சனி, 4 நவம்பர், 2023

நவராத்திரி திருவிழா


அம்மன் சிவபூஜை செய்யும் காட்சி.

தீபாவளி வரப்போகிறது! இப்போது நவராத்திரி திருவிழா பதிவா? என்று நீங்கள் நினைப்பது  புரிகிறது.

 எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் நவராத்திரி கொலு படங்கள் மற்றும்  தெரிந்தவர்கள், உறவினர் கொலு படங்களை பதிவாக போட வலையேற்றி வைத்து இருந்தேன். அதனால்  இந்த பதிவு. வாங்க கொலு பார்க்கலாம்.


மீனாட்சி  சிறு வயதில் பாவாடை சட்டை அணிந்து சிவனை பூஜிப்பது போன்ற தோற்றத்தில்  அன்னை கொலுவீற்று இருக்கிறாள்.

பழைய பொம்மைகளை காணோம் எல்லாம் புதிதாக இருக்கிறது

கோவர்த்தன கிரிதாரி மனதை கவர்ந்தார்

21-10- 2023 அன்று போன போது ஸ்ரீ பேச்சியம்மன்  ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனாக காட்சி அளித்தார்.
கருப்பண்ணசாமியாக அலங்காரம்

22. 10. 2023 அன்று அலங்காரம்




போன வருடம் தினம் போய்  நவராத்திரி திருவிழா நிகழ்ச்சிகளையும் அலங்காரங்களையும் பகிர்ந்து இருந்தேன்,  (பத்து நாட்களும்) இந்த முறை இரண்டு நாட்கள்தான் போய் அம்மனை தரிசனம் செய்தேன், அம்மனை தரிசனம் செய்து விட்டு நிகழச்சிகளுக்கு இருக்கவில்லை, வந்து விட்டேன். வெகு நேரம் நிற்கவோ, அமர்ந்து இருப்பதோ கஷ்டமாக இருப்பதால்  தொடர்ந்து கோவிலுக்கு போகவில்லை.

பேச்சியம்மனுக்கு ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்

என் தாய் மாமா பெண் வீட்டு கொலு


தினம் படம் அனுப்புவாள். ஒரு நாள் போய் பார்த்து வந்தேன்.


மாமா பெண் வீட்டு கொலுதான்


எங்கள் குடியிருப்பில் மேல் மாடி இருப்பவர்கள் புதிதாக வந்து இருக்கிறார்கள் அவர்கள் வீட்டுக் கொலு
மதுரை கள்ளழகர் பவனி வரும் காட்சி

அவர்கள் எதிர்வீட்டிலும் கொலு வைத்து இருந்தார்கள், அவர்கள் இவர்கள் வீட்டு கொலு பார்த்து கொண்டு இருக்கும் போது  அழைத்தார்கள், அங்கு போனேன். சின்னதாக அழகாய் வைத்து இருந்தார்கள், ஆனால் அவர்கள் வீட்டு கொலுவை  போட்டோ எடுக்க மறந்து விட்டேன். மனதில் ஒரு வீடு போக வேண்டும் அவர்கள் வீட்டு கொலுவை படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து போனதால் போலும்.

நாளையும் வாங்க கொலு பார்க்க  அரிசோனாவில் மகன் நண்பர்கள் வீட்டு கொலு பார்க்கலாம். நன்றாக வைத்து இருக்கிறார்கள். கண்டிப்பாய் வாங்க!

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. கொலு படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //கொலு படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது./
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அழகான படங்கள்..
    சிறப்பான செய்திகள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள்..
      சிறப்பான செய்திகள்..

      வாழ்க நலம்..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. // வெகு நேரம் நிற்கவோ, அமர்ந்து இருப்பதோ கஷ்டமாக இருப்பதால் //

    எனக்கும் இப்படித்தான் இருக்கின்றது - ஓராண்டுக்கும் மேலாக..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கும் இப்படித்தான் இருக்கின்றது - ஓராண்டுக்கும் மேலாக..//

      உடம்பை பார்த்து கொள்ளுங்கள். விரைவில் நலபெற பிரார்த்தனைகள்.

      வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

      நீக்கு
  4. படங்கள் சிறப்பு
    நேரில் காணும் உணர்வு
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      //படங்கள் சிறப்பு
      நேரில் காணும் உணர்வு
      நன்றி சகோதரி//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் அட்டகாசம், கோமதிக்கா. கொலு பொம்மைகள் எல்லாமே

    இப்ப படங்களைப் பார்த்துவிட்டேன் மீதி நாளை வருகிறேன், கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் அட்டகாசம், கோமதிக்கா. கொலு பொம்மைகள் எல்லாமே


      இப்ப படங்களைப் பார்த்துவிட்டேன் மீதி நாளை வருகிறேன், கோமதிக்கா//

      வாங்க வாங்க கீதா ,நான் மதியம் அல்லது மாலைதான் பதிவு போடுவேன்.

      கொலு பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. நவராத்திரி கொலு படங்கள் மிக அழகு.

    பழைய பொம்மைகள் எங்கே போயிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //நவராத்திரி கொலு படங்கள் மிக அழகு.//
      நன்றி.

      //பழைய பொம்மைகள் எங்கே போயிருக்கும்?//

      அது தெரியவில்லை கொலு பெட்டியில் இருக்கலாம்.
      நானும் புதிதாக வண்ணம் தீட்டி இருப்பார்கள் போல என்று நினைத்தேன், ஆனால் இல்லை. எல்லாம் புதுசு.

      நீக்கு
  7. ரொம்ப நேரம் நின்றுகொண்டிருப்பது வெரிகோஸ் பிரச்சனை வரக் காரணமாகிவிடும் எனப் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரொம்ப நேரம் நின்றுகொண்டிருப்பது வெரிகோஸ் பிரச்சனை வரக் காரணமாகிவிடும் எனப் படித்திருக்கிறேன்.//

      ஆமாம், நானும் படித்து இருக்கிறேன். வெகு நேரம் நிற்பது இல்லை, வெகு நேரம் ஒரு இடத்தில் அமருவது இல்லை. சிறிது நேரம் நடப்பேன், சிறிது நேரம் பால்கனியில் பறவைகளை , மழையை வேடிக்கை பார்ப்பேன்.

      நின்றும், இருந்தும், கிடந்தும் , நடந்தும் உன்னை துதிப்பேனே என்று அபிராமி பட்டர் சொன்னது போல தான் இப்போது முடிகிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  8. இரவில் எடுத்த படங்களாயினும் கோவில் விளக்கொளியில் படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்,வாழ்க வளமுடன்

      //இரவில் எடுத்த படங்களாயினும் கோவில் விளக்கொளியில் படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன.//

      நன்றி.

      நீக்கு
  9. கோவர்தன கிரிதாரிக்கு எதிரே இரண்டு செல்லங்கள் எங்கே அவர் மலையை கீழே போட்டு விடுவாரோ என்று பயத்துடன் தள்ளி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவர்தன கிரிதாரிக்கு எதிரே இரண்டு செல்லங்கள் எங்கே அவர் மலையை கீழே போட்டு விடுவாரோ என்று பயத்துடன் தள்ளி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன!//

      கோவர்த்தன கிரிதாரிக்கு எதிரே இருப்பது செல்லங்கள் இல்லை ஸ்ரீராம். குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், ஆநிரைகள் காத்தவன் அல்லவா? பசுவும் கன்றும் எதிரில் இருக்கிறது. மலைக்கு கீழே மக்களும், ஆடு , மாடுகளும் அனைத்து ஜீவராசிகளும் நின்றன அல்லவா! அதை காட்டுவது போல சிற்பம் செய்து இருக்கிறார்கள்.
      உங்கள் கற்பனையும் நன்றாக இருக்கிறது. உங்கள் மனதில் செல்லங்களின் நினைவு அதனால் அப்படி காட்சி அளித்து இருக்கிறது.

      நீக்கு
  10. கொலுப்படங்கள் அழகாய் இருக்கின்றன.  எந்த கற்பனையும், புதுமையும் இல்லாமல் வைத்ததையே வைத்துக் கொண்டிருக்காமல் அவரவர் கற்பனை வளம் தெரிய வகை வகையாய் வித்தியாசம் காட்டி வைப்பது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொலுப்படங்கள் அழகாய் இருக்கின்றன. எந்த கற்பனையும், புதுமையும் இல்லாமல் வைத்ததையே வைத்துக் கொண்டிருக்காமல் அவரவர் கற்பனை வளம் தெரிய வகை வகையாய் வித்தியாசம் காட்டி வைப்பது அழகு.//

      அப்படித்தான் திருவெண்காடு கோவில் கொலு இருக்கும். தினம் கொலு காட்சிகள் மாறும். 10 நாளும் மிக அருமையாக இருக்கும். இப்போது எல்லா கோவில்களிலும் அப்படி வைக்கிறார்கள். 10 நாளும் அது அப்படியே இருக்கும். ஆனால் திருவெண்காடு கோவில் போல கிடையாது, அந்த காலத்தில் காமிரா இருந்து இருந்தால் அதை படம் எடுத்து காட்சி படுத்தி இருப்பேன். ஒரு நாள் ஏழு கதவு திறந்து ஏழுமலையான் தெரிவார். ஒரு நாள் பாற்கடல் . ஒரு நாள் கைலை காட்சி என்று கதையும் காட்சி அமைப்பும் அற்புதமாக இருக்கும்.

      அரிசோனா கொலு படங்கள் இன்று பதிவு போட நினைத்து இருக்கிறேன். வித்தியாசமாக தங்கள் கற்பனை வளத்தை காட்டி வகை வகையாக வைத்து இருக்கிறார்கள். வாங்க அரிசோனா கொலுவுக்கு. உங்களுக்கு பிடிக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கொலு பொம்மை படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. கோவிலில் அம்மனை விதவிதமாக அலங்கரித்திருப்பதும் கண்களுக்கும், மனதிற்கும் விருந்தாக உள்ளது.

    அன்னை மீனாட்சி சிறு வயது பெண்ணாக, கருப்பண்ணன் சுவாமியாக, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனாக, ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினியாக, பேச்சியம்மனை விதவித அலங்காரம் செய்துள்ளார்கள். மிகுந்த கலை ரசனையுடன் கூடிய அலங்காரம். எல்லா அலங்காரங்களையும் , கொலு பொம்மைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.

    ஆமாம்.. நீங்கள் சென்ற வருடம் அந்த அருகிலுள்ள கோவிலின் தரிசனங்களையும் , அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளையும் தினமும் பகிர்ந்தது நினைவிருக்கிறது. இந்த வருடம் உங்கள் கால் வலி தொந்தரவுகளில், நீங்கள் அதிகம் வெளியில் செல்ல முடியவில்லை என்பது வேதனையாகத்தான் உள்ளது. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. .

    மாமா பெண் வீட்டு கொலு, மற்றும், மேல் வீட்டில் வைத்திருக்கும் கொலு இரண்டுமே மிக அழகாக இருக்கிறது. படங்களை ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்த்து ரசித்தேன்.

    மதுரை கள்ளழகர் கொலு வரிசை மனதை கவர்ந்தது. அதுபோல் சொம்பிலிருந்து கொட்டி புறப்பட்டு வரும் பூக்களை அலங்காரம் செய்த முறையும் மனதை கவர்கிறது. இதற்கெல்லாம் மிகுந்த பொறுமையும், கலை ரசனையும் வேண்டும். இரு வீட்டார்களுக்கும் வாழ்த்துகள். எனக்கும் இப்படி விதவிதமாக கொலு பொம்மைகளை காண எப்போதுமே பிடிக்கும். அடுத்தப் பதிவையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமை.//
      நன்றி.

      //கொலு பொம்மை படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. கோவிலில் அம்மனை விதவிதமாக அலங்கரித்திருப்பதும் கண்களுக்கும், மனதிற்கும் விருந்தாக உள்ளது.//

      ஆமாம்.

      //அன்னை மீனாட்சி சிறு வயது பெண்ணாக, கருப்பண்ணன் சுவாமியாக, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனாக, ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினியாக, பேச்சியம்மனை விதவித அலங்காரம் செய்துள்ளார்கள். மிகுந்த கலை ரசனையுடன் கூடிய அலங்காரம்.//

      ஆமாம். ஒவ்வொரு வருடமும் பூசாரிகள் மாறுவார்கள். ஒவ்வொரு வருட விழாக்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அவர் அவர் ரசனையுடன் செய்கிறார்கள்.

      //எல்லா அலங்காரங்களையும் , கொலு பொம்மைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.//

      அதுதான் பகிர்ந்தேன் கமலா.

      //நீங்கள் சென்ற வருடம் அந்த அருகிலுள்ள கோவிலின் தரிசனங்களையும் , அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளையும் தினமும் பகிர்ந்தது நினைவிருக்கிறது.//

      நினைவில் இருப்பது மகிழ்ச்சி.

      //இந்த வருடம் உங்கள் கால் வலி தொந்தரவுகளில், நீங்கள் அதிகம் வெளியில் செல்ல முடியவில்லை என்பது வேதனையாகத்தான் உள்ளது. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. .//

      வீட்டிலிருந்து பக்கம் என்றாலும் வீட்டிலிருந்து போகும் பாதை சரியில்லை தரை மேடு பள்ளமாக இருக்கிறது. மழை வேறு பெய்து சேறும் சகதியுமாக இருக்கிறது. கால்வலியோடு பாதையை பார்த்து போவது கடினாமக இருந்தது. கிடைத்தவரை போதும் என்ற மனமும் வந்து விட்டது. உடம்பை பார்த்து கொள்கிறேன், நன்றி.

      //மாமா பெண் வீட்டு கொலு, மற்றும், மேல் வீட்டில் வைத்திருக்கும் கொலு இரண்டுமே மிக அழகாக இருக்கிறது. படங்களை ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்த்து ரசித்தேன்.//

      நன்றி.

      //மதுரை கள்ளழகர் கொலு வரிசை மனதை கவர்ந்தது. அதுபோல் சொம்பிலிருந்து கொட்டி புறப்பட்டு வரும் பூக்களை அலங்காரம் செய்த முறையும் மனதை கவர்கிறது. இதற்கெல்லாம் மிகுந்த பொறுமையும், கலை ரசனையும் வேண்டும். //

      ஆமாம். மருமகள் நவராத்திரி கொலுவுக்கு முந்தின நாள் மருதாணி விழா வைத்தாள். ஒரு மருதாணி போடும் பெண்ணை வீட்டுக்கு அழைத்து மருகளின் தோழிகள் மருதாணி இட்டு கொண்டார்கள். அதற்கு செப்பு குடத்திலிருந்து இப்படி மலர்கள் கொட்டுவது போன்ற அமைப்பு வைத்து இருந்தாள். அதை இன்னொரு பதிவில் போடுகிறேன்.
      மாமா பெண் பொங்கல் வைக்கும் வெண்காலபானையிலிருந்து பூக்கள் கொட்டுவது போல அமைத்து இருந்தாள்.
      உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன் .

      //எனக்கும் இப்படி விதவிதமாக கொலு பொம்மைகளை காண எப்போதுமே பிடிக்கும். அடுத்தப் பதிவையும் காண ஆவலாக உள்ளேன். //

      வாங்க வாங்க உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால் தான் மருமகள், பேரன் அனுப்பிய படங்களை பதிவு செய்ய போகிறேன்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.





      .

      நீக்கு
  12. கோமதிக்கா படங்கள் எல்லாம் ராத்திரி எடுத்த படங்கள் இல்லையா? ஆனால் விளக்கொளியில் மிக நன்றாகத் தெளிவாக வந்திருக்கின்றன. என் படங்கள் இப்படி வருவதில்லை இரவு எடுத்தால்...நீங்கள் மலேசியாவில் முருகன் குகை கோயிலில் கொஞ்சம் இருட்டான பகுதிகளில் எடுத்தவையும் மிக நன்றாக வந்திருந்தன.

    அட! அம்மனுக்குப் பாவாடை சட்டை அழகா இருக்கே புதுசா இருக்கே என்று நினைத்தேன் அப்புறம் உங்கள் கருத்து பார்த்து காரணம் புரிந்துகொண்டேன் சிறு வயதில் இறைவனை பூஜித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோமதிக்கா படங்கள் எல்லாம் ராத்திரி எடுத்த படங்கள் இல்லையா? ஆனால் விளக்கொளியில் மிக நன்றாகத் தெளிவாக வந்திருக்கின்றன.//
      என் அலைபேசியில் எடுத்த படங்கள்தான் கீதா.

      //...நீங்கள் மலேசியாவில் முருகன் குகை கோயிலில் கொஞ்சம் இருட்டான பகுதிகளில் எடுத்தவையும் மிக நன்றாக வந்திருந்தன.//

      நன்றி.

      //அட! அம்மனுக்குப் பாவாடை சட்டை அழகா இருக்கே புதுசா இருக்கே என்று நினைத்தேன் அப்புறம் உங்கள் கருத்து பார்த்து காரணம் புரிந்துகொண்டேன் சிறு வயதில் இறைவனை பூஜித்தது.//

      சிறு வயது முதலே சிவபெருமானை அன்னை வழிபட்டதாக புராணவரலாறு இல்லை. மீனாட்சி திக் விஜயம் செய்தபோது முதன் முதலில் சிவனை பார்க்கிறாள். நான் இந்த ஆடை அலங்காரத்தைப்பார்த்து அப்படி சொன்னேன் கீதா.
      சீர்காழி பாடலும் நினைவுக்கு வந்தது (சின்ன சிறு பெண்போல சிற்றாடை இடை உடுத்தி என்ற பாடல்)

      நீக்கு
    2. கோமதிக்கா படங்கள் எல்லாம் ராத்திரி எடுத்த படங்கள் இல்லையா? ஆனால் விளக்கொளியில் மிக நன்றாகத் தெளிவாக வந்திருக்கின்றன. //
      ராத்திரி எடுத்த படங்கள் தான்.

      //நீங்கள் மலேசியாவில் முருகன் குகை கோயிலில் கொஞ்சம் இருட்டான பகுதிகளில் எடுத்தவையும் மிக நன்றாக வந்திருந்தன.//

      நன்றி கீதா.

      //அட! அம்மனுக்குப் பாவாடை சட்டை அழகா இருக்கே புதுசா இருக்கே என்று நினைத்தேன் அப்புறம் உங்கள் கருத்து பார்த்து காரணம் புரிந்துகொண்டேன் சிறு வயதில் இறைவனை பூஜித்தது.//

      கீதா புராணவரலாறு ஏதும் இல்லை அவர் சிறு வயதில் சிவபெருமானை பூஜித்தார் என்று. எனக்கு சீர்காழி கோவிந்தராஜன் பாடல் நினைவுக்கு வந்தது. (சின்னச்சிறு பெண் போல சிற்றாடை உடை உடுத்தி சிவகங்கை குளக்கரையில் )

      சின்னசிறு பெண் பூஜிப்பது போல ஆடை உடுத்தி இருக்கிறார்.

      மூன்று வயது சிறுமியாகதான் யாககுண்டத்திலிருந்து வந்தார் அன்னை. அதை நினைத்து இருப்பார் குருக்கள்.




      நீக்கு
  13. அம்மனும் கொலு கூடாரம் போன்று அமைத்து அலங்கரித்து வைத்திக்கும் படமும் வண்ண மயம்! ரொம்பச் சிறப்பாக இருக்கிறது.

    ஆமாம் கோவர்த்தனகிரி பொம்மை ஈர்க்கிறது.

    பேச்சியம்மன் - சமயபுர அம்மனாகக் காட்சி - கோமதிக்கா எப்படி இப்படி இந்த அம்மனாக என்றெல்லாம் அலங்காரம் பார்த்துச் சொல்கின்றீர்கள்! எனக்கு இது வியப்பான ஆனால் மனதில் பதியாத ஒன்று! அம்மன், சக்தி என்று அப்படியே மனமார நினைத்துப் பிரார்த்திவருவேன் மற்றபடி இந்த அலங்காரம் பார்த்து எந்த அம்மன் என்று சொல்லத் தெரிவதில்லை. உங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் கோமதிக்கா.

    மீனாட்சி அம்மனுக்குக் கிளி, காசி அன்னபூரணி கையில் அன்னக்கரண்டி இருக்கும் துர்கை சிங்கம் மீது இருப்பார் என்பது காளி என்றால் சூலம்....வெள்ளைத் தாமரை - சரஸ்வதி - பிங்க் சிவப்பு தாமரை என்றால் லக்ஷ்மி இவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மனும் கொலு கூடாரம் போன்று அமைத்து அலங்கரித்து வைத்திக்கும் படமும் வண்ண மயம்! ரொம்பச் சிறப்பாக இருக்கிறது.//

      ஆமாம். நன்றாக செய்து இருக்கிறார்கள்.

      ஆமாம் கோவர்த்தனகிரி பொம்மை ஈர்க்கிறது.//

      உங்களையும் ஈர்த்து விட்டதா? மகிழ்ச்சி.

      //பேச்சியம்மன் - சமயபுர அம்மனாகக் காட்சி - கோமதிக்கா எப்படி இப்படி இந்த அம்மனாக என்றெல்லாம் அலங்காரம் பார்த்துச் சொல்கின்றீர்கள்! எனக்கு இது வியப்பான ஆனால் மனதில் பதியாத ஒன்று! அம்மன், சக்தி என்று அப்படியே மனமார நினைத்துப் பிரார்த்திவருவேன் மற்றபடி இந்த அலங்காரம் பார்த்து எந்த அம்மன் என்று சொல்லத் தெரிவதில்லை. உங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் கோமதிக்கா.//

      கோவிலில் பேச்சியம்மானக இருக்கிறார். அவரை நவராத்திரிக்க்கு வெவ்வேறு தோற்றத்தில் அலங்காரம் செய்கிறார்கள். சமயபுரமாரியம்மனை எளிதாக கண்டு பிடிக்கலாம் கீதா.

      அன்று என்ன அலங்காரம் என்றும் தெரியதவர்கள் தெரிந்து கொள்ள எழுதி வைத்து இருப்பார்கள் கீதா.
      உங்கள் பாராட்டுக்கு , வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  14. ஆமாம் அக்கா தொடர்ந்து நிற்பதும் சரி உட்கார்ந்து இருப்பதும் கடினம்தான். எப்படியோ தரிசனம் செய்தீங்களே கோமதிக்கா. சக்தி பாத்துப்பாங்க உங்களை.

    மகிஷாசுரமர்த்தினி அடையாளம் தெரிகிறது.

    உங்கள் தாய்மாமா வீட்டுப் பெண் கொலு சிம்பிளா அழகா இருக்கிறது.

    தட்டு சுற்றி லிங்கமா அக்கா?

    அடுத்து கோயில், பூ அலங்காரம் செமையா இருக்கு

    மேல் மாடி வீட்டுக் கொலுவில் மதுரை கள்ளழகர் பவனி செட் அட்டகாசமாக இருக்கு. அழகாக இருக்கிறது. இதுவும் கவர்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா தொடர்ந்து நிற்பதும் சரி உட்கார்ந்து இருப்பதும் கடினம்தான். எப்படியோ தரிசனம் செய்தீங்களே கோமதிக்கா. சக்தி பாத்துப்பாங்க உங்களை.//

      நீங்கள் சொல்வது போல சக்தி பாத்துப்பாங்க என்று தான் போய் வந்தேன் இரண்டு நாள்.

      //மகிஷாசுரமர்த்தினி அடையாளம் தெரிகிறது.//

      இந்த தடவை மகிஷன் தலை வைக்கவில்லை.
      மகிஷியாக வைத்து விட்டார்கள்.


      //உங்கள் தாய்மாமா வீட்டுப் பெண் கொலு சிம்பிளா அழகா இருக்கிறது.

      தட்டு சுற்றி லிங்கமா அக்கா?//

      லிங்கம் இல்லை. மெழுவர்த்தி போல இருக்கும் விளக்கு கீதா
      நான் போனது பகல் நேரத்தில் .அதனால் அதை ஒளிர செய்யவில்லை. இன்னொரு படம் படிகளில் விளக்கு தெரிகிறது அல்லவா அது இந்த விளக்குகள்தான்.

      //அடுத்து கோயில், பூ அலங்காரம் செமையா இருக்கு//

      நன்றி.

      //மேல் மாடி வீட்டுக் கொலுவில் மதுரை கள்ளழகர் பவனி செட் அட்டகாசமாக இருக்கு. அழகாக இருக்கிறது. இதுவும் கவர்கிறது.//

      மதுரையில் கள்ளழகர் திருவிழா சிறப்பு அல்லவா! அதுதான் அவர்கள் வீட்டில் இடம்பெற்ற புது செட்.


      நீக்கு
  15. இப்ப கள்ளழகர் செட் போன்று, முன்னால் முதன் முதலில் காதியில் இறங்கியது இறைவன் வீதி உலா வரும் செட். இதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் கருத்து பெரிதானது எனவே எங்கள் தளத்தில் சொல்கிறேன் பதிவில்.

    அரிசோனா கொலுவுக்கு வந்துவிடுகிறேன் கோமதிக்கா. சுண்டல் கிடைக்குமா!!!

    எல்லாமே ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்ப கள்ளழகர் செட் போன்று, முன்னால் முதன் முதலில் காதியில் இறங்கியது இறைவன் வீதி உலா வரும் செட். இதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் கருத்து பெரிதானது எனவே எங்கள் தளத்தில் சொல்கிறேன் பதிவில்.//

      மாடியில் இன்னொரு வீட்டில் சுவாமி வீதி உலா காட்சி இடம்பெற்றது கீதா. நான் பழைய கொலு பதிவில் கோவில் பதிவில் வீதி உலா பொம்மஒயை பற்றி சொல்லி இருக்கிறேன்.

      உங்கள் பதிவில் சொல்லுங்கள்.

      //அரிசோனா கொலுவுக்கு வந்துவிடுகிறேன் கோமதிக்கா. சுண்டல் கிடைக்குமா!!!//

      வாங்க வாங்க! சுண்டல் கிடைக்கும் பாடினால்.

      //எல்லாமே ரசித்தேன்//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  16. இன்று காலை வராகி அம்மன் துதிப்பாடல்களுடன் விடிந்தது. இங்கு வந்தால் நவராத்திரி அம்மன் கொலு அலங்காரங்கள் .

    அழகிய காட்சிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //இன்று காலை வராகி அம்மன் துதிப்பாடல்களுடன் விடிந்தது. இங்கு வந்தால் நவராத்திரி அம்மன் கொலு அலங்காரங்கள் .//

      வராகி அம்மன் துதிப்பாடல்களுடன் விடிந்தது காலை பொழுது மகிழ்ச்சி.

      //அழகிய காட்சிகள்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. காணக் காத்திருந்த பதிவு. அனைத்து கொலுவும் அழகு. சிறுமியாக மீனாக்ஷி, கோவர்த்தன கிரிதாரி, மதுரையின் சிறப்பான கள்ளழகர் பவனி ஆகியன குறிப்பாக மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //காணக் காத்திருந்த பதிவு. அனைத்து கொலுவும் அழகு. சிறுமியாக மீனாக்ஷி, கோவர்த்தன கிரிதாரி, மதுரையின் சிறப்பான கள்ளழகர் பவனி ஆகியன குறிப்பாக மிக அருமை.//

      நீங்கள் கேட்டது நினைவு வைத்து தான் பதிவு போட்டேன் ராமலக்ஷ்மி, குறிப்பிட மறந்து விட்டேன்.

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு