செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ஸ்ரீ மகா கணபதி ஆலயம்

அரிசோனா மாகாணத்தில் உள்ள மகாகணபதி கோவிலுக்கு  அழைத்து சென்றான் மகன்  போன வாரம். கொரோனா காலம் என்பதால் கோவில் போக ஆன்லைனில் முன் பதிவு செய்ய வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் மதியம்   12.

12 மணியிலிருந்து 12.30  வரை அங்கு இருக்கலாம். மூன்று குடும்பம் இருந்தோம்.  (10 பேர் இருந்து இருப்போம் கோவிலில். ) 20 பேருக்கு அனுமதி.

மகன் வீட்டிலிருந்து அந்த கோவில் போக    1  மணி 30 நிமிடம்    ஆகிறது,  தூரம் அதிகம் .

முருகன்வள்ளி,தெய்வானையுடன் இருக்கிறார், வெங்கடேசபெருமாள்  இருக்கிறார்,  மற்றும்  ஐயப்பன், மகாலட்சுமி,  சீதை, ராமர், லட்சுமணன் , நவக்கிரகங்கள், அனுமன், நடராஜர், சிவகாமி , துர்க்கை, தட்சிணாமூர்த்தி என்று அனைத்து தெய்வங்களும் அழகாய் காட்சி தருகிறார்கள். வண்ண உடையில் அழகான அலங்காரத்துடன் வெளிச்சமாய் மின் விளக்கில் பிரகாசமாய் இருக்கிறார்கள். 

.
அரச மரத்தின் நிழலில் வீற்று இருக்கும்   விநாயகர் 




                                                
மகா ராஜ கோபுரம் கும்பாபிஷேகம்   நடந்த நாளைக் கூறும்     கல்வெட்டு.

                                                    மூலவர் மகா கணபதி

எதிரில் இருக்கும் ராமரைப் பார்த்து கை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர்

உற்சவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் . ஆஞ்சநேயரை வலம் வந்து கும்பிட வசதி உண்டு ஆனால் இப்போது இல்லை,  அருகில் போகத் தடை. 

அரசமரத்து பிள்ளையார்  சிறிய காணொளி. மகன் எடுத்த காணொளி



                                                     சத்யநாராயணப் பெருமாள்.  
                   
                              காசி விசாலாட்சி, ஐயப்பன், காசி விஸ்வநாதர்
நடராஜர், சிவகாமி  ஐம்பொன் சிலை. சீதா, ராமர், லட்சுமணன் , நவக்கிரகங்கள் கற்சிலைகள்.


கண்ணாடி அலமாரிக்குள் புத்தகம் விற்பனைக்கு ,  ஒலி என்ற புத்தகம் எழுதியவர் முருகபெருமான் என்று போட்டு இருக்கிறது. 



சீதை, ராமன், இலக்குமணன், கல்லில்   வடிக்கபட்ட சிலை அழகாய்  இருக்கிறது. உற்சவர் சிலைகள் பக்கத்தில் இருக்கிறது.

திருப்பதி பாலாஜி   சன்னதிக்கு   இடப் பக்கம்  பெரிய தொட்டியில் வாழை மரம் இருக்கிறது.

 சங்கடஹர சதுர்த்தி,  பெளர்ணமி சத்யநாராயண பூஜை ,   பிரதோஷ பூஜை,  மகா சிவராத்திரி பூஜை, மற்றும் ஷஷ்டி, கிருத்திகை பூஜைகள்  சிறப்பாக நடைபெறுமாம்.


                       

கட்டிட வேலைகள் நடக்கிறது.

கட்டுமான பணியில் இருப்பவர் தமிழ்பேசிக் கொண்டு இருந்தார் மேற்பார்வையாளருடன். வெளிநாட்டில் தமிழ் பேசுவதை  கேட்டால்  மகிழ்ச்சி.

                   

                             கோவிலுக்குள் இருந்து அன்னதானக் கூடத்திற்கு வரும் வாயில்

                                                                        அன்னதான கூடம்.

கொரோனா காலம் என்பதால் கோவிலில் பக்தர்களுக்கு   பிரசாதம் கிடையாதாம்.  முன்பு  எப்போது போனாலும் உணவு கிடைக்குமாம்.


மதியத்திற்கு உணவு கையில் எடுத்து கொண்டு போய் இருந்தோம்.
 சாலையில் காரை நிறுத்தி  மருமகள் செய்து கொண்டு வந்து இருந்த உணவை சாப்பிட்டோம். காய்கறிகள் போட்டு நூடுல்ஸ் , மற்றும் தயிர் சாதம். தயிர் சாதம் படம் எடுக்க மறந்து விட்டேன்.



கோவிலில் இருந்து வரும் வழியில் பழைய கால  வண்டி.
 பழது பட்ட வாகனங்களை எடுத்து வரும் வாகனம் பழுது பட்டு நிற்கிறது.


மகா கணபதி ஆலயம் சென்று விட்டு வரும் வழியில் இருந்த  இந்த  பார்க் போனோம்.
வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. மீ தான் இம்முறை 1ஸ்ட்டூ கோமதி அக்கா. மிக அழகிய கோயில் பார்க்க ஆசையாக இருக்கு. கோபுரத்தில் இருக்கும் பிள்ளையார்கள் அழகு. அரசமரத்தடிக் குண்டுப்பிள்ளையாரும் மிக அழகு. அது உண்மையான அரசமரமோ கோமதி அக்கா?..
    வாழை மரத்தைப் பார்த்தாலும் பிளாஸ்ரிக் போலவே தெரியுதே...
    ஓ கொரோனாவால கோயில் பிரசாதம் இல்லையாமோ என்ன கொடுமை இது..:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நீங்கள் தான் முதலில் வந்து இருக்கிறீர்கள் . மற்றவர்களுக்கு இரவு இல்லையா !காலையில் வருவார்கள்.

      அரசமரம் உண்மையானது அதிரா காணொளி பார்க்க வில்லையா? எதிர் பக்கமும் இன்னொரு அரச மரம் வளர்க்கிறார்கள்.

      வாழை மரமும் உண்மையானது.

      //ஓ கொரோனாவால கோயில் பிரசாதம் இல்லையாமோ என்ன கொடுமை இது..:)...//

      ஆமாம், விபூதி, குங்கும பிரசாதம் கூட கிடையாது. பிள்ளையாருக்கு பூஜை காட்டினார் குருக்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. அன்பு கோமதிமா,
      மிக அழகான கோயில்.
      அரசமரத்தடி பிள்ளையாரைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆச்சுமா!!! காணொளி மிக அருமை.
      நல்ல பெரிய கணபதியாக இருக்கிறார்.
      அனுமன் பெரிய அனுமன் சின்ன அனுமன் என்று எல்லாமே அருமை.
      இந்த ஊர்க்கோவில்களில் எல்லா ஸ்வாமிகளும் இருப்பது
      எத்தனை சௌகரியம்.

      நீக்கு
    3. அரசமர இலைகள் அசையும் சத்தம் அருமை.
      எல்லாம் மகா சுத்தமாகப் பளிச்சென்றிருக்கிறது. அம்புக்குறிகள்
      எல்லாம் சரியாகப் போட்டு கடைப்பிடிக்கிறார்கள்

      நீக்கு
    4. ஒரு இடம் விடாமல் அருமையாகப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.அதுவே

      நாங்களே வந்து பார்த்தது போல இருக்கிறது.
      மிக மிக நன்றி மா,

      நீக்கு
    5. வணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்
      அழகான கோயில்தான்.
      அரசமரத்து பிள்ளையார் எல்லோருக்கும் பிடிக்கும் என்றுதான் இந்த பகிர்வு.
      ஒரு கோயிலுக்கு போனால் எல்லா ஸ்வாமிகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யமுடிவது மகிழ்ச்சிதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    6. அரசமரம் காற்றில் அசையும் போது ஏற்படும் சல சலப்பு நன்றாக இருக்கும் அதுதான் மகன் எடுத்தான். வெகு நேரம் எடுக்கலாம் . நீண்ட காணொளியை பார்ப்பது எல்லோருக்கும் நேரம் இருக்காது அதுதான் சின்னதாய். கோவில் நல்ல பாராமரிப்புதான்.

