இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம். பல வருடங்களுக்கு முன் ஆறு நாளும் "முருகனை சிந்திப்போம்" என்று பதிவு போட்டேன். கந்தசஷ்டி காலத்தில் விரதம் இருப்பதும், "கந்த புராணம்" படிப்பதும் என்று இருப்போம். என் கணவர் ஆறு நாளும் சஷ்டி கவசத்தை 36 முறை படிப்பார்கள். மாதம் இரண்டு முறைவரும் சஷ்டி விரதம் அதில் ஒரு முறை விரதம் இருப்போம்.இப்போது விரதம் இருப்பது இல்லை.
என் தோழி உமையாளின் நட்புகளுடன் சேர்ந்து மாலை நேர கூட்டு வழிபாடு செய்வோம். (வாட்ஸப் குழுவில் )அதில் முருகன் பாடல்களை , கவசங்களை பாடி மனநிறைவு அடைந்து கொள்கிறேன். இன்று பாடிய தங்கரதம் ஒன்று அசைந்து வர பாடலை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். கேட்டுப்பாருங்கள் எளிமையான பாடல். பாதயாத்திரையாக தைபூசத்திற்கு பழனி போகிறவர்கள்,மற்றும் காவடி சுமந்து போகிறரவர்கள் பாடும் பாடல்.
கழுகுமலை -2013
கழுகுமலைத்திருக்கோவில்- 2014
கவாடியாம் காவடி கந்தவேலன் காவடி - 2022
இந்த ஆறு நாளும் முருகனை சிந்திக்க
கழுகு மலை குமரன் பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க
தென்பழநி வலம் வரும் தங்கரதமாம்
தங்கரதம் மீதமர்ந்து கொலுவிருக்கும்
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
வண்ண மயில் வாகனத்தில் வேல்முருகன்
வள்ளி தெய்வயானையுடன் மால் மருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலை அழகன்
என்னகத்தில் காட்சி தந்தான் கலை அழகன்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர
கோலமயில் நின்று நடமாடி வர
சுப்பையா நானடிமை பாடிவர
சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டு வர
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
பழனி பரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர்ச் சோலையுடன் சுவாமி மலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில் வளர் கந்தனிடம் தூது விடுத்தேன்
அந்தமிகு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகன் பேரழகை படம் பிடித்தேன்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்
பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே
கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
வெந்நீறும் நெற்றியிலே பளபளக்க
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க
பன்னீரும் மார்பினிலே கமகமக்க
பார்வதியின் பாலன் வந்தான் மனம்களிக்க
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
முருகாயென அழைத்தேன் முறுவல் கண்டேன்
குமராயென அழைத்தேன் குளுமை கண்டேன்
கந்தாயென அழைத்தேன் களித்து நின்றான்
கடம்பாயென அழைத்தேன் களித்து நின்றான்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
காவடிகள் உன்னைத்தேடி ஆடி வரும்
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடி வரும்
சேவடியே சரணமென வாழ்பவர்க்கே
செல்வ நலம் தந்தருளும் கந்த வேளே
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
நல்ல தமிழ்ச் சொல்லெடுத்து நாளும் பாடு
நம் தலைவன் முருகனையே நாடி ஓடு
வல்ல கதிர் வேலவனும் வள்ளியோடு
வந்து நலம் தந்தருள்வான் வகையோடு
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
அஞ்சு வகைக் கனியெடுத்து அமுது செய்வோம்
ஆறுமுகன் மேனியிலே தொழுது பெய்வோம்
கொஞ்சும் எழில் குமரனுக்கு பூக்கள் கொய்வோம்
கூறு தமிழ்ச் சொல்லெடுத்து பாக்கள் நெய்வோம்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
கந்தசஷ்டி தொடக்க நாளில் அழகிய பாடலுடன் முருகன் பதிவு .
பதிலளிநீக்குபாடல்பாடி வணங்கிக் கொண்டோம்.
வணக்க் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//கந்தசஷ்டி தொடக்க நாளில் அழகிய பாடலுடன் முருகன் பதிவு .
பாடல்பாடி வணங்கிக் கொண்டோம்.//
நல்லது மாதேவி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆகா... முருகா சரணம்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்குஆகா... முருகா சரணம்...//
ஆமாம் , முருகன் பாதங்களே சரணம்.
நன்றி தனபாலன்.
சிந்தையெல்லாம் அந்த கந்தன் வசம்.. நெஞ்சம் சிந்திப்பதே கந்த சஷ்டி கவசம்... அதிரா நினைவும் வருகிறது. தீவிர முருக பக்தை. சஷ்டி விரதம் பற்றி பதிவுகள் அவரும் போட்டிருக்கிறார்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சிந்தையெல்லாம் அந்த கந்தன் வசம்.. நெஞ்சம் சிந்திப்பதே கந்த சஷ்டி கவசம்...//
இந்த வரிகளை படிக்கும் போது சீர்காழியின் குரல் காதில் ஓலிக்கிறது.
//அதிரா நினைவும் வருகிறது. தீவிர முருக பக்தை. சஷ்டி விரதம் பற்றி பதிவுகள் அவரும் போட்டிருக்கிறார்.//
ஆமாம், அதிரா விரதம் கடைபிடித்து திணை அரிசியில் மாவிளக்கு செய்து முருகனை வணங்குவார்.
நான் எந்த ஒரு விரதமும் இருந்ததில்லை! ஆரம்ப காலங்களில் ஒரு பழக்கத்துக்காக சனிக்கிழமைகளில் விரதம், மௌன விரதம் இருந்ததுண்டு. முதலில் மௌன விரதத்தையும், அப்புறம் விரதத்தையும் விட்டாச்சு! இதெல்லாம் உடலுக்கும் ஆரோக்யம், மனதுக்கும் நல்ல அப்பயிற்சி என்று தெரிந்தும் கடைபிடிக்க முடியவில்லை.
பதிலளிநீக்குநான் விரதங்கள் நிறைய கடைபிடித்தேன், ஞாயிறு விரதம், சஷ்டி விரதம், சோமவார விரதம், மெளனவிரதம், இப்போது விரதங்கள் கடைபிடிப்பது இல்லை. சாரும் நானும் , பிள்ளைகளும் ஞாயிறு விரதம் பல காலம் இருந்தோம். பிள்ளைகள் திருமணம் ஆனவுடன் விட்டார்கள். சார் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் விரதங்களை விட்டோம். மருத்துவர் விரதங்களை விட சொன்னார்.
நீக்கு//இதெல்லாம் உடலுக்கும் ஆரோக்யம், மனதுக்கும் நல்ல பயிற்சி என்று தெரிந்தும் கடைபிடிக்க முடியவில்லை.//
ஆமாம் , சில பல காரணங்களால் தொடர்ந்து கடைபிடிக்க முடியாமல் போய் விடுகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
தெய்வீக அலைகள் பதிவில் ததும்புகின்றன..
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குதெய்வீக அலைகள் பதிவில் ததும்புகின்றன..
முருகா.. முருகா.//
முருகனின் பகிர்வு தெய்வீகம்.
சிறப்பு
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பு//
உங்கள் கருத்துக்கு நன்றி.
/// கணவர் ஆறு நாளும் சஷ்டி கவசத்தை 36 முறை படிப்பார்கள்.. ///
பதிலளிநீக்குஎத்தனை தவம் செய்திருந்தால் இப்படியெல்லாம் கை கூடி வரும்!..
முருகா.. முருகா..
// கணவர் ஆறு நாளும் சஷ்டி கவசத்தை 36 முறை படிப்பார்கள்.. ///
நீக்குஎத்தனை தவம் செய்திருந்தால் இப்படியெல்லாம் கை கூடி வரும்!..
முருகா.. முருகா..//
நான் என் மகளை குழந்தை உண்டாகி இருக்கும் போது ஒரு நாள் 36 முறை கந்தசசஷ்டி கவசம் படித்தேன். மகள் கார்த்திகை சூரசம்ஹாரம் அன்று பிறந்தாள்.
கணவரின் இஷ்ட தெய்வம் பழனி மலை முருகன். வ்ருடம் ஒருதடவை பழனி, ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுவாமி மலை போய் தரிசனம் செய்வார்கள்.
ஆறுநாள் விரதம் முறையாக கடைபிடிப்பார்கள், மிகவும் கவனமாக கவசத்தை 36 முறை படித்து முடிப்பார்கள் காலை முதல் மாலை வரை.
ஏதாவது முருகன் கோவிலுக்கு அழைத்து செல்வார்கள்.
அவர்களின் தந்தையின் ஆசிதான் காரணம். மாமா கந்தபுராணம் சொற்பொழிவு செய்வார்கள் கோவை இரத்தினவிநாயகர் கோவிலில்.
சாரும் திருவிடை மருதூரில் கந்த சஷ்டிக்கு ஒருமுறை கந்த புராணம் பேசி இருக்கிறார்கள்.
கேட்கவே மகிழ்ச்சி..
நீக்குமறுபுறம் பெருமையாக இருக்கின்றது..
இத்தகைய அடியார் பெருமக்களுடன் நட்பில் இருப்பது!..
முருகா முருகா!..
மீண்டும் வந்து கருத்து சொன்னது நன்றி.
நீக்குஒத்த கருத்து உடையவருடன் இணக்கமாக இருக்க வைத்து இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி.
தைப் பூச பாதயாத்திரை மற்றும் காவடிப் பாடல்கள் பதிவின் அழகு..
பதிலளிநீக்குபாடல்கள் பகிர்வும் பதிவுகளுக்கு இணைப்பும் இந்நேரத்தில் மிகவும் பொருத்தம்..
முருகா சரணம்..
தைப் பூச பாதயாத்திரை மற்றும் காவடிப் பாடல்கள் பதிவின் அழகு..
நீக்குபாடல்கள் பகிர்வும் பதிவுகளுக்கு இணைப்பும் இந்நேரத்தில் மிகவும் பொருத்தம்..
முருகா சரணம்..//
வழி பயணத்தில் நிறைய முருகன் பாடல்கள் பாடி ஆடி போவார்கள். அது உற்சாகத்தையும், தெம்பையும் கொடுக்கும்.
போன் தீபாவளி பதிவில் உங்களை காணோம். ஊரில் இல்லை போலும் என்று நினைத்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தலைப்பைப் பார்த்ததும், கேபி சுந்தராம்பாளின், தனித்திருந்து வாழும் தவமணியே பாடல்தான் நினைவுக்கு வந்தது. பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம், நெல்லைத் தமிழன் , வாழ்க வளமுடன்
நீக்கு//தலைப்பைப் பார்த்ததும், கேபி சுந்தராம்பாளின், தனித்திருந்து வாழும் தவமணியே பாடல்தான் நினைவுக்கு வந்தது. பிறகு வருகிறேன்.//
வாங்க வாங்க.
நீங்கள் சொன்னதும் நல்ல பாடல்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நான் கந்த சஷ்டி அன்று பிறந்ததால், கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள் என அப்பாவுக்குத் தெரிந்த ஜோசியர் நான் மேட்டூரில் வேலை பார்த்த புதிதில் சொன்னார். அப்புறம்தான் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வாங்கிப் படித்தேன். நானும் முருகன் கோவிலுக்குச் செல்லத் தவறமாட்டேன். சென்றமுறை சுவாமிமலை கோவிலுக்குச் சென்றபோது மதியமாகிவிட்டதால் நடை சாத்தியிருந்தது. பஞ்சாம்ருதம்கூட வாங்க முடியவில்லை.
பதிலளிநீக்கு//நான் கந்த சஷ்டி அன்று பிறந்ததால், கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள் என அப்பாவுக்குத் தெரிந்த ஜோசியர் நான் மேட்டூரில் வேலை பார்த்த புதிதில் சொன்னார். அப்புறம்தான் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வாங்கிப் படித்தேன்.//
நீக்குஉங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்!
கந்தசஷ்டி படித்து வருவது மகிழ்ச்சி.
//நானும் முருகன் கோவிலுக்குச் செல்லத் தவறமாட்டேன். சென்றமுறை சுவாமிமலை கோவிலுக்குச் சென்றபோது மதியமாகிவிட்டதால் நடை சாத்தியிருந்தது. பஞ்சாம்ருதம்கூட வாங்க முடியவில்லை.//
ஆமாம், முன்பு சொன்னீர்கள் ஞாயிறு பதிவில் என்று நினைக்கிறேன்.
அடுத்த தடவை முருகன் நல்ல தரிசனம் கிடைக்கட்டும். பஞ்சாம்ருதம் கிடைக்கட்டும்.
பஹ்ரைனில் என்னுடன் வேலை பார்த்தவருடைய மனைவி 36 முறை கந்தசஷ்டி சொல்லுவார். தண்டபாணி பதிவை ரசித்தேன்.
பதிலளிநீக்கு//பஹ்ரைனில் என்னுடன் வேலை பார்த்தவருடைய மனைவி 36 முறை கந்தசஷ்டி சொல்லுவார். //
பதிலளிநீக்குஓ சரி . அவருக்கு சிறந்த முருக பக்தி என்று தெரிகிறது.
என் கணவர் சண்முக கவசம் பாடலை ஆறுதடவை படிப்பார்கள்.
நான் திருமணத்திற்கு பின் தான் சணமுக கவசம் படித்தேன்.
தண்டபாணி பதிவை ரசித்தேன்.//
பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
36 முறை கந்தசஷ்டி... ஆஹா மகிழ்ச்சி அம்மா. சிறப்பான விஷயம்.
பதிலளிநீக்குபாடல் படித்து மகிழ்ந்தேன். அனைவருக்கும் முருகப்பெருமான் நல்லதையே அருள எனது பிரார்த்தனைகள்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//36 முறை கந்தசஷ்டி... ஆஹா மகிழ்ச்சி அம்மா. சிறப்பான விஷயம்.//
அவர்கள் விடாமல் கடைபிடித்ததை தான் இப்போதும் உறவுகள் சொல்லுவார்கள்.
//பாடல் படித்து மகிழ்ந்தேன். அனைவருக்கும் முருகப்பெருமான் நல்லதையே அருள எனது பிரார்த்தனைகள்.//
ஆமாம், வெங்கட் அனைவருக்கும் முருகபெருமான் நல்லதையே அருள வேண்டும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி வெங்கட்.
கந்தனை துதித்தா பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். அதோடு இணைப்பு வழியாக கழுகுமலை முருகனையும் கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி.
துளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//கந்தனை துதித்தா பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். அதோடு இணைப்பு வழியாக கழுகுமலை முருகனையும் கண்டு மகிழ்ந்தேன்.//
கழுகுமலை கோவிலையும் தரிசனம் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கந்தசஷ்டி கேட்பதுண்டு அது போல கந்த குரு கவசமும் கேட்பதுண்டு. ஆனால் விரதம் எதுவும் இருக்கும் பழக்கமே இல்லை கோமதிக்கா.
பதிலளிநீக்குபாடல் அருமை. கேட்டு ரசித்தேன் கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கந்தசஷ்டி கேட்பதுண்டு அது போல கந்த குரு கவசமும் கேட்பதுண்டு. ஆனால் விரதம் எதுவும் இருக்கும் பழக்கமே இல்லை கோமதிக்கா.//
இன்று வேறு கவசங்கள் , வேல் வகுப்பு எல்லாம் படிப்போம் மாலை.
பாடல் அருமை. கேட்டு ரசித்தேன் கோமதிக்கா.//
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
கழுகுமலை, அருமையாக இருக்கு கோமதிக்கா...மாமா வரைந்த ஓவியம் அட்டகாசம் அதில் வண்ணத்துப் பூச்சிகள் பறப்ப்து போல ஜிஃப் அருமை.
பதிலளிநீக்குமகனும் மருமகளும் அந்தப் பெரிய பாறையை உருட்டுவது போல் உள்ள படமும். கவின் குட்டிப் பையனாக சீ சாவில் அமர்ந்து நீங்கள் அருகில்...எல்லாமே அருமை.
தீர்த்தங்காரர்களின் சிற்பங்கள், குகை மற்றும் அந்த மலையே அழகு. கரடு முரடாகத்தான் இருக்கு சில இடங்களில் வழுக்குப் பாறையாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கீங்க. ஆமாம் கொஞ்சம் முடியாதவங்க ஏறுவது சிரமம் தான்.
இந்த மலை விவரம் அறியாத போது சென்றது. அதனால் நினைவு எதுவும் இல்லை.
பார்த்தவுடன் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
கீதா
//கழுகுமலை, அருமையாக இருக்கு கோமதிக்கா...மாமா வரைந்த ஓவியம் அட்டகாசம் அதில் வண்ணத்துப் பூச்சிகள் பறப்ப்து போல ஜிஃப் அருமை.//
நீக்குகணவருக்கு மிகவும் பிடித்த ஊர் சித்தி சித்தப்பா வீட்டுக்கு விடுமுறையில் அட்டிக்கடி போன ஊர் . மனதில் தங்கி விட்ட ஊர் அதுதான் ஓவியம் அழகாய் வந்து இருக்கிறது..
//மகனும் மருமகளும் அந்தப் பெரிய பாறையை உருட்டுவது போல் உள்ள படமும். கவின் குட்டிப் பையனாக சீ சாவில் அமர்ந்து நீங்கள் அருகில்...எல்லாமே அருமை.//
ஆமாம், அருமையான இடம்.
//தீர்த்தங்காரர்களின் சிற்பங்கள், குகை மற்றும் அந்த மலையே அழகு. கரடு முரடாகத்தான் இருக்கு சில இடங்களில் வழுக்குப் பாறையாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கீங்க. ஆமாம் கொஞ்சம் முடியாதவங்க ஏறுவது சிரமம் தான்.//
படி , கையிடி வசதி உள்ள இடங்களுக்கு போகலாம். மேலே போவதுதான் கொஞ்சம் கஷ்டம் காற்று மிக வேகமாக அடிக்கும் நீங்கள் வேண்டாம் என்று மகனும், சாரும் மட்டும் போனார்கள்.
//இந்த மலை விவரம் அறியாத போது சென்றது. அதனால் நினைவு எதுவும் இல்லை.
பார்த்தவுடன் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.//
ஓ ! நீங்கள் போய் இருக்கிறீர்களா?
மீண்டும் போனால் பழைய நினைவுகள் வந்துவிடும்.
கீதா பழைய பதிவை படித்து கருத்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பகிர்வு நன்று.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//பகிர்வு நன்று.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
காணொளியில் பாடியபாடல் கேட்டேன் சிறப்பு.
பதிலளிநீக்குவாழ்க வளத்துடன்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குநலமா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
சஷ்டி தொடக்க நாளிலிருந்து தொடர்ச்சியாக முருகப் பெருமான் பதிவுகள்! அனைவருக்கும் அருள் கிட்டட்டும்.
பதிலளிநீக்கு