பல நாட்கள் ஆகி விட்டன பறவைகள் பதிவு போட்டு. ஜன்னல் வழியே, மற்றும் பால்கனி வழியே பறவைகளை பார்த்து பதிவு செய்வேன். நிறைய பறவைகளை படம் எடுத்தும் வைத்து இருக்கிறேன், அவைகளை போட வேண்டும். இந்த முறை பறவைகளின் படங்கள் எல்லமே ஒரு தேடலை சொல்கிறது.
கூட்டை தேடி, தனக்கு உணவு அளித்த தோட்டத்தை தேடி என்று.
சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டில் புறாக்கள் கூடு கட்ட முயற்சி செய்து வெற்றிகரமாக கட்டி விட்டது. அவர்கள் துணி எல்லாம் காய போட்டு இருக்கும் இடத்தில் இப்படி தைரியமாக கூடு கட்டுகிறதே! என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
அந்த பறவைகளை படம் எடுத்து இருந்தேன். இந்த பதிவில் பறவைகளின் வீடு(கூடு என்னவாயிற்று என்று பாருங்கள்.)
இந்த பறவைகள் கூடு கட்ட ஏற்பாடு செய்யும் போது முன்பு நான் போட்ட பதிவு " கூட்டைக்கட்டிப்பார் " பதிவு நினைவுக்கு வந்தது. (புறாக்கள் கூடு கட்ட இடம் தேடும் பதிவு)
அமர்ந்து கொண்டு விட்டது வசதியாக
"சரி, சரி பத்திரமாக இரு நான் வருகிறேன் ஏதோ புது குச்சியை கொண்டு வந்து குறுக்காய் வைத்து இருக்கிறார்கள் இந்த வீட்டு அம்மா"
வீட்டை நோக்கி ஒரு பார்வை
நம்மை விரட்டிவிடுவார்களோ என்று பரிதாபமாக பார்த்து கொண்டு இருக்கிறது.
அதை விலக்க பார்க்கிறது
தான் வைத்த முட்டையின் நிலை என்ன என்ற தவிப்பு
இரண்டு நாளாக இரண்டு பறவைகளும் மாறி மாறி வந்து பார்வையிட்டு ஏமாற்றமாய் திரும்பின
முட்டை இருந்தால் எப்படியாவது உள்ளே நுழைந்து அடைகாக்கலாம்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் எத்தனை பறவைகளின் கூடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோ ? எத்தனை மக்கள் வீடு இழந்தார்களோ?
புயல், மழையால் , மழை நீர் வீட்டுக்குள் புகுந்து விட்ட காட்சிகள் மக்கள் பட்ட அவதிகளை தொலைகாட்சியில் பார்க்கும் போது மனம் கலங்கியது. அது போலவே இவைகள் கூட்டை தேடி தான் வைத்த முட்டையை தேடி அலைந்தது மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது.
அடுத்த பதிவில் தனக்கு உணவு அளித்து வந்த தோட்டத்தை தேடி வந்த பறவைகளின் படம் இடம்பெறும்.
இன்று வெற்றிகரமாக செய்தி தாளை தள்ளிவிட்டு அமர்ந்து விட்டது. (9.12. 2023) இதைதான் விடாமுயற்சி என்பார்கள், வெற்றி அளித்தால் மகிழ்ச்சி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
இங்கு அபுதாபியில் எனது அலுவலகத்தில் எனது டேபிள் ஓரம் கண்ணாடியின் மறுபுறம் இரண்டு புறாக்கள் தினமும் வந்து எனது அருகில் உட்கார்ந்து இருக்கும் நான் குப்பியில் தண்ணீர் வைக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் நினைவு வரும் தங்களது செயலைக் கண்டு நானும் தொடர்ந்து செய்து வருகிறேன் .
இதில் ஓர் மன ஆறுதல் கிடைப்பது உண்மையே...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//இங்கு அபுதாபியில் எனது அலுவலகத்தில் எனது டேபிள் ஓரம் கண்ணாடியின் மறுபுறம் இரண்டு புறாக்கள் தினமும் வந்து எனது அருகில் உட்கார்ந்து இருக்கும் நான் குப்பியில் தண்ணீர் வைக்கிறேன்//
அருமை. கேட்கவே நன்றாக இருக்கிறது.
புறா பறவை தண்ணீரை நன்கு உறிஞ்சு குடிக்கும்..
//உங்கள் நினைவு வரும் தங்களது செயலைக் கண்டு நானும் தொடர்ந்து செய்து வருகிறேன் .
இதில் ஓர் மன ஆறுதல் கிடைப்பது உண்மையே...//
மன ஆறுதல் கிடைப்பது உண்மைதான். பறவைகளை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
உங்கள் ஊரில் மயில்களுக்கு தண்ணீர் , உணவு வைப்பீர்கள்தானே?
இந்த வீட்டில் இப்போது தண்ணீர் வைக்க வசதி படவில்லை. பறவைகள் தண்ணீரை தள்ளி கொட்டி விடுகிறது, கீழே நடந்து செல்வோர் மேல் தண்ணீர் கொட்டும் அதனால் தண்ணீர் வைப்பது
இல்லை. முன்பு இருந்த வீட்டில் மதில் மேல் வைப்பேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படிக்கப் படிக்க மனம் கனமாகி விட்டது. "எனக்கு ஏன் இந்த சோதனை? நான் யார் சாப்பாட்டில் மண்ணள்ளிப் போட்டேன்? யார் கூட்டைக் கலைச்சேன்?" என்றெல்லாம் வசனம் வரும். இது தப்பில்லையா? பக்கத்து வீடுதானே? அவர்களிடம் பேசிப் பார்த்திருக்கலாமே நீங்கள்? புறாக்களின் தவிப்பு பாவமாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படிக்கப் படிக்க மனம் கனமாகி விட்டது. "எனக்கு ஏன் இந்த சோதனை? நான் யார் சாப்பாட்டில் மண்ணள்ளிப் போட்டேன்? யார் கூடடைக் கலைச்சேன்?" என்றெல்லாம் வசனம் வரும். //
பற்வை கூட்டை கலைக்க கூடாது என்பதற்கு சொல்லபட்டவைகள் அவை.
இப்போது புறா காய்ச்சல் வருகிறது என்று பயபட்டு சிலர் கண்ணாடி கதவுகள் அமைத்து விட்டார்கள் வீடுகளில்.
அவர்கள் வேலைககு போகிறவர்கள் போலும், வேலையாள் காலை வந்து துணி காயப்போடுவார். இவர்கள் புறாவை பார்க்கவில்லை போலும். மிதியடியை எடுக்கும் போதுதான் பார்த்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அந்த வீட்டில் இருப்பவர்கள் யார் என்றே தெரியாது. முன்பு இருந்தவர்கள் என்னை போல பறவைகளுக்கு சாப்பாடு வைப்பார்கள். நிறைய பறவைகள் அப்போது படம் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன். உணவு வைக்க வரும் போது காய்ந்த துணியை எடுக்க வரும் போது பேசுவார்கள். இவர்களிடம் பேசியது இல்லை.
இருந்தாலும் நாம் சொல்லமுடியாது.
புறாக்கள் வீடுகளில் பாதுகாப்பு என்று கூடு கட்டுகிறது. ஆனால் சரியான இடம் இடத்தில் கட்டவில்லையே இந்த புறாக்கள்.
//புறாக்களின் தவிப்பு பாவமாக இருக்கிறது.//
ஆமாம்.
ஆனால் புறாக்கள் கொடுக்கும் குரல் ஒரு மாதிரி குளிரில் நடுங்கும் தாத்தா போல இருக்கும். தொடர்ந்து வரும் அந்த ஓசை சிலருக்கு பிடிக்காது!
பதிலளிநீக்கு//ஆனால் புறாக்கள் கொடுக்கும் குரல் ஒரு மாதிரி குளிரில் நடுங்கும் தாத்தா போல இருக்கும். தொடர்ந்து வரும் அந்த ஓசை சிலருக்கு பிடிக்காது!//
நீக்குஆமாம். ,அதன் சத்தம் ஆகாது என்று வேறு சிலர் சொல்வார்கள்.
ஜூம் செய்து எடுத்தீர்களா? பக்கத்தில் எடுத்தது போல க்ளியராக இருக்கிறது.
பதிலளிநீக்கு//ஜூம் செய்து எடுத்தீர்களா? பக்கத்தில் எடுத்தது போல க்ளியராக இருக்கிறது.//
நீக்குஆமாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
புறாக்கள் தவிப்பு மனதுக்கு பாரம்தான்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டு ஷாஃப்ட்களில் புறாக்களுக்காக வலைத்தடுப்பை ஒரு நாள் அடித்தார்கள் (அந்த பில்டிங்கில் எல்லா வீட்டுக்கும்). எங்கள் ஷாஃப்டில் பறவைக்கூட்டோடு முட்டைகளும் மாட்டிக்கொண்டன. பறவைகளை வெளியே விட்டுவிட்டார். பாவம் முட்டு.
நீக்குவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
//புறாக்கள் தவிப்பு மனதுக்கு பாரம்தான்.//
ஆமாம், ஆனால் என்ன செய்வது!
//எங்கள் ஷாஃப்டில் பறவைக்கூட்டோடு முட்டைகளும் மாட்டிக்கொண்டன. பறவைகளை வெளியே விட்டுவிட்டார். பாவம் முட்டு.//
வேறு என்ன செய்ய முடியும்? புறா வளர்ப்பவர்களை தேடி கொடுக்க முடியுமா முட்டைகளை. நம்மால் பரிதாபபட மட்டுமே முடியும்.
மகன் வீட்டில் மரத்தில் வருட வருடம் மணிபுறாக்கள் இரண்டு முட்டை வைக்கும், குஞ்சு பொறித்து சில போகும், சில வேறு பறவைகளுக்கு உணவாகும். சில நாள் வருத்தமாக இருக்கும், பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம்.
புறா இருப்பது உடல் நலத்திற்கு ஆபத்து என்பார்கள். இப்போது கிடைத்த சிறு இடங்களில் அவை இருக்கின்றன. மழைக் காலத்தில் இரண்டு புறாக்கள் ஒடுங்கிக் கிடக்கும் தொந்தரவு செய்யாமல் கோய்வருவேன். பகலில் இருக்காது.
பதிலளிநீக்குபதிவில் படங்கள் பளிச் என்று உள்ளன
/புறா இருப்பது உடல் நலத்திற்கு ஆபத்து என்பார்கள்.//
நீக்குநிறைய புறாக்கள் வளர்ப்பவர்கள் எப்படி வளர்க்கிறார்கள். தடுப்பு மருந்துகள் எடுத்து கொள்வார்கள் போலும்.
//இப்போது கிடைத்த சிறு இடங்களில் அவை இருக்கின்றன.//
ஆமாம். அப்போது கோவில்கள், மசூதி, தேவாலயங்களில் அடைக்கலமாக இருக்கும். அவை வசிக்க வசதியாக இருக்கும் அந்த இடங்கள்.
//மழைக் காலத்தில் இரண்டு புறாக்கள் ஒடுங்கிக் கிடக்கும் தொந்தரவு செய்யாமல் கோய்வருவேன். பகலில் இருக்காது.//
இங்கு பகலில் பார்ப்பேன் புறாக்களை இரவில் பார்த்தது இல்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வருத்தமாக உள்ளது அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//வருத்தமாக உள்ளது அம்மா.//
ஆமாம், பறவைகளின் நிலை வருத்தமாக தான் உள்ளது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வெகு நாட்கள் கழித்து பதிவு..
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோ துரைசெல்வராஜு, வாழ்க வளமுடன்
நீக்கு//வெகு நாட்கள் கழித்து பதிவு..//
டிசம்பர் 3 ம் தேதி பதிவு போட்டேன். "இம்மையிலும் நன்மை தருவார் "கோவில் பதிவு. நீங்கள் படிக்கவில்லை.
/மகிழ்ச்சி.. நன்றி..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
புறாக்களின் குக்கும்.. குக்கும்.. என்ற சத்தம் வீடுகளில் கேட்கக் கூடாது என்றொரு நம்பிக்கை..
பதிலளிநீக்கு//புறாக்களின் குக்கும்.. குக்கும்.. என்ற சத்தம் வீடுகளில் கேட்கக் கூடாது என்றொரு நம்பிக்கை..//
நீக்குஆமாம், அப்படித்தான் சொல்கிறார்கள்.
மாடங்களில் வசித்துப் பழகியவை மாடப் புறாக்கள்.. அவைகளுக்காகவே பிரத்யேக வசிப்பிடங்கள் அமைக்கப்பட்டன.. அவற்றில் ஒன்று தற்போது திருவையாறு காவிரிக் கரையில் உள்ளது.. அது இன்னும் எத்தனைக் காலத்திற்கு இருக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது..
பதிலளிநீக்கு//மாடங்களில் வசித்துப் பழகியவை மாடப் புறாக்கள்.. அவைகளுக்காகவே பிரத்யேக வசிப்பிடங்கள் அமைக்கப்பட்டன.. //
நீக்குநம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் புறாக்கள் வசிக்க பாடங்கள் உள்ள கட்டிடங்களை பார்த்து இருக்கிறேன்.
//அவற்றில் ஒன்று தற்போது திருவையாறு காவிரிக் கரையில் உள்ளது.. அது இன்னும் எத்தனைக் காலத்திற்கு இருக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது..//
இருக்கும் வரை பறவைகள் அங்கு இருக்கட்டும் மகிழ்ச்சியாக.
குவைத் சிட்டியில் புறாக்களுக்குத் தீனி இடுவதற்கு என்றே இடம் ஒன்று இருந்தது.. நான் அங்கு இருந்த போது பல முறை தானியங்கள் வாங்கி இறைத்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குஒருமுறை அவ்வாறு செய்த போது தானியங்களை வீணாக்குவதாக என்னை அரபி ஒருவன் கடுமையாக வசை பாடினான்..
இப்போது அந்த இடத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை..
//குவைத் சிட்டியில் புறாக்களுக்குத் தீனி இடுவதற்கு என்றே இடம் ஒன்று இருந்தது.. நான் அங்கு இருந்த போது பல முறை தானியங்கள் வாங்கி இறைத்திருக்கின்றேன்..//
நீக்குஇங்கும் பள்ளி வாசல்கள், தர்க்காவிற்கு வேண்டிக் கொண்டு பறவை உணவு என்று தானியங்கள் வாங்கி கொடுக்கும் பழக்கம் உண்டு. கோவில்களில் பறவைகளுக்கு உணவு வழங்குவார்கள். மாயவரம் புனுகீஸ்வரர் கோவிலில் மதில் மேல் புறாக்களுக்கு மாடங்கள் வைத்து கட்டினார்கள். கட்ட கட்டமாக. அதில் தங்கி இருக்கும் புறாக்களுக்கு உணவு அளிப்பார்கள் மக்கள்.
//ஒருமுறை அவ்வாறு செய்த போது தானியங்களை வீணாக்குவதாக என்னை அரபி ஒருவன் கடுமையாக வசை பாடினான்..//
அங்கு பறவைகளுக்கு உணவு அளிக்கும் பழக்கம் இல்லையா ?
இப்போது அந்த இடத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை..//
இப்போது எல்லோரும் வசைபாடிய அரபியே உணவு அளித்தாலும் அளிக்கலாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிறுவர் படக்கதை போன்று நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//சிறுவர் படக்கதை போன்று நன்றாக உள்ளது.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
பறவைகளின் தவிப்பு இறுதியில் வெற்றியடைந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகளின் தவிப்பு இறுதியில் வெற்றியடைந்தது மகிழ்ச்சி.//
ஆமாம். விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஆனால் அவர்கள் அதை மீண்டும் விரட்டாமல் இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிடுச்சு, கோமதி அக்கா, பதிவு வாசிச்சு படத்தையும் பார்த்த உடனே ரொம்ப கஷ்டமாயிடுச்சு. மொபைலில் வழியா தான் போடுறேன் கோமதி அக்கா நெட்டு இல்ல அதனால அதனால கருத்து வந்து கொஞ்சமா தான் போட முடியாது.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிடுச்சு, கோமதி அக்கா, பதிவு வாசிச்சு படத்தையும் பார்த்த உடனே ரொம்ப கஷ்டமாயிடுச்சு. மொபைலில் வழியா தான் போடுறேன் கோமதி அக்கா நெட்டு இல்ல அதனால அதனால கருத்து வந்து கொஞ்சமா தான் போட முடியாது.//
பரவாயில்லை கீதா. நெட் வந்தபின் பார்த்துக்கலாம்.
இது வுமே வாய்ஸ் மெசேஜ் ல தான் டைப்பிங்...கருத்து கொடுக்கிறேன் கோமதி அக்கா கொடுத்துட்டு தப்பு இருந்துச்சுன்னா அதுல கரெக்ட் பண்ணிக்கிறேன் அவ்வளவுதான் டைப் பண்றது கணினி மாதிரி முடில...
பதிலளிநீக்குஎன்ன சொல்ல அக்கா அதுங்களுக்கு உள்ள பறவைகளுக்கு உள்ள தோட்டங்கள் போயாச்சு மரங்கள் எதுவுமே இல்லை. எல்லா இடத்திலும் வீடுகள் கட்டிடங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு இந்த பறவைகளை வ வரவழைத்து அதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதுக்கு மனசும் இல்ல பல பயம் கள்..தயக்கங்கள்அந்த காய்ச்சல் வந்துரும் இந்த காய்ச்சல் வந்துரும் அப்புறம் தான் நீங்க சொன்ன மாதிரி இந்த புறா உடைய சத்தம் வந்து நல்லதில்ல வீட்டுக்கு இப்படியான பல நம்பிக்கைகள் நான் என்னால ரொம்ப கருத்து சொல்லல இதுல ஆனா என் மனசு ரொம்ப கஷ்டப்பட்டுச்சு
கீதா
//இது வுமே வாய்ஸ் மெசேஜ் ல தான் டைப்பிங்...கருத்து கொடுக்கிறேன் கோமதி அக்கா கொடுத்துட்டு தப்பு இருந்துச்சுன்னா அதுல கரெக்ட் பண்ணிக்கிறேன் அவ்வளவுதான் டைப் பண்றது கணினி மாதிரி முடில.//
நீக்குஆமாம் நிறைய பேர் இப்படி வாய்ஸ் மெசேஜ் ல் அதான் டைப்பிங்க் செய்கிறார்கள். நன்றாக இருக்கிறதா? கணினியில் .பழகி விட்டதால் இது கொஞ்சம் கடினமாக தெரியும் ஆனால் எளிது என்கிறார்கள்.
//என்ன சொல்ல அக்கா அதுங்களுக்கு உள்ள பறவைகளுக்கு உள்ள தோட்டங்கள் போயாச்சு மரங்கள் எதுவுமே இல்லை. எல்லா இடத்திலும் வீடுகள் கட்டிடங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு இந்த பறவைகளை வ வரவழைத்து அதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதுக்கு மனசும் இல்ல பல பயம் கள்..தயக்கங்கள்அந்த காய்ச்சல் வந்துரும் இந்த காய்ச்சல் வந்துரும் அப்புறம் தான் நீங்க சொன்ன மாதிரி இந்த புறா உடைய சத்தம் வந்து நல்லதில்ல வீட்டுக்கு இப்படியான பல நம்பிக்கைகள்//
பல்வேறு காரணங்கள் உள்ளன கீதா.
//நான் என்னால ரொம்ப கருத்து சொல்லல இதுல ஆனா என் மனசு ரொம்ப கஷ்டப்பட்டுச்சு//
ஆமாம், அதன் தவிப்பு நம் மனதுக்கு கஷ்டம் தான்.
பெங்களூர்ல லால் பாக்ல புறாக்கள் வந்து கூடு அதாவது புறாக்கள் வந்து தங்கி முட்டை போட்டு அதுங்க வாழனும் என்பதற்காகவே அந்த ஜன்னல் மாதிரி வச்சு ஒரு கூடு பெரிய கூடு அந்த காலத்திலேயே வைத்திருந்தார்கள் நான் கூட போட்டோ போட்டு இருந்தேன்.
பதிலளிநீக்குநம்ம வீட்டுக்கு வர புறாக்களுக்கு இங்க உணவு கொடுக்கிறேன் தானியம் போடுறேன் இங்க பக்கத்துல எல்லாம் நிறைய பேர் போடுறாங்க நம்ம வீட்டு பக்கத்துல எல்லாம் பெரிய புறா கூட்டமே இருக்கு அக்கா இங்க அந்த மரத்துல அத்தனையும் உட்கார்ந்திருக்கும் பாருங்க கம்ம்பிலயும் மரத்துலையும் பார்க்க அழகா இருக்கும் அவங்க வந்து மிக்சர் போடுறாங்க அதை சாப்பிடுவதற்கு என்று அந்த டயத்துக்கு கரெக்ட்டா அவ்வளவு கூட்டமா வந்து பறந்து அப்படியே வந்து சாப்பிடும்
கீதா
//பெங்களூர்ல லால் பாக்ல புறாக்கள் வந்து கூடு அதாவது புறாக்கள் வந்து தங்கி முட்டை போட்டு அதுங்க வாழனும் என்பதற்காகவே அந்த ஜன்னல் மாதிரி வச்சு ஒரு கூடு பெரிய கூடு அந்த காலத்திலேயே வைத்திருந்தார்கள் நான் கூட போட்டோ போட்டு இருந்தேன்.//
நீக்குநிறை பூங்காவில் உண்டு கீதா.
நம்ம வீட்டுக்கு வர புறாக்களுக்கு இங்க உணவு கொடுக்கிறேன் தானியம் போடுறேன் இங்க பக்கத்துல எல்லாம் நிறைய பேர் போடுறாங்க //
நல்ல விஷயம் கீதா.
//நம்ம வீட்டு பக்கத்துல எல்லாம் பெரிய புறா கூட்டமே இருக்கு அக்கா இங்க அந்த மரத்துல அத்தனையும் உட்கார்ந்திருக்கும் பாருங்க கம்ம்பிலயும் மரத்துலையும் பார்க்க அழகா இருக்கும் அவங்க வந்து மிக்சர் போடுறாங்க அதை சாப்பிடுவதற்கு என்று அந்த டயத்துக்கு கரெக்ட்டா அவ்வளவு கூட்டமா வந்து பறந்து அப்படியே வந்து சாப்பிடும்//
பறவைகளுக்கு மிச்சர் பிடித்த உணவு கீதா.
உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.