      நீக்கு
  2. நீலவானப் பின்னணியில் தங்க கோபுரம் படம் அருமை.  சலவைக்கற்களாலான கோவில்.  நன்றாய் இருக்கிறது.  படங்கள் எல்லாமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      இந்த ஊரில் வானம் மிக அழகாய் இருக்கும் நீலவானத்தில் வெண்மேகம் திட்டு திட்டாய் பார்க்க அழகாய் இருக்கும் வானத்தையும் மேகத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாலே மனசஞ்சலங்கள் அகலும்.

      //படங்கள் எல்லாமே அழகு.//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. எழுதியவர் சொந்தப் பெயர் முருகப்பெருமான் என்று இருக்குமோ.   பழுதுபட்ட வாகனங்களை எடுத்துச் செல்லும் வாகனமே பழுதுபட்டு நிற்கிறது..  ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன், இப்படியும் பெயர் வைக்கிறார்களே !என்று வியப்பாய் இருந்தது .

      //பழுதுபட்ட வாகனங்களை எடுத்துச் செல்லும் வாகனமே பழுதுபட்டு நிற்கிறது.. ஹா.. ஹா.. ஹா...//

      அதை அழகாய் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். இந்த ஊரில் நிறைய இரும்பில் அழகாய் பொம்மைகள் செய்து வைத்து இருக்கிறார்கள். தூரத்திலிருந்துப் பார்த்தால் நிஜமாக தெரியும். ஒரு பண்ணைவீட்டில் நிஜ குதிரைகளும், இரும்பில் செய்த குதிரைகளும் நின்றது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. கோயிலில் ஒன்று படம் எடுக்காதீர்கள் என்று போடவில்லை இருந்தாலும் தூரத்திலிருந்து அலைபேசியில் முடிந்தமட்டும் எடுத்தேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அழகான கோயில். இங்கே மேற்பார்வைகள் பார்க்கும் ஒரு அரிசோனன் என்னும் திரு மஹாதேவன் எங்கள் நண்பர். இன்னமும் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அடிக்கடி கோயில் பற்றிய செய்திகளையும் படங்களையும் அனுப்பி வைப்பார். உங்கள் படங்களும் அருமையாக இருக்கின்றன. அரசமரம் அழகோ அழகு! வெளிநாட்டில் இத்தனை உயிர்ப்புடன் இருக்கும் அரசமரம் ஓர் அதிசயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்
      அரிசோனன் அவர்களை மகனுக்கும் தெரியும்.
      எல்லா விழாக்களும் காணொளி மூலம் அந்த கோவிலில் நடக்கிறது.
      அரசமரத்தடி பிள்ளையாரை பார்த்தவுடன் மனது மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

      நீக்கு
  6. வெளிநாடுகளிலேயே முக்கியமாய் அம்பேரிக்காவிலே வானத்தைப் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பு வரும். அதன் முன்னர் நாம் எத்தனை சிறியவர் என்னும் எண்ணம் வரும். அதன் பிரம்மாண்டம் அசத்துவதோடு அதில் இறை தரிசனத்தையும் கண்கூடாகக் காண முடியும். மேகங்கள் சின்னச் சின்னத்துண்டுகளாய் வானம் முழுவதும் பரவிக்கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பார்க்கவே அழகாய்க் காட்சி அளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவில் வானம் அழகுதான். நாம் படம் வரையும் வெண்மேகம் வரைவோம் இல்லையா அது போல் இருக்கும். வானத்தைப்பற்றி உங்கள் கருத்து அருமை.

      வானம் படம் நிறைய எடுத்தது இருக்கிறது அதை ஒரு நாள் பதிவில் போட வேண்டும்.

      உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது? ஓய்வு எடுத்தீர்களா?
      உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. அழகான கோவில், படங்களும்...

    கொரோனா காலத்தை உணர்ந்துள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      ஆமாம், கொரோனா காலத்தை உணர்ந்தவர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  8. அழகான படங்கள். கோவில் பராமரிப்பு சிறப்பாக இருக்கிறது.

    வாகனம் படம் கண்ணைக் கவர்ந்தது. காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. திருக்கோயில் தரிசனம்.. அழகான படங்கள்... ஐங்கரன் திருவருள் அகிலத்தைக் காக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //ஐங்கரன் திருவருள் அகிலத்தைக் காக்கட்டும்..//

      ஆமாம், காக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அரிசோனா நாட்டிலே அரசமரத்தின் அடியிலே வீற்று இருக்கும் பிள்ளையார் வினைகள் எல்லாம் தீர்ப்பவர் படங்கள் தரிசனம் செய்ய மிக்க உதவியது அழகு பதிவு அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது உண்மை,அரசமரத்தில் வீற்று இருக்கும் பிள்ளையார் வினைகளை தீர்ப்பார்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. அழகான படங்கள் மிகவும் சுத்தமாக இருக்கிறது. இந்தியர்கள்தான் செல்கிறார்கள் ஆனால் இந்தியாவில் கோவிலுக்கு சென்றால் இவைகளை கடைபிடிப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      வெளி நாட்டில் போகும் இடங்களில் நம் மக்கள் சுத்தம் சுகாதாரத்தை கடைபிடிப்பது போல் இங்கும் கடைபிடித்தால் நல்லதுதான். அந்த நாள் வந்து கொண்டு இருக்கிறது. கொரோனா பாடம் கற்று கொடுத்து இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. கோவில் மிக அழகு. சன்னிதிகளும், பிராகாரமும் மிகவும் அழகாக இருக்கின்றன. பத்துபேர்கள்தான் சென்றிருந்தீர்கள் என்பதால் அமைதியாக இருந்திருக்கும்.

    சாதாரண காலத்தில் பிரசாதமா இல்லை மதிய உணவா (விலைக்கு?). ரொம்ப தூரத்தில் கோவில் இருப்பதால் வரும் பக்தர்களுக்காக ஏதேனும் ஏற்பாடு செய்திருப்பார்களே அதனால் கேட்டேன்.

    படங்கள் எடுக்கும்போது மாஸ்கை கழற்றாவிட்டால், ஆள் யாருன்னே தெரியாது. படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      கோவில் மிகவும் அழகு. அமைதியாக இருந்தது.
      அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு போய் கொண்டு இருந்தார்கள்.
      தினமும் மதியம் மட்டும் உணவு உண்டாம், தோசை, சாம்பார், கலவை சாதம் என்று இலவசமாகதான்.நியூஜெர்சியில் ஒரு கோயிலில் விலைக்கு வாங்கி சாப்பிட்டோம் பிரசாதங்களை.
      பேரன் தான் படத்தில் மாஸ்க் எடுக்கவில்லை. மாஸ்க் போட்டால் யார் என்று தெரிவது இல்லைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. மிக அருமையான படங்கள் மற்றும் பகிர்வு. கவனத்துடன் அத்தனை தெய்வங்களுக்கும் சன்னதி அமைத்திருக்கிறார்கள். காலியாகக் காட்சி தரும் அன்னதானக் கூடம்.. கொரானா உலகின் எல்லாப் பாகங்களையும் முடக்கி வைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

    //கவனத்துடன் அத்தனை தெய்வங்களுக்கும் சன்னதி அமைத்திருக்கிறார்கள்.//

    ஆமாம், வெகு தூரத்திலிருந்து இங்கு வரும் பக்தர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் பார்த்து வணங்க வசதியாக இருக்கிறது. அனைத்து விழாக்களும் நடக்கிறது.

    //காலியாகக் காட்சி தரும் அன்னதானக் கூடம்.. கொரானா உலகின் எல்லாப் பாகங்களையும் முடக்கி வைத்திருக்கிறது.//

    கொரானா முடக்கி வைத்து இருப்பது உண்மை.

    பெங்களூருவிலும் கொரானா பாதிப்பு மீண்டும் அதிகம் என்று செய்தி படித்தேன் கவலை அளிக்கிறது. கவனமாய் இருங்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அங்குள்ள மஹா கணபதி கோவில் மிகவும் நன்றாகவும், சுத்தமாகவும் உள்ளது. அதிலும் அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் கணபதி அவ்வளவு அழகாக உள்ளார். அடர்த்தியான நீல வானத்தில் பளீரென சுடர் விடும் கோபுர அழகு மனதை கொள்ளை கொள்கிறது. காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது. அரச இலைகள் அசையும் காட்சியை இன்னும் சிறிது நேரம் எடுத்திருக்கலாம்.

    இந்த கொரோனா காலத்தில், பக்தர்களுக்காக கோவிலுக்கு வரும் நேரத்தை குறிப்பிட்டு, அதற்குள் அத்தனை தெய்வங்களையும் பார்த்து, தரிசிக்க வைத்த கோவிலின் சிறப்பான நிர்வாகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

    ஒவ்வொரு தெய்வங்களையும் அங்கு அழகுற வைத்திருப்பது காண கண்கள் கோடி வேண்டும் போல் உள்ளது. ராமருக்கு எதிரில் கை கூப்பி நிற்கும் ஆஞ்சநேயரை நானும் கை கூப்பி தரிசனம் செய்து கொண்டேன். தெய்வ சிலைகள் ஒவ்வொன்றும் படு சுத்தமாக இருக்கின்றன. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விநாயக பெருமானை பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டேன். உங்கள் பதிவின் மூலம் நானும் இந்த அழகான கோவிலுக்கு வந்து தரிசித்த திருப்தியடைந்தேன். ஆனால், என் வருகைதான் சற்று தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்.

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன நன்றாக எடுத்துள்ள உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் மருமகள் செய்த நூடுல்ஸ் பார்க்கவே நன்றாக உள்ளது. தங்கள் பேரனும் உங்களுக்கு நன்றாக போஸ் தந்திருக்கிறார். அழகான கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது. அரச இலைகள் அசையும் காட்சியை இன்னும் சிறிது நேரம் எடுத்திருக்கலாம்./

      நீண்ட காணொளி இருக்கிறது அதை போடவில்லை. தனியாக காணொளி மட்டும் போடலாம்.

      //தரிசிக்க வைத்த கோவிலின் சிறப்பான நிர்வாகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.//

      ஆமாம் , நன்றி சொல்ல வேண்டும் தான்.

      //ஒவ்வொரு தெய்வங்களையும் அங்கு அழகுற வைத்திருப்பது காண கண்கள் கோடி வேண்டும் போல் உள்ளது.//

      ஆமாம், அழகாய் அலங்காரம் செய்து வைத்து இருப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.

      //மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விநாயக பெருமானை பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டேன்//

      நல்லது கமலா. எல்லோருக்கும் மனநிம்மதி, அமைதி, ஆரோக்கியம் தர நானும் வேண்டி வந்தேன்.
      பதிவில் அனைத்தையும் படித்து பார்த்து, ரசித்து விரிவான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி கமலா.



      நீக்கு
  16. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. ஸ்ரீ மகா கணபதி ஆலயம்....மிக சுத்தமாக , அமைதியான திருக்கோவில் ..பார்க்க பள பளப்பாக மின்னுகிறது ..


    தங்களின் தயவால் தூர தேசத்து பிள்ளையாரையும் காண முடிந்தது மா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      நேரம் கிடைக்கும் போது பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு