ஞாயிறு, 12 நவம்பர், 2023

இறைவனுக்கு நன்றி.

 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். நான் தீபாவளி வாழ்த்து சொல்ல தயார் செய்தபடம்.

 இறைவன் அருளால் இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக வெடிகள் வெடித்து புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக எங்கள் வளாகத்தில் கொண்டாடி விட்டார்கள்.நானும்  என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டாடி விட்டேன்.

உறவுகள், வலை உலக நட்புகள்,   மற்றும், திருவெண்காடு , மாயவரம் நட்புகள் வாழ்த்து அனுப்பினார்கள்., பேசினார்கள் அனைவருக்கும் நன்றிகள்.

அனைவரின் உரையாடல் பலத்தை தெம்பை கொடுக்கிறது. இறைவனுக்கு நன்றி. பண்டிகை நல்லபடியாக கடந்து போனது.

நேற்று எனக்கும் மருமகளுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை.

"எனக்கு இரவு உடம்பு சரியில்லை பழைய மாதிரி வேலைகள் செய்ய முடியவில்லை" . என்று பேரனிடம் சொன்ன போது பேரன் "அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை ஆச்சி அவர்களும் நிறை வேலைகள் செய்தார்கள் அதனால் என்றான்" அந்த புரிதல் மனதுக்கு இதமாக இருந்தது. அம்மாவுக்கு உதவியாக இரு என்று சொன்னேன் பேரனிடம் "ஓ! செய்வேனே!" என்றான்.


மகன் தமிழ் பள்ளிக்காக செய்த  தீபாவளி  வாழ்த்து பிரேம். இதில் தரை சக்கரம்  சுழல்வதை பார்க்கலாம்.

பேரன் சொந்தங்களுக்கும், நட்புகளுக்கும்  தயார் செய்த வாழ்த்து காணொளி. சின்ன காணொளிதான்.

அண்ணி வீட்டில் ஐப்பசி மாத காவேரி அம்மன் வழிபாடு. புதன் அன்று அனைவரையும் அழைத்தார்கள், போய் வந்தேன்.எனக்கு  இன்று மகன் அனுப்பி வைத்த வாழ்த்து  


நான் தேன்குழல், அதிரசம் செய்தேன் கொஞ்சம். மற்றவைகள்  பக்கத்து வீட்டு அன்பர்கள் கொடுத்தது. நான் வாங்கியது. .பாதுஷா, மிச்சர்  வாங்கியதையும்  நான் செய்ததையும் வைத்து கொடுத்தேன் அக்கம் பக்கம்.  சொந்தங்கள் கொடுத்தது வேறு இருக்கிறது.

பண்டிகை என்றால் பண்டம் ஈகைதானே!  நான் எப்படி சாப்பிடுவது அத்தனையும் பகிர்ந்து கொடுத்து கொண்டு இருக்கிறேன்.

மருமகள் செய்து இருக்கும் நெய் உருண்டை, காராபூந்தி, தேங்காய் பர்பி. துக்கடா செய்து இருக்கிறாள். 

வாசலில்  பூந்தொட்டி, விளக்கு , மத்தாப்பு வைத்து விட்டேன்.


மருமகள் அனுப்பி வைத்த விளக்கு இரு பக்க உறவுகளுக்கும் இரண்டு  விளக்குகள் வாங்கி அனுப்பி இருக்கிறார்கள்.

இன்று காலையில் கொஞ்சம் கேசரி, பலவித பஜ்ஜிகள் குடைமிளகாய், வாழைக்காய், உருளை, வெங்காயம்  கொஞ்சம் செய்து இறைவனுக்கு வைத்து சாமி கும்பிட்டாச்சு.

புடவை மகன் வாங்கி அனுப்பியது, அவர்கள் அப்பா எடுத்து கொடுப்பதாக நான் வாங்கியது இரண்டையும் பேரன், மகன் எடுத்து கொடுக்க காணொளியில் மகன்,  மருமகள், பேரன் மகள் குடும்பத்தோடு பூஜை செய்து தீபாவளியை கொண்டாடி விட்டேன்.

வளாக பிள்ளையாருக்கு நடக்கும் பூஜையை பார்த்து, அப்படியே வீட்டுக்கு அருகில் இருக்கும் ஐயனார் கோவிலுக்கு மெதுவாக நடந்து போய் வந்து விட்டேன்.

எல்லா சாமியும் புத்தாடை அணித்து  அழகாய்  காட்சி அளிக்கறார்கள்.

 

பூந்தொட்டி

பூ பூவாய் கொட்டும் வாணம்
தீபாவளி என்றால்  வெடி வேண்டும் அல்லவா பேரன்  வெடித்த புதுமாதிரி உலக வெடி காணொளி.

அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழக வளமுடன்!

-------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

 1. தீபாவளி படங்கள், தகவல்கள் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //தீபாவளி படங்கள், தகவல்கள் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

   அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.//

   உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி, நன்றி ஜி.

   நீக்கு
 2. தீபாவளியை சகல விதங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள்.  நமஸ்காரம்.  தீபாவளி வாழ்த்துகள். 

  செய்தவை, வாங்கியவை, நண்பர்கள் தந்தவை என அன்பு பரிமாற்றம் மனதை நெகிழ்த்துகிறது.  சக்கரம் சுற்றும் தீபாவளி பிரேம் அருமை.  காணொளிகள் பார்த்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   //தீபாவளியை சகல விதங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள். நமஸ்காரம். தீபாவளி வாழ்த்துகள். //

   இன்று நடந்தது இறைவன் அருள். நேற்று இரவு கொஞ்சம் உடம்பு சரியில்லை. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   //செய்தவை, வாங்கியவை, நண்பர்கள் தந்தவை என அன்பு பரிமாற்றம் மனதை நெகிழ்த்துகிறது.//

   எனக்கும் மனம் நெகிழ்ந்து விட்டது , அவர்கள் அன்பை நினைத்து.


   //சக்கரம் சுற்றும் தீபாவளி பிரேம் அருமை. காணொளிகள் பார்த்து ரசித்தேன்.//

   காணொளிகளை கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 3. உலகவெடி காணொளி கண்டேன்.  அங்கு குடியிருக்கும் இடங்களில் வைக்கக் கூடாது, தனியாக ஒரு இடம் ஊருக்கு வெளியே ஒதுக்கி அங்குதான் வானங்கள், வெடிகள் விடவேண்டும் என்பார்கள் என்று கேள்விப்பட்டேனே...

  உலகவெடி தலை கீழாக வைத்து விட்டாரோ பேரன்?  இருக்கும் இடத்தில  அதுவும் சுற்றி வந்து நின்று விட்டதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உலகவெடி காணொளி கண்டேன். அங்கு குடியிருக்கும் இடங்களில் வைக்கக் கூடாது, தனியாக ஒரு இடம் ஊருக்கு வெளியே ஒதுக்கி அங்குதான் வானங்கள், வெடிகள் விடவேண்டும் என்பார்கள் என்று கேள்விப்பட்டேனே...//

   இல்லை இங்கு வைக்க தடை இல்லை. பயங்கர சத்தம் கிடையாது மேலே போய் வெடிக்காது அதனால் வீட்டின் முன் வைத்து இருக்கிறான் என்று நினைக்கிறேன்.

   //உலகவெடி தலை கீழாக வைத்து விட்டாரோ பேரன்? இருக்கும் இடத்தில அதுவும் சுற்றி வந்து நின்று விட்டதே..//

   இரண்டு காணொளி அனுப்பி இருந்தான் இப்படி தான் இருக்கிறது, சரியாக இருப்பது போலதான் இருக்கிறது..

   நீக்கு
 4. வாசல் கோலம் அழகு.  மருமகள் கொடுத்து அனுப்பி இருக்கும் விளக்கு அழகு.  துக்கடா என்றால் என்ன?  பருப்பு தேங்காய் போலவா?  பர்பி வடிவாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாசல் கோலம் அழகு. மருமகள் கொடுத்து அனுப்பி இருக்கும் விளக்கு அழகு. துக்கடா என்றால் என்ன? பருப்பு தேங்காய் போலவா? பர்பி வடிவாக இருக்கிறது.//

   படம் நாளை அனுப்புவான் அதை உங்களுக்கு அனுப்புகிறேன்.
   மைதா மாவில் காரம் போட்டு சப்பாத்தி மாதிரி போட்டு டைமன் டைமனாக வெட்டி செய்வதுகார துக்கடா, அதிலேயே சீனி பாகுகில் போட்டு எடுத்து வைப்பது இனிப்பு துக்கடா.
   பர்பி நன்றாக இருந்தது என்று மருமகளிடம் சொகிறேன்.

   நீக்கு
 5. தீபாவளி வாழ்த்து உள்ள நீங்கள் தயார் செய்திருக்கும் படம் நன்றாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தீபாவளி வாழ்த்து உள்ள நீங்கள் தயார் செய்திருக்கும் படம் நன்றாய் இருக்கிறது//

   நன்றி ஸ்ரீராம். உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  மகன் அனுப்பிய வாழ்த்து மிகவும் பிடித்தது நிசமான கருத்தும் கூட.

  மருமகள் அனுப்பிய விளக்கும் அருமை.

  பேரனின் வெடி அருமையாக இருந்தது. எனது பேரனுக்கும் காட்டுவேன். ரசிப்பான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.//

   நன்றி மாதேவி.

   //மகன் அனுப்பிய வாழ்த்து மிகவும் பிடித்தது நிசமான கருத்தும் கூட.//
   ஆமாம். உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.

   //மருமகள் அனுப்பிய விளக்கும் அருமை.//
   நன்றி .


   //பேரனின் வெடி அருமையாக இருந்தது. எனது பேரனுக்கும் காட்டுவேன். ரசிப்பான்.//

   வெடி காணொளியை ரசித்து பேரனுக்கு காட்டுவேன் என்றது மகிழ்ச்சி .
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.


   நீக்கு
 7. தீபாவளி, பேரன் செய்தி (அம்மாவுக்கு உடம்பு சரியில்லை...ஓ உதவுவேனே) என்றெல்லாம் படித்துக்கொண்டு நெகிழ்ந்தேன்.

  இனிப்புப் பண்டங்களைப் பார்த்ததும் மகிழ்வுற்றேன்.

  அதிரசம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல அதிரசம் சாப்பிட்டு நாட்களாகிவிட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //தீபாவளி, பேரன் செய்தி (அம்மாவுக்கு உடம்பு சரியில்லை...ஓ உதவுவேனே) என்றெல்லாம் படித்துக்கொண்டு நெகிழ்ந்தேன்.//

   டிஷ் வாசர் கழுவிய பாத்திரங்களை அதன் அதன் இடத்தில் வைப்பான். வீட்டை ஒதுங்க வைத்து கொடுப்பான்.

   இனிப்புப் பண்டங்களைப் பார்த்ததும் மகிழ்வுற்றேன்.

   //அதிரசம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல அதிரசம் சாப்பிட்டு நாட்களாகிவிட்டன.//
   நன்றி.

   அதிரசம் இரண்டு படங்களில் உள்ளதும் நான் செய்ததுதான். தட்டைதான் மாற்றி இருக்கிறேன்.

   நீக்கு
 8. நான் சொன்ன அதிரசம் நான்கு படங்களைக் கோர்த்துப் போட்டிருக்கீங்களே அதில் உள்ளது.

  அதன் கீழே தேங்காய் பர்பியும் சூப்பராக வந்திருக்கிறது.

  நெய் உருண்டை என்பது பொடித்த ரவா லாடுவா? (நெய் நிறைய ஊற்றிப் பிடித்தது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நான் சொன்ன அதிரசம் நான்கு படங்களைக் கோர்த்துப் போட்டிருக்கீங்களே அதில் உள்ளது.//

   அதிரசம் இரண்டு படங்களில் உள்ளதும் நான் செய்ததுதான். தட்டைதான் மாற்றி இருக்கிறேன்.
   தேன் குழலும் அதிரசமும் நான் செய்தது என்று போட்டு இருக்கிறேன்.
   மற்றவை வாங்கியது , பக்கத்து வீட்டில் கொடுத்தது.

   //அதன் கீழே தேங்காய் பர்பியும் சூப்பராக வந்திருக்கிறது.//

   தேங்காய் பர்பி மருமகள் செய்தது. நன்றி.

   //நெய் உருண்டை என்பது பொடித்த ரவா லாடுவா? (நெய் நிறைய ஊற்றிப் பிடித்தது)..

   பாசிப்பருப்பு வறுத்து பொடி செய்து நெய் ஊற்றி பிடிப்பது, மகனுக்கும், பேரனுக்கும் பிடிக்கும்.


   நீக்கு
 9. நான்கு படங்கள் கோர்த்த படத்தில் பாக்கெட்டில் இருக்கும் பாதுஷாவும் கவர்கிறது.

  (இத்தனைக்கும் இன்று நான் நிறைய இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டேன்).

