ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

அருள் புரிவாய் ஆனைமுகா!





மகன் செய்த பதாகை


ஸ்ரீ மகா கணபதி ஆலயம்  அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவில் பதிவு போட்டது நினைவு இருக்கும் உங்களுக்கு என்று நினைக்கிறேன்.

   அந்த ஆலயத்தின் சார்பாக பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு  போன வருட  பிள்ளையார் சதுர்த்திக்கு  மகன்  செல்ஃபி பிள்ளையார்  போட்டோ பிரேம் செய்து இருந்தான்.   அதை பதிவு செய்தேன், அந்த  பதிவு  குழந்தைகளின் கைகளில் பிள்ளையார்  .



ஸ்ரீ மகா கணபதி  ஆலயத்தில் பிள்ளையார் செய்து கொள்ள பதிவு செய்து கொள்ள வேண்டிய விவரம் , பூஜை விவரங்கள் அடங்கி இருக்கிறது. பிள்ளையாரை கரைக்கவும் கோவில் வரலாம்.

 
இந்த வருடம்  அரிசோனா ஸ்ரீ மகா கணபதி ஆலயம் சார்பாக  மகாகணபதி ஆலய கோபுரம் நடுவில் அதை சுற்றி  வித விதமாக குழந்தை  பிள்ளையார்களும்  உள்ள பதாகை தயார் செய்து இருந்தான்.

அதன் பக்கத்தில்  நின்று  பெரியவர்கள், பிள்ளைகள் எல்லாம். படம் எடுத்து கொண்டார்கள்.மகன் படங்களை அனுப்பினான்.

அந்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
   

பேரன் செய்த பிள்ளையாரை அச்சிலிருந்து எடுத்து தருகிறார் , மகனின் நண்பர். பேரன் கடைசியில் கையில் வாங்குவது  காணொளியில் தெரியும்.



மகனின் நண்பரின் மகன்  பிள்ளையார் செய்கிறார். இவரும் என் இரண்டு, மூன்று பதிவுகளில் வந்து இருக்கிறார், 

இரண்டு மூன்று  பிள்ளையார் அச்சுகள் அவர்களுக்கு விருப்பமானதை தேர்ந்து எடுத்து கொண்டு  செய்கிறார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் செய்வார்கள் குழந்தைகள். இந்த ஆண்டு  அரிசோனாவில்  23   இடங்களில் நடக்கிறதாம். அந்த அந்த இடத்தில் உள்ள   மக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிள்ளையார் அச்சில்  களிமண்ணை நிறைத்து  அவர்கள் வீட்டு பிள்ளையார் சதுர்த்திக்கு அவர்களே பிள்ளையார் செய்து கொள்கிறார்கள்.

இந்த குழந்தை செய்து இருப்பது பிள்ளையார் பட்டி பிள்ளையார்
பேரன் செய்த பிள்ளையாருடன்


பேரன் செய்த பிள்ளையார்



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகருக்கு  அழகான பந்தல் , அலங்கார வண்ண விளக்குகள் போட்டு இருக்கிறார்கள், காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து  விழா நடத்த போகிறார்கள். 

அனைவருக்கும் விநாயகர் எல்லா நலன்களையும் அருளவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.

நம் பதிவர் அன்பு சகோதரி  கமலா ஹரிஹரன் அவர்கள் வீட்டில்  எல்லோருக்கும் உடல் நலத்தை தர வேண்டுகிறேன். 
அருள் புரிவான் ஆனைமுகன்.

ஆனை முகத்தான் என்றும் நலம் அளிப்பான் தன்னை நம்பியவர்களுக்கு எல்லாம்கை கொடுப்பான்.


அனைவருக்கும்  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 

----------------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமை.

    விழா சிறக்க வாழ்த்துகள்
    காணொளி கண்டேன் வேகமாக ஓடுகிறது. முடிவில் நிறுத்தி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமை.

      //விழா சிறக்க வாழ்த்துகள்//

      நன்றி.

      //காணொளி கண்டேன் வேகமாக ஓடுகிறது. முடிவில் நிறுத்தி பார்த்தேன்//

      வேகமாக ஓடுகிறமாதிரி எடுத்து இருக்கிறார்கள்.
      நிறுத்தி பார்த்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் வீட்டில் என்ன பிரச்சனை ?

    சில தினங்களாக வரவில்லையே எபியிலும் கேட்டு இருந்தேன்.

    அவர்கள் நலமாக இருக்க பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் வீட்டில் என்ன பிரச்சனை ?

      சில தினங்களாக வரவில்லையே எபியிலும் கேட்டு இருந்தேன்.//

      எங்கள் ப்ளாக்கில் பதில் கொடுத்து இருந்தார்கள்.
      நீங்கள் பார்க்கவில்லை போலும்.

      எல்லோரும் பிரார்த்திப்போம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      அவர்கள் நலமாக இருக்க பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். அவரவர் வீட்டு பூஜைக்கு பிள்ளையாரை அவரவர் செய்து கொள்வது சிறப்பு. பேரன் அசத்துகிறார். அடக்குமுறைக்கு ஆட்பட்டிருப்பதால் இந்த முறை நிறைய விநாயகர்களைக் காணோம் சென்னையில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். அவரவர் வீட்டு பூஜைக்கு பிள்ளையாரை அவரவர் செய்து கொள்வது சிறப்பு.//
      ஆமாம், அவர்களே செய்து கொள்வது சிறப்புதான். நம் ஊர் மாதிரி விற்காது இல்லையா? அதுதான் அவர்களே செய்து கொள்கிறார்கள்.

      //பேரன் அசத்துகிறார்//

      நன்றி.

      //அடக்குமுறைக்கு ஆட்பட்டிருப்பதால் இந்த முறை நிறைய விநாயகர்களைக் காணோம் சென்னையில்!//

      இங்கு நான் சுவாமிக்கு வேண்டிய பொருட்கள் வாங்க போய் இருந்த போது சின்ன பிள்ளையார்களை பார்த்தேன்.

      பெரிய பிள்ளையார்களை பார்க்க கோவில் போகவில்லை. ஜோதி டிவியில் பார்த்து கொள்கிறேன், எங்கள் வளாக பிள்ளையாரை தரிசனம் செய்தேன்.







      நீக்கு
  4. கமலா அக்கா வீட்டு தொல்லைகள் சீக்கிரம் தீர நானும் பிரார்த்திக்கிறேன். நண்பர்கள் அனைவரின் இல்லங்களிலும் விக்னங்கள், தீர்ந்து வினைகள் அழிந்து, மகிழ்ச்சி பரவ விநாயகர் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கமலா அக்கா வீட்டு தொல்லைகள் சீக்கிரம் தீர நானும் பிரார்த்திக்கிறேன். நண்பர்கள் அனைவரின் இல்லங்களிலும் விக்னங்கள், தீர்ந்து வினைகள் அழிந்து, மகிழ்ச்சி பரவ விநாயகர் அருளவேண்டும்.//

      ஆமாம், விரைவில் நலபெற வேண்டும் கமலா அவர்கள் குழந்தைகள்.
      எல்லோர் இல்லங்களில் மகிழ்ச்சி பரவ விநாயகர் அருள பிராத்திப்போம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. வீட்டுப் பூஜைக்கான பிள்ளையாரை குழந்தைகள் கையால் செய்திட ஊக்கம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. நல்ல ஏற்பாடு. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. பெற்றோருக்கும் மனநிறைவு.

    விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //வீட்டுப் பூஜைக்கான பிள்ளையாரை குழந்தைகள் கையால் செய்திட ஊக்கம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. நல்ல ஏற்பாடு. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. பெற்றோருக்கும் மனநிறைவு.//

      ஆமாம், எல்லோருக்கும் மகிழ்ச்சியும், மனநிறைவும் தரும் விஷயம்.
      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


      விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  6. பேரன் செய்த பிள்ளையார் அழகு... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்க்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //பேரன் செய்த பிள்ளையார் அழகு... வாழ்த்துகள்...//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  7. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் நல் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. சிறப்பான பதிவு..

    எங்கும் நல்லருள் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான பதிவு..

      எங்கும் நல்லருள் பெருகட்டும்..//
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. பிள்ளையார் சதுர்த்தி படங்கள் அழகு.

    கடல் கடந்து நம் கலாச்சாரத்தை எப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் பாடுபடுகிறார்கள் என்பது புரிந்து ஆச்சர்யப்பட்டேன். பேரன் செய்த விநாயகர் மிக அழகு.

    காணொளி நன்றாக(விரைவாக ஓடும்படி) வந்திருக்கிறது. ரிவர்ஸ் ஆர்டரில்தானே. ரசித்தேன்.

    நம் ஊரின் கொண்டாட்டமும் எப்போதும்போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கடல் கடந்து நம் கலாச்சாரத்தை எப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் பாடுபடுகிறார்கள் என்பது புரிந்து ஆச்சர்யப்பட்டேன். பேரன் செய்த விநாயகர் மிக அழகு.//

      தாங்கள் சின்ன வயதில் பிள்ளையார் சதுர்த்தியை ஊரில் கொண்டாடிய அனுபத்தை அவர்கள் குழந்தைகளுக்கு கிடைக்க செய்து விட்டார்கள்.

      பேரன் இன்று லேகோ பிள்ளையார் மிக அழகாய் செய்து இருக்கிறான்.மகனும் செய்து இருக்கிறான் வேறு முறையில்.வேறு சமயத்தில் பதிவில் போடுகிறேன்.

      //காணொளி நன்றாக(விரைவாக ஓடும்படி) வந்திருக்கிறது. ரிவர்ஸ் ஆர்டரில்தானே. ரசித்தேன்.//

      ரசித்தமைக்கு நன்றி.

      //நம் ஊரின் கொண்டாட்டமும் எப்போதும்போல் இருக்கிறது.//

      ஆமாம், விலைவாசி உயர்வால் மக்கள் துன்பபட்டாலும் கடைத்தெருவில் மக்கள் உற்சாகமாக எல்லாம் வாங்கி சென்றது அதையே சொல்கிறது. எப்போதும் போல் தான் கொண்டாட்டம் என்று.




      நீக்கு
  11. தமிழகத்தில் கெடுபிடி அதிகமாயிருக்கிறது.

    இருந்தாலும் நீர் நிலைகளில் கரைக்க இயற்கையான பிள்ளையார் சிலைகளைச் செய்வதுதானே முறை. பிளாஸ்டர்்ஆஃப் பாரிஸ் போன்ற நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல்களைக்்கொண்டு பிள்ளையார் சிலை செய்து நீர் நிலைகளுக்குக் கெடுதல் உண்டாக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழகத்தில் கெடுபிடி அதிகமாயிருக்கிறது.

      இருந்தாலும் நீர் நிலைகளில் கரைக்க இயற்கையான பிள்ளையார் சிலைகளைச் செய்வதுதானே முறை. பிளாஸ்டர்்ஆஃப் பாரிஸ் போன்ற நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல்களைக்்கொண்டு பிள்ளையார் சிலை செய்து நீர் நிலைகளுக்குக் கெடுதல் உண்டாக்கலாமா?//

      ஆமாம், சில விஷயங்களை சட்டம் போட்டால் தான் கடைபிடிக்கிறார்கள் அதனால் கெடுபிடி அவசியம் ஆகிறது.

      எளிமையாக களிமண் கொண்டு செய்து விற்பார்கள். காலை பலகையை எடுத்து போய் செய்து தருவதை மிக பத்திரமாக வாங்கி கொண்டு வருவார்கள். கொஞ்சம் களிமண்ணும் கொடுப்பார்கள், சேதம் அடைந்தால் ல் சரி செய்து கொள்ள என்று.

      இப்போது எப்போதோ செய்து காய வைத்து அதில் வர்ணம் அடித்து கரைக்க கஷ்டப்படும் பொம்மை பிள்ளையார் கிடைக்கிறது.
      வீட்டுக்கு எடுத்து போக அது எளிதாக இருக்கிறது என்று அந்த பிள்ளையாரை வாங்கி வருகிறார்கள்.

      நீர் நிலைகளில் கரையும் அளவு நீரும் இல்லை. சிமெண்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பொம்மைகளில் இரும்பு ஆணிகள், அது, இது என்று வைத்து செய்கிறார்கள் அவை துரு பிடித்து நீர்நிலைகளில் கிடக்கிறது. எத்தனை விதமான பாதிப்புகளை கொடுக்கும் என்ற பின் விளைவு தெரியாமல் செய்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. //தமிழகத்தில் கெடுபிடி அதிகமாயிருக்கிறது.

      இருந்தாலும் நீர் நிலைகளில் கரைக்க இயற்கையான பிள்ளையார் சிலைகளைச் செய்வதுதானே முறை. பிளாஸ்டர்்ஆஃப் பாரிஸ் போன்ற நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல்களைக்்கொண்டு பிள்ளையார் சிலை செய்து நீர் நிலைகளுக்குக் கெடுதல் உண்டாக்கலாமா?//

      ஆமாம், சில விஷயங்களை சட்டம் போட்டால் தான் கடைபிடிக்கிறார்கள் அதனால் கெடுபிடி அவசியம் ஆகிறது.

      எளிமையாக களிமண் கொண்டு செய்து விற்பார்கள். காலை பலகையை எடுத்து போய் செய்து தருவதை மிக பத்திரமாக வாங்கி கொண்டு வருவார்கள். கொஞ்சம் களிமண்ணும் கொடுப்பார்கள், சேதம் அடைந்தால் ல் சரி செய்து கொள்ள என்று.

      இப்போது எப்போதோ செய்து காய வைத்து அதில் வர்ணம் அடித்து கரைக்க கஷ்டப்படும் பொம்மை பிள்ளையார் கிடைக்கிறது.
      வீட்டுக்கு எடுத்து போக அது எளிதாக இருக்கிறது என்று அந்த பிள்ளையாரை வாங்கி வருகிறார்கள்.

      நீர் நிலைகளில் கரையும் அளவு நீரும் இல்லை. சிமெண்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பொம்மைகளில் இரும்பு ஆணிகள், அது, இது என்று வைத்து செய்கிறார்கள் அவை துரு பிடித்து நீர்நிலைகளில் கிடக்கிறது. எத்தனை விதமான பாதிப்புகளை கொடுக்கும் என்ற பின் விளைவு தெரியாமல் செய்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. எல்லாப் படங்களும் மிக அருமை. பேரன் செய்த பிள்ளையார் அழகாய் இருக்கார். எல்லோருமே இப்படி உற்சாகத்துடன் பிள்ளையார் செய்வது பார்க்கவே மனதுக்கு நிறைவாய் உள்ளது. முகநூலிலும் சில படங்கள் காணக் கிடைத்தன. இங்கே இப்போதெல்லாம் நாங்க களிமண் பிள்ளையாரே வாங்குவதில்லை. எனக்கு ரொம்ப வருத்தம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் வீட்டுப் பிள்ளையார் தான் வைத்துப் பூஜை செய்கிறார். சுமார் பனிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன களிமண் பிள்ளையார் வாங்கி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்


      /எல்லாப் படங்களும் மிக அருமை. பேரன் செய்த பிள்ளையார் அழகாய் இருக்கார். //

      நன்றி.

      //எல்லோருமே இப்படி உற்சாகத்துடன் பிள்ளையார் செய்வது பார்க்கவே மனதுக்கு நிறைவாய் உள்ளது.//

      ஆமாம், மனதுக்கு நிறைவு தருவது உண்மை.

      //முகநூலிலும் சில படங்கள் காணக் கிடைத்தன. //
      அங்கு போட்ட படங்கள் இன்னும் இங்கு பகிரவில்லை.


      //இங்கே இப்போதெல்லாம் நாங்க களிமண் பிள்ளையாரே வாங்குவதில்லை. எனக்கு ரொம்ப வருத்தம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் வீட்டுப் பிள்ளையார் தான் வைத்துப் பூஜை செய்கிறார். சுமார் பனிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன களிமண் பிள்ளையார் வாங்கி!//

      சார் இருக்கும் போதே அவர்கள் கொண்டாடிய கடைசி பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் வாங்க போய் கூட்டம் அதிகமாக இருக்கிறது, வீட்டில் இருக்கும் பிள்ளையார் வைத்து கும்பிட்டால் போதும் என்று வாங்க வில்லை.
      நானும் சார் போன பின் பிள்ளையார் வாங்கவில்லை இரண்டு வருடங்களாக மகன் சிறு வயதில் பிள்ளையார் சதுர்த்திக்கு வாங்கிய கொலு பிள்ளையாரை வைத்து தான் பூஜை செய்கிறேன்.
      ஒரு நாளில் பண்டிகையை முடித்து கொள்கிறேன்.

      நீக்கு
  13. கமலா ஹரிஹரன் வீட்டில் அனைவரும் உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கமலா ஹரிஹரன் வீட்டில் அனைவரும் உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள்.//

      ஆமாம், நாம் பிரார்த்தனை செய்து கொள்வொம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. கோமதிக்கா போன வருடப் பதிவும் நினைவு இருக்கு.

    அங்கு பாருங்க எல்லாரும் எப்படி உற்சாகமாக பிள்ளையார் செய்யறாங்க அதுவும் அவங்கவங்க பூஜைக்கு!!! நல்ல விஷயம் கோமதிக்கா.

    பேரனும் செய்வது அருமை. பிள்ளையார்பட்டி பிள்ளையாருடன் சிறுமி அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா போன வருடப் பதிவும் நினைவு இருக்கு.//

      நன்றி கீதா.

      //அங்கு பாருங்க எல்லாரும் எப்படி உற்சாகமாக பிள்ளையார் செய்யறாங்க அதுவும் அவங்கவங்க பூஜைக்கு!!! நல்ல விஷயம் கோமதிக்கா.//

      வேறு வழி இல்லை அவர் அவர் வீட்டு அவர்களே செய்ய த்தான் வேண்டும். நம் ஊர் மாதிரி களிமண் பிள்ளையார் விற்காது. அதனால் தான் கோவில் நிர்வாகம் இப்படி ஒரு ஏற்பட்டௌஇ செய்து இருக்கிறது.

      //பேரனும் செய்வது அருமை. பிள்ளையார்பட்டி பிள்ளையாருடன் சிறுமி அழகு!//

      ஆமாம். குழந்தைகளை இப்படி உற்சாகமாக பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் வருகிறது.

      நீக்கு
  15. காணொளி விரைவாக ஓடுவதால் கடைசியில் பேரன் வாங்குவதும் ஓடி விடுகிறது. அப்புறம் மெதுவாக அங்காங்கே நிறுத்தி பார்த்தேன்...

    குட்டிப் பையன் செய்வதும் அழகு. ஆமாம் உங்க பதிவுகள்ல வந்திருக்கிறார்கள். நண்பரும்..

    படங்கள் எல்லாமே அழகு. மகன் ஆர்வமுடம் இப்படி ஒவ்வொரு வருடமும் செய்வதற்கு வாழ்த்துகள்.

    இங்கும் ஒவ்வொரு மூலையிலும் பிள்ளையார் அமைத்து பந்தப், அலங்காரங்கள் போட்டு வழிபாடு நடத்தறாங்க செவ்வாய் அன்று இங்கு கொண்டாடினாங்க அதனால நாங்களும் அன்றுதான் கொண்டாடினோம். கொழுக்கட்டை செய்து...

    எல்லோரும் நலமுடன் இருக்க பிள்ளையாரைத் துதிப்போம்.

    கமலாக்கா வீட்டில் எல்லோரும் விரைவில் நலம் பெற்று வளமுடன் வாழ நாம் பிரார்த்திப்போம்.

    பணிகள் பல கோமதிக்கா அதான் வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்னும் தொடர்கிறது இன்றைய பணி இனிதான் வரும் எனவே அதற்குள் வலையில் சுற்றிவிடலாம்னு !!!!!

    கடைசி காணொளி பார்த்துக் கொண்டே கருத்து!!

    படங்கள் எல்லாம் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. காணொளி விரைவாக ஓடுவதால் கடைசியில் பேரன் வாங்குவதும் ஓடி விடுகிறது. அப்புறம் மெதுவாக அங்காங்கே நிறுத்தி பார்த்தேன்...//

    நன்றி , மகிழ்ச்சி.

    //குட்டிப் பையன் செய்வதும் அழகு. ஆமாம் உங்க பதிவுகள்ல வந்திருக்கிறார்கள். நண்பரும்..//

    ஆமாம், மகனின் நண்பர் தன்னார்வ தொண்டர் விழாக்களில் இப்படி வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக செய்வார்.

    //படங்கள் எல்லாமே அழகு. மகன் ஆர்வமுடம் இப்படி ஒவ்வொரு வருடமும் செய்வதற்கு வாழ்த்துகள்.//

    கோவில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. செய்கிறான்.

    //இங்கும் ஒவ்வொரு மூலையிலும் பிள்ளையார் அமைத்து பந்தப், அலங்காரங்கள் போட்டு வழிபாடு நடத்தறாங்க செவ்வாய் அன்று இங்கு கொண்டாடினாங்க அதனால நாங்களும் அன்றுதான் கொண்டாடினோம். கொழுக்கட்டை செய்து...//

    ஆமாம், மைசூரில் இருக்கும் கன்னட நண்பர் குடும்பம் எங்களுக்கு செவ்வாய் வாழ்த்து அனுப்பினார்கள்.


    //எல்லோரும் நலமுடன் இருக்க பிள்ளையாரைத் துதிப்போம்.

    கமலாக்கா வீட்டில் எல்லோரும் விரைவில் நலம் பெற்று வளமுடன் வாழ நாம் பிரார்த்திப்போம்.//

    பிரார்த்திப்போம். விரைவில் நலம் அடைவார்கள்.

    //பணிகள் பல கோமதிக்கா அதான் வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்னும் தொடர்கிறது இன்றைய பணி இனிதான் வரும் எனவே அதற்குள் வலையில் சுற்றிவிடலாம்னு !!!!!//

    உங்கள் பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
    பணிகளுக்கு இடையில் பதிவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    //கடைசி காணொளி பார்த்துக் கொண்டே கருத்து!!

    படங்கள் எல்லாம் ரசித்தேன் கோமதிக்கா//

    பாடலை கேட்டுக் கொண்டே பதிவை ரசித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.





    பதிலளிநீக்கு