புதன், 15 நவம்பர், 2023

ஆறுமுகனே ! வருவாய்




முருகபெருமான் சூரனை  சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர்.  நிறைய தடவை போய் வந்த கோவில். திருநெல்வேலி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கை திருச்செந்தூர் முருகனுக்கு தான் கொடுப்பார்கள். உறவினர்களின் குழந்தைகளுக்கு   மொட்டையடித்து காது குத்தும் விழாவுக்கு அடிக்கடி கலந்து கொள்ள திருசெந்தூர் போய் இருக்கிறோம். நிறைய பதிவுகள் திருச்செந்தூர் பதிவுகள் பதிவு செய்து இருக்கிறேன். அப்போது பகிர்ந்து கொள்ளாத படங்களை இந்த பதிவில்  பதிவு செய்து இருக்கிறேன்.


முந்திய பதிவுகள் .



உறவினர் குழந்தைக்கு பிறந்த நாள் அன்று ஆயுஷ்ஹோமம் , மற்றும் மொட்டையடித்து காது குத்துதல் நிகழச்சிக்கு போய் இருந்த போது உள்ள படங்கள்.




திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யும் வழியில் இந்த முருகன் மடம் இருந்தது , அந்த ஆறுமுகராக காட்சி அளித்தார். அவருக்கு சங்காபிஷேகம் செய்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் எல்லாம் செய்தார்கள். முருகனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தார்கள்.

500 ஆண்டுகள் பழமையான சிலைகள் என்று போட்டு இருந்தது. பிள்ளையார், 
பசுவும் கன்றும்




பழைய நினைவுகள் வந்தது



கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா!




மாலை மயங்கும் நேரம்


பெண் மயிலின் முன் அழகாய் தோகைவிரித்து ஒரு நடனம்
நிலவு தெரிகிறதா? மாலை நேரம்  சின்ன காமிராவில் எடுத்த படங்கள்

கடலும் நிலவும் இருட்டில்




இருட்டில் மயில் தோகை(பி.சி ஸ்ரீராம் என்று நினைப்பு)


அலைகடலின் ஓரத்திலே! 

 

திருசெந்தூர் யாமிருக்க பயமேன் என்ற வலைத்தளத்தில் திருச்செந்தூர்  திருப்புகழை பற்றி படித்த விவரம். பெரியவர்களும் சொல்ல கேட்டு இருக்கிறேன்.  அன்பர்கள் வீட்டில் மகன் ,மகளுக்கு வரன் பார்த்து கொண்டு இருப்பவர்கள் இந்த திருப்புகழை படித்து பயன்பெறலாம் என்று இந்த பகிர்வு.


//திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்

நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.//

//விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து …… வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் …… வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப …… மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து …… குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த …… மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த …… அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் …… களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த …… பெருமாளே.//


- அருணகிரிநாதர்


படித்ததை பகிர்ந்து இருக்கிறேன். மந்திரத் திருப்புகழ்  கீழே சுதா ரகுநாதன் அவர்கள் பாடியது. 

பாடல் வரிகளுடன் இருக்கிறது 






ஆறுமுகம் ஆறுமுகம் பாடல் வரிகளுடன் இருக்கிறது.
திரு.  சம்பந்தம் குருக்கள் பாடி இருக்கிறார்.
தலைப்புக்கு ஏற்ற திருப்புகழ் தேர்வு செய்தேன். இந்த திருப்புகழ எனக்கு பிடிக்கும்.





முருகனை சிந்திப்போம்- 2 - 2018 ல் போட்ட பதிவு

முருகனை சிந்திப்போம் தொடர்ந்து.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

24 கருத்துகள்:

  1. கோமதிக்கா, படங்கள் அருமை. அதுவும் திருச்செந்தூர் கடற்கரை அழகோ அழகு.

    மாமா அவர்கள் நிற்கும் இடத்தில் பை போன்று இருக்கிறதே விழுந்துவிட்டதா? அது என்னது அக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      மாமா அவர்கள் நிற்கும் இடத்தில் பை போன்று இருக்கிறதே விழுந்துவிட்டதா? அது என்னது அக்கா?//

      பை இல்லை , ஒரு குழந்தை சிப்பி எடுக்கிறாள்.

      நீக்கு
  2. இருட்டில் மயில் ஆடும் அழகை எடுத்து - பிசி ஸ்ரீராம் என்று நினைப்பு என்று போட்டிருப்பதைப் பார்த்து சிரித்துவிட்டேன். மணிரத்தினத்தின் ஒளிப்பதிவாளர் இல்லையா. இப்பவும் அவர்தானா என்று தெரியவில்லை. இருட்டிலிருந்து குரல் வரும்...அதுவும் கிசு கிசுப்பாக ஒற்றை வரியில்...எனக்குப் புரியவே புரியாது!!!

    ஆண் மயில் ஆடும் படம் ரசித்தேன். 500 வருடத்து சிலைகளா...ஈரோடில் அருங்காட்சியகத்தில் பல சிலைகள் இருந்தன...படங்கள் இன்னும் கோர்க்கவில்லை போட வேண்டும்.

    மந்திரத் திருப்புகழ் சுதாரகுநாதன் படத்துடன் இருக்கும் காணொளியா அக்கா? அல்லது கீழே வருவதா?

    கேட்கிறேன்

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இருட்டில் மயில் ஆடும் அழகை எடுத்து - பிசி ஸ்ரீராம் என்று நினைப்பு என்று போட்டிருப்பதைப் பார்த்து சிரித்துவிட்டேன். மணிரத்தினத்தின் ஒளிப்பதிவாளர் இல்லையா. இப்பவும் அவர்தானா என்று தெரியவில்லை. இருட்டிலிருந்து குரல் வரும்...அதுவும் கிசு கிசுப்பாக ஒற்றை வரியில்...எனக்குப் புரியவே புரியாது!!!//

      மணிரத்தினத்தின் ஆஸ்தான் ஒளிப்பதிவாளர் தான்.

      //ஆண் மயில் ஆடும் படம் ரசித்தேன்.//

      நன்றி.

      //500 வருடத்து சிலைகளா...ஈரோடில் அருங்காட்சியகத்தில் பல சிலைகள் இருந்தன...படங்கள் இன்னும் கோர்க்கவில்லை போட வேண்டும்.//

      ஓ சரி, போடுங்கள் நேரம் கிடைக்கவேண்டும்.

      //மந்திரத் திருப்புகழ் சுதாரகுநாதன் படத்துடன் இருக்கும் காணொளியா அக்கா? அல்லது கீழே வருவதா?//

      சுதாரகுநாதன் படத்துடன் வருவது.

      நீக்கு
  3. இரு திருப்புகழ் பாடல்களையும் கேட்டேன் அக்கா. சுதா ரகுநாதன் பாடியதும் திரு சம்பந்தம் குருக்கள் பாடியதும் கேட்டேன்....பாடல் வரிகளுடன் நானும் கூடவே மனதுள் பாடி பார்த்துக் கொண்டேன். சம்பந்தம் குருக்கள் பாடியிருக்கும் ராகத்தில் கும்மி அடித்துக் கொண்டே பாடலாம் அதுவும் அப்புறம் வேகமாகப்போகும் போது காவடியுடன் ஆடிக்கொண்டே பாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

    ரசித்துக் கேட்டேன் கோமதிக்கா. கற்றுக் கொள்ளவும் எளிதாக இருக்கிறது இரண்டாவது பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு திருப்புகழ் பாடல்களையும் கேட்டேன் அக்கா. சுதா ரகுநாதன் பாடியதும் திரு சம்பந்தம் குருக்கள் பாடியதும் கேட்டேன்....பாடல் வரிகளுடன் நானும் கூடவே மனதுள் பாடி பார்த்துக் கொண்டேன்.//

      மகிழ்ச்சி கீதா.

      //சம்பந்தம் குருக்கள் பாடியிருக்கும் ராகத்தில் கும்மி அடித்துக் கொண்டே பாடலாம் அதுவும் அப்புறம் வேகமாகப்போகும் போது காவடியுடன் ஆடிக்கொண்டே பாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.//

      ஆமாம், எளிமையாக எளிதாக பாட போடுவது போல தான் இருக்கும்.
      கற்றுக் கொள்வது எளிதுதான் கீதா.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
      இதற்கு முந்திய பதிவு படிக்கவில்லையா கீதா?

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      படங்கள் அழகு...//

      முருகா முருகா முருகா..

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. ​அழகான படங்கள். திருச்செந்தூர் நான் பார்க்காத தலங்களில் ஒன்று. பழைய நினைவுகள் என்றுமே இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள்.//
      நன்றி.

      //திருச்செந்தூர் நான் பார்க்காத தலங்களில் ஒன்று.//

      முன்பு போல இப்போது எளிதாக பார்க்க முடியவில்லை முருகனை.

      //பழைய நினைவுகள் என்றுமே இனிமை.//
      ஆமாம் ஸ்ரீராம்.நினைவுகள் இனிமைதான்.


      நீக்கு
  6. ஆறுமுகம் ஆறுமுகம் பாடல் அருமை. விறல்மார னைந்து பாடல் வரிகளை இணையத்திலிருந்து எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஆறுமுகம் ஆறுமுகம் பாடல் அருமை.//
      ஆமாம் , இவர் பாடும் திருப்புகழ் எல்லாம் நன்றாக இருக்கும்.

      //விறல்மார னைந்து பாடல் வரிகளை இணையத்திலிருந்து எடுக்க வேண்டும்.//

      இணையத்திலிருந்து எடுத்தேன், திருசெந்தூர் யாமிருக்க பயமேன் வலைத்தளத்தில் பாடல் இருக்கிறது. நான் சுதா ரகுநாதன் காணொளியில் பாடல் வரி வருகிறது என்று அதை எடுத்து விட்டேன்.
      இப்போது நீங்கள் அனுப்பியதை பதிவில் சேர்த்து விட்டேன்.
      நன்றி.

      நீக்கு
  7. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து …… வெயில்காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் …… வசைகூற

    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப …… மயல்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
    குறைதீர வந்து …… குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
    வழிபாடு தந்த …… மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
    வடிவேலெ றிந்த …… அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
    மடியாரி டைஞ்சல் …… களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
    அலைவாயு கந்த …… பெருமாளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எடுத்தேன் ஸ்ரீராம், அப்புறம் இந்த காணொளியில் பாடல் வரிகளும் வருகிறது என்று விட்டு விட்டேன். இப்போது நீங்கள் அனுப்பியதை பதிவில் சேர்த்து விடுகிறேன். எல்லோருக்கும் உதவும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, பாடல் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  8. நான் மூன்றுமுறைகளுக்கு மேல் திருச்செந்தூர் சென்றிருக்கிறேன் (கடந்த சில வருடங்களில்). அந்த நினைவை அசைபோட வைத்தது. நான் சென்றிருந்தது மதியம் என்பதால் நிறைய படங்கள் எடுத்தேன்.

    திருச்செந்தூர் கடற்கரை, யானை மற்றும் சுக்கு கருப்பட்டி கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //நான் மூன்றுமுறைகளுக்கு மேல் திருச்செந்தூர் சென்றிருக்கிறேன் (கடந்த சில வருடங்களில்). அந்த நினைவை அசைபோட வைத்தது. நான் சென்றிருந்தது மதியம் என்பதால் நிறைய படங்கள் எடுத்தேன்.//

      பதிவில் போடும் கோவில் நாம் போய் இருந்தால் நினைவுகள் வந்து அசைபோட வைக்கும் தான்.

      நானும் நிறைய படங்கள் எடுத்து இருக்கிறேன் திருசெந்தூரில் .ஒவ்வொரு முறையும் காமிரா மாறி இருக்கிறது.
      பல பதிவுகள் திருச்செந்தூர் பற்றி போட்டு இருக்கிறேன்.
      மற்ற பதிவில் இடம்பெறாத படங்கள் போட வேன்டும் என்று நினைத்து சில வற்றை பகிர்ந்தேன்.

      \திருச்செந்தூர் கடற்கரை, யானை மற்றும் சுக்கு கருப்பட்டி கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை//

      நானும் யானை படங்கள் , சுக்குகருப்பட்டி வாங்கியது கடைத்தெரு படங்கள் எல்லாம் எடுத்து பழைய பதிவில் போட்டு இருக்கிறேன்.
      சுக்கு கருப்பட்டி முன்பு போல இல்லை என்றாலும் வாங்கி வருவோம் அங்கு போனால்.

      நீக்கு
  9. சாரின் புகைப்படங்களைப் பார்த்தேன்.

    மற்ற படங்களும் அழகு. மயில் ரொம்பத் தெளிவாகத் தெரியவில்லை. மயில் என்றுமே அழகும் ஆச்சர்யமும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாரின் புகைப்படங்களைப் பார்த்தேன்.//

      நன்றி.

      //மற்ற படங்களும் அழகு. மயில் ரொம்பத் தெளிவாகத் தெரியவில்லை. மயில் என்றுமே அழகும் ஆச்சர்யமும்தான்//

      இரவு எடுப்பது போல அமைப்பில் வைத்து எடுக்கவில்லை அதுதான் காரணம் படம் தெளிவாக இல்லாமல் இருபதற்கு. இருட்டு அப்படியே இருக்கிறது.அப்போது செல்போன் கிடையாது என்னிடம்.
      போன பதிவை பார்க்கவில்லையே என்று கேட்டவுடன் வந்து பார்த்து

      கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. திருச் செந்தூர் அழகிய தலம்.சென்று வணங்கி இருக்கிறேன்.

    மயில் ஆடும் அழகும், இரவு நிலா,கடல் மனதைக் கவரும் படங்கள்.

    கந்த சஷ்டி காலத்தில் சிறப்பான பகிர்வு.

    முருகன் அருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //திருச் செந்தூர் அழகிய தலம்.சென்று வணங்கி இருக்கிறேன்.

      மயில் ஆடும் அழகும், இரவு நிலா,கடல் மனதைக் கவரும் படங்கள்.//

      ஆமாம் மாதேவி, திருச்செந்தூர் அழகிய தலம் தான். மயில் எப்போது போனாலும் பார்த்து விடுவேன். இரவு நிலா, கடல் நம் மனதை கவரும்.

      //கந்த சஷ்டி காலத்தில் சிறப்பான பகிர்வு.

      முருகன் அருளை வேண்டுவோம்.//

      முருகன் அருளை வேண்டுவோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.


      நீக்கு
  11. கடற்கரை காட்சிகளின் படங்கள் அழகு.

    பழைய நினைவுகள் மகிழ்ச்சியை தரட்டும் வாழ்க வளத்துடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //கடற்கரை காட்சிகளின் படங்கள் அழகு.

      பழைய நினைவுகள் மகிழ்ச்சியை தரட்டும் வாழ்க வளத்துடன்.//

      பழைய நினைவுகளை நினைத்துப்பார்ப்பது மகிழ்ச்சிதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்களும் பகிர்வும் நன்று. சங்காபிஷேகம் அழகு. இருட்டில் விரிந்திருக்கும் மயில் தோகையின் விளிம்புகள் சட்டெனப் பார்க்கையில் பறவைகள் பறக்கிற பிரமையைத் தருகிறது.

    பாடல் பகிர்வுக்கு ஸ்ரீராமுக்கும் தங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் நன்று. சங்காபிஷேகம் அழகு. இருட்டில் விரிந்திருக்கும் மயில் தோகையின் விளிம்புகள் சட்டெனப் பார்க்கையில் பறவைகள் பறக்கிற பிரமையைத் தருகிறது.//

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //பாடல் பகிர்வுக்கு ஸ்ரீராமுக்கும் தங்களுக்கும் நன்றி.//

      எல்லோருக்கும் பயன்படும் இல்லையா?
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
      அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

      நீக்கு