புதன், 4 அக்டோபர், 2023

கருட சேவை



அரிசோனாவில் உள்ள மகாகணபதி ஆலயத்தில் ஜூன் மாதம் 10 ம் தேதி 2023 ம் தேதி       ஸ்ரீனிவாச  கல்யாணம் நடந்தது. 
திருமணம் முடிந்தவுடன் கருடவாகனத்தில்  எழுந்தருளினார்.
  
திருமணத்தில் கலந்து கொண்டோம். அப்போது எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. புரட்டாசி மாத சிறப்பு பதிவாக.



மகாகணபதி 

நாங்கள் போன போது திருமணம் முடிந்து சுவாமி வீதி உலா சென்று விட்டார்கள்.

திருவாச்சிக்கு பின்னால் இருக்கும் திரைச்சிலையும் மகன் வடிவமைத்து கொடுத்தது.

கல்யாண கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள்

மகாகணபதி ஆலயம் 


யாகசாலையில் வைக்க மகன் செய்து கொடுத்தவை, பெரிய திருவடி, பெருமாள், தாயார், சிறிய திருவடி
கோவிலுக்கு போகும் முன் வீட்டில் எடுத்த படம்.


யாகசாலையில்  கடைசியில் வைக்கப்பட்டு இருக்கிறது, தெரிகிறதா?




இது போல நான்கு  திசைகளுக்கு இரண்டு இரண்டாக வைக்க எட்டு  துவாரபாலகர்கள் செய்து கொடுத்தான் மகன். 


கோவிலுக்கு போகும் முன் வீட்டில் எடுத்த் படம்.



வீதி உலாஅ முடிந்து  கோவிலை சுற்றி வலமாக  வருகிறார்கள்


கோவிலுக்கு முன்
என் அம்மா எப்போதும் "கருடபத்து" படிப்பார்கள்.
சிலர் புரட்டாசி சனிக்கிழமை படிப்பார்கள்.

//ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ்ச் சேரும் என்று ஆரம்பிக்கும்.//
நானும் சனிக்கிழமை படிக்க வேண்டும்.

முன்பு சிறு வயதில் பார்த்தக் காட்சி  நினைவுகளில். வியாழன்  ஆற்றின் கரையில், குளந்தங்கரையில் பெரியவர்கள் வியாழக்கிழமை தவம் இருப்பார்கள்  கருட தரிசனம் செய்ய.
 
கருட தரிசனம் செய்யும் பெரியவர்கள் சொல்லும் கருட மந்திரம்.

//கருடாழ்வார் மந்திரம்: 
அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்! ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்! விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்! ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

கருடாழ்வார் மந்திரத்தின் பொருள்: அமிர்த கலசத்தை கையில் ஏந்தி இருப்பவரே! எல்லா தேவ தேவியர்களால் துதிக்கப்படுபரே! தம் பெருமையை எவராலும் விவரிக்க முடியாதவரே!

பரந்து விரிந்த இவரின் இறக்கை வாயு, அண்டமெல்லாம் நடுநடுங்க செய்யும்! இவரை துதிப்பவர்களுக்கு நாகத்தின் விஷம் அகலும், விஷத்தால் ஏற்பட்ட நோய்களும் நீங்கும்! பட்சிகளுக்கு ராஜனாக விளங்கும் பட்சிராஜன் கருடாழ்வாரை என் சிந்தையில் நிறுத்தி வணங்குகிறேன் என்பது பொருளாகும்.//

இணையத்தில் எடுத்தேன். 

இப்போது உடல் பிணியிலிருந்து நீங்க நானும் படித்து வருகிறேன்.









சுவாமி கோவிலுக்குள் வரும் போது வாத்திய இசை

சீதை, ராமர் , இலக்குமணன்
எல்லா ஸ்வாமிகளுக்கும் அலங்காரம் அழகாய் செய்து இருந்தார்கள்.


இராமரின் எதிர் பக்கம் கைகூப்பிய நிலையில் அனுமன்
மகாலட்சுமி
துர்கை
பெருமாள்
வள்ளி, தெய்வானையுடன் முருகன்

நடராஜர், சிவகாமி



உற்சவர்கள்
காசி விசாலாட்சி


காசி விஸ்வநாதர்


சத்யநாராயணப் பெருமாள்

அரசமரத்து பிள்ளையார் , இருபக்கமும் நாகர்கள் இருக்கிறார்கள்.

அரசமரத்தின்  இலைகள் உதிர்ந்து துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது.

முன்பு போட்ட பதிவில் பச்சை பசேல் என்று இருந்த மரத்தையும் காற்றில் ஆடும் இலைகளின் சல சலப்பையும் மகன் எடுத்த காணொளி  போட்டு இருக்கிறேன்.

இசை கச்சேரிகள் நடந்தன

வீணை இசை

 

செவிக்கு உணவும், வயிற்றுக்கு உணவும் கிடைத்தது.

இறைவனின் பிரசாதம் உண்டு மகிழ்வாய் வீடு திரும்பினோம்.


பதிவு செய்ய நிறைய  இருக்கிறது, ஒவ்வொன்றாக பதிவு செய்யவேண்டும்.

புரட்டாசி மாதம் பெருமாள் பதிவு போட நினைத்து பெருமாள்  .அருளால் போட்டு விட்டேன்.


இந்த கோவில் தைபூசவிழா பதிவு படித்து இருப்பீர்கள். கோவிலைபற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு.  மேகப்பின்னணியில் கோவில் படம் வெகு அழகு.  சுற்றி வருகையில் மலைப் பின்னணியும் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் யாவும் சிறப்பு. //
      நன்றி ஸ்ரீராம்.

      //மேகப்பின்னணியில் கோவில் படம் வெகு அழகு. சுற்றி வருகையில் மலைப் பின்னணியும் அழகாய் இருக்கிறது.//

      ஆமாம் ,மலை சூழ்ந்த . இயற்கையான இடத்தில் கோவில் உள்ளது பார்க்க அழகு தான்.


      நீக்கு
  2. கோவில் விஷயங்களில் மகனின் ஈடுபாடு வியக்க வைக்கிறது.  பாராட்டுகள்.  கைவண்ணம், கலைத்திறமையும் மிக இருக்கிறது.  திருவாச்சி, திரைசீலை, பெரிய திருவடி, சிறிய திருவடி உருவங்கள், துவார பாலகர் ஓவியங்கள்..  என்ன உழைப்பு..  என்ன அர்ப்பணிப்பு...  வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில் விஷயங்களில் மகனின் ஈடுபாடு வியக்க வைக்கிறது. பாராட்டுகள். //

      மகனின் நண்பருக்கு தான் பாராட்டுகள் போய் சேர வேன்டும். மகனின் திறமையை பார்த்து கோவில் விழாக்களில் ஏதாவது செய்ய வைத்து அவனை கோவில் விழாக்களில் ஈடுபட செய்கிறார்.
      மகனுக்கும் நல்ல பொழுதுகளாக இருக்கிறது.
      மகனுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. உங்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி. ஓய்வெடுங்கள். மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி. ஓய்வெடுங்கள். மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.//

      ,மருத்துவரிடம் போய் மருந்துகள் எடுத்து கொள்கிறேன்.ஓய்வு எடுக்கிறேன், வலிகள் குறைந்து வருகிறது.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கருட சேவை படங்கள் மனதிற்கு உற்சாகம் தந்தன.

    மற்ற படங்களும் அழகு. இந்த மாதிரி சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் உங்கள் மகன் செயல் பாராட்டத்தக்கது. அவர் செய்த படங்கள் மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கருட சேவை படங்கள் மனதிற்கு உற்சாகம் தந்தன.//

      ஆமாம், கருடசேவை தரிசனம் மனதுக்கு உற்சாகம் தரும் தான்.
      எல்லா கோவில்களில் புரட்டாசி மாத விழாக்கள் நடக்கிறது.
      கருட சேவையும் இருக்கிறது. தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன், எந்த கோவிலுக்கும் சென்று பார்க்கவில்லை.

      //மற்ற படங்களும் அழகு.//
      நன்றி.

      //இந்த மாதிரி சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் உங்கள் மகன் செயல் பாராட்டத்தக்கது. அவர் செய்த படங்கள் மிக அருமை//

      மகனை பாராட்டியதற்கு நன்றி. மகனுக்கும் உற்சாகம் தரும் சேவை இது.

      நீக்கு
  5. உங்கள் உடல் நலமாகி வருவது மகிழ்ச்சி. எல்லாம் அவன் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் உடல் நலமாகி வருவது மகிழ்ச்சி. எல்லாம் அவன் செயல்.//

      தொடர்ந்து மருந்து எடுத்து கொள்ள வேண்டும். வலி தான் என்னை பாடாய் படுத்துகிறது, எதையும் சிந்திக்க , செயல்களில் ஈடுபட முடியவில்லை. வலிய உற்சாகத்தை வரவழைத்து கொண்டு காரியங்களை செய்து வருகிறேன்.
      எல்லாம் அவன் செயல்தான். அவன் என்ன நினைத்து இருக்கிறனோ அதுதான் நடக்கும்.

      நீக்கு
  6. மகனுடைய ஈடுபாடு, பெயரனுக்கும் வரும். அதுவே உங்கள் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகனுடைய ஈடுபாடு, பெயரனுக்கும் வரும். அதுவே உங்கள் மகிழ்ச்சி.//

      ஆமாம், மகனுக்கும் கைவேலைகளில் ஈடுபாடு உண்டு. மருமகளும் கைவேலைகள் சிறப்பாக செய்வாள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் யாவும் மகன் வரைந்தவையா? நன்றாக உள்ளன. புகைப்படங்களும் அழகாக எடுத்திருக்கிறீர்கள். பெயரனைத் தான் காணோம்.

    மகன் வீட்டில் நிரந்தர வாசம் செய்ய உள்ளீர்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் யாவும் மகன் வரைந்தவையா? நன்றாக உள்ளன. புகைப்படங்களும் அழகாக எடுத்திருக்கிறீர்கள். பெயரனைத் தான் காணோம்.//

      படங்களை பிரிண்ட் எடுத்து அதற்கு மரத்தில் பிரேம் செய்து படத்தை சுற்றி அலங்கார விளக்கு போட்டது மகன். பேரனை படம் எடுக்கவில்லை.


      மகன் வீட்டில் இல்லை. மதுரையில் இருக்கிறேன்.
      மகன் ஊரில் இருந்த போது விழாவில் கலந்து கொண்டது.
      மகனுடன் சுற்றிப்பார்த்த இடங்கள் பதிவை இங்கு வந்த பின் தான் போட்டு கொண்டு இருக்கிறேன். ஜூன் மாதம் 12ம் தேதி இங்கு வந்து விட்டேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. கோயில் பணிகளில்
    தங்களது மகனின் ஈடுபாடு என்பது வாழையடி வாழை.. மகிழ்ச்சி.. வாழ்த்துகள்.. 

    கை வண்ணமும், கலைத் திறமையும் வாழ்க வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தங்களது மகனின் ஈடுபாடு என்பது வாழையடி வாழை.. மகிழ்ச்சி.. வாழ்த்துகள்.. //

      நீங்கள் சொல்வது போல தாத்தா, அப்பா இருவரும் கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு செய்தார்கள். தாத்தா, அப்பா ஆசீர்வாதமும் இறைவனின் விருப்பமும் கோவிலுக்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பேரனும் நிறைய செய்து கொண்டு இருக்கிறான்
      மகனை வாழ்த்தியதற்கு நன்றி.
      .

      நீக்கு
  9. பதில்கள்
    1. கவின் நலமாக இருக்கிறான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. கோமதிக்கா, திருவாச்சிக்குப் பின்னால் உள்ள திரைச்சீலை, மகன் வடிவமைத்தது மகிழ்வான விஷயம்.

    //யாகசாலையில் வைக்க மகன் செய்து கொடுத்தவை, பெரிய திருவடி, பெருமாள், தாயார், சிறிய திருவடி
    கோவிலுக்கு போகும் முன் வீட்டில் எடுத்த படம்.//

    ஆஹா! என்ன அழகாக வடிவமைத்திருக்கிறார் உங்கள் மகன்! ரொம்பவே ஈடுபாடு. மகன் எப்போதும் மகிழ்வாக இருக்க அந்த மாபெரும் சக்தி உங்கள் எல்லோருடனும் எப்போதும் இருக்கும்.

    மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள், கோமதிக்கா. பார்த்து ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா, திருவாச்சிக்குப் பின்னால் உள்ள திரைச்சீலை, மகன் வடிவமைத்தது மகிழ்வான விஷயம்.//
      ஆமாம்.

      //ஆஹா! என்ன அழகாக வடிவமைத்திருக்கிறார் உங்கள் மகன்! ரொம்பவே ஈடுபாடு. மகன் எப்போதும் மகிழ்வாக இருக்க அந்த மாபெரும் சக்தி உங்கள் எல்லோருடனும் எப்போதும் இருக்கும்.//

      நன்றி கீதா.

      //மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள், கோமதிக்கா. பார்த்து ரசித்தேன்.//

      வாழ்த்துக்கள், பாராட்டுக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  12. யாகசாலையில் கடைசியில் வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

    துவாரபாலகர்கள செய்து கொடுத்ததும் மிக மகிழ்வான விஷயம். அழகாக இருக்கின்றன இதற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள், மகனுக்கு.

    இப்போது உடல் பிணியிலிருந்து நீங்க நானும் படித்து வருகிறேன்.//

    சரியாகிவிடுவீர்கள் கோமதிக்கா. இதுவும் கடந்து போகும்.

    காணொளியும் நன்றாக இருக்கிறது,

    அனுமன் அழகு. பார்த்து ரசித்தேன்.

    எல்லா கடவுளர் திரு உருவங்களும் அழகுதான்.

    இசையும், விருந்தும் (பிரசாதம்) ஆஹா. பிரசாதம் படங்கள் ஈர்க்கின்றன.

    எனக்கும் பதிவுகள் , அதுவும் நல்லவிஷயங்கள் உள்ள பதிவுகள், ஆனால் . ஆனால் அவற்றைப் போட ஏனோ தயக்காமாக இருப்பதால் இன்னும் தட்டிக் கொட்டாமல் இருக்கின்றன. ஜாலியா போகலாம்னு படங்களும் நிறைய இருக்கின்றன. எழுதுவதற்கு வலையில் ஒரு பாசிட்டிவ் ஸ்ட்ரோக் கிடைப்பதில்லை. தயக்கம் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் வலைப்பக்கம் வருவதும் சிரமமாகி வருகிறது. மனம் வேறு வேலைகளில் இருப்பதால் பதிவுகள் எழுதுவதிலும் சிரமம் இருக்கிறது.

    இரண்டு நாட்களாக எழுத நினைத்தும் முடியவில்லை.

    உங்கள் உடல் நலம் விரைவில் குணமாகி புத்துணர்வுடன் வந்துவிடுவீர்கள் கோமதிக்கா.

    படங்கள் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கின்றன. ரசித்துப்பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துவாரபாலகர்கள செய்து கொடுத்ததும் மிக மகிழ்வான விஷயம். அழகாக இருக்கின்றன இதற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள், மகனுக்கு.//

      நன்றி கீதா.

      //சரியாகிவிடுவீர்கள் கோமதிக்கா. இதுவும் கடந்து போகும்.//

      அப்படித்தான் நினைத்து நாட்களை கடத்தி வருகிறேன். 20 நிமிடம் நடப்பேன் இப்போது பத்து நிமிடத்திற்கு மேல் நடக்க முடியவில்லை.

      //உங்கள் உடல் நலம் விரைவில் குணமாகி புத்துணர்வுடன் வந்துவிடுவீர்கள் கோமதிக்கா.//

      வலி இல்லா நாள் வேண்டும் கீதா. உங்கள் வார்த்தை பலிக்கட்டும்.


      எனக்கும் பதிவுகள் , அதுவும் நல்லவிஷயங்கள் உள்ள பதிவுகள், ஆனால் . ஆனால் அவற்றைப் போட ஏனோ தயக்காமாக இருப்பதால் இன்னும் தட்டிக் கொட்டாமல் இருக்கின்றன..

      என்ன தயக்கம் பதிவிடுங்கள்.

      //ஜாலியா போகலாம்னு படங்களும் நிறைய இருக்கின்றன. //

      நேரம் கிடைக்கும் போது படங்களை வலையேற்றி வையுங்கள் ஒருநாள் பிறகு விஷ்யங்களை எழுதுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன். வெகு நேரம் அமர்ந்து எழுத முடிவது இல்லை.

      //எழுதுவதற்கு வலையில் ஒரு பாசிட்டிவ் ஸ்ட்ரோக் கிடைப்பதில்லை. தயக்கம் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் வலைப்பக்கம் வருவதும் சிரமமாகி வருகிறது.மனம் வேறு வேலைகளில் இருப்பதால் பதிவுகள் எழுதுவதிலும் சிரமம் இருக்கிறது//

      நீங்கள் எல்லாம் தயங்க்கினால் எப்படி?
      வலைப்பக்கம் நேரம் இருக்கும் போது வாருங்கள் வேறு வேலைகளும் முக்கியம் தான்.





      நீக்கு
  13. மகன் கோயில்கள் விஷயங்களில் ஈடுபாடுடன் இருப்பதற்குச் சிறந்த முன்னுதாரணங்கள் வீட்டில் இருக்கின்றனவே!!! அது எப்படி விடுபட்டுப் போகும்! மாமாவும் அவர்கள் அப்பாவைப் பற்றியும் நீங்கள் சொல்லியிருந்திருக்கீங்க எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். இனி கவினும் தன் அப்பாவைப் போல இப்போதே ஆர்வத்துடன் செய்வதால் அவரும் பின்னாளில் இப்படித்தான் இருப்பார் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் கோயில்கள் விஷயங்களில் ஈடுபாடுடன் இருப்பதற்குச் சிறந்த முன்னுதாரணங்கள் வீட்டில் இருக்கின்றனவே!!! அது எப்படி விடுபட்டுப் போகும்!//

      இறைவன் எப்போதும் இறைபணியில் நல்லபடியாக வைத்து இருக்க வேண்டும்.

      //இனி கவினும் தன் அப்பாவைப் போல இப்போதே ஆர்வத்துடன் செய்வதால் அவரும் பின்னாளில் இப்படித்தான் இருப்பார் வாழ்த்துகள்//

      மகனை, பேரனை வாழ்த்தியதற்கு நன்றி கீதா. அத்தனை பணிகளுக்கு இடையில் வந்து நிறைய பின்னூட்டங்கள் கொடுத்து விட்டீர்கள்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றிகள் கீதா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அற்புதமான படங்கள் அம்மா..//

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. எல்லா தெய்வங்களையும் பக்தியுடன் நமஸ்காரம் செய்து கொண்டேன். கோவிலுக்காக தங்கள் மகன் மற்றும் பேரன் செய்த கைங்கரியங்கள் பாரட்டுக்குரியது. நான் இந்தப் பதிவிலிருந்து இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட பதிவையும் சென்று பார்த்து கருத்துச் சொல்லப் போய் விட்டேன் மீண்டும் நாளை இந்தப்பதிவுக்கு வருகிறேன். தங்கள் உடல் இப்போது எப்படி உள்ளது. பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமா? பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. எல்லா தெய்வங்களையும் பக்தியுடன் நமஸ்காரம் செய்து கொண்டேன். //
      நன்றி, மகிழ்ச்சி.



      //கோவிலுக்காக தங்கள் மகன் மற்றும் பேரன் செய்த கைங்கரியங்கள் பாரட்டுக்குரியது.//

      பாராட்டுக்களுக்கு நன்றி.

      நான் இந்தப் பதிவிலிருந்து இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட பதிவையும் சென்று பார்த்து கருத்துச் சொல்லப் போய் விட்டேன் மீண்டும் நாளை இந்தப்பதிவுக்கு வருகிறேன்//

      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது வாங்க. குழந்தைகள் எல்லோரும் நலமா?


      .// தங்கள் உடல் இப்போது எப்படி உள்ளது. பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.//

      வலி இருக்கிறது, வலி இல்லா நாள் வருமா என்று இருக்கிறது. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி கமலா. உடம்பை கவனித்து கொள்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.




      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இப்போது குழந்தைகள் நலமாகி விட்டார்கள். இன்னும் சில சில உபத்திரவங்கள்தான் உள்ளன. தங்கள் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.

      உங்கள் கால்வலியும் பூரணமாக குணமடைய இறைவனை பிரார்த்திக்க கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

    3. இப்போது குழந்தைகள் நலமாகி விட்டார்கள். இன்னும் சில சில உபத்திரவங்கள்தான் உள்ளன.//
      சில உபத்திரங்களும் மறைந்து பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      //உங்கள் கால்வலியும் பூரணமாக குணமடைய இறைவனை பிரார்த்திக்க கொள்கிறேன். //

      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  16. படங்கள் வழியாக நானும் தரிசனம் செய்து கொண்டேன மகிழ்ச்சி.

    எல்லாமே சிறப்பாக இருக்கிறது. தங்களது மகனின் பங்கு அவரது குடும்பத்தினருக்கு நலமே விளைவிக்கும்.

    வாழ்க வளத்துடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //எல்லாமே சிறப்பாக இருக்கிறது. தங்களது மகனின் பங்கு அவரது குடும்பத்தினருக்கு நலமே விளைவிக்கும்.//

      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை கருட சேவை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கல்யாண கோலத்தில் பெருமாளை தரிசித்து கொண்டேன்.

    யாகசாலையில் வைக்க தங்கள் மகன் செய்து கொடுத்த, பெரிய திருவடி, பெருமாள், தாயார், சிறிய திருவடி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மற்றும் எட்டு துவாரபாலகர்கள் படங்கள், திருவாச்சிக்கு பின்புறமாக திரைச்சீலை அமைப்பு அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. தங்களது மகனின் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். அவர் கோவில் விஷேடங்களுக்கென செய்யும் திருப்பணிகள் அனைத்தும் அவரின் தெய்வீக இயல்பை பறைசாற்றுகின்றன. தங்களது பேரனும் அவ்வழியே தொடருகிறார். எல்லாமே தங்கள் கணவர், மற்றும் அவர் தந்தையார் என வழிவழியாக வருவதுதானே.!! நல்ல குடும்பம் என இதைத்தான் சொல்வது..... இவற்றை காணும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    மற்றைய கோவில் படங்களும், அதன் விபரங்களுமாக நீங்கள் நன்றாக தொகுத்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். உங்கள் தயவில் நீங்கள் சென்ற கோவில்களைப் பற்றி விபரமாக அறிய முடிகிறது. மிக்க நன்றி சகோதரி.

    செவிக்கு விருந்தும், வயிற்றுக்கு உணவும் தந்து உபசரித்த கோவிலின் நிர்வாகத்திறன் போற்றக் கூடியது. புரட்டாசி சனிக்கிழமையன்று இந்த கருடசேவை முழுப்பதிவையும் விபரமாக பார்த்து, படித்து விட்டேன். தங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

    நான் மறுநாளே வருவதாக கூறி, இன்றுதான் வர முடிந்தது. மன்னிக்கவும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை கருட சேவை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கல்யாண கோலத்தில் பெருமாளை தரிசித்து கொண்டேன்.//

      மீண்டும் வந்து பதிவை வாசித்து, தரிசனம் செய்தது அறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      //தங்களது மகனின் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். //

      மகன் செய்த அனைத்தையும் ரசித்துப்பார்த்து வாழ்த்துகள், பாராட்டுக்கள் தெரிவித்தமைக்கு நன்றி.

      //மற்றைய கோவில் படங்களும், அதன் விபரங்களுமாக நீங்கள் நன்றாக தொகுத்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். உங்கள் தயவில் நீங்கள் சென்ற கோவில்களைப் பற்றி விபரமாக அறிய முடிகிறது. மிக்க நன்றி சகோதரி.//

      சுவாமிகளுக்கு அவர்கள் செய்து இருக்கும் அலங்காரம் சுவாமியை நின்று நிதானமாக பார்க்க முடிவது பெரிய மகிழ்ச்சி. படம் எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை அதனால் எடுத்து பகிர்ந்து விட்டேன்.உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      //செவிக்கு விருந்தும், வயிற்றுக்கு உணவும் தந்து உபசரித்த கோவிலின் நிர்வாகத்திறன் போற்றக் கூடியது.//

      மகன் வீட்டுக்கு பக்கத்தில் இல்லை தூரமாய் இருக்கிறது அங்கு நடக்கும் விழாக்களுக்கு அடிக்கடி போக முடியாது. அதுதான் வருத்தம். குழந்தைகள் தங்கள் திறமைகளை காட்ட நல்ல வாய்ப்பு அளிக்கிறார்கள் அங்கு நடக்கும் விழாக்களில்.

      //நான் மறுநாளே வருவதாக கூறி, இன்றுதான் வர முடிந்தது. மன்னிக்கவும். நன்றி சகோதரி.//

      எப்போது வர முடியுமோ அப்போது வந்து படிக்கலாம் கமலா, மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.





      புரட்டாசி சனிக்கிழமையன்று இந்த கருடசேவை முழுப்பதிவையும் விபரமாக பார்த்து, படித்து விட்டேன். தங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

      நீக்கு
  18. விடாமல் எங்கே போனாலும் நம் கலாசாரத்தைப் பின்பற்றுவது பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே ஸ்ரீரங்கத்தில் ஒரே ஒரு முறை கருடசேவை பார்த்தேன். மதுரையில் இருந்தப்போ வடக்குக் கிருஷ்ணன் கோயில் வீதி வலத்தில் பார்த்திருக்கேன். எல்லாப் படங்களும் அருமை. உங்கள் மகனின் உழைப்பும், திறமையும் பிரமிக்கத் தக்கது. இறை அருளால் பூரணமாகப் பொலியட்டும்.இந்த வருஷம் மட்டும் இல்லை. கடந்த 2,3 வருடங்களாகவே நான் இந்தப் பதிவுகளெல்லாம் போடுவதில்லை. எல்லாமே கொரோனாவோடு போச்சு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //இங்கே ஸ்ரீரங்கத்தில் ஒரே ஒரு முறை கருடசேவை பார்த்தேன். மதுரையில் இருந்தப்போ வடக்குக் கிருஷ்ணன் கோயில் வீதி வலத்தில் பார்த்திருக்கேன்.//

      நானும் கிருஷ்ணர் கோவில் மற்றும் மதனகோபால சாமி கோவிலில் பார்த்து இருக்கிறேன்.
      மகனை வாழ்த்தியதற்கு நன்றி.

      //கடந்த 2,3 வருடங்களாகவே நான் இந்தப் பதிவுகளெல்லாம் போடுவதில்லை. எல்லாமே கொரோனாவோடு போச்சு! :(//

      உற்சாகத்தை வரவழைத்து கொண்டு மீண்டும் பழைய மாதிரி பதிவுகள் போடுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. கருட வாகனத்தில் சுவாமி அழகு.

    மகன் செய்து கொடுத்த படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //கருட வாகனத்தில் சுவாமி அழகு.//
      கருட வாகனம் ,சுவாமி அலங்காரம் அழகுதான்.

      //மகன் செய்து கொடுத்த படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது.//
      நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு