முருகன் அருளால் கந்தசஷ்டிக்கு ஆறு நாட்களும் பதிவு போட்டு விட்டேன். ஆறு நாட்களும் தொடர்ந்து வந்து படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
இந்த பதிவில் ஜோதி தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மற்றும் எஸ் . எஸ் காலனி பிள்ளையார் கோவிலில் உள்ள முருகனை வணங்கி வந்த படங்கள் இடம்பெறுகிறது.
அபிஷேகம் நடந்த போது
மூலவருக்கு முன் இரண்டு மயில்கள், நந்தி . ஒரு மயில் இந்திரன் சிறிது காலம் முருகன் வாகனமாக இருந்த மயில் மற்றொன்று சூரபதுமன் மயிலாக மாறியது
கருவறையின் பின்புறம் உள்ள முருகன் தாமரை மலர்களால் பூஜித்த ஐந்து லிங்கங்கள் கருவறைக்குள் மூன்று லிங்கங்கள் உண்டு. ஐந்து லிங்கங்களை காட்டினார்கள். இப்போது இந்த லிங்கங்களை பார்க்க முடிவதே இல்லை கூட்டம் என்கிறவர்கள் தொலைக் காட்சியில் நன்கு தரிசனம் செய்து இருப்பார்கள். நானும் தரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி!
வேலுண்டு வினையில்லை
கந்தன் உண்டு கவலை இல்லை
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பச்சை பட்டு சுற்றிய சக்தி வேல்
வேல் கொண்டு சூரனை அழிக்க விரதம் இருந்து வேலுடன் வரும் குருக்கள்
கூடிய கூட்டங்கள் கடலா தலை அலையா?
துள்ளி வருகுது வேல்
தாரகாசுரன்
தாரகாசுர சம்ஹாரம்
சிங்கமுகன் சம்ஹாரம்
சூரசம்ஹாரம்
சேவலும் மயிலுமாகிய சூரன்
சேவலும் மயிலுமாக மாறிய பின்னும் முருகபெருமானை எதிர்த்து போராட துணிந்தபோது முருகன் தன் அருள்பார்வையால் அவைகளை நோக்கியதும் சேவலும் மயிலும் சினம் தணிந்து முருகபெருமானின் திருபாதத்தை தஞ்சம் அடைந்தது.
சேவலைத் தேரில் கொடியாக அமர்ந்து கூவுமாறும் மயிலை வாகனமாக இருக்குமாறும் செய்தார்.
நேரலையாக எல்லோரும் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் பார்த்து இருப்பீர்கள். நான் தொலைகாட்சியில் பார்த்து விட்டு
பக்கத்தில் இருக்கும் முருகன் கோவில் போய் வந்தேன். ஆறு நாளில் ஒரு நாளாவது போய் வர வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இன்று மகளுக்கு பிறந்த நாள் நட்சத்திரபடி. (19 ம் தேதி) நாளை தேதிபடி. அதனால் போய் அர்ச்சனை செய்து வணங்கி வந்து விட்டேன் முருகனை. அப்போது தான் பூஜை முடிந்து பிரசாதம் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.
வெள்ளி கவசம் அணிந்து முருகன் காட்சி தருகிறார்
சின்ன உற்சவர் ஆறுமுகர் அழகாய் இருந்தார்
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
சீனிவாச பெருமாள், தாயார்
அனுமன் சனிக்கிழமை என்பதால் வெற்றிலை மாலை நிறைய அணிந்து இருந்தார்
துர்க்கை
மீனாட்சி , சொக்கநாதர் தலையில் உத்திராட்ச கீரிடம் அணிந்து இருக்கிறார்
சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், பானகம் எல்லாம் கொடுத்தார்கள்.
கந்தன் காலடியை வணங்கினால் பாடல்
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்கவெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்ககுக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறியமஞ்ஞை வாழ்கயானைதன்னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியாரெல்லாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
__________________________________________________________________
தொலைக்காட்சி நிகழ்ச்சி படங்களை அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமேலும் எல்லா படங்களும் அழகாக இருக்கிறது.
தங்களது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
கந்தன் காலடியை வணங்கினால் பாடல் சிறப்பு.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//தொலைக்காட்சி நிகழ்ச்சி படங்களை அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.
மேலும் எல்லா படங்களும் அழகாக இருக்கிறது.//
நன்றி
//கந்தன் காலடியை வணங்கினால் பாடல் சிறப்பு.//
ஆமாம் இந்த பாடலை மாயவர்த்தில் இருக்கும் போது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவில்களில் எல்லா விழாக்களிலும் போட்டு விடுவார்கள் . கேட்டு கேட்டு விழாக்களில் கேட்கவில்லை என்றால் என்னவோ போல் இருக்கும். கந்த சஷ்டி நாளில் கேட்கவேண்டிய பாடல்.கேட்டு விட்டேன், அப்படியே இங்கும் பகிர்ந்து விட்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
தங்களது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.//
நன்றி
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் படங்கள் பகிர்ந்தது சிறப்பு.
பதிலளிநீக்குஇவ்வளவு மக்கள் கூடுகிறார்களா?
யூடியூபில் பார்க்கணும். திருச்செந்தூர் கோவிலில் பல சந்நிதிகளைப் பார்க்கவில்லை.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குதிருச்செந்தூர் சூரசம்ஹாரம் படங்கள் பகிர்ந்தது சிறப்பு.//
நன்றி.
//இவ்வளவு மக்கள் கூடுகிறார்களா?//
முன்பே கண்ணதாசன் பாடினார் கூடிய கூட்டம் கடலா ? தலையா?
அப்போதும் கூட்டம் இப்போது இன்னும் கூட்டம். அந்த பக்கம் உள்ளவர்கள் சஷ்டி விரதம் கோவிலில் வந்து 6 நாட்களும் இருப்பார்கள். எங்கள் இருவரை தவிர என் கணவர் குடும்பத்தினர் அனைவரும் ஆறு நாளும் திருச்செந்தூரில் போய் விரதம் இருந்து இருக்கிறார்கள்.
யூடியூபில் பார்க்கணும். திருச்செந்தூர் கோவிலில் பல சந்நிதிகளைப் பார்க்கவில்லை.//
நேற்றே கோவிலை சுற்றி காட்டினார்கள் அதை யெல்லாம் எடுத்தால் பதிவில் போட பதிவு மிக பெரிதாகி விடும். நீங்கள் யூடியூபில் பாருங்கள் மூலவரை தவிர அனைத்தையும் காட்டுகிறார்கள்.
அதனால்தான் இந்த முறை கோயிலுக்குள் விரதம் இருக்கும் மக்கள் தங்கக்கூடாது என்று கெடுபிடியா?
நீக்குஎவ்வளவு பக்தர்கள் கூடியிருக்கின்றனர்...ஆச்சர்யமாக இருந்தது. எல்லோருக்கும் நல்ல தரிசனம் கிட்டியிருக்கும், பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திருப்பார்கள்.
சஷ்டி மண்டபத்தில் படுத்து கிடப்பவர்களை வேண்டாம் என்று இருப்பார்கள். எங்கள் வீட்டில் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் தேவாஸ்தான வீட்டை வாடகைக்கு எடுத்து ஆறு நாளும் தங்கி விரதம் இருப்பார்கள். மதியம் மட்டும் வெண்கலபானையில் சாதம் கொண்டு வந்து கொடுப்பார்களாம். அத்தை பொட்டுகடலை துவையல் அரைத்து மதியம் மட்டும் சாப்பிடுவார்களாம்.
நீக்குசஷ்டி மண்டபத்தில் படுத்து இருப்பவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள் கடலில் குளித்து விட்டு அப்படியே இறைவன் நினைப்பில் படுத்து கிடப்பார்கள். அன்ன ஆகாரம் இல்லாமல் கடுமையாக விரதம் இருப்பார்கள்.
//எவ்வளவு பக்தர்கள் கூடியிருக்கின்றனர்...ஆச்சர்யமாக இருந்தது. எல்லோருக்கும் நல்ல தரிசனம் கிட்டியிருக்கும், பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திருப்பார்கள்.//
கண்கானிப்பு காமிரா மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களை சொல்ல சொல்லி அறிவுப்பு பலகைகள் இருந்தன நேற்று நேரலையில் பார்த்தேன். காவல்துறையினர் நிறைய பேர் நின்றார்கள்.
இறைவன் அருளால் பத்திரமாக போய் சேர்ந்து இருப்பார்கள்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயில் படங்களும் அழகு. முடிந்தவரை விரதம் இருந்திருப்பீர்கள்.
பதிலளிநீக்கு//உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயில் படங்களும் அழகு. முடிந்தவரை விரதம் இருந்திருப்பீர்கள்.//
நீக்குவீட்டுக்கு அருகில் என்று பேர் ஆனால் ரோட்டை கடந்து போக முடியாது, போக்குவரத்து அதிகம்.
நாலு ரோடு சந்திப்பு அதனால் ஆட்டோவில் போய் சிறிது நேரம் பார்த்து விட்டு அப்படியே அதே ஆட்டோவில் திரும்பி விட்டேன்.
பைரவர், ஐயப்பன், நவக்கிரகம் எல்லாம் இருக்கிறது. எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கும். முன்பு இந்த கோவிலில் நடந்த மீனாட்சி கல்யாணம் பதிவு போட்டு இருக்கிறேன்.
நீங்கள் சொன்னது போலதான் முடிந்தவரைதான் விரதம் முருகன் பாடல்கள், கந்தபுராணம் படிப்பது என்று முடிந்து விட்டது கந்தசஷ்டி விழா.
சாருடன் 7ம் நாள் பழமுதிர் சோலையில் நடந்த திருக்கல்யாணம் பழமுதிர்ச்சோலையில் பார்த்து பதிவு போட்டது நினைவுகளில்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அருமை. இரு இடங்களில் கன்னாஹாசன் வரிகளுடன் படங்கள் யாவும் ஜோர். முருகனின் அலங்காரங்கள் கண்ணைக் கவர, சூரஸம்ஹார நிகழ்வு அருமை. கூடிய கூட்டம் அப்பப்பா.. எவ்வளவு கூட்டம்.. நிச்சயம் இன்றும் தலையா கடல் அலையா என்று சொல்லும் அளவுதான் கூட்டம்..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அருமை. இரு இடங்களில் கன்னாஹாசன் வரிகளுடன் படங்கள் யாவும் ஜோர்.//
நேற்று நேரலையில் கந்தசஷ்டி விழாவை பற்றி சொன்னவர் கண்ணதாசன் பல பாடல்களை பகிர்ந்து கொண்டார்.
//முருகனின் அலங்காரங்கள் கண்ணைக் கவர, சூரஸம்ஹார நிகழ்வு அருமை. கூடிய கூட்டம் அப்பப்பா.. எவ்வளவு கூட்டம்.. நிச்சயம் இன்றும் தலையா கடல் அலையா என்று சொல்லும் அளவுதான் கூட்டம்..//
மதியம் நடந்த அபிஷேகம் மிகவும் அருமை. (மிக அதிகம்)
கண்ணதாசன் பாடலில் சொன்னது போல காலம் காலமாக கூட்டம் இன்னும் இன்னும் அதிகமாக ஆகும் போல! கடலும் உள் வாங்கி மக்கள் நிற்க இடம் ஒதுக்கியது என்றார் நேர்முக வர்ணனை சொன்னவர்.
உங்கள் மகள் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும். ஆறு நாளும் விரதம் இருந்தீர்களா? மயில்வாகனனை மனதில் இருத்தி துயரெல்லாம் நீங்கப்பெறுவோம்.
பதிலளிநீக்கு//உங்கள் மகள் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.//
நீக்குநன்றி ஸ்ரீராம்.
ஆறு நாளும் விரதம் இருந்தீர்களா? //
இல்லை கடைசி நாள் மட்டும் காலையில் விரதம் , இரவு கோவிலில் கொடுத்த பிரசாதம் மட்டும்.//
// மயில்வாகனனை மனதில் இருத்தி துயரெல்லாம் நீங்கப்பெறுவோம்.//
ஆறு நாளும் முருகன் மன வருத்தம், உடல் வலிகளை யோசிக்கவிடவில்லை, உற்சாகமாக வைத்து இருந்தார்.
கார்த்திகை மாதம் சர்வஏகாதசி அன்று சாரின் நினைவு நாள் வருகிறது.
முருகன் எனக்கு ஆறுதலை அளித்தார்.
திருவருள் பாடல் கேட்டேன். அந்தக் காலத்தில் ஏ வி எம் ராஜன் தேவர் எடுக்கும் முருகன் படங்களுக்காகவே அவதாரம் எடுத்தவர் போல இருப்பார். தேவர் படங்களில் பாடல்களும் பிரமாதமாக அமையும். துணைவன், தெய்வம், திருவருள் எல்லாமே அற்புதமான படங்கள்.
பதிலளிநீக்கு//திருவருள் பாடல் கேட்டேன். அந்தக் காலத்தில் ஏ வி எம் ராஜன் தேவர் எடுக்கும் முருகன் படங்களுக்காகவே அவதாரம் எடுத்தவர் போல இருப்பார்.//
நீக்குஆமாம்.
//தேவர் படங்களில் பாடல்களும் பிரமாதமாக அமையும். துணைவன், தெய்வம், திருவருள் எல்லாமே அற்புதமான படங்கள்.//
போன வருடம் துணைவன் பார்த்தேன். பதிவிலும் பகிர்ந்தேன். மூன்று படங்களும் பாடல்களும் அருமையாக இருக்கும்.
இந்த தடவை கந்தன் கருணை பார்த்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
அழகு..
பதிலளிநீக்குஅற்புதம்...
முருகா..
முருகா..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஅழகு..
அற்புதம்...
முருகா..
முருகா..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குமுருகா சரணம்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் சிறப்பு...
முருகா சரணம்...//
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் எல்லாம் கண்டு ரசித்தேன். மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் எல்லா நன்மைகளும் நல்கிட பிரார்த்தனைகள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎல்லாப் பதிவுகளும் வாசித்தேன் இடையில் ஓன்றிரண்டு கருத்து தரவைல்லையோ. அப்படித்தான் நினைக்கிறேன்.
உங்கள் மகன் கோயிலுக்குச் சம்ஹாரத்திற்குச் செய்துகொடுத்த உருவங்கள் எல்லாம் நினைவிருக்கிறது.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள் எல்லாம் கண்டு ரசித்தேன். மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் எல்லா நன்மைகளும் நல்கிட பிரார்த்தனைகள் வாழ்த்துகள்.//
நன்றி.
//எல்லாப் பதிவுகளும் வாசித்தேன் இடையில் ஓன்றிரண்டு கருத்து தரவைல்லையோ. அப்படித்தான் நினைக்கிறேன்//
பரவாயில்லை சகோ.
//உங்கள் மகன் கோயிலுக்குச் சம்ஹாரத்திற்குச் செய்துகொடுத்த உருவங்கள் எல்லாம் நினைவிருக்கிறது.//
இரண்டு நாட்களுக்கு முன் போட்டேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோமதிக்கா, துளசியின் கருத்தைப் போடும் போது அவர் எழுத்து சட்டென்று புரிபடாமல் மகள் என்பதற்குப் பதில் மகன் என்று அடித்துவிட்டேன்...மகள் என்று பார்த்துக்கோங்க.
பதிலளிநீக்குஇப்போதுதான் பதிவு பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் பார்த்துவிட்டு வருகிறேன்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா, துளசியின் கருத்தைப் போடும் போது அவர் எழுத்து சட்டென்று புரிபடாமல் மகள் என்பதற்குப் பதில் மகன் என்று அடித்துவிட்டேன்...மகள் என்று பார்த்துக்கோங்க.//
அப்படித்தான் படித்தேன்.
//இப்போதுதான் பதிவு பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் பார்த்துவிட்டு வருகிறேன்.//
படிங்ககீதா, வாங்க.
கோமதிக்கா டிவியில் நீங்கள் எடுத்துப் பகிர்ந்திருக்கும் படங்களும், வீட்டருகில் உள்ள முருகன் கோயில் படங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன டிவி படங்களும் தெளிவாக இருக்கின்றன.
பதிலளிநீக்குபிரசாதங்கள்! ஸ் ஆஹா....அதென்னவோ கோயில் என்றால் பிரசாதம் தான் முதலில் மனதிற்கு வருது! மகள் பிறந்த நாளுக்கு அவங்களுக்கு வாழ்த்துகள் கோமதிக்கா.
கீதா
//கோமதிக்கா டிவியில் நீங்கள் எடுத்துப் பகிர்ந்திருக்கும் படங்களும், வீட்டருகில் உள்ள முருகன் கோயில் படங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன டிவி படங்களும் தெளிவாக இருக்கின்றன.//
நீக்குநன்றி கீதா
//பிரசாதங்கள்! ஸ் ஆஹா....அதென்னவோ கோயில் என்றால் பிரசாதம் தான் முதலில் மனதிற்கு வருது! மகள் பிறந்த நாளுக்கு அவங்களுக்கு வாழ்த்துகள் கோமதிக்கா.//
பிரசாதங்கள் கிடைத்தது மகிழ்ச்சி.
மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி கீதா
அப்போதைய முருகன் படங்கள் பெரும்பாலும் தேவர் எடுத்ததாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், பார்த்ததுண்டு கோயில் திருவிழாவின் போது தேரடியில் போடுவாங்க சிவராத்திரிக்குப் போடுவாங்க அது பெரும்பாலும் திருவிளையாடலாக அல்லது திருவருட்செல்வர் இப்படி இருக்கும்.
பதிலளிநீக்குதேவர் படப்பாடல்கள் முருகன் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். இந்தப்பாடல் கந்தன் காலடியை வணங்கினால் பல முறைகேட்டு ரசித்த பாடல். இப்பவும் கேட்டு ரசித்தேன் கோமதிக்கா.
அனைத்தும் ரசித்தேன்.
கீதா
அப்போதைய முருகன் படங்கள் பெரும்பாலும் தேவர் எடுத்ததாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், பார்த்ததுண்டு கோயில் திருவிழாவின் போது தேரடியில் போடுவாங்க சிவராத்திரிக்குப் போடுவாங்க//
நீக்குஆமாம்.
//அது பெரும்பாலும் திருவிளையாடலாக அல்லது திருவருட்செல்வர் இப்படி இருக்கும்.//
ஏ.பி நாகராஜன் எடுத்த படங்கள் இவை.
அனைத்தையும் ரசித்து பார்த்து, படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குகந்தா போற்றி முருகா போற்றி.அவன் பாதம் பணிந்து அருளை வேண்டுகிறோம்.
படங்கள் ,பாடல்களுடன் பகிர்வு சிறப்பு.
மகளின் பிறந்தநாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
நீக்கு//கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கண்டு வணங்கினோம்.//
நன்றி.
//கந்தா போற்றி முருகா போற்றி.அவன் பாதம் பணிந்து அருளை வேண்டுகிறோம்.//
ஆமாம், வேண்டுவோம்.
//படங்கள் ,பாடல்களுடன் பகிர்வு சிறப்பு.
மகளின் பிறந்தநாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்.//
பதைவை ரசித்து கருத்து சொன்னதற்கும், மகளுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கும் நன்றி மாதேவி.
நேரலைக் காட்சிகளைப் பொறுமையாகப் படமாக்கிக் காணத் தந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகோயில் தரிசனம் அருமை. கயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
சஷ்டி பதிவுகள் யாவும் சிறப்பு!
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//கோயில் தரிசனம் அருமை. கயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!//
வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி, கயலிடம் சொல்கிறேன்.
//சஷ்டி பதிவுகள் யாவும் சிறப்பு//
நேரலையில் பார்க்காதவர்களுக்கு இந்த பகிர்வு.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
/// கருவறையின் பின்புறம் உள்ள முருகன் தாமரை மலர்களால் பூஜித்த ஐந்து லிங்கங்கள் ///
பதிலளிநீக்குஇருபது வருடங்களுக்கு முன்பு ஒருசமயம் தரிசனம் செய்திருக்கின்றோம்...
இருபது வருடங்களுக்கு முன்பு ஒருசமயம் தரிசனம் செய்திருக்கின்றோம்...//
நீக்கு. மிகவும் பக்கத்தில் ஒரு காலத்தில் போய் பார்த்து இருக்கிறோம். ஆனால் லிங்கம் பார்த்த நினைவு இல்லை.
கடற்கரை ஓரமாக இருந்த சாயா அபிஷேக மண்டபம் சில வருடங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.. இடும்பன் சந்நிதி தங்குமிடமும் இப்போது இல்லை...
பதிலளிநீக்குஎல்லாம் அவன் செயல்..
என் அப்பன் திருச்செந்தூர் முருகப் பெருமான் சூரனுடன் போர் புரிந்தவன் ஆயினும் கோபம் தணிந்த நிலையில் சிவ பூஜை செய்து கொண்டு யோக நிலையில் இருக்கின்றான்..
மாயையின் புத்திரர்களை அழித்து ஒழித்த சண்முகனுக்கு இன்றைய பதர்கள் எம்மாத்திரம்!..
கடற்கரை ஓரமாக இருந்த சாயா அபிஷேக மண்டபம் சில வருடங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.. இடும்பன் சந்நிதி தங்குமிடமும் இப்போது இல்லை...
பதிலளிநீக்குஎல்லாம் அவன் செயல்..//
இப்போதும் கட்டுமான பணிகள் நடக்கிறது. வள்ளி குகை கிட்ட தங்கும் இடங்கள் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எல்லாம் இணையத்தில் பார்த்தது. பல வருடங்கள் ஆச்சு திருச்செந்தூர் போய்.
//என் அப்பன் திருச்செந்தூர் முருகப் பெருமான் சூரனுடன் போர் புரிந்தவன் ஆயினும் கோபம் தணிந்த நிலையில் சிவ பூஜை செய்து கொண்டு யோக நிலையில் இருக்கின்றான்..
மாயையின் புத்திரர்களை அழித்து ஒழித்த சண்முகனுக்கு இன்றைய பதர்கள் எம்மாத்திரம்!..//
நீங்களே சொல்லி விட்டீர்கள் எல்லாம் அவன் செயல் என்று .
அவர் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நானும் நேரலையில் பார்த்தேன். மயிலையும் மாமரத்தையும் பார்க்கலை. அதே போல் லிங்கங்களையும் பார்க்கலை/ மிக அருமையாகவும் பொறுமையாகவும் படங்கள் எடுத்துள்ளீர்கள். எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. முகநூலில் உங்கள் மகள் பிறந்த நாள் பற்றிப் பார்த்தேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//நானும் நேரலையில் பார்த்தேன். மயிலையும் மாமரத்தையும் பார்க்கலை. அதே போல் லிங்கங்களையும் பார்க்கலை//
மயில் நான் என்னிடமிருந்த சேமிப்பில் இருந்து எடுத்து போட்டேன் அவர்கள் அதை காட்டவில்லை. மயில் தேசிய பறவை என்பதால் கொடுமை படுத்த கூடாது என்று அது காட்டுவது இல்லை போலும்.
சேவலை மட்டும் வேலில் தலைகீழாக கட்டி தொங்கவிடுவார்கள்.
லிங்கங்கள் கோவில் முழுவதையும் சுற்றி காட்டியது சம்ஹாரத்திற்கு முன்.
//எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.//
நன்றி.
//முகநூலில் உங்கள் மகள் பிறந்த நாள் பற்றிப் பார்த்தேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.//
உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிவும் படங்களும் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.