  வெடிப் படங்கள் அருமை. பொதுவாக கடை இனிப்புகள் எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. (ஒரே மாதிரி இருப்பதால்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நான்கு படங்கள் கோர்த்த படத்தில் பாக்கெட்டில் இருக்கும் பாதுஷாவும் கவர்கிறது.//

   கே. சுப்பண்ணா ஐயர் கேட்டரிங்க் சர்வீஸஸ் என்பவரிடம் வீட்டு க்கு கொண்டு வந்த நோட்டீஸ் பார்த்து ஆர்டர் செய்தேன். நேற்று மாலை கொண்டு வந்து தந்தார்கள்.ருசியாக நன்றாக இருக்கிறது. மிச்சரும் கலர் பயமுறுத்தியது ஆனால் காரம் இல்லை.

   இத்தனைக்கும் இன்று நான் நிறைய இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டேன்).
   என்ன இனிப்புகள் செய்தீர்கள்?

   //வெடிப் படங்கள் அருமை//
   நன்றி. மகன் அனுப்பிய படங்கள்.

   . பொதுவாக கடை இனிப்புகள் எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. (ஒரே மாதிரி இருப்பதால்).//

   ஆமாம். நானும் எடுத்து பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன். வருபவர்களுக்கு எது பிடித்து இருக்கோ எடுத்து சாப்பிட சொல்ல வேண்டும்.
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. மைதா கேக், ஒக்கோரை, நெல்லை அல்வா, முருக்கு, தீபாவளி மருந்து, வெல்லம் நெய் சேர்க்காக வீகன் லட்டு, அப்புறம் நான் வீட்டிற்கு வரும் மச்சினர் குடும்பத்திற்காக வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல் போன்றவை. அப்புறம் பக்கத்தில் இருக்கும் மச்சின்ன் வீட்டில் கடை சோன்பப்டி, மச்சினி வீட்டில் பாதுஷா, வடை, கேரட் அல்வா... இது தவிர மகள் எனக்கு பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்திருந்தாள்.

   நீக்கு
  3. மீண்டும் வந்து என்ன பலகாரங்கள் செய்தீர்கள் என்று சொன்னதற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
   தீபாவளி அன்று பிறந்த நாளா நட்சத்திரபடியா? தேதிபடியா?
   பலகாரங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
   நன்றி.

   நீக்கு
 10. பரிசாக வந்த விளக்குகள் அருமை. சிறுகக்கட்டிப் பெருக வாழ் என்பார்கள். அதைப் போல நீங்களும் சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் தீபாவளியைக் கொண்டாடி விட்டீர்கள். புடைவைகள் இரண்டுமே நன்றாய் உள்ளன. உங்கள் பேரனின் கைவேலை நேர்த்தியும் கற்பனைத் திறனும் வியக்க வைக்கிறது. மகன், மருமகள், பேரனுக்கு எங்கள் ஆசிகள். கோயிலுக்கும் விடாமல் போய் வந்துவிட்டீர்கள். எளிமையாக அதே சமயம் சிறப்பாகக் கொண்டாடிய தீபாவளி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //பரிசாக வந்த விளக்குகள் அருமை. சிறுகக்கட்டிப் பெருக வாழ் என்பார்கள். அதைப் போல நீங்களும் சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் தீபாவளியைக் கொண்டாடி விட்டீர்கள்.//
   முன்பு போல நிறைய செய்யவும் முடியவில்லை சாப்பிடவும் ஆள் இல்லை. நீங்கள் போன வருடம் சொன்ன மாதிரி எண்ணெய் சட்டி வைத்து கொஞ்சம் பலகாரம் செய்து விட்டேன் இந்த முறை.

   புதன் கிழமை அண்ணி வீட்டுக்கு போன போது தம்பி, தங்கைகள் எல்லோருக்கும் கடையில் இனிப்பு, காரம் வாங்கி கொடுத்து விட்டேன்., அவர்களும் வந்து தீபாவளிக்கு முன்பே பலகாரங்கள் கொடுத்து சென்று விட்டார்கள்.

   அக்கம் பக்கம் வீட்டினரும் முதல் நாள் இரவு கொடுத்து விட்டார்கள். தீபாவளிக்கு யாரும் வர மாட்டார்கள் அப்புறம் நிறைய செய்து என்ன செய்வது? வேலைக்கு வருபவரும் தீபாவளிக்கு வர மாட்டார்.

   புடைவைகள் இரண்டுமே நன்றாய் உள்ளன.//

   ஓ! மகிழ்ச்சி.

   //உங்கள் பேரனின் கைவேலை நேர்த்தியும் கற்பனைத் திறனும் வியக்க வைக்கிறது. மகன், மருமகள், பேரனுக்கு எங்கள் ஆசிகள். //

   உங்கள் ஆசிகளுக்கு மிகவும் நன்றி.

   //கோயிலுக்கும் விடாமல் போய் வந்துவிட்டீர்கள்.//
   தீபாவளி அன்று குடும்பத்தோடு கோவில் போய் வருவோம் . மாமியார் வீட்டில் கொண்டாடும் போது எல்லோரும் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகரை தரிசனம் செய்து விட்டுதான் உணவே.

   கால், முட்டி வலி இருந்தாலும் மெதுவாக போய் வந்து விட்டேன்.


   எளிமையாக அதே சமயம் சிறப்பாகக் கொண்டாடிய தீபாவளி.//

   பால்கனியிலிருந்து வானவேடிக்கைகள் பார்த்தேன் சிறிது நேரம் மாலை முதல் வெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. தீபாவளி வாழ்த்துகள் சகோதரி. இனிப்பு, உப்பு பண்டங்கள் படங்கள் எல்லாம் ஈர்க்கின்றன. எல்லோரும் மிக நன்றாகக் கொண்டாடியிருப்பது பார்த்து மகிழ்ச்சி. உங்கள் பேரன் தயாரித்த வாழ்த்து சக்கரம் சுற்றுவது வெடி வெடிப்பது எல்லா காணொளிகளும் அருமை.

  நீங்களும் வளாகத்துள் கோயிலுக்குச் சென்று வந்தது நல்ல விஷயம். உங்கள் உடல் நலம் இப்போது பரவாயில்லையா? விரைவில் சரியாகிட பிரார்த்தனைகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

   //தீபாவளி வாழ்த்துகள் சகோதரி. இனிப்பு, உப்பு பண்டங்கள் படங்கள் எல்லாம் ஈர்க்கின்றன. எல்லோரும் மிக நன்றாகக் கொண்டாடியிருப்பது பார்த்து மகிழ்ச்சி.//

   பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்க பண்டிகைகள் கொண்டாடி வருகிறேன்.


   //உங்கள் பேரன் தயாரித்த வாழ்த்து சக்கரம் சுற்றுவது வெடி வெடிப்பது எல்லா காணொளிகளும் அருமை.//

   அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

   நீக்கு
 12. கோமதிக்கா எப்படி இருக்கீங்க?

  பேரன் தயாரித்த வாழ்த்துக் காணொளி அருமை. பேரன் நின்று அதில் சக்கரம் சுற்றும் காணொளியும் நன்றாக இருக்கிறது. மருமகள் செய்த இனிப்புகள் பட்சணங்கள் எல்லாம் ஈர்க்கின்றன. நெய் உருண்டை - பாசிப்பருப்பு வறுத்து பொடித்து ஜீனி/வெல்லம் சேர்த்து நெய் சேர்த்துக் கலப்பது இல்லையா? ரொம்பப் பிடிக்கும் ஆனால் எனக்குத்தான் சாப்பிட முடியாதே...

  நீங்கள் வாங்கியவையும் எல்லாமே நல்லா இருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா எப்படி இருக்கீங்க?//

   நலமாக இருக்கிறேன் கீதா.

   //பேரன் தயாரித்த வாழ்த்துக் காணொளி அருமை. பேரன் நின்று அதில் சக்கரம் சுற்றும் காணொளியும் நன்றாக இருக்கிறது. மருமகள் செய்த இனிப்புகள் பட்சணங்கள் எல்லாம் ஈர்க்கின்றன. //

   நன்றி கீதா.

   //நெய் உருண்டை - பாசிப்பருப்பு வறுத்து பொடித்து ஜீனி/வெல்லம் சேர்த்து நெய் சேர்த்துக் கலப்பது இல்லையா? ரொம்பப் பிடிக்கும் ஆனால் எனக்குத்தான் சாப்பிட முடியாதே...//

   கொஞ்சம் சாப்பிடலாம் இல்லையா? அறவே சாப்பிடமாட்டீர்களா?

   //நீங்கள் வாங்கியவையும் எல்லாமே நல்லா இருக்கு.//

   தேன்குழல், அதிரசம், கேசரி நான் செய்தேன் கீதா. பாதுஷா, மிச்சர் மட்டும் வாங்கினேன்.

   நீக்கு
 13. எல்லா தெய்வங்களும் இருக்கும் படங்களை ரசித்தேன். வளாகத்துள் இருக்கும் பிள்ளையார், வெளியில் ஐயனார் எலலரையும் ஹாய் சொல்லிட்டு வந்திட்டீங்க எப்படியோ! இறைவனுக்கு நன்றி.

  பேரன் வெடித்த உலக வெடி புதியதாக இருக்கிறதே.

  அங்கு சில மாநிலங்களில் சத்தமில்லாமல் வீட்டில் வெடிக்கலாம் சில மாநிலங்களில் பொதுவான இடத்தில் என்று இல்லையா அக்கா?

  என்னை மிகவும் கவர்ந்தது வேதாத்ரி மகரிஷி சொன்ன விளக்கம் உங்கள் மகன் அதை உங்களுக்கு வாழ்த்தாக அனுப்பியது மிகவும் சிறப்பு. ரசித்துப் பார்த்தேன். இதுதான் டாப் பதிவில்!!! அந்த அழகான விளக்கம்.

  இனிய தீபாவளி வாழ்த்துகள் கோமதிக்கா.

  கீதா

  பதிலளிநீக்கு
 14. //எல்லா தெய்வங்களும் இருக்கும் படங்களை ரசித்தேன். வளாகத்துள் இருக்கும் பிள்ளையார், வெளியில் ஐயனார் எலலரையும் ஹாய் சொல்லிட்டு வந்திட்டீங்க எப்படியோ! இறைவனுக்கு நன்றி.//

  ஆமாம், தீபாவளிக்கு வந்து விட்டேன், "பலத்தை கொடு உன்னை வந்துப்பார்க்க" என்று விண்ணப்பம் வைத்து வந்தேன். உடல் சோர்வு இருந்தாலும் அவரை தரிசனம் செய்து வந்தது புத்துணர்ச்சியாக இருக்கிறது. அதுதான் இறைவனுக்கு நன்றி என்ற தலைப்பு

  .//அங்கு சில மாநிலங்களில் சத்தமில்லாமல் வீட்டில் வெடிக்கலாம் சில மாநிலங்களில் பொதுவான இடத்தில் என்று இல்லையா அக்கா?//

  ஆமாம் கீதா.

  //என்னை மிகவும் கவர்ந்தது வேதாத்ரி மகரிஷி சொன்ன விளக்கம் உங்கள் மகன் அதை உங்களுக்கு வாழ்த்தாக அனுப்பியது மிகவும் சிறப்பு. ரசித்துப் பார்த்தேன். இதுதான் டாப் பதிவில்!!! அந்த அழகான விளக்கம்.//


  வேதாத்திரி மகரிஷியின் கருத்து உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

  //இனிய தீபாவளி வாழ்த்துகள் கோமதிக்கா.//

  உங்களுக்கும் வாழ்த்துகள் கீதா. உங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு

 15. பதிவு சிறப்பாக உள்ளது. கட்டுரை, படம், காணொளி என்று கலந்து, குடும்ப அங்கத்தினர்கள் கொண்டாடிய விதத்தையும் சேர்த்து ஒரு சிறந்த தீபாவளி பதிவு என்று கூறலாம். பாராட்டுகள்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார், சந்திரசேகரன், வாழ்க வளமுடன்

   //பதிவு சிறப்பாக உள்ளது. கட்டுரை, படம், காணொளி என்று கலந்து, குடும்ப அங்கத்தினர்கள் கொண்டாடிய விதத்தையும் சேர்த்து ஒரு சிறந்த தீபாவளி பதிவு என்று கூறலாம். பாராட்டுகள்.//

   உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

   //தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்//

   உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 17. சிறப்பான பகிர்வு. தீப ஒளி திருநாள் சிறப்பாக சென்றதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //சிறப்பான பகிர்வு. தீப ஒளி திருநாள் சிறப்பாக சென்றதில் மகிழ்ச்சி.//

   நீங்கள் ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடியதில் மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொகுப்பு மிக அருமை. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தங்கள் கோலம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொகுப்பு மிக அருமை. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தங்கள் கோலம் அழகு.//

   கோலம் முன்பு மாதிரி போடமுடியவில்லை, இருந்தாலும் ஆசையால் போட்டு விட்டேன்.
   உங்கள் நல் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு