வேறு மாற்றம் செய்ய வேண்டும் மீள் பதிவு போடும் போது.

   நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் கமலா.
   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 5. அனைத்தும் சிறப்பு.  பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்தில்...  முருகா ஆட்டத்தில் என்கிற சூலமங்கலம் சகோதரிகள் பாடலும் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்தில்... முருகா ஆட்டத்தில் என்கிற சூலமங்கலம் சகோதரிகள் பாடலும் நினைவுக்கு வருகிறது.//

   ஆமாம், எனக்கும் நினைவுக்கு வந்தது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. கந்த சஷ்டி ஐந்தாம் நாள் பதிவு என்ன ஆயிற்று?..

  நலம் தானே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கணவரின் சித்தி, சித்தப்பா மகள் நேற்று மாலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அவர்களை பார்க்க கோவை போய் விட்டேன்.
   இப்போதுதான் வந்தேன்.

   நீக்கு
 9. எளிய வார்த்தைகளில் பொருள் பொதிந்த காவடிச்சிந்து பாடல்களில் மயங்காதோர் யார்? மிக அருமையாகவும் அழகாகவும் தொகுத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   காவடிச்சிந்து தொகுப்பு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு