புதன், 21 ஆகஸ்ட், 2024

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை (Sunset Crater volcano ) தேசிய பூங்கா


 சூரிய அஸ்தமன பள்ளம்  எரிமலை பார்வையாளர் மையம்


இந்த இடம் கொகோனினோ கவுண்டி என்று அழைக்கப்படும்  அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃபிற்கு வடக்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ளது இந்த  பூங்கா.

1000 வருடங்களுக்கு முன்   எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள். ஜூலை மாதம் மகன்  அழைத்து போனான்.
அங்கு எடுக்கப்பட்ட படங்களும், இணையம் மூலம் அறிந்து கொண்ட செய்திகளும் இடம் பெறுகிறது இந்த பதிவில்.


சன்செட் க்ரேட்டர் என்பது அமெரிக்க மாநிலமான அரிசோனாவில் ஃபிளாக்ஸ்டாஃப்பின் வடக்கே அமைந்துள்ள ஒரு சிண்டர் கூம்பு ஆகும். இந்த பள்ளம்  எரிமலை தேசிய நினைவுச்சின்னமாக போற்றி பாதுகாக்கப்படுகிறது.



 மேலே போய் எரிமலை துவாரத்தைப்பார்க்க   தடை விதித்து உள்ளது .

இயற்கையின் மிருகத்தனமான சக்திகளின் அழகான ஆனால் வினோதமான நினைவூட்டல்கள் என்ற வாசகத்தோடு   இணையத்தில் பகிர்ந்து இருந்த படம்.  பகிர்ந்தவர்களுக்கு நன்றி.



பூங்காவின்  நுழைவாயிலுக்கு அருகில் பார்வையாளர் மையம் அமைந்துள்ளது. 




உள்ளே பார்த்த பழங்குடி மக்களின் கைவினை  பொருட்களில் என்னை கவர்ந்த கிலு கிலுப்பை. ஆடைகள், தொப்பிகள், குளிர் கண்ணாடி, தணணீர் பாட்டில் விற்கப்படுகிறது.



உள்ளே காணொளியாக எரிமலை பற்றிய படம் ஓடி கொண்டு இருக்கிறது அமர்ந்து பார்க்க ஆசனங்கள் உள்ளது. நாங்கள் போகிற போக்கில் படங்களை எடுத்து வாசித்து விட்டு வெளியே வந்தோம்.

ஏப்ரல் 2022 இல், சுரங்கப்பாதை தீ நினைவுச்சின்னம் முழுவதும் எரிந்தது, இருப்பினும் பார்வையாளர் மையம் காப்பாற்றப்பட்டது.[15][16] டிசம்பர் 2022 இல், பார்வையாளர் மையம் மற்றும் நிர்வாக வசதிகள் உட்பட 98 ஏக்கர் கொக்கோனினோ தேசிய வனத்திலிருந்து தேசிய நினைவுச்சின்னத்திற்கு மாற்றப்பட்டது





 

ஜூன் 5, 2015 அன்று, செயற்கைக்கோள் படங்களைக் கொண்ட இணையதளம், பள்ளத்தில் இருந்து நீராவி எழுவதாகப் புகாரளித்தது, இது சூரிய அஸ்தமனப் பள்ளம் வெடிக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. நீராவிக்கான காரணம் பின்னர் காட்டுத் தீ என்று தீர்மானிக்கப்பட்டது, மேலும் புவியியலாளர்கள் எரிமலை அழிந்துவிட்டதாகக் கூறினர்.

உறங்கி கொண்டு இருக்கும் எரிமலை மகன் எடுத்த படம்

எரிமலை குழம்புகள் பாறைகளாக இறுகி போய் இருப்பது

கறுப்பு கலர் மண்

ஒவ்வொரு இடத்திலும் இப்படி குகை போன்ற அமைப்புகள் இருந்தன


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  எரிமலை வெடித்து  இங்கு வாழ்ந்த மக்களின் நிலபரப்பையும், வாழ்க்கையையும் மாற்றியது. லாவா ஓட்டம் அங்கு நடத்தற்கு சாட்சியாக  நிலத்தில் உள்ளது.  எரிமலை குழம்பு கல்லாகி இறுகி பாறை போல கிடக்கிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மரங்களும் , பூச்செடிகளும்  , பாறைகளுக்கு இடையில் வளர்கின்றன

லாவா ஓட்டம் ஒரு கனவு போல நிலத்தில் உள்ளது, பாறையின் அதிசய பூமி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிழிந்து, வானத்தில் எரிமலை வெடித்து, இங்கு வாழ்ந்த மக்களின் நிலப்பரப்பையும் வாழ்க்கையையும் என்றென்றும் மாற்றியது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மரங்களும் பூக்களும் பாறைகளுக்கு இடையில் வளர்கின்றன.  


முற்றிலும் அழிந்த போதிலும் அதன் மிச்சங்கள் காட்சியாக இருப்பத்தை பார்க்க போனோம். 



பேரன் கைபிடித்து அழைத்து செல்கிறான், வெயில் தாக்கம் அதிகம் என்பதால்  நம்மை பாதுகாத்து கொள்ள தொப்பி, குளிர் கண்ணாடி அணிந்து போக வேண்டும் , உடம்புக்கு வெயிலில் இருந்து காப்பற்றிக் கொள்ள சூரிய பாதுகாப்பு காரணிகளை தடவி கொள்ள வேண்டும். மருமகள் அதை என் உடம்பில் தெளித்து விட்டாள்.  

எரிமலை குழப்புகளுக்கு நடுவில் செல்லப்போகிறோம்


"தரையை பார்த்து வா ஆச்சி" என்றான் பேரன்
 எங்களை  முன்னே போன மகன் தன் கைபேசி மூலம் எடுத்த படங்கள்.





இன்னும் கொஞ்ச துரம் தான் அப்புறம் திரும்பி விடுங்கள் என்று மகன் சொல்லி விட்டான்.அப்புறம் பாதை சரியில்லை என்று சொல்லி விட்டதால் அங்கேயே சில படங்கள் எடுத்துக் கொண்டோம். 





அங்கு பார்த்த சிறு  செடியில் மஞ்சள் மலர் . மலரில்   சிறிய  சிவப்பு  வண்ணத்துப்பூச்சி

தேன் உண்ணும் பூச்சி

பைன் மரங்களின் காய்கள் கீழே உதிர்ந்து கிடக்கிறது


நான் பேரனை படம் எடுத்தேன், பேரன் என்னை படம் எடுத்தான்.







"கொஞ்சம் என்னை பாருங்க " என்றான் மகன்


மீண்டும் மேலே  ஏறஆரம்பித்து விட்டோம்.



மகன் எடுத்த  சிறிய  காணொளி பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

அடுத்த பதிவிலும் இந்த இடத்தில் எடுத்த படங்கள் வரும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. ஆயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததன் அடையாளம் இன்றும்....   ஆச்சர்யப்பட வைக்கிறது.  

    // ஜூலை மாதம் மகன் குடும்பத்துடன் போய் வந்த  இடம். //

    நீங்கள் செல்லவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஆயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததன் அடையாளம் இன்றும்.... ஆச்சர்யப்பட வைக்கிறது. //

      ஆமாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இடத்தை பத்திரபடுத்தி நினைவு சின்னமாக வைத்து இருப்பது ஆச்சரியம் தான்.

      // ஜூலை மாதம் மகன் குடும்பத்துடன் போய் வந்த இடம். //

      நீங்கள் செல்லவில்லையா?//

      மகன் அழைத்து போன இடம் என்று திருத்தி விட்டேன்.

      நீக்கு
  2. வெளியிலிருந்தே பார்க்கவா இவ்வளவு கூட்டம்? உள்ளே சென்று பார்த்தால் ஆபத்தா? உள்ளே சென்று என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று பார்ப்பதுதானே சுவாரஸ்யம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளியிலிருந்தே பார்க்கவா இவ்வளவு கூட்டம்? உள்ளே சென்று பார்த்தால் ஆபத்தா? உள்ளே சென்று என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று பார்ப்பதுதானே சுவாரஸ்யம்?//

      எரிமலை வாய் உள்ளே போய் பார்க்க வேண்டுமா ஸ்ரீராம்?
      அது ஆபத்து என்று தானே தடை செய்து இருக்கிறார்கள்.
      மலை மேல் ஏற அனுமதி இல்லை.
      எரிமலை செத்து விட்டது என்று சொல்கிறார்கள், உறங்கி கொண்டு இருந்து விழித்து விட்டால் ஆபத்து தானே!

      நீக்கு
  3. // நாங்கள் போகிற போக்கில் படங்களை எடுத்து வாசித்து விட்டு வெளியே வந்தோம். //

    ஓ...   நீங்களும் உடன் சென்றீர்கள் என்று தெரிகிறது!  மகன் என்கிற வார்த்தைக்கு பக்கத்தில் கமா மனதில் சேர்த்துக் கொண்டேன் போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / நாங்கள் போகிற போக்கில் படங்களை எடுத்து வாசித்து விட்டு வெளியே வந்தோம். //

      ஓ... நீங்களும் உடன் சென்றீர்கள் என்று தெரிகிறது! மகன் என்கிற வார்த்தைக்கு பக்கத்தில் கமா மனதில் சேர்த்துக் கொண்டேன் போல....//

      பார்வையாளர் மையத்தை முதலில் பார்த்து விட்டு அப்புறம் தான் எரிமலை குழம்பு வழிந்து கல்லாய் மாறியதைப்பார்க்க போனோம்.

      நீக்கு
  4. காணொளியில் செடியின் அசைவைத்தவிர வேறு ஒன்றும் அசைவில்லை!  எரிமலை இன்னும்  உயிர்ப்புடன் ஆனால் உறக்கத்தில் இருக்கிறது போலும்.  உள்ளே இறங்க முடியாமல் வெப்பமாக இருக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் செடியின் அசைவைத்தவிர வேறு ஒன்றும் அசைவில்லை! //
      அது ஒரு விதமாக படம் பிடிப்பது.

      //எரிமலை இன்னும் உயிர்ப்புடன் ஆனால் உறக்கத்தில் இருக்கிறது போலும். உள்ளே இறங்க முடியாமல் வெப்பமாக இருக்குமோ...//

      அப்படித்தான் இருக்கும் போல சொல்ல முடியாதே! எரிமலை எப்போது வெடிக்கும் என்று.

      நீக்கு
  5. படங்கள் யாவும் சுவாரஸ்யம்.  வெய்யில் தொப்பியுடன் ஸ்டைலாக காட்சி தருகிறீர்கள்!  பேரனின் அன்பு எப்போதும்போல கவர்கிறது.  லாவா ஓட்ட பாறைகள் நடுவே எப்படி நடந்தீர்கள்?  கால் வைக்கவே கரடு முரடாக இருந்திருக்கும் போலவே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் சுவாரஸ்யம். //

      நன்றி.

      //வெய்யில் தொப்பியுடன் ஸ்டைலாக காட்சி தருகிறீர்கள்! பேரனின் அன்பு எப்போதும்போல கவர்கிறது.//

      தொப்பி அணிந்து போனதால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்தேன்.

      பேரன் உதவியாலும், அவன் தரும் உற்சாகத்தாலும் தான் நடந்து போனேன்.

      //லாவா ஓட்ட பாறைகள் நடுவே எப்படி நடந்தீர்கள்? கால் வைக்கவே கரடு முரடாக இருந்திருக்கும் போலவே....//


      பாறைகளுக்கு நடுவில் சிறிய பாதை இருந்த இடத்தில் நடந்தோம். காலில் பூட்ஸ் அணிந்து இருந்தேன்.

      பாதை சரியில்லை என்று தெரிந்தவுடன் மகன் வந்த வழியே திரும்பி வர சொல்லி விட்டான். அதனால் நாங்கள் இருவரும் திரும்பி விட்டோம்.நாங்கள் இருந்தது பள்ளத்தில், மகன் மேட்டிலிருந்து எங்களை படம் எடுத்தான். எங்களை மேட்டில் ஏற வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. இயற்கையின் எண்ணற்ற திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. வியத்தகு காட்சிகளை, தங்களால் நாங்களும் கண்டோம். படங்கள் ஒவ்வொன்றும் துல்லியம். நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //இயற்கையின் எண்ணற்ற திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.//

      ஆமாம், திடீர் வெள்ளம், திடீர் எரிமலை வெடித்தல் எல்லாம் இயற்கையின் திருவிளையாடல் தான்.

      //வியத்தகு காட்சிகளை, தங்களால் நாங்களும் கண்டோம். படங்கள் ஒவ்வொன்றும் துல்லியம். நன்றி சகோதரி//

      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.


      நீக்கு
  7. காட்சிகள் பார்க்கத் தந்தமைக்கு நன்றி. இயற்கையின் சீற்றம் தந்த மாற்றங்கள் - இயற்கையை மீறி நாம் எதுவும் செய்துவிடமுடியாது என அவ்வப்போது நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //காட்சிகள் பார்க்கத் தந்தமைக்கு நன்றி. இயற்கையின் சீற்றம் தந்த மாற்றங்கள் - இயற்கையை மீறி நாம் எதுவும் செய்துவிடமுடியாது என அவ்வப்போது நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.//

      இயற்கையின் சீற்றம் தந்த மாற்றங்களை நமக்கு காட்சிக்கு அப்படியே விட்டு வைத்து இருப்பது நாம் உணரத்தான்.
      இயற்கையை மீறி மனிதன் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான்.
      இயற்கையும் சமயம் கிடைக்கும் போது எல்லாம் உணர்த்துகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. மகன் எடுத்த காணொளி சூப்பர்,

    முதலில் இது கண்ணில் பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //மகன் எடுத்த காணொளி சூப்பர்,

      முதலில் இது கண்ணில் பட்டது.//

      நன்றி கீதா.

      நீக்கு
  9. 1000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள்.//

    பாருங்க அக்கா, அங்கு ஒரு சின்ன நிகழ்வைக் கூட எப்படி சுற்றுலாவாகக் கொண்டாடுறாங்க!!

    நம்ம ஊர்ல இல்லாததா? என்று அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாருங்க அக்கா, அங்கு ஒரு சின்ன நிகழ்வைக் கூட எப்படி சுற்றுலாவாகக் கொண்டாடுறாங்க!!//

      சின்ன நிகழ்வு இல்லை கீதா, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்ச்சி. வீடு, நிலம் இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள் கீதா. அவர்கள் எல்லாம் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து இருப்பார்கள்.

      அதை அவர்கள் நினைவூட்ட வைத்து இருக்கிறார்கள்.

      //நம்ம ஊர்ல இல்லாததா? என்று அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும்//

      நம்ம ஊரில் இப்போது ஒரு வெள்ளத்தால் மூன்று கிராமம் அழிந்து விட்டது, அதை மீண்டும் கொண்டு வர இயலுமா?

      நம் நாட்டில் சரித்திர புகழ் பெற்ற நினைவிடங்கள் நிறைய இருக்கிறது அதை பாதுகாத்தாலே போதும்.

      நீக்கு
  10. இந்த பள்ளம் எரிமலை தேசிய நினைவுச்சின்னமாக போற்றி பாதுகாக்கப்படுகிறது.//

    பாருங்க!!!!

    என்ன அழகு....பார்க்கவே ஆச்சரியமாகவும் கவரும் விதத்திலும் இருக்கிறது.

    வெங்கட்ஜி சொல்லியிருந்தார் நேற்று பதிவு வாசித்தேன் அங்கு ஆனால் கமென்ட் போட முடியாம போச்சு பவரே இல்லை நேற்று முழு நாளும்.

    வாரணாசியில் ராணி லக்குமி பாய் இடத்தைப் பற்றி சொல்லியிருந்தப்ப வரலாற்று சிறப்பு மிக்க அந்த இடம் சரியாவே பேணப்படலை யாருமே இல்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.

    ம்ம்ம் என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாரணாசியில் ராணி லக்குமி பாய் இடத்தைப் பற்றி சொல்லியிருந்தப்ப வரலாற்று சிறப்பு மிக்க அந்த இடம் சரியாவே பேணப்படலை யாருமே இல்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.//

      ஆமாம், நானும் படித்தேன். சரித்திரத்தில் முக்கியமானவர் , அவர் நினைவிடம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

      நீக்கு
  11. இயற்கையின் விளையாட்டுகள் வியப்பானவைதான். கோரத்தாண்டவம் ஆடுமே சில சமயம். ஆனால் அதை கோரத்தாண்டவம் என்று சொன்னாலும் அது தன் செயல்பாடுகளை நிகழ்த்துகிறது நமக்குப் பாதிப்பு வரும் போது கோரத்தாண்டவம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இயற்கையின் விளையாட்டுகள் வியப்பானவைதான். கோரத்தாண்டவம் ஆடுமே சில சமயம். ஆனால் அதை கோரத்தாண்டவம் என்று சொன்னாலும் அது தன் செயல்பாடுகளை நிகழ்த்துகிறது நமக்குப் பாதிப்பு வரும் போது கோரத்தாண்டவம்//

      ஆமாம், பாதிக்கப்பட்டவர்களை பற்றி படிக்கும் போது மனம் கஷ்டபடுகிறது. ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. வேறு என்ன செய்ய முடியும்?
      ஆதார் கார்ட், பள்ளி, கல்லூரி சான்றிதழ் எல்லாம் வெள்ளத்தால் அடித்து போனதை ஒருவர் சொன்ன போது கவலை அளித்தது.

      நீக்கு
  12. ஆமா வெயில் கடுமையாக இருப்பது தெரிகிறது. tan ஆகாம இருக்கணுமே பாதுகாப்பு தேவை.

    பேரன் உங்களை அழைத்துச் செல்வது மகிழ்ச்சியான விஷயம்.

    மஞ்சல் மலரில் சிறிய சிவப்பு வண்ணத்துப்பூச்சி படம் சூப்பர்

    பேரன் மற்றும் உங்கள் படங்கள் ரசித்தேன்

    எல்லாப் படங்களையும், தகவல்களையும் ரசித்தேன் கோமதி அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமா வெயில் கடுமையாக இருப்பது தெரிகிறது. tan ஆகாம இருக்கணுமே பாதுகாப்பு தேவை.//

      ஆமாம்.


      //பேரன் உங்களை அழைத்துச் செல்வது மகிழ்ச்சியான விஷயம்.//

      அவன் பொறுப்பு நான் வெளியில் இறங்கி விட்டால்.


      //மஞ்சல் மலரில் சிறிய சிவப்பு வண்ணத்துப்பூச்சி படம் சூப்பர்

      பேரன் மற்றும் உங்கள் படங்கள் ரசித்தேன்//

      நாங்கள் இருவரும் எடுத்த படங்களை ரசித்தமைக்கு நன்றி.

      //எல்லாப் படங்களையும், தகவல்களையும் ரசித்தேன் கோமதி அக்கா.//

      அனைத்தையும் ரசித்து பல கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது சகோ.

    தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது சகோ.

      தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. சிறிய காணொளியாயினும் அழகிய காட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறிய காணொளியாயினும் அழகிய காட்சி.//

      காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் அழகாக உள்ளன. பேரன், மற்றும் மகன் இருவரும் படம் பிரேம் செட் செய்து எடுத்துள்ளது நன்றாக உள்ளது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகாக உள்ளன. பேரன், மற்றும் மகன் இருவரும் படம் பிரேம் செட் செய்து எடுத்துள்ளது நன்றாக உள்ளது.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அணைந்த எரிமலை படங்கள் நன்று.

    உங்களுக்கும் அது புது அனுபவமாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அணைந்த எரிமலை படங்கள் நன்று.

      உங்களுக்கும் அது புது அனுபவமாக இருந்திருக்கும்//

      ஆமாம், எனக்கு புது அனுபவம் தான்.

      நீக்கு
  17. நான் மற்றும் குடும்பத்துடன் இரண்டு எரிமலைகளுக்குச் சென்றிருக்கிறேன். அதைப் பற்றிய பதிவு தயார் செய்துகொண்டு இருக்கிறேன்.

    இப்போது நினைக்கும்போது, ஆபத்து புரியாமல் சென்றுவிட்டோமோ என்று யோசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் மற்றும் குடும்பத்துடன் இரண்டு எரிமலைகளுக்குச் சென்றிருக்கிறேன். அதைப் பற்றிய பதிவு தயார் செய்துகொண்டு இருக்கிறேன்.//

      பதிவில் உங்கள் அனுபவங்களை படிக்கிறேன்.


      //இப்போது நினைக்கும்போது, ஆபத்து புரியாமல் சென்றுவிட்டோமோ என்று யோசிக்க வைத்தது//

      அனுமதிக்கப்பட்ட எரிமலை குகைகள் தானே! அப்படி என்றால் ஆபத்து அவ்வளவு இருக்காது என்று நம்புகிறேன்.
      நாங்கள் போன இடத்தில் தடை செய்து இருக்கிறார்கள்.

      அனுமதி கிடைத்து இருந்தால் எல்லோரும் போய் பார்ப்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. எரிமலை குழம்புகளுக்கு நடுவில் நடந்தது மெய் சிலிர்க்கும் நிகழ்வு..

    அழகான பதிவு..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //எரிமலை குழம்புகளுக்கு நடுவில் நடந்தது மெய் சிலிர்க்கும் நிகழ்வு..

      அழகான பதிவு..

      மகிழ்ச்சி..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. /// பழங்குடி மக்களின் கைவினை  பொருட்களில் என்னை கவர்ந்த கிலு கிலுப்பை ///

    நம்ம ஊரில் கிலு கிலுப்பை கொடுத்து யார் பிள்ளை வளர்க்கின்றார்கள் இக்காலத்தில்?..

    பழையனவும் பெருமையும் இங்கே யாருக்கும் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நம்ம ஊரில் கிலு கிலுப்பை கொடுத்து யார் பிள்ளை வளர்க்கின்றார்கள் இக்காலத்தில்?..

      பழையனவும் பெருமையும் இங்கே யாருக்கும் தெரியவில்லை...//

      இப்போது பழைய வடிவில் இல்லாமல் கிலுகிலுப்பை புது வடிவில் வருவதை வாங்கி குழந்தைகள் கையில் கொடுக்கிறார்கள்.

      பழையனவும் பெருமையும் மீண்டும் விரும்பபடும் காலம் வரும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  20. ஆஹா. நாமே நேரில் பார்க்கிற உணர்வைத் தரும் எத்தனை படங்கள்?

    படங்கள் உங்கள் பதிவுகளின் ஒரு சிறப்பு அம்சம் என்றாலும்
    பல ஆண்டுகள் கழித்து
    உங்கள் தளத்திற்கு வருவதாலும் இந்த திகைப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    அரிசோனா மானிலப் பகுதிக்கு வந்திருக்கிறேன். Los Vegas

    ஹூவர் Dam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      //ஆஹா. நாமே நேரில் பார்க்கிற உணர்வைத் தரும் எத்தனை படங்கள்?

      படங்கள் உங்கள் பதிவுகளின் ஒரு சிறப்பு அம்சம் என்றாலும்
      பல ஆண்டுகள் கழித்து
      உங்கள் தளத்திற்கு வருவதாலும் இந்த திகைப்பு ஏற்பட்டிருக்கலாம்.//

      நன்றி சார்.


      //அரிசோனா மானிலப் பகுதிக்கு வந்திருக்கிறேன். Los Vegas

      ஹூவர் Dam//

      முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  21. (தொடர்ச்சி)
    அரிசோனா மாகாண
    Grand Canyon அதல பாதாளம், Hoover dam
    உள்பகுதிக்கெல்லாம் சென்று பார்த்து விட்டு
    Las vegas நோக்கிப் பயணப்பட்டோம். பார்க்கப் போனால் Las Vegas தான் எங்கள் பயணத்திட்டம். அதன்படியே மூன்று நாட்கள் அங்கு தங்கி உலகம் பூராவும் விரவிக் கிடக்கும் முக்கிய இடங்களைப் பார்த்த பிரமையில் திளைத்து விமானப் பயணமாக அட்லாண்டா திரும்பினோம். எல்லாமே மறக்க முடியாத நினைவுகள்

    அங்கு போயும் மஞ்சள் மலர், வண்ணத்துப் பூச்சி
    என்று உங்கள் favorite எல்லாம் வந்து விட்டார்களே!.....

    பேரன் அருகாமை பேரின்பம். உணர்ந்து சொல்கிறேன்.

    நானும் இந்த மாதிரி Hat ஒன்று வாஷிங்டன் போன நினைவாக வாங்கி வைத்திருக்கிறேன். வெப்பம் தாங்கியாய் அதைப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதுண்டு.

    பதிலளிநீக்கு
  22. அரிசோனா மாகாண
    Grand Canyon அதல பாதாளம், Hoover dam
    உள்பகுதிக்கெல்லாம் சென்று பார்த்து விட்டு
    Las vegas நோக்கிப் பயணப்பட்டோம். பார்க்கப் போனால் Las Vegas தான் எங்கள் பயணத்திட்டம். அதன்படியே மூன்று நாட்கள் அங்கு தங்கி உலகம் பூராவும் விரவிக் கிடக்கும் முக்கிய இடங்களைப் பார்த்த பிரமையில் திளைத்து விமானப் பயணமாக அட்லாண்டா திரும்பினோம். எல்லாமே மறக்க முடியாத நினைவுகள்//

    குழந்தைகள் அவர்கள் பார்த்த இடங்களை நாமும் பார்க்க வேண்டும் என்று அழைத்து போய் காட்டுவது பெரிய விஷயம், அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் மகிழ்ச்சி.

    நான் இப்போது மகள் வீட்டில் அட்லாண்டாவில் இருக்கிறேன்.

    //அங்கு போயும் மஞ்சள் மலர், வண்ணத்துப் பூச்சி
    என்று உங்கள் favorite எல்லாம் வந்து விட்டார்களே!....//

    ஆமாம், மலர்களும் , வண்ணத்துப்பூச்சிகளும், பறவைகளும் எனக்கு பிடித்தவை தான்.

    //பேரன் அருகாமை பேரின்பம். உணர்ந்து சொல்கிறேன்.//

    ஆமாம். பேரக்குழந்தைகளின் அருகாமை பேரின்பம் தான்.

    //நானும் இந்த மாதிரி Hat ஒன்று வாஷிங்டன் போன நினைவாக வாங்கி வைத்திருக்கிறேன். வெப்பம் தாங்கியாய் அதைப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதுண்டு.//

    ஆமாம், அப்போது எல்லாம் வெயிலுக்கு ஸ்கார்ப் கட்டுவேன், நம் ஊரில் வெயிலுக்கு குடை இல்லாமல் போக மாட்டேன். நடந்து போகும் காலத்தில் குடையோடு தான் போவேன்.


    இப்போது பிள்ளைகள் விருப்பபடி அவர்களுடன் போகும் போது தொப்பி அணிந்தேன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  23. ’உறங்கும் எரிமலை’ .. பகிர்வும் நீங்கள் விவரித்திருக்கும் விதமும் மிக அருமை. இறுகிய பாறைகளில் இன்று மரங்கள் முளைத்து நிற்பது நல்ல மாற்றமே. 2015 காட்டுத் தீயை நீராவி என எண்ணிய போது நிச்சயம் கிலி அடைந்திருப்பார்கள். உறைந்து நிற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கணங்களைக் காணத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //உறங்கும் எரிமலை’ .. பகிர்வும் நீங்கள் விவரித்திருக்கும் விதமும் மிக அருமை.//

      நன்றி.

      //இறுகிய பாறைகளில் இன்று மரங்கள் முளைத்து நிற்பது நல்ல மாற்றமே. 2015 காட்டுத் தீயை நீராவி என எண்ணிய போது நிச்சயம் கிலி அடைந்திருப்பார்கள். //
      ஆமாம், அங்கு மக்கள் வாழவில்லை என்றாலும் சுற்றி உள்ள இடங்களுக்கு ஆபத்துதானே! அதனால் கிலி அடைந்து இருப்பார்கள்.

      பைன் மரங்கள் அடர்ந்து இருக்கும் பல இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு கருகி போய் நிற்பதை இப்போதும் பார்க்க முடிகிறது.

      //உறைந்து நிற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கணங்களைக் காணத் தந்தமைக்கு நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.


      நீக்